Followers

Sunday, January 12, 2020

ஓமான் ஆட்சியாளர் சுல்தான் காபூஸ் அவர்களின் அடக்கஸ்தலம்.

ஓமான் ஆட்சியாளர் சுல்தான் காபூஸ் அவர்களின் அடக்கஸ்தலம்.
50 ஆண்டு காலம் ஓமானை ஆண்ட அரசரின் அடக்கஸ்தலம் வெறும் மண்ணாலும் கூழாங் கற்கலாலும் சூழப்பட்டுள்ளது. இதுதான் உலகம். இஸ்லாமும் இதைத்தான் வலியுறுத்துகிறது.
நமது உத்தரவு இல்லாமல் யாரேனும் ஒரு நல்லறத்தை உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
நூல் : முஸ்லிம் 4590
அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் நல்லடியார்களின் அடக்கத் தளங்களை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்டார்கள். எச்சரிக்கையாக இருங்கள். நீங்களும் அடக்கத் தளங்களை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அதைவிட்டும் உங்களை நான் தடை செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூற நான் செவியுற்றேன் என ஜுன்துப் (ரலி) அறிவிக் கிறார்கள்.
நூல்: முஸ்லிம்



ஏன் இந்திய மக்கள் இஸ்லாத்தை நோக்கி ஓடினார்கள்?

கும்பல் கும்பலாக ஏன் இந்திய மக்கள் இஸ்லாத்தை நோக்கி ஓடினார்கள் என்பதை இந்த ஒற்றைப் படம் விளக்கி விடும்!


Saturday, January 11, 2020

அரபு மொழி பாடம் படங்களுடன் எளிய தமிழில் - 1






ப.சிதம்பரம் அவர்களின் அற்புத உரை.

ஒவ்வொரு இந்தியனும் கேட்க வேண்டிய ஒரு உண்மையான தெளிவான விளக்கம்.
ப.சிதம்பரம் அவர்களின் அற்புத உரை.
நாம் கேட்டு இருந்தாலும் மற்ற சகோதரர்கள் கேட்க ஒரு C-D-யாக போட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த காணொளியை கொண்டு செல்லுங்கள்.


சாமி கும்பிட வந்தவரின் வாயில் மூத்திரத்தை கொடுத்த கொடூரம்!



கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கருவனூர் கிராமத்தை சேர்நத தலித் சமுதாயத்தை சேர்ந்த அரவிந்தன் (வயது 20) வெல்டராக பெங்களூரில் பணி புரிந்து வந்தார். சென்ற மார்ச் 2 ந்தேதி தனது கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கருவனூர் வந்துள்ளார் அரவிந்தன். இது பற்றி அரவிந்தன் கூறியதாவது....

'எனது உறவினர் தினேஷை (வயது 20) அழைத்துக் கொண்டு திருவிழா நடக்கும் கோவிலுக்கு சென்றேன். சில உயர் சாதி இந்துக்கள் நாங்கள் கோவிலுக்குள் வந்ததை ஜீரணிக்க முடியவில்லை. உடன் அவர்கள் கும்பலாக எங்களை சூழ்ந்து கொண்டு தாறுமாறாக தாக்க ஆரம்பித்தனர். எங்கள் இருவரையும் கழிவறை இருக்கும் இடம் வரை இழுத்தச் சென்றனர். அங்கும் எங்கள் இருவரையும் தாக்க ஆரம்பித்தனர். அடி தாங்காமல் நான் கீழே வீழ்ந்தேன். அப்போது மிகுந்த தண்ணீர் தாகம் எடுத்தது. 'தண்ணீர்... தண்ணீர்' என்று பிதற்றினேன். உடனே உயர் சாதி இளைஞன் ஒருவன் எனது வாயில் மூத்திரத்தை பெய்தான். எனது உறவினர் தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடி எனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தான். பிறகு எனது உறவினர்கள் வந்து என்னை மீட்டனர்' என்கிறார் அரவிந்தன் என்ற தலித் இளைஞர்.

மறுநாள் அரசு ஆஸ்பத்திரியில் அரவிந்தன் அனுமதிக்கப்படுகிறார். அருகில் உள்ள கல்லாவி காவல் நிலையத்தில் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி நீதி கேட்டுள்ளார். ஆனால் காவலர்களோ வன்கொடுமை சட்டத்தில் கேஸை புக் பண்ணாமல் சாதாரண அடிதடி கேஸில் வழக்கு பதிந்துள்ளனர்.

'தமிழ்நாடு குறவர்கள் பழங்குடியின மக்கள் சங்கத்தின்' தலைவர் ரவி சொல்கிறார் 'காவல் துறையைச் சார்ந்த சிலர் என்னிடம் வன் கொடுமை சட்டத்தில் கேஸ் புக் பண்ணாமல் இருப்பதற்காக மேல் சாதியினர் பணப் பட்டுவாடா செய்துள்ளதாக சொல்கின்றனர். இதனை நாங்கள் விடப் போவதில்லை. நீதி மன்றத்துக்கு இந்த சம்பவத்தை எடுத்துச் செல்வோம்' என்கிறார்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
18-03-2015

தான் வணங்கும் சாமியை கும்பிட வந்தது அவ்வளவு பெரிய தவறா? மூத்திரத்தை அந்த இளைஞன் வாயில் ஊற்றும் அளவுக்கு அவன் செய்த குற்றம்தான் என்ன என்பதை இந்துத்வாவாதிகள் விளக்குவார்களா?

இந்து மதத்தில் உள்ள இது போன்ற தவறுகளை எல்லாம் களைந்தால் ஏன் மக்கள் இஸ்லாத்தை நோக்கி ஓடப் போகிறார்கள்? இந்து மதத்தை காக்க NRC போன்ற சட்டங்களும் தேவையில்லையே? மோடியும் அமித்ஷாவும் சிந்திப்பார்களா? 
...