Followers

Wednesday, February 18, 2026

என்ன ஒரு சுய மரியாதையை கற்றுத் தருகிறது இஸ்லாம்!




 என்ன ஒரு சுய மரியாதையை கற்றுத் தருகிறது இஸ்லாம்!

மார்க்க அறிஞரோடு கை குலுக்கும் போது ஒருவர் தனது தலையை மரியாதை நிமித்தம் சாய்க்கிறார்.
உடனே கோபமடைந்த அந்த அறிஞர் "ஏன் தலையை சாய்க்கிறாய்? இறைவனுக்கு மட்டுமே உனது தலை சாய வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார்...
சுய மரியாதை
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபதியாகத் திகழ்ந்தவர் முஆவியா . அவர் வெளியே வந்த போது அவரைக் கண்டஅப்துல்லாஹ் பின் சுபைர் அவர்களும் இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா அவர்கள் "அமருங்கள்" என்றார். தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் எனறு யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என்று நபிகள் நாயகம் அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள்ளேன் என்று முஆவியா சொன்னார்கள்.
நூல்: அபூதாவூத் 4552
ஒரு சக்கரவர்த்திக்கே கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழவேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றுள்ளதை இந்த சரித்திரத்தில் இருந்து நாம் தெரிகிறோம்.

No comments: