Followers

Saturday, December 07, 2019

திரிவேதி, சதுர்வேதி விளக்கங்கள்!

திரிவேதி, சதுர்வேதி விளக்கங்கள்!
ஆரியப் பார்ப்பனர்களின் வேதங்கள் நான்கு. ரிக், யஜூர், சாமம், அதர்வணம். இவற்றில் மூன்று வேதங்களை முற்றாக ஓதத் தெரிந்தவர்களுக்குப் பெயர் #திரிவேதி. நான்கு வேதங்களையும் கற்று ஓதத் தெரிந்தவர்களுக்குப் பெயர் #சதுர்வேதி.
#திரி என்றால் மூன்று. #சதுர் என்றால் நான்கு. அதனால்தான் இவர்களுக்கு அரசர்களால் தானம் வழங்கப்பட்ட நிலங்களுக்கு பெயர் மங்கலம் என்று வழங்கப்படும். மூன்று வேதம் படித்தவர்க ளுக்கு திரிவேதி மங்கலம், நான்கு வேதம் படித்த வர்களுக்கு சதுர்வேதி மங்கலம், #இரண்டு வேதம் படித்தவர்களுக்கு துவேதி மங்கலம், வேதத்தைச் சரியாக படிக்காத பார்ப்பனர்களுக்கு கொடுத்த இடங்கள்தான் கிராமங்கள்.
வாஜபேய யாகம், பார்ப்பனர் புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர்பதவி பெறும் பொழுது செய்யப்படும் யாகமாகும். அரசனும் இராசசூய யாகம் செய்த பின்னர், பேரரசாக மாறிய பொழுது வாஜபேய யாகத்தைச் செய்வார்கள்.
#யாகங்கள்_இருபத்தொன்றாகும். சோம யாகங்கள் ஏழு, ஹவிர் யாகங்கள் ஏழு, பாக யாகங்கள் ஏழு. இவற்றில் சோம யாகங்கள் ஏழில் ஒன்றாக வாஜபேய யாகம் உள்ளது. அந்த யாகத்தின் இறுதியில் உணவும், பானமும் கூட்டாக அருந்தப்பெறும். அதைச் செய்தவர்கள் வாஜபேயர்கள். வட தேசத்தில் பாஜபே என்று அவர்களைச் சொல்லுவார்கள். வாஜபேயம் பண்ணினவர்களுக்கு குளிக்கும் காலத்தில் அரசர்கள் சுவேதச் சத்திரம் (வெண்குடை) பிடிக்க வேண்டும்.
இப்ப இதெல்லாம் எதுக்குச் சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா?
#உத்தரப்பிரதேசத்தின்_உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் நேற்று காலை ரேபரேலியில் நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, ஜாமினில் வெளியே வந்த 2 பேர், சிலருடன் சேர்ந்து, அவரை வழிமறித்து கத்தியால் குத்தி தீயிட்டு கொளுத்தினர். இதில் 90 சதவீதம் தீக்‍காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்ட அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட பின்பும் கடுமையான தீக்காயம் அடைந்த அந்தப் பெண் நேற்று உயிரிழந்தார்.
சாகும் முன் சகோதரரிடம், ‘’அவனுங்களை விட்டுடாதீங்க.. நான் மீண்டு வந்து சட்டப் போராட்டம் நடத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பேன்’’ என்று கூறியுள்ளார். மருத்துவர்களிடம், ‘’எனக்கு சாக விருப்பமில்லை. நான் வாழ விரும்புகிறேன். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்...’’ என்று கண்ணீர் விட்டுள்ளார்.
அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
ஹரிஷங்கர் திரிவேதி
ராம்கிஷோர் திரிவேதி
ஷுபம் திரிவேதி
ஷிவம் திரிவேதி.
உமேஷ் வாஜ்பாய்
இப்போது முதலிலிருந்து படியுங்கள்.


2 comments:

Dr.Anburaj said...

நாடே ஒரு சில மனித மிருகங்களின் செயலை கண்டு அதிா்ந்து போய் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் நீசன் மடையன் சுவனப்பிரியன் இதை சாதி பிரச்சனையாக்குகிறான்.அவன் எந்தசாதிக்காரனாய் இருந்தாலும் எங்களுக்கென்ன ? இந்த ”வேதி”களை நம்பி இந்து மதம் இல்லை. பார்ப்பனராய் சாதிச் சான்று அளிக்கப்பட்டோா் எல்லாம் சமய காரியங்கள் செய்யவில்லை.வயிற்று பிழைப்பு அவனவன் ராணுவத்திலும் போலீஸ்சிலும் மளிகை கடை லேத் என்று ஆயிரம் தொழில் செய்யப் போய் விட்டான். வெறும் பார்ப்பன அடையாளங்களை கண்டு மயங்கியது அந்த ....அந்த .... அந்த காலம். பார்ப்பனர்களை ஒழுக்கக் கேடுகளை யார் செய்தாலும் முறையாக எதிா்க்க வேண்டும். காஷ்மீரிலிருந்து 4.5 லட்சம் இநதக்களை விரட்டிய துலுக்கர்களை என்ன செய்யலாம் ?

Dr.Anburaj said...

நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்த என்ன பண்றது - குரூப்ல ஒருத்தங்க கேட்ட கேள்வி

கற்பா, உயிரா னு பாக்கும் போது உயிர் பெரிசு. விட்ருங்க போகட்டும் என்பது போல பல வழிகாட்டல்கள். ஆனா போலீஸ கூப்பிடலாமே னு ஒரு பின்னூட்டம் கூட கண்ணுல படல.

போகட்டும் என்ன பண்றது. போலீஸ்னாலே கிளைமாக்ஸ் முடிஞ்சுதான் வருவாங்க அப்டீங்குற எண்ணம் மக்களுக்குள்ள இருந்திட்டே இருக்கு

சரி விஷயத்துக்கு வருவோம்.

இந்த மாதிரி சமயத்துல என்ன பன்றது?

ஒன்னு நீங்க 100 க்கு டயல் பண்ணி எந்த சூழ்நிலையா இருந்தாலும் சொல்லலாம். "100 கால் எங்களுக்கு High priority duty" முதல்ல அத அட்டன் பண்ணீட்டுதான் வேற எந்த டியூட்டியா இருந்தாலும் பாக்கனும். அதிக பட்சம் 10-15 நிமிடங்கள்ள போலீஸ் அங்க இருக்கும்.

சரி, பேச முடியாத சூழல் துறத்துறானுங்க. நீங்க ஓடுறீங்கனே வச்சுக்குவோம். Play store la " Kavalan SOS" னு ஒரு ஆப் இருக்கு கண்டிப்பா எல்லோரோட போன்லயும் இருக்க வேண்டிய ஆப். இதுல உங்க சொந்தக்காரங்க போன் நம்பர் 5 எண்ணம் ஸ்டோர் பண்லாம்.

இந்த ஆப் ஓப்பன் பண்ணுனா ரெட் கலர்ல ரவுண்டா ஒரு வட்ட சிகப்பு நிற பொத்தான் டிஸ்ப்ளேயோட சென்டர்ல தெரியும். அதுல SOS னு பெரிசா எழுதிருக்கும். இத நீங்க ஆபத்து காலங்கள்ல ப்ரஸ் பண்ணும் போது உங்க சொந்த காரங்களுக்கு மட்டுமில்ல சென்னையில இருக்குற கண்ட்ரோல் ரூம், டிஸ்ட்ரிக்ட் கண்ட்ரோல் ரூம், பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேசன், ரோந்துல இருக்குற காவலர்கள், ஹை- வே பேட்ரோல், பைக் - பேட்ரோல் எல்லாருக்கும் நீங்க ஆபத்துல இருக்கீங்க னு 15 செகண்ட்ஸ்க்குள்ள மேசேஜ் போகும். அது மட்டுமில்ல இது GPS based. ஆபத்துல இருக்குறவங்கள எங்களால டிராக் பண்ணி ஸ்பாட்டுக்கு போக முடியும். ரொம்ப சீக்கிரமா உங்களுக்கு உதவி கிடைக்கும். இதெல்லாம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த எவ்வளவோ விளம்பரம் பண்ணியும் பெரிசா விழிப்புணர்வு இல்ல.

களத்துல வேலை பார்க்குற எங்களுக்குதான் இதனால எத்தனை உயிரை பாதுகாத்துருக்கோம் னு தெரியும்.

So, பெண்கள் கண்டிப்பா இந்த ஆப் அ டவுண்லோட் பண்ணி வச்சுக்கங்க. ஆபத்து காலங்கள்ள உதவும். எப்பனாலும் உதவிக்கு காவல்துறையை கூப்பிடுங்க. யாரு வந்தாலும் வரலைனாலும் போலீஸ் நாங்க வந்து நிற்போம். காவல்துறை எப்பவுமே உங்கள் நண்பன்தான்.

கொஞ்சம் Share பண்ணுங்க !!