Followers

Monday, September 07, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 1

'வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' - குர்ஆன் 30 :22

மேற்கண்ட வசனத்தின் மூலம் மொழிகள் வேறுபட்டிருப்பதையும், மனிதனின் நிறங்கள் வேறுபட்டிருப்பதையும் தன்னுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நிறங்களை வைத்து மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிப்பதும், மொழிகளை வைத்து ஏற்றத் தாழ்வு கற்ப்பிப்பதும் கூடாது என்பது விளங்குகிறது.

குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. எனவே அது தேவ பாஷை என்ற அந்தஸ்த்தைப் பெறுமா? கண்டிப்பாக இல்லை. முகமது நபி அரபுகள் மத்தியில் தோன்றுகிறார். அவருக்கு தெரிந்த ஒரே மொழி அரபு மட்டுமே! எனவே குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழ் மொழியிலேயே அருளப் பட்டிருக்கும். உலக மக்களுக்கு இறை செய்தியை சொல்லுவதற்கு உலக வழக்கில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தாக வேண்டும்.

உதாரணத்துக்கு நமது தேசிய கீதத்தை எடுத்துக் கொள்வோம். ஜன கன மன என்றவுடன் ஒரு வித மரியாதையில் எழுந்து நின்று நாட்டுப் பற்றை எடுத்துக் காட்ட மரியாதை செய்கிறோம். இதனால் வங்காள மொழி சிறந்தது என்றாகி விடுமா? பல மொழிகள் பேசும் நம் நாட்டில், ஏதோ ஒரு மொழியில் தேசிய கீதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறோம். அதே போல் இறைவனின் கட்டளைகளை சொல்வதற்கு கடைசியாக பயன் படுத்தப் பட்டது அரபி மொழி. எனவே தான் குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. இதனால் அரபு மோழி மற்ற மொழிகளையெல்லாம் விட சிறந்த மொழி என்று நினைப்தே இஸ்லாத்துக்கு மாற்றமானது.

இனி நான் விஷயத்துக்கு வருகிறேன்......

எனது பள்ளி நண்பன் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவன்: அவனுக்கு அரபி ஆரம்ப பாடங்கள் கற்றுக் கொள்ள ஆசை. குர்ஆன் ஓதவும் ஆசை. நான் தமிழகம் சென்றிருந்த சமயம் இது பற்றி என்னிடம் கேட்டான். சில புத்தகங்களை வாங்கிக் கொடுத்தேன். அவனைப் போன்றவர்களுக்கு இணையத்தின் மூலமாக அரபி இலகுவாக கற்றுக் கொள்ள நாம் ஒரு முயற்சி எடுத்தால் என்ன என்று நினைத்தேன். அதனால் எழுந்தது இந்த தொடர் பதிவு. தமிழ், ஆங்கிலம், அரபி என்ற மூன்று மொழிகளிலும் எனக்கு தெரிந்த நான் கற்றுக் கொண்டவைகளை வாரம் ஒரு பதிவாகத் தருகிறேன். நான் ஆங்கிலம் மற்றும் அரபியை பொறுத்தவரையில் ஒரு மாணவன்தான். எனவே நான் பதியும் இந்த பாடங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். மிக இலகுவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தர முயற்சிக்கிறேன். அரபு நாடுகளில் வேலை செய்வோருக்கும் இந்த பாடங்கள் உபயோகப்படலாம்.

அரபி மொழி சுத்தமாக தெரியாதவர்கள் நான் கொடுக்கும் பாடங்களை தொடர்ந்து எழுதி பழகுங்கள். இறைவன் நாடினால் ஆறு மாதத்தில் குர்ஆனை நீங்களும் ஓதலாம். மேலும் தொடர்ந்தால் அரபியில் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பாடங்களை இணையத்தில் பதிவதால் இதனால் எனது மொழியறிவும் மேலும் விரிவடையலாம் இறைவன் நாடினால்.

இனி பாடத்துக்குள் நுழைவோம். ஆங்கிலத்தைப் போல அரபியிலும் மிகக் குறைவான சொற்களே... அவற்றைப் பார்போம்

ا ----- அலீஃப் - ALEEF

ب ----- பா - BA

ت ----- தா - TTA

ث ----- தா - TA

ج ----- ஜீம் - JEEM

ح ----- ஹ - HA

خ ----- ஹ்ஹா - HHA

د ----- தால் - DHAL

ذ ----- ஜால் - JAAL

ر ----- ரா - RA

ز ----- ஜா - JAA

س ----- ஸீன் - SEEN

ش ----- ஷீன் - SSEEN

ص ----- ஸாத் - SAAD

ض ----- தாத் - DDAD

ط ----- தா - TAA

ظ ----- த்தா - DDA

ع ----- அய்ன் - AIN

غ ----- கைய்ன் - GAIN

ف ----- ஃபா - FA

ق ----- காஃப் - KAAF

ك ----- காஃப் - KAAF

ل ----- லாம் - LAAM

م ----- மீம் - MEEM

ن ----- நூன் - NOON

ه ----- ஹா - HA

و ----- வாவ் - wav

ى ----- யா - ya

இறைவன் நாடினால் மேலும் தொடர்வேன்......

No comments: