Followers

Showing posts with label ‬ ‎இஸ்லாம். Show all posts
Showing posts with label ‬ ‎இஸ்லாம். Show all posts

Sunday, August 13, 2017

பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய கஃபில் அஹமது கான்!

பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய கஃபில் அஹமது கான்!

கோரக்பூரில் உள்ள மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 அன்று ஆக்சிஜன் பைப் லைன் 'பீப்... பீப்' என்ற அபாய ஒலியை எழுப்பியது. இரண்டு மணி நேரமே வேலை செய்யும் என்பதை அங்குள்ள மருத்துவர்களும் நர்ஸூகளும் இதனை அறிந்திருந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

அதே நேரம் குழந்தைகள் வார்டுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத டாக்டர் கஃபில் அஹமது கான் நிலைமையை புரிந்து கொண்டு ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டுள்ளார். பழைய பாக்கியை கொடுத்தாலே புதிதாக சிலிண்டர் தருவோம் என்று கூறி விட்டனர். நிலைமையை புரிந்து கொண்டு சமயோஜிதமாக தனது காரில் இரண்டு மருத்துவ மனை ஊழியர்களை அழைத்துக் கொண்டு மூன்று சிலிண்டர்களை தனியார் மருத்துவமனையிலிருந்து வாங்கி வந்தார். வரும் வழியிலேயே செல் போன் மூலமாக பைப் லைனை தயாராக வைக்கும் படி மருத்துவமனை ஊழியர்களிடம் சொல்லியுள்ளார். அதன்படி உடன் ஆக்சிஜன் பொருத்தப்பட்டு செயல்பட தொடங்கியது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பல குழந்தைகளை அந்த நேரம் உயிர் பிழைத்தன். ஆனால் அவர் கொண்டு வந்தது அரை மணி நேரம் வரையே தாங்கும்.

பிறகு வேகமாக திரும்பி சென்று மேலும் 12 சிலிண்டர்களை தனது வாகனத்தில் சுமந்து வந்து பல குழந்தைகளை காப்பாற்றியுள்ளார். ஃபைஸாபாத்திலிருந்தும் பல சிலிண்டர்களை வரவழைத்துள்ளார். அனைத்து செலவுகளையும் தனது சொந்த செலவிலேயே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் வழக்கமாக ஆக்சிஜன் அனுப்பும் நிறுவனம் உடனடி பணம் கொடுத்தால் மேலும் சிலிண்டர்களை அனுப்புவதாக கூறியது. உடனே அஹமது கான் தனது ஏடிஎம் கார்ட் மூலமாக 10000 ரூபாய் எடுத்து அந்த நிறுவனத்திடம் அளித்தார். உடன் பல சிலிண்டர்கள் மருத்துவமனை நோக்கி வந்தன. இறந்து கொண்டிருந்த பல குழந்தைகளின் உயிர் இவரது சமயோஜித முயற்சியால் காப்பாற்றப்பட்டது.

'மற்ற மருத்துவர்கள் எல்லாம் நமக்கென்ன வந்தது என்று அலட்சியமாக இருந்த போது டாக்டர் அஹமது கான் தனது சொந்த முயற்சியில் பல உயிர்களை காப்பாற்றியது வாழ்வில் மறக்க முடியாதது' என்று கவுரவ் திரியாதி என்பவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்துத்வாக்கள்  கூறுவது போல் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால் இன்னும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கள் வாழ்வை முடித்திருக்கும். 'பாரத் மாதா கீ ஜே' என்றும் 'வந்தே மாதரம்' என்றும் வாயளவில் சொல்வதல்ல தேசபக்தி. நாட்டு மக்களை காப்பதில் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான தேசபக்தி.





Wednesday, February 15, 2017

திருக்குர்ஆனில் அறிவியல் கருத்துகள்- மகா வெடிப்பு

அறிவோம் இஸ்லாம்

பாத்திமா மைந்தன்

64. திருக்குர்ஆனில் அறிவியல் கருத்துகள்

திருக்குர்ஆன் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி வேதம்; அது அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம். ஆன்மிகப் பெட்டகமான திருக்குர்ஆன், இன்று அறிவியல் ஆய்வுக் களஞ்சியமாகத் திகழ்வது கண்டு அறிவுலகம் திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்ந்துள்ளது.

1,400 ஆண்டுகளுக்கு முன்னர் மனித அறிவுக்கு எட்டாத பல கருத்துகள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.

'பெரு வெடிப்பு கோட்பாடு' என்பது இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடு ஆகும்.

தொடக்க நிலையில் இந்த உலகம் ஒரு பெரும் பருப்பொருளாக இருந்தது. அது திடீரென்று வெடித்துச் சிதறியது. அவ்வாறு வெடித்துச் சிதறிய துண்டுகள் மணிக்கு 72 மில்லியன் கிலோ மீட்டர் வேகத்தில் பிரபஞ்ச வெளியில் விலகி ஓடின. அப்போது பிரபஞ்சம் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

மகா வெடிப்புக்குப் பிறகே நட்சத்திரக் கூட்டங்கள் உருவாயின. மேலும் இவை சூரியனாகவும், பூமியாகவும், சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கோள்களாகவும் உருவாயின.

பிரபஞ்சம் தோன்றிய இந்த நிகழ்ச்சியை,
'கோளங்களும், பூமியும் (ஆரம்பத்தில்) ஒரே துண்டாக (ஒன்றாக)த்தான் இருந்தன. பிற்பாடு நாம் அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தோம்' (திருக்குர்ஆன்-21:30) என்று இறைவன் கூறுகின்றான்.

இன்றைய விஞ்ஞான உலகில் கூறப்படும் பெரு வெடிப்பு கோட்பாட்டை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் இந்த வசனத்தின் மூலம் எடுத்தியம்புகின்றது.

இந்தப் பேரண்டம் நட்சத்திரக் கூட்டங்கள் உருவாவதற்கு முன்பு புகை மண்டலமாக இருந்தது என்ற அறிவியல் உண்மை மகா வெடிப்பு கொள்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தையே,

'பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்' (திருக்குர்ஆன்-41:11) என்ற வசனம் பிரதிபலிக்கிறது.
விரிந்து கொண்டே செல்லும் பரந்த தன்மை கொண்டதாக இந்தப் பிரபஞ்சத்தை இறைவன் படைத்திருப்பதை, 'மேலும் நாம் வானத்தை (எவருடைய உதவியுமின்றி நம்) சக்தியைக் கொண்டு அமைத்தோம். நிச்சயமாக நாம் விரிவாற்றல் உடையவராவோம்' (திருக்குர்ஆன்-51:47) என்ற வசனம் உறுதிப்படுத்துகிறது.

நாம் வாழுகின்ற இந்தப் பிரபஞ்சம், விரிவடைந்து கொண்டிருக்கிறது என்ற பேருண்மையை வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள் வெளிப்படுத்தினார்.

இது குறித்து அமெரிக்காவின் மாபெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், 'நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகின்றது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பானது, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகவே திகழ்கிறது' என்று கூறியுள்ளார்.

பண்டைய காலத்தில் பூமி தட்டையானது என்ற நம்பிக்கை வெவ்வேறு நிலைகளில் நிலவியது. பின்னர் பல்வேறு காலகட்டங்களில் விஞ்ஞானிகள், இந்த பூமி உருண்டை வடிவிலானது என்ற உண்மையை உறுதிப்படுத்தினார்கள்.
இரவு-பகல் மாற்றம் குறித்து திருக்குர்ஆனில் ஏராளமான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்பதை உணர முடிகிறது.

'நீ தான் இரவைப் பகலில் புகுத்துகிறாய். நீ தான் பகலை இரவிலும் புகுத்துகிறாய்' (திருக்குர்ஆன்-3:27) என்றும்,
'நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்து கிறான். பகலை இரவில் புகுத்துகிறான்' (31:29) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

'புகுத்துதல்' என்றால் ஒரு நிலை இருக்கும்போது, அது திடீரென்று மற்றொரு நிலைக்கு மாறி விடாமல், சிறிது சிறிதாக மாறி மற்றொரு நிலையை அடைவதே ஆகும்.

திடீரென்று இரவும், திடீரென்று பகலும் மாறி மாறி வந்து விடுவதில்லை. பூமியின் பாதிப்பகுதியில் சூரிய வெளிச்சம் விழுவதால் அது பகல் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு எதிர்ப்புறம் உள்ள பகுதி சூரிய வெளிச்சத்திற்கு அப்பாற்பட்டுள்ளதால் அது இரவு என்று அழைக்கப்படுகிறது.

சூரிய வெளிச்சம் படும் பகுதியில், ஒரு பகுதி இரவில் இருந்து விடுபட்டு பகலை நோக்கி வருகிறது. மற்றொரு பகுதி பகலில் இருந்து விடுபட்டு இரவை நோக்கி நகருகிறது. பூமி, உருண்டை வடிவில் இருப்பதால் சூரியனுடைய வெளிச்சம் ஒரே சீராக எல்லாப் பகுதிகளிலும் இருப்பதில்லை. உதிக்கும் பகுதியிலும், மறையும் பகுதியிலும் மிகக்குறைவான வெளிச்சமும், பூமத்திய ரேகை பகுதிகளில் அதிகமான வெளிச்சமும் காணப்படுகிறது. இதைப்போலவே இரவும் வருகிறது.

இப்படி இரவும் பகலும் பல நிலைகளைக் கடந்து மெல்ல மெல்ல புகுத்தப்படுவதால், திருக்குர்ஆனில் 'புகுத்துதல்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பூமியானது உருண்ட வடிவில் இருப்பதாலும், பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் மட்டுமே இரவும் பகலும் மாறி வருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு.

கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனம், பூமி உருண்டை வடிவானது என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டு கிறது:

'அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கின்றான். அவனே பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இன்னும் இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான்' (திருக்குர்ஆன்-39:5).

இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள 'சுருட்டுதல்' என்பதற்கு ஒன்றின் மீது ஒன்றைச் சுருட்டுதல் என்று கருதலாம். இது தலையில் சுற்றப்படும் தலைப்பாகைக்கு ஒப்பான செயலாகும்.

தலைப்பாகையும் ஒன்றின் மீது ஒன்றாகச் சுற்றப்படுகிறது. இது பகலின் மீது இரவும், இரவின் மீது பகலும் சுற்றப்படுகிறது என்பதைச் சுட்டுகிறது.

பூமி உருண்டையாக இருக்கும்போதுதான் இரவும் பகலும் சுற்றி வரும் செயல் நிகழ முடியும்.

Sunday, January 10, 2016

இதுதான் இஸ்லாம் : நெஞ்சை நெகிழ வைத்த காணொளி....!!

இதுதான் இஸ்லாம் : நெஞ்சை நெகிழ வைத்த காணொளி....!!------------------------------------------------------சவூதி அரேபியா...

Posted by Nazeer Ahamed on Sunday, January 10, 2016

இதுதான் இஸ்லாம் : நெஞ்சை நெகிழ வைத்த காணொளி....!!

------------------------------------------------------

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் பிரபல டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்தவர் தேவராஜன்,
ஜித்தாவிலிருந்து ரியாத்திற்கு லோடு ஏற்றி ஓட்டிக்கொண்டு வந்த லாரியை ஓரமாக ஒதுக்கி வைத்து தூங்கியுள்ளார். சொமாலியாவை சேர்ந்த சில திருடர்கள் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு சென்று விட்டனர்.

ரியாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவராஜனை நிறுவனத்தின் உரிமையாளர் விரைந்து வந்து காவல்துறையின் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலவரத்தை கூறிவிட்டு இரவு பகல் பாராமல் தேவராஜனுடன் இருந்து கூடப் பிறந்த சகோதரனைப் போல் சகோதர வாஞ்சையுடன் ஒவ்வொரு உதவிகளையும் செய்து வருகிறார்.
நெஞ்சை நெகிழ வைத்த காணொளி...

இந்த வீடியோவை அந்த உரிமையாளருக்கே தெரியாமல் அங்கிருந்தவர்கள் எடுத்துள்ளார்கள்.

வீடியோ உதவி : சாகுல் ஹமீது
நன்றி: டைம்ஸ் வீடியோ
-------------------------------------------------------
நபிகள் நாயகம் அவர்களுக்கு பணியாளராக இருந்த அனஸ் பின் மாலிக் அவர்கள் கீழ்வருமாறு கூறுகின்றார்கள்:
“நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடத்தில் பத்து வருடங்களாகப் பணிபுரிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் ஒருபோதும் எனக்கு "சீ" என்று கூறியதில்லை. இதனை ஏன் செய்தாய்? இதனைச் செய்யாதிருந்தால் என்ன? என்றாவது அவர் எனக்குச் சொன்னதில்லை. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மக்களுள் நற்குணமிக்கவராக இருந்தார்கள்.”

ஆதாரம்:முஸ்லிம்
----------------------------------------------------
ஒரு முறை ஒரு மனிதர் நபிகள் நாயகம் அவர்களிடம் வந்தார். தமக்கு ஏதாவது தருமாறு கேட்டார். இது கேட்ட நபிகள் நாயகம் அவர்கள் ‘உங்களுடைய வீட்டில் ஏதாவது இருக்கின்றதா” எனக் கேட்டார்கள்”. "ஒரு போர்வையும் ஒரு பாத்திரமும் இருப்பதாக"அவர் பதிலளித்தார். இவற்றைக் கொண்டு வருமாறு நபிகள் நாயகம் அவர்கள் பணித்தார்கள். இவ்விரு பொருள்களும் கொண்டு வரப்பட்டன. நபிகள் நாயகம் அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்றார்கள். அதற்கு இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன.
“இதில் ஒரு திர்ஹத்திற்கு உணவு வாங்கி குடும்பத்துக்கு கொடுக்குமாறும் அடுத்த திர்ஹத்துக்கு ஒரு கோடரி வாங்கி வாருங்கள்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். கோடரி வாங்கி வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட நபிகள் நாயகம் அவர்கள் அதற்கொரு பிடியைப் பொருத்தி இந்த மனிதரிடம் ஒப்படைத்தார்கள்.
“நீங்கள் விறகு வெட்டி விற்பனை செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்கு இந்தப் பக்கம் தலைகாட்டக் கூடாது” என்று கூறி அனுப்பி வைத்தார்கள். அவர் நபிகள் நாயகம் அவர்கள் கூறியபடி விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார். 15 நாட்களில் பின் நபிகள் நாயகம் அவர்களைச் சத்தித்து தனது வருமானத்தைப் பற்றிக் கூறித் திருப்தியடைந்து இதற்கு நன்றி கூறினார். அப்போது “ இறுதி நாளில் முகத்தில் கறுத்த குறிகளுடன் வருவதைவிட இத் தொழில் உமக்கு மிகவும் சிறந்ததாகும்” என்று நபிகள் நாயகம் அவர்கள் போதனை செய்து அவரை அனுப்பி வைத்தார்கள்.

ஆதாரம்:திர்மிதி
‪#‎தொழிலாளி‬ ‪#‎முதலாளி‬ ‪#‎இஸ்லாம்‬