Followers

Wednesday, September 09, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 4

குறில் உயிர்க் குறிகளில் மூன்றில் இரண்டை முந்தய பதிவுகளில் பார்த்து விட்டோம். இனி மூன்றாவதான 'தம்மஹ்' என்றால் என்ன என்பதையும் பார்போம்.

அரபு எழுத்துக்களின் மேல் சுழித்து படத்தில் உள்ளது போல் இருந்தால் அந்த குறியீட்டிற்கு 'தம்மஹ்' என்று கூறுகிறோம்.




جُ ----- ஜ் + உ = ஜீ

تُ ----- த் + உ = து

بُ ----- ப் + உ = பு

صُ ---- ஸ் + உ = ஸீ

இவ்வாறே அனைத்து எழுத்துக்களின் உச்சரிப்புகளும் மாறும். இதனை தொடர்ந்து எழுதியும் படித்தும் வாருங்கள்.

இது வரை நாம் படித்த பாடங்களிலிருந்து சில எழுத்தக்களை வார்த்தைகளில் அமைத்துப் பார்போம்.

ذَهَـبَ - தஹப - அவன் போனான் - HE WENT

أَخَـذَ - அஹத - அவன் எடுத்தான் - HE TOOK

'தம்மஹ்' குறியீட்டை ஒரு எழுத்தின் மேல் இரு முறை எழுதும் போது 'து' 'துன்' என்று மாறும். 'மு' 'முன்' என்றும் மாறும் அதன் எடுத்துக் காட்டுக்கள் ஒரு சிலவற்றை பார்போம்.

قَلَـمٌ - கலமுன் - பேனா - PEN

وَلَـدٌ - வலதுன் - பையன் - BOY

رَجُـلٌ - ரஜீலுன் - ஆண் - MAN

جَمَـلٌ - ஜமலுன் - ஒட்டகம் - CAMEL

مَسْجِدٌ - மஸ்ஜிதுன் - பள்ளிவாசல் - MOSQUE

نَجْمٌ - நஜ்முன் - நட்சத்திரம் - STAR

قِطٌ - கித்துன் - பூனை - CAT

سَرِيْرٌ - சிரீருன் - கட்டில் - BED

இனி அடுத்த பாடத்தில் மேலும் சில உயிர்க் குறிகளைப் பார்போம் இறைவன் நாடினால்.....

No comments: