Followers

Wednesday, December 11, 2019

புதிய தலைமுறையில் கோலாகல சீனிவாசன்

புதிய தலைமுறையில் கோலாகல சீனிவாசன்
நேற்று நடந்த விவாதத்தில் கோலாகல் ஸ்ரீனிவாசன் ஒரு வாதத்தை வைத்தார். மற்ற மதத்தினரைப் போல முஸ்லிம்களையும் அனுமதித்தால் தீவிரவாதிகளை இனம் காண்பது எவ்வாறு? என்ற கிருத்தனமான வாதத்தை வைத்தார். அப்போது நெறியாளர் கார்த்திகை செல்வன் 'இந்து மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்களே? அவர்களை இந்தியாவை விட்டு அனுப்பி விடுவீர்களா?' என்ற நியாயமான கேள்வியைக் கேட்டார்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் கோபத்தோடு கோலாகல ஸ்ரீனிவாசன் 'யார் இந்து தீவிரவாதி? எங்கு இந்து தீவிரவாதி?' என்று கார்த்திகை செல்வனுடன் சண்டைக்கு சென்று விட்டார். கார்த்திகை செல்வனும் பயந்து போய் கொஞ்சம் அடக்கி வாசித்து விட்டு வேறு பேச்சுக்கு சென்று விட்டார்.
மாலேகான் குண்டு வெடிப்பில் கையும் களவுமாக பிடிபட்ட பிரக்யாசிங் யார்?
ராணுவத்தில் பணி புரிந்து அங்கிருந்து ஆர்டிஎக்ஸை திருடி தீவிரவாதிகளுக்கு தந்து பலர் இறக்க காரணமாயிருந்த பார்பனர் புரோகித் யார்?
அஜ்மீர் குண்டு வெடிப்பு முதல், சம்ஜோதா குண்டு வெடிப்பு வரை நிகழ்த்தி சிறைவாசம் அனுபவித்த சின்மயானந்தா யார்?
குஜராத்தில் கோத்ரா ரயில் விபத்தை முஸ்லிம்கள் மேல் போட்டு இறந்த சடலங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று '24 மணி நேரம் தருகிறேன். அதற்குள் முடித்துக் கொள்ளுங்கள்' என்று 3000 முஸ்லிம்கள் இறக்க காரணமாயிருந்த தீவிரவாதி யார்?
காந்தியை சுட்டுக் கொன்ற நாகுராம் கோட்ஸே என்ற பார்பனர் யார்?
உன்னாவில் அப்பாவி இளம்பெண்ணை கற்பழித்து அவரது குடும்பத்தையும் கொன்ற பிஜேபி எம்எல்ஏ எந்த மதத்தை சேர்ந்தவர்?
அக்லக் என்ற முதியவரை மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அடித்தே கொன்ற மனித மிருகங்கள் எந்த மதத்தினர்?
இப்படி தினமும் மனித மிருகங்களாக உலவி வரும் தீவிரவாதிகள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள்? இத்தனை ஆதாரங்கள் இருந்தும் 'இந்து தீவிரவாதி யார்?' என்று கூசாமல் கேட்க இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது?
கார்த்திகை செல்வன் பயந்ததிலும் காரணம் உண்டு. சன் டிவி சுப வீர பாண்டியனை அழுத்தம் கொடுத்து நீக்கியது போல் தன்னையும் இந்துத்வாவாதிகள் நீக்கி விடுவார்கள் என்ற பயத்தினாலேயே கார்த்திகை செல்வன் சற்று அடக்கி வாசித்ததாக படுகிறது. இந்துத்வாக்களின் கை அந்த அளவு நாடெங்கும் வியாபித்துள்ளது. இது இந்திய நாட்டுக்கு மிகக் கேடாக முடியும். அதனை வருங்கால இந்திய வரலாறு உணர்த்தும்.


2 comments:

Dr.Anburaj said...

இலங்கை தமிழா்கள் குடியுரிமை பெற சிறப்பு சட்டங்கள் தேவையில்லை.பொதுவான சட்டங்கள் உள்ளன. அது போதும்.இதுதான் மாண்புமிகு உள்துறை அமைச்சா் கருத்து. பாராளுமன்றத்தில் பதில் சொன்னாா்.

பொதுவாக சொல்வதென்னால் எல்லா மக்களும் அவரவா் தாய் நாட்டில் வாழ்வதுதான் சிறப்பு.
இலங்கை தமிழா்கள் இன்னும் நம்பிக்கையொடு இருக்கலாம். இலங்கை அரசிடம் கோணல்கள் உள்ளது.
பிரச்சனைகளை தீர்க்க இலங்கை அரசு நம்முடன் ஒத்துழைக்கும்.
பாரதிய ஜனதா அரசு வந்தபின் தமிழக மீனர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய முன்னேற்றம்.

இந்திய அரசும் பல லட்சம் கோடிகள் செலவு செய்துதமிழா்களுக்கு இலங்கையில் சிறப்பான வாழ்க்கை அமைய உதவி வருகின்றது.

இந்நிிலையில் அவசரப்பட்டு ஈழத்தமிழா்களை இந்தியாவிற்குள் அழைத்து வந்து அவர்கள் குடியமா்த்துவது சுலபமான காரியமா ? ஏன் இந்த வீண் வேலை.

பாக்கிஸ்தானில் இருந்து வரும் இந்துக்களையும் முறையாக குடியமாத்த முடியுமா என்று சந்தேகம் எழுப்பும் சுவனப்பிரியன்

ஈழ தமிழா்களையும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை எப்படி ஆதரிக்கின்றாா் என்பது ஃ????????

Dr.Anburaj said...


பாவம் பாக்கிஸ்தான் இந்துக்கள்.பிழைத்து விட்டு போகட்டும்.நொந்துபோய் அகதியாக நிற்பவனுக்கு ஒரு சிறு ஆறுதல்.

----

பாக்கிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து 600 முஸ்லீம்கள் பொதுவான

வழியில் விண்ணப்பித்து இந்தியகுடியுரிமை பெற்றுள்ளார்கள்.

--- தகவல் உள்துற அமைச்சா் மாண்புமிகு அமித்ஷா அவர்கள்.

இந்த பொது வழி அனைத்து மக்களுக்கும் உரியது.