Followers

Tuesday, September 08, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 3

குறில் உயிர்க் குறிகள் மூன்றில் ஃபதஹ என்பதனை முந்தய பதிவில் பார்தோம். தற்போது 'கஸ்ர்' என்பதனை பார்போம். அரபு எழுத்துக்களின் கீழ் பாகத்தில் படுக்கை வசத்தில் சற்று சாய்வாக போடப்படும் குறிகளையே 'கஸ்ர்' என்கிறோம்.

ப் + இ = பி ------ ب

த் + இ = தி ------ ت

ர் + இ = ரி ------ ر



மேலே உள்ள முதல் படத்தை பார்த்து 'கஸ்ர்' எவ்வாறு எழுத்துக்களில் அமர்கிறது என்பதை புரிந்திருப்பீர்கள். இ, பி, தி, ஸி, ஜி, ஹி, ஹ்ஹி, தி, த்தி, ரி, ஜி, ஸி, ஸ்ஸி, சி, தி, என்று எழுத்தானது உச்சரிப்பில் மாறத் துவங்கும். முதல் படத்தைப் பார்த்து எழுதி வாருங்கள். உச்சரித்தும் வாருங்கள்.

بِ (pronounced: be ) 'பி' என்று உச்சரிக்க வேண்டும்


كِ (pronounced: ki ) 'கி' என்று உச்சரிக்க வேண்டும்.


هِيَ (pronounced: hi-ya ) 'ஹிய' என்று உச்சரிக்க வேண்டும்.


تِـتـِتِ (pronounced:ti-ti-ti ) 'திதிதி' என்று உச்சரிக்க வேண்டும்.

அரபு இலக்கணத்தில் 'கஸ்ர்' என்பதன் பயன் பாட்டை விளங்கியிருப்பீர்கள். இனி 'கஸ்ர்' என்பதில் நெடில் எவ்வாறு உச்சரிப்பது என்பதையும் பார்த்து விடுவோம். ي என்ற எழுத்து சேரும்போது அங்கு அந்த எழுத்தானது நெடிலாக மாறுகிறது. அதன் உதாரணங்களைப் பார்போம்.

بـِي (pronounced: bee ) பீ


كِي (pronounced: kee ) கீ


هِي (pronounced: hee ) ஹீ


تِي (pronounced: tee ) தீ


ثِي (pronounced: thee ) த்தீ


ثِـيتِي (pronounced:thee-tee ) த்தீதீ

இறைவன் நாடினால் மேலும் வரும்.......

No comments: