Followers

Monday, December 02, 2019

உலகில் எந்த நாட்டிலாவது இவ்வாறு தீண்டாமை சுவர் எழுப்பும் வழக்கம் உள்ளதா?

உலகில் எந்த நாட்டிலாவது இவ்வாறு தீண்டாமை சுவர் எழுப்பும் வழக்கம் உள்ளதா?
கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து மக்கள் பலியான சம்பவம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையத்தில் 20 அடி உயரத்திற்கு கட்டப்பட்டிருந்த சுவர் ஒன்று மழையின் காரணமாக இடிந்து விழுந்ததில் அருகில் வீடுகளில் வசித்த 17 பேர் உயிரிழந்தனர். சுவற்றை கட்டியவரை கைது செய்ய வேண்டும் என்றும், இறந்தவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்றும் பொதுமக்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுப்பட்டதில் போலீஸுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் சுவர் இடிந்த விபத்து குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் பா.ரஞ்சித் ” கோவை மேட்டுபாளையம் நடூரில் பட்டியலின மக்கள் வாழும் பகுதியை ஓட்டி சாதி உணர்வால் கட்டப் பட்ட 20 அடி சுவர் தொடர் மழையால் இடிந்து 17 பேர்பலி. எத்தனையோ முறை இந்த சுவரை அகற்ற சொல்லி முறையிட்டும், அதை தட்டி கழித்து அரசும் சாதியாளர்களும் நிகழ்த்திருக்கும் கொடூர செயல்” என்று கூறியுள்ளார்.
இந்த காலத்திலும் தீண்டாமை சுவர் எழப்பலாமா? இதற்கு அனுமதி வழங்கியது யார்? 20 அடிக்கு சுவர் எழுப்பினால் அது தாங்குமா? தற்போது 17 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது? நஷ்ட ஈடுகள் கொடுத்து விடுவதால் போன உயிர்கள் திரும்பி வந்து விடுமா? உலகில் எந்த நாட்டிலாவது இவ்வாறு தீண்டாமை சுவர் எழுப்பும் வழக்கம் உள்ளதா?

இறந்த அந்த 17 பேரும் விபத்தால் இறக்கவில்லை: தீண்டாமை கொடுமையால் இறந்துள்ளார்கள். உறவினர்களை பிஞ்சு குழந்தைகளை இழந்து வாடும் அந்த குடும்பத்தில் நீங்கள் ஒருவராக இருந்து பாருங்கள். அதன் உண்மையான வலி தெரியும்.

-----------------------------------------------------------------

பிற மனிதர்களைத் தாழ்வாகக் கருதினால் சொர்க்கம் இல்லை
"யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும், மக்களைக் கேவலமாக எண்ணுவதும்தான்" என்று கூறினார்கள்.
முஸ்லீம் 131
மேற்காணும் நபிமொழியில் நபி(ஸல்)அவர்கள் பிற மனிதர்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதுவதே எவ்வளவு பெரிய பாவம் நான் உயர்ந்தவன் பிற மனிதன் தாழ்ந்தவன் என்ற நினைப்பு ஒரு முஸ்லீமுடைய உள்ளத்தில் இருந்தாலே அவன் சொர்க்கம் செல்லமுடியாது என்று கூறியதிலிருந்தே இஸ்லாத்தில் தீண்டாமை எவ்வளவு பெரிய பாவச்செயலாக உள்ளததென்பதை அறியலாம்
தீண்டாமை என்பது அறியாமைக்காலச் செயல்

ஒருமுறை (ரலி) அவர்கள் பிலால் (ரலி) அவர்களைப் பார்த்து தீண்டாமையின் ஓரங்கமாகக் கருதப்படும் நிற அடிப்படையிலான விஷயத்தைச் சொல்லி 'கருப்பியின் மகனே' என்று கூறிவிட்டார்கள்.

'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்!'
புஹாரி 30
இந்த ஹதீஸில் அபூ தர்( (ரலி) அவர்கள் கருப்பினத்தவரான(நீக்ரோ) பிலால் (ரலி) அவர்களை 'கருப்பியின் மகனே' என்று கேவலமாகச் சொல்லிவிட்டார்கள். அதற்க்கே நபி(ஸல்) அவர்கள் நீர் அறியாமைக்காலப் பழக்கமுள்ளவராகவே (இஸ்லாத்திற்கு முந்திய காலம்) உள்ளீர். அதாவது முஸ்லீம் ஒருபோதும் செய்யக்கூடாத செயலைச் செய்துவிட்டீர் என்று கடிந்து கொண்டார்கள். இதைக்கேட்ட அபூ தர் (ரலி) அவர்கள் உடனே தான் இவ்வளவு பெரிய தவறைச்செய்துவிட்டோமே என்றென்னி பிலால்(ரலி) அவர்களிடம் போய் எந்தளவுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார்கள் என்பதைப் பாருங்கள். அபூதர் (ரழி) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம் சென்று தன்னை மன்னிக்க வேண்டும் என்று மன்றாடினார்கள். இதற்குப் பகரமாக பிலால் தன்னுடைய காலை தன் கழுத்தில் மிதித்தாலும் அதற்கு பகரமாக தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்கள்




1 comment:

Dr.Anburaj said...


எத்தனையோ முறை இந்த சுவரை அகற்ற சொல்லி முறையிட்டும், அதை தட்டி கழித்து அரசும் சாதியாளர்களும் நிகழ்த்திருக்கும் கொடூர செயல்” என்று கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------
இந்த சுவா் குறித்து புகாா் பெற்ற அதிகாரி சுவரின் பலம்-தேவை குறித்து ஆய்வு செய்ய பொதுப்பணித்துறையை பணித்திருக்க வேண்டும். சுவா் பலஹீனமாக உள்ளது என்று அவர்கள் அறிக்கை அளித்தால் உடனே இடித்து விட்டு செலவுதொகை அபராதத்தொகையுடன் வசுலித்திருக்க வேண்டும். ஆனால் சோம்பேறி அரசு அதிகாரிகள். மொய் கிடைக்குமா ? வாய்கரிசி கிடைக்குமா ? என்று வாயைப்பிளந்து கொண்டு மொய் வராத நிகழ்வு என்று கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்திருக்கலாம்.அல்லது உரிமையாளரிடம் வாய்கரிசி பெற்று விட்டு கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்திருக்கலாம்.
-----------------------------------------------------------------------------
சுவரை அகற்றச் சொல்லி கேட்காத அரசு அதிகாரிகள் அனைவரையும் நடுத் தெருவில் வைத்து சுட்டுக் கொல்லுங்கள்-தவறுகள் மீண்டும் நடக்காது.
-----------------------------------------------------------------------------
சுவா் உரிமையாளா் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து ஏலத்தில் விட்டு கிடைக்கும் தொகையை கூடுதல் நிவாரணமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கொடுங்கள்.
-------------------------------------------------------------------------------
ஆனால் அரசு இயந்திரமோ தனது தவறை மறைத்து சுவரின் உரிமையாளரை மட்டும் குற்றவாளி ஆக்க முயன்று வருகின்றது. சுவரின் உரிமையாளா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
முதல் குற்றவாளியான அரசு அதிகாரிகள் விசாரணை அதிகாரிகளாக வலம் வருகின்றார்கள்.
நமது அரசு இயந்திரம் பாழாகி விட்டது.
மகத்தான ஒரு மனித சக்தியை உருவாக்கிடவே மறந்ததனால்
தேசபக்தியும் தூய்மையும் உள்ள மனிதர்கள் அருகிப்போனதனால்
--------------------------------------------------------------------------
முறையான சமய கல்வியை அளித்து பார்க்கலாம்.பயன் இருக்கும். தண்டனையாவது கடுமையாக்குங்கள். பயன் இருக்கும்.