Followers

Saturday, September 26, 2015

பிள்ளையாருக்கு போட்ட பந்தலில் ஈத் தொழுகை!



மும்பையில் உள்ள குலாபா நகரில் ஈத் தொழுகைக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வரவே இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. உடன் பிள்ளையார் சதுர்த்திக்காக போடப்பட்ட தற்காலிக பந்தலில் தொழுது கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்ள அதனடிப்படையில் ஈத் பெருநாள் தொழுகையை முஸ்லிம்கள் நிறைவேற்றினர்.

பிள்ளையாரின் கண்காணிப்பில் ஈத் தொழுகை சிறப்பாக நடந்தேறியது

இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பிகளாகத்தான் இந்தியா முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு சதவீதமே இருக்கும் இந்துத்வாவாதிகளால்தான் எங்கும் பிரச்னையாகிறது. பெரும்பான்மையான இந்துக்கள் இஸ்லாமியர்களை சகோதரர்களாக பாவிப்பதால் இராம கோபாலன், பிரவீன் தெகோடியா போன்றோரின் பிரித்தாளும் சூழ்ச்சி இந்த மண்ணில் எந்நாளும் நிறைவேறப் போவதில்லை.

1 comment:

Dr.Anburaj said...


இந்துத்துவம் என்பது அன்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டது.சடங்குகள் கலாச்சார வேற்றுமைகளை முன்னிலைப்படுத்தாதது.எனவேயுதா்களுக்கும் ஈரானில் இசுலாமிய காடையா்களுக்கு பயந்து இந்தியாவில் குடியேறிய ஈரானின் புா்வ குடிகளாக பாா்சிகளுக்கும் அடைக்கலம் தந்த கொள்கை இந்துத்துவம். அன்பின் வழி நிற்கும் இந்து மக்களை காபீா்கள் என்று இழிவு படுத்தி அவர்களைகொல்லலாம் என்று கூறும் அரேபிய மத காடையா்கள் இனிமேலாவது திருந்துவா்களா ?