பி.ஏ.கிருண்ஷன் கீழடி ஆதாரங்களை ஏற்க மறுத்து ரிக்வேதத்தை முன்நிறுத்த நினைப்பது உள்நோக்கம் கொண்டது - சு.வெங்கடேசன் எம்.பி
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, October 01, 2019
தங்கம் வென்ற பாலஸ்தீன மங்கை!
தங்கம் வென்ற பாலஸ்தீன மங்கை!
துருக்கி இஸ்தான்புல்லில் உலகமெங்கிருந்தும் வந்திருந்த 1200 போட்டியாளர்கள் பங்கு பெற்ற கராத்தே போட்டி நடைபெற்றது. 40 நாடுகள் இதில் பங்கு பெற்றன. ஹலா அல் காதி என்ற பாலஸ்தீன மங்கை இப்போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
'வருகின்ற ஒலிம்பிக்கில் எனது நாடான பாலஸ்தீன் சார்பாக விளையாடி தங்கம் வெல்வதே எனது லட்சியம்' என்கிறார் ஹலா அல் காதி. சகோதரியின் எண்ணம் நிறைவேற வாழ்த்துவோம்.
பாஜகவினர் மன நோயாளிகளாக மாறி வருகின்றனர்!
உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் பாபுராம் நிசாத். அம்மாநில பிற்படுத்தப்பட்டோருக்கான நிதி மற்றும் வளர்ச்சித் துறையின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், பாபுராம் நிசாத் அடித்துத் துன்புறுத்துவதாக, அவரது மனைவி நீது நிசாத், முகநூலில் பகிரங்கமாக குற்றச் சாட்டு வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,“என்னுடைய கணவர் என்னை அடித்துத் துன்புறுத்தினார். என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். என்னை சுட்டுவிடுவதாக மிரட்டினார். இதுகுறித்து, நான் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர்கள் இது குடும்பப் பிரச்சனை, பேசி சமாதானம் செய்துகொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.
அவர்கள் என்னுடைய கணவருடன் நட்புடன் உள்ளனர். எனக்குத் திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. திருமணமானதிலிருந்தே அவர், என்னைத் துன்புறுத்தி வருகிறார். துப்பாக்கி முனையில் என்னை கொல்வதாக மிரட்டியும், என் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியும் வருகிறார்.
என்னுடைய சகோதரர்கள், பெற்றோர்களையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டுகிறார்” என கண்ணீருடன் மனைவி நீது நிசாத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தில் பிரதமர் மோடியும், முதல்வர் ஆதித்யநாத்தும் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
தகவல் உதவி
கலைஞர் செய்திகள்
01-10-2019
கலைஞர் செய்திகள்
01-10-2019
பிஜேபி தேர்தல்களில் வெற்றி பெறும் சூத்திரம்... :-)
பிஜேபி தேர்தல்களில் வெற்றி பெறும் சூத்திரம்...
:-)
சென்னை வேப்பேரியில் பெருநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், கிண்டி ஐ.ஐ.டி.யில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் பங்கேற்க வரும் பிரதமா் நரேந்திரமோடியை வெடிகுண்டு வைத்து கொலை செய்ய சிலா் திட்டமிட்டிருப்பதாகவும், அவா்கள் முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ்காந்தியை கொலை செய்ததுபோல மோடியையும் கொலை செய்ய திருவான்மியூா் ஆா்.டி.ஓ. அலுவலகம் அருகே பதுங்கியிருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பை அந்த நபா் துண்டித்துவிட்டாா்.
இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த காவலா், உடனடியாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். தகவலறிந்த அதிகாரிகள், சைபா் குற்றப்பிரிவு போலீஸாருக்கும், திருவான்மியூா் போலீஸாருக்கும் அந்த அழைப்பு குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டனா்.இதையடுத்து திருவான்மியூா் உதவி ஆணையா் பி.கே.ரவி, ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இதில் அந்த அழைப்பில் பேசியது, திருவான்மியூா் திருவள்ளூவா் நகா் பகுதியைச் சோ்ந்த பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவு பிரிவு செயலா் திருநாவுக்கரசு (43) என்பது தெரியவந்தது.உடனே போலீஸாா், திருநாவுக்கரசுவை பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில், பிரதமா் மோடிக்கு போலீஸாா் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாக தெரிவித்தாராம். இதைத் தொடா்ந்து போலீஸாா் திருநாவுக்கரசுவை திங்கள்கிழமை கைது செய்தனா்.
தகவல் உதவி
தின மணி
01-10-2019
தின மணி
01-10-2019
Subscribe to:
Posts (Atom)



