Followers

Saturday, September 05, 2015

பதவியை விட தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்த இலங்கை அமைச்சர்கள்!



நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் பதவி ஏற்பு விழாவுக்கு நல்ல நேரம் குறிக்கப்பட்டு அனைத்து அமைச்சர்களும் அரங்கத்துக்கு வந்து விட்டனர். ஆனால் முஸ்லிம் அமைச்சர்கள் மட்டும் எவருமே இன்று அந்த குறிப்பிட்ட நேரத்தில் பதவி ஏற்பு விழாவுக்கு வரவில்லை. ஏனெனில் பதவி ஏற்பு விழாவுக்கு குறிக்கப்பட்ட நல்ல நேரமும் ஜூம்ஆ தொழுகையும் 12:30 க்கு ஒரே நேரத்தில் வந்ததுதான் தாமதத்துக்கு காரணம். பதவி ஏற்பை விட ஜூம்ஆ தொழுகைதான் முக்கியம் என்பதால் முஸ்லிம் அமைச்சர்கள் நால்வருமே குறிப்பிட்ட அந்த நேரத்தில் வரவில்லை. ஜூம்ஆ தொழுகையை முடித்து விட்டு தாமதமாக 1:45 க்கு வந்து தங்களின் பதவியை ஏற்றுக் கொண்டனர்.

முதல்வர் ஜெயலலிதா முன்னால் வளைந்து நெளிந்து குழையும் நம் தமிழக அமைச்சர்களையும் இலங்கை முஸ்லிம் அமைச்சர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். விரக்தியே பதிலாக கிடைத்தது.

ரிஷாத் பதியுதீன் – கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர்

ரவுப் ஹகீம் - நீர் வழங்கள் மற்றும் நகர திட்டமிடல்.

கபீர் ஹசிம் – அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்

ஹலீம் - தபால் மற்றும் முஸ்லிம் விவகாரம்.

மேலும் இம்முறை இலங்கை நாடளுமன்றத்துக்கு 21 முஸ்லிம் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

5 comments:

Unknown said...

நல்ல புள்ளைங்க! இப்படியே இஸ்லாமிய உணர்வோடு இருக்கட்டும்! அவர்கள் வேறுபட்ட கட்சிகளில் இருந்தாலும் சரியே. அல்லாஹ் உதவி செய்வான்....!

Unknown said...

சகோதரர் 15 அல்ல 21 முஸ்லிம்கள் பாராளுமன்றத்திற்க்கு தெரிவாகியுள்ளனர்

vara vijay said...

I have a doubt if any accident occurs during prayer time, what I have to do should i help the victim or do the prayer.

suvanappiriyan said...

Mr Vara Vijay!

//I have a doubt if any accident occurs during prayer time, what I have to do should i help the victim or do the prayer.//


முதலில் உயிரைக் காப்பாற்றி விட்டு அதன் பிறகே தொழுகைக்கு செல்ல வேண்டும். தொழுகை 10 அல்லது 20 நிமிடம் கழித்து தொழுது கொள்ளலாம். ஆனால் ஒரு உயிர் போனால் அது திரும்ப வருமா?

vara vijay said...

Thanks for your reply.