Followers

Saturday, January 11, 2020

சாமி கும்பிட வந்தவரின் வாயில் மூத்திரத்தை கொடுத்த கொடூரம்!



கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கருவனூர் கிராமத்தை சேர்நத தலித் சமுதாயத்தை சேர்ந்த அரவிந்தன் (வயது 20) வெல்டராக பெங்களூரில் பணி புரிந்து வந்தார். சென்ற மார்ச் 2 ந்தேதி தனது கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கருவனூர் வந்துள்ளார் அரவிந்தன். இது பற்றி அரவிந்தன் கூறியதாவது....

'எனது உறவினர் தினேஷை (வயது 20) அழைத்துக் கொண்டு திருவிழா நடக்கும் கோவிலுக்கு சென்றேன். சில உயர் சாதி இந்துக்கள் நாங்கள் கோவிலுக்குள் வந்ததை ஜீரணிக்க முடியவில்லை. உடன் அவர்கள் கும்பலாக எங்களை சூழ்ந்து கொண்டு தாறுமாறாக தாக்க ஆரம்பித்தனர். எங்கள் இருவரையும் கழிவறை இருக்கும் இடம் வரை இழுத்தச் சென்றனர். அங்கும் எங்கள் இருவரையும் தாக்க ஆரம்பித்தனர். அடி தாங்காமல் நான் கீழே வீழ்ந்தேன். அப்போது மிகுந்த தண்ணீர் தாகம் எடுத்தது. 'தண்ணீர்... தண்ணீர்' என்று பிதற்றினேன். உடனே உயர் சாதி இளைஞன் ஒருவன் எனது வாயில் மூத்திரத்தை பெய்தான். எனது உறவினர் தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடி எனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தான். பிறகு எனது உறவினர்கள் வந்து என்னை மீட்டனர்' என்கிறார் அரவிந்தன் என்ற தலித் இளைஞர்.

மறுநாள் அரசு ஆஸ்பத்திரியில் அரவிந்தன் அனுமதிக்கப்படுகிறார். அருகில் உள்ள கல்லாவி காவல் நிலையத்தில் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி நீதி கேட்டுள்ளார். ஆனால் காவலர்களோ வன்கொடுமை சட்டத்தில் கேஸை புக் பண்ணாமல் சாதாரண அடிதடி கேஸில் வழக்கு பதிந்துள்ளனர்.

'தமிழ்நாடு குறவர்கள் பழங்குடியின மக்கள் சங்கத்தின்' தலைவர் ரவி சொல்கிறார் 'காவல் துறையைச் சார்ந்த சிலர் என்னிடம் வன் கொடுமை சட்டத்தில் கேஸ் புக் பண்ணாமல் இருப்பதற்காக மேல் சாதியினர் பணப் பட்டுவாடா செய்துள்ளதாக சொல்கின்றனர். இதனை நாங்கள் விடப் போவதில்லை. நீதி மன்றத்துக்கு இந்த சம்பவத்தை எடுத்துச் செல்வோம்' என்கிறார்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
18-03-2015

தான் வணங்கும் சாமியை கும்பிட வந்தது அவ்வளவு பெரிய தவறா? மூத்திரத்தை அந்த இளைஞன் வாயில் ஊற்றும் அளவுக்கு அவன் செய்த குற்றம்தான் என்ன என்பதை இந்துத்வாவாதிகள் விளக்குவார்களா?

இந்து மதத்தில் உள்ள இது போன்ற தவறுகளை எல்லாம் களைந்தால் ஏன் மக்கள் இஸ்லாத்தை நோக்கி ஓடப் போகிறார்கள்? இந்து மதத்தை காக்க NRC போன்ற சட்டங்களும் தேவையில்லையே? மோடியும் அமித்ஷாவும் சிந்திப்பார்களா? 
...

No comments: