Followers

Tuesday, September 22, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 11

இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்து சொல் ஆகிறது. இவ்வாறு சொற்கள் இணையும் போது எழுத்துக்களின் உருவம் சிதைந்து சற்று சிறிதாக மாறும். அவ்வாறு எழுத்துக்கள் எவ்வாறு உரு மாறுகிறது என்பதை இந்த பாடத்தில் படிப்போம்.....

எழுத்துக்களின் மேல் கீழ் உள்ள உயிர்க் குறிகளான ஃபதஹ, கஸர, தம்மஹ் (ஜேர், ஜபர், பேஷ்) குறிகளையும் கவனித்து உச்சரிப்புகளும் எவ்வாறு மாறுகின்றன என்பதை கவனியுங்கள்.

ق ل م - قلم - قَلَمٌ ------ காஃப் + லாம் + மீம் = கலமுன் - பேனா

ب ل - بل - بَلْ --------- பா + லாம் = பல் - ஆனால்

ع د د - عدد - عَدَدْ ------- அயின் + தால் + தால் = அததுன் - எண்

ح م ل - حمل - حَمَلَ ----------- ஹா + மீம் + லாம் = ஹமல - தூக்குதல், சுமத்தல்

ط ق س - طقس - طَقْسٌ ----------- தா + காஃப் + ஸீன் = தக்ஸ் - வெப்ப நிலை

ن ب ت - نبت نَبْتٌ ---------- நூன் + பா + தா = நப்துன் - தாவரங்கள்

م س ا - مسا - مساءٌ --------- மீம் + ஸீன் + அலிஃப் = மஸாவுன் - மாலை நேரம்

ل ب ن - لبن - لبنٌ ---------- லாம் + பா + நூன் = லபனுன் - மோர்

ل ح م - لحم - لَحَمٌ ---------- லாம் + ஹா + மீம் = லஹமுன் - இறைச்சி

ا ن ا - انا - اَناَ --------- அலிஃப் + நூன் + அலிஃப் = அநா - நான்

ر ج ل - رجل - رَجَلٌ -------- ரா + ஜா + லாம் = ரஜீலுன் - ஆண்

ك ل ب - كلب - كَلْبٌ -------- காஃப் + லாம் + பா = கல்புன் - நாய்

ن ه ر - نهر - نَهْرٌ -------- நூன் + ஹா + ரா = நஹ்ருன் - நதி

ه م - هم - هُمْ ---------- ஹா + மீம் = ஹூம் - அவர்கள்

ا ن ت - انت - اَنْتَ ------- அலிஃப் + நூன் + தா = அன்த - நீ......

ش ا ى - شاى - شايٌ ------------- ஷீன் + அலிஃப் + யா - ஷாயுன் - தேனீர்...

ஒரு எழுத்து தனித்து வரும் போது என்ன உருவில் வருகிறது. அது மற்ற எழுத்துக்களோடு சேரும் போது எவ்வாறு உரு மாறுகிறது உச்சரிப்பும் எப்படி மாறுகிறது என்பதை உதாரணங்களுடன் பார்தோம். இதனை தனித் தனியாக எழுதி பழகி வாருங்கள். இது மனதில் பதிந்தால்தான் பின்னால் வாக்கியங்களை அமைக்கும் போது படிப்பதற்கு சிரமமில்லாமல் இருக்கும்...

நீங்களாகவே சொந்தமாக வார்த்தைகளை அமைத்து அது எவ்வாறு உரு மாறுகிறது என்பதை பயிற்சியின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

இறைவன் நாடினால் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.....

No comments: