Followers

Sunday, September 13, 2015

மத்திய பிரதேச உயிரிழப்புக்கு காரணம் ராஜேந்திர கேசவா!



மத்திய பிரதேசம் ஜபுவா மாவட்டம் பெட்லவாடா டவுனில் 104 பேர் இறக்க காரணமாயிருந்த வெடி விபத்துக்கு முக்கிய காரணகர்த்தா ராஜேந்திர கேசவா. இவனுக்கு எதிராக மத்திய பிரதேச காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் இவன் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளான். விவசாய சம்பந்தமான அலுவலகம் என்று கூறியுள்ளான். ஆனால் எண்ணிலடங்கா ஜெலட்டின் குச்சிகளை தனது அலுவலகத்தில் சேகரித்து வைத்துள்ளான். இதன் காரணமாக அனைத்தும் வெடித்து சிதறியுள்ளது. உடல்களும் தூக்கி எறியப்பட்டுள்ளன. கீழே உணவு விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்தவர்களும் தூக்கி எறியப்பட்டுள்ளனர்.

விவசாய பண்ணை நடத்துபவருக்கு இத்தனை ஜெலட்டின் குச்சிகள் எதற்கு? இவனுக்கு அதனை கொடுத்தவர்கள் யார்? எந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக இவ்வளவு ஜெலட்டின் குச்சிகளை இவன் சேகரித்து வைத்தான் என்று அரசு தீர விசாரிக்க வேண்டும்.

பக்ரீத் பண்டிகையும் நெருங்குகிறது. அதனை குறி வைத்து இவன் இத்தனை வெடி மருந்துகளை பதுக்கினானா என்பதையும் விசாரிக்க வேண்டும். இவ்வளவு பெரிய உயிரிழப்பு நடந்துள்ளது. ஆனால் நமது ஊடகங்களோ முக்கிய சூத்திதாரியான ராஜேந்திர கேசவனைப் பற்றிய எந்த செய்தியும் வெளியிடவில்லை. இதே ஒரு முஸ்லிமின் பெயராக இருந்திருந்தால் கண் காது மூக்கு வைத்து திரைக் கதை வசனமெல்லாம் எழுதப்படடிருக்கும்.

இறந்தவர்களுக்கு 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 50000 மும் அரசு தரப்பில் தரப்படும் என்று முதலமைச்சர் சவுஹான் அறிவித்துள்ளார். ராஜேந்திர கேசவன் யார்? அவனுக்கும் இந்துத்வாவுக்கு உள்ள தொடர்புகள் என்ன என்பதை சவுஹான் ஆர்எஸ்எஸ் பாசத்தை தூரமாக்கி தீர விசாரிக்க வேண்டும். உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அப்பாவிகளின் உயிர் இனிமேலாவது காப்பாற்றப்படும்.

தகவல் உதவி
ஆசியன் டைம்ஸ்
இந்தியன் எக்ஸ்பிரஸ்
12-09-2015

No comments: