Followers

Wednesday, December 11, 2019

இனி என்ன நடக்கும்..?

இனி என்ன நடக்கும்..?
அந்த மூன்று நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாதவர்கள் கொத்து கொத்தாக இந்தியாவுக்குள் நுழைய ஆரம்பிப்பார்கள். அவர்களை எங்கு குடியமர்த்த முடியும்.? அசாம், மேற்கு வங்கம், மணிப்பூர், திரிபுரா போன்ற கிழக்கு, வடகிழக்கு மாநிலங்கள்தான் அவர்களது நுழைவுவாயில். அவர்களை வரவேற்று உபசரிக்க வடகிழக்கு மாநில மக்கள் என்ன முட்டாள்களா.? அவர்களது இருப்புக்கு பாதிப்பு என்பதால்தான் வேறெங்கும் இல்லாத போராட்டங்கள் அந்த மாநிலங்களில் நடைபெறுகிறது.
அரசு அந்த மக்களிடம் சமாதானம் பேசி, குடியேறிகளை அங்கிருந்து பத்திரமாக வேறெங்காவது குடியமர்த்த யோசிப்பார்கள். வேறு எங்காவது என்றால் இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களை குடியமர்த்த போதிய இடம், அவர்களுக்கான வேலை வாய்ப்புகள், அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் அரசு எங்கே போகும்.?
இருக்கவே இருக்கு தென் மாநிலங்கள். இன்றைய இந்திய சூழலில் வளத்திலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு பெற்று வடக்கு, வடகிழக்கு மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பும், இருப்பிடமும் வழங்கி வருபவை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்கள். மத்திய அரசு குடியேறிகளை இந்த மாநிலங்களுக்குள் வலுக்கட்டாயமாக திணித்து அவர்களை இந்திய குடிமக்களாக மாற்ற எத்தனிக்கும்.
இப்படிச் செய்வதன் மூலம் பாஜகவிற்கு நிறைய செயல்திட்டங்களை,நிறைவேற்ற முடியும். குடியேறிகளுக்கு ஏதுவாக ஒரே நாடு, ஒரே ரேசன், ஒரே அடையாளம் என்ற திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தத் துவங்கியாகிவிட்டது. அதன் மூலம் அவர்களை தங்கள் வாக்குவங்கிகளாக மாற்றி தனது தடம் பதிக்க முடியாத தென் மாநிலங்களில் தடம் பதிக்க முடியும். இந்தி, சமஸ்கிருதத்தை அந்த மக்களை வைத்து தென் மாநிலங்களில் பிரதானப்படுத்த முடியும். மொழித் திணிப்பிற்கு இந்தி குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பேசப்படுவது பெரிதும் தடையாக இருந்து வரும் சூழலில் குடியேறிகள் மூலம் அந்தத் தடை சுலபமாக உடைக்கப்படும். அத்தோடு தங்கள் பிரதான ஆயுதமாகிய மதக் கலஙரங்களுக்கு அந்த மக்களை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் உத்திர பிரதேசங்களாக தென் மாநிலங்கள் உருமாறும்.
இப்படி ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்கும் இந்த குடியுரிமை திருத்த மசோதா.
ஆனால் வடக்கு, வடகிழக்கு மாநிலங்கள் வழியே உள் நுழையும் மக்கள் தென் மாநிலங்களை அடைவதற்குள் பல உயிர்களை பலி கொடுக்க நேரும் அவலங்களும் அரங்கேற வாய்ப்பிருக்கிறது.
எத்தனை ஆபத்தான ஒரு மசோதாவை பாசிச அரசு இத்தனை சர்வாதிகாரத்துடன் நிறைவேற்ற இருக்கிறது.

2 comments:

Dr.Anburaj said...

இவ்வளவு கற்பனையாகப் பேசும் அரேபிய நயவஞ்சகன் சுவனப்பிரியனால்

பாக்கிஸ்தான் மேற்கு பாக்கிஸ்தான் கிழக்கு பாக்கிஸ்தான் நாடுகளில் உள்ள முஸ்லீம்கள் ரோஹின்யா முஸ்லீம்களுக்கு இந்தியாவில் இடம் அளிக்க முடியாது என்பதனால் இப்படி மக்களை கிண்டி விடும் ஈனத்தனத்தை பதிவு செய்துள்ளாா்.

ஆப்கானிஸ்தான் , மேற்கு கிழக்கு பாக்கிஸ்தானில் இந்துக்கள் - இந்திய முஸ்லீம்களுக்கு இணையாக கண்ணிய்மாகவும் நடத்தப்படுகின்றார்கள் என்று ஒரு கட்டுரை பதிவு செய்ய முடியுமா ?

சிறுபான்மை உதவித்தொகை வழங்கப்படுகின்றதா ? உயா்கல்வி பயிலும் சிறப்பு கல்வி உதவித் தொகை இடஒதுக்கீடு சிறுபான்மை மக்களுக்கு தொழில் துவங்க நடத்த குறைந்த வட்டியில் கடன் , பள்ளிகள் துவங்கி நடத்த அதிகாரம் அனுமதி அரசின் உதவி சிறுபான்மை மக்களின் கலாச்சார தனித்தன்மைக்கு ஏற்ற சட்டங்கள் , இப்படி ஆயிரம் ஆயிரம் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கு உண்டு.

இந்து சிறுபான்மை மக்களுக்கு என்று தனிபட்ட -special schemes for Minorities - திட்டங்கள் கிழக்கு, மேற்கு பாக்கிஸ்தானில் உள்ளதா ? என்னிடம் விபரங்கள் இல்லை. தங்களிடம் இருக்கும். தொப்புள் கொடி உறவுதான் பாக்கிஸ்தான் என்று தங்களால் நினைக்க முடிகின்றதே.

சர்வதேச அளவில் முஸ்லீம் நாடுகள் உம்ரா வில் நடவடிக்கை எடுத்து பாக்கிஸ்தானில் இந்துக்கள் நலமுடன் வாழ தேவையான நடவடிக்கையை யாராவது எடுப்பார்களா ? எடுக்க திட்டம் உண்டா ? பாக்கிஸ்தானை வளைக்க முடியுமா ? அப்படியாவது சாதித்துக் காட்டுங்களேன் .அப்படி நிலைமை மாறிவிட்டால் ஒரு இந்து கூட பாக்கிஸ்தானை விட்டு வெளியே வர மாட்டானே. இங்கு இருப்வர்களை அங்கே திரும்ப நாம் அனுப்பி விடலாம். இந்த சட்டம் தானாக செத்து விடும்.
தொப்புள் கொடி உறவு பாக்கிஸ்தான் நாட்டின் பிரதமா் ஜனாதிபதி ஆகிய இருவரும் தங்கள் நாட்டின் சிறுபான்மையினரை காக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.இந்திய அரசு அதில் தலையிடத் தேவையில்லை என அறிவிப்பு செய்யலாமேஃ அதுவும் இல்லையே.

பாக்கிஸ்தானில் வாழும் இந்துக்கள் அனைவரும் இங்கு வாங்கள் நாங்கள் சோறு போடுகின்றோம் என்று இந்திய அரசு சொல்லவில்லை.அப்படி அவர்களாலும் வர முடியாது.
பாக்கிஸதானில் இருந்து சுற்றுலா விசாவில் வரும் எந்த இந்தும் மீண்டும் பாக்கிஸ்தான் திரும்பிச் செல்வதில்லை. இங்கே தங்கி விடுகின்றார்கள். காபீர்கள் ஒழிப்பு இந்துக்கள் வெறுப்பு என்பதுதானே இசுலாமிய சட்டத்தின் முக்கிய கொள்கை.

ஏற்கனவே குடியேறி இரண்டும் கெட்டானாக வாழும் இந்துக்களுக்குதான் இந்த சிறப்பு சலுகை. வயித்தெரிச்சல் என்பார்களே.அது இதுதான்.

Dr.Anburaj said...

அந்த மூன்று நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாதவர்கள் கொத்து கொத்தாக இந்தியாவுக்குள் நுழைய ஆரம்பிப்பார்கள். அவர்களை எங்கு குடியமர்த்த முடியும்.? அசாம், மேற்கு வங்கம், மணிப்பூர், திரிபுரா போன்ற கிழக்கு, வடகிழக்கு மாநிலங்கள்தான் அவர்களது நுழைவுவாயில். அவர்களை வரவேற்று உபசரிக்க வடகிழக்கு மாநில மக்கள் என்ன முட்டாள்களா.? அவர்களது இருப்புக்கு பாதிப்பு என்பதால்தான் வேறெங்கும் இல்லாத போராட்டங்கள் அந்த மாநிலங்களில் நடைபெறுகிறது.
பதில் தங்கள் கருத்து நியாயமானதுதான்்.வந்தவனுக்கெல்லாம் இடம் கிடையாது.அளிக்கவும் சாத்தியமில்லை. இன்று வெளிநாட்டுக் காரன் இந்திய மண்ணில் குவிந்து கிடப்பதற்குமுழு காரணம் காங்கிரஸ்காரனின் சதிதான். பிரச்சனைக்கு பிதாமகன் காங்கிரஸ்தான். அந்தந்த நாடுகள் தான் தங்கள் சிறுபான்மையினரைக் காப்பாற்ற வேண்டும். தலைவலி திருகுவலியாகி அவதிப்படுவது பாரதிய ஜனதா அரசு.

இந்துக்கள் வந்தால் சமாளிக்க முடியாது என்றால் முஸ்லீம்களையும் அனுமதித்தால் பிரச்சனை இரண்டு மடங்காகுமே!

முஸ்லீம்களை அனுமதிக்க கூடாது என்பது நியாயம் என்று ஒப்புக் கொண்டதற்கு மிக்க நன்றி.