'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, September 28, 2015
சாய் ராம் பொறியியல் கல்லூரியின் சுற்றறிக்கை!
'ஈக்கள், கொசுக்கள், குரங்குகள் மற்றும் நாய்கள் கல்லூரி வளாகத்தில் தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மாணவ மாணவிகள் கொண்டு வரும் புலால் உணவுகளேயாகும் என்று அறியப் படுகிறது. எனவே வரும் 21-09-2015 முதல் அனைத்து மாணவ மாணவிகளும் மாமிச உணவுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவ மாணவிகள் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'
-சாய் ராம் இன்ஜினியரிங் கல்லூரி
தயிர் சாதம், புளி சாதம், போன்ற மற்றும் எண்ணெய் நெய்க்களால் பொறிக்கப்பட்ட பதார்த்தங்களைக் கொட்டுவதால் கொசு, ஈ பெருகாதா? குரங்கு மாமிசப் பட்சிணி அல்லவே? நாய் சைவம் அசைவம் இரண்டையும் சாப்பிடுமே...
இவர்களின் அக்கறை தூய்மையாக்குவதில் இல்லை. 'நான் என்ன சாப்பிடுகிறேனோ அதனையே நீயும் சாப்பிட வேண்டும்' என்ற அதிகார மமதை தவிர வேறொன்றுமில்லை.
இவர்கள் இனிமேலும் திருந்துவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சாய்ராம் பார்ப்பனருக்கு குரங்கு அனுமார் கடவுள், நாய் பைரவன் கடவுள் அல்லவா?. அவர்களுடைய கடவுளை கல்லூரிக்குள் வரவழைத்த மாணவ மாணவியருக்கு அவார்டு தந்து கௌரவிக்காமல் எச்சரிப்பது நியாயமா?.
சைவ உணவு சுத்தமாக வைத்திருக்க சுலபமானது.எனவே சாய்ராம் கல்லூாி நிா்வாகம் செய்தது சாிதான். சைவஉணவை உண்டு உடலை நல்ல முறையில் வை த்திருக்க அறிவுரை அளித்திருப்பது நல்லதுதானே!
ஏன் இந்த அரேபிய அடிமைத்தனம்.,,??????
Post a Comment