Followers

Sunday, December 18, 2022

இஸ்லாமியர்களால் சாலமோ (இத்தாலி) வில் ஒரு பல்கலைக் கழகம் நிர்மாணிக்கப்பட்டது.

 கிபி 841


ஐரோப்பாவில் முதன் முதலாக இஸ்லாமியர்களால் சாலமோ (இத்தாலி) வில் ஒரு பல்கலைக் கழகம் நிர்மாணிக்கப்பட்டது. அதன் பிறகு அதன் நீட்சியாக டொலெடோ, செலிலி, க்ரான்டா போன்ற பகுதிகளிலும் இஸ்லாமியர்களால் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டது. அங்கு படித்து பட்டம் பெறுபவர்களுக்கு அரபுகளின் உடையான தவ்ப் அணிவிக்கப்பட்டது. பட்டம் பெறுபவர்கள் தங்கள் நாடுகளுக்கு அதே உடையோடு சென்று அதனை அறிமுகப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக உலகமெங்கும் பட்டம் பெறுபவர்களின் உடையாக அது மாறிப் போனது. 


நேற்று கால்பந்து விளையாட்டில் பட்டம் வென்ற அணிக்கு அரபு உடையை உடுத்தி அழகு பார்த்தனர். இதனை சிலர் விமரிசித்திருந்தனர். இந்த உடையானது கல்லூரி படிப்பிலிருந்தே துவங்குவதை அவர்கள் ஏனோ அறிந்திருக்கவில்லை.





பிகினி அணிந்திருந்தது எதிர்ப்பலையை உருவாக்கி இருக்கிறது.

விரைவில் வெளிவரவிருக்கும் 'பத்தான்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'பேஷரம்' பாடலில் தீபிகா படுகோன் காவி கலர் பிகினி அணிந்திருந்தது எதிர்ப்பலையை உருவாக்கி இருக்கிறது.

அப்படி அவர் காவி அணிந்து கொண்டதை நானும் எதிர்க்கிறேன்.

- சுதந்திர இந்தியாவில் கலவரங்கள் நடத்தி ஆயிரமாயிரம் அப்பாவிகள் சாகக் காரணமான தீவிரவாதிகள் அணிந்த நிறம் அது.

- அக்கலவரங்களில் நினைக்கவே நடுநடுங்கும் வன்புணர்வுகளை அரங்கேற்றிய காமக்கொடூரர்கள் அணிந்த நிறம் அது.

- மாடு கடத்துகிறார்கள் என்ற போர்வையில் அப்பாவி முஸ்லிம்களை அடித்தே கொலை செய்த சைக்கோக்கள் அணிந்த நிறம் அது.

- சாமியார்கள் போர்வையில் மாநாடு நடத்தி இன ஒழிப்புக்கு திட்டங்கள் வகுத்த கொலைகாரக் கூட்டம் அணிந்த நிறம் அது.

- கலாச்சாரத்தைக் காக்கிறோம் என பப், நைட் கிளப்களில் புகுந்து பெண்களை அடித்துத் துரத்திய முட்டாப்பீசுகள் அணிந்த நிறம் அது. –

ஆன்மீகப் பம்மாத்துப் பண்ணி சாமியார் வேடமிட்டு ஆயிரம் கோடிகளில் புழங்கி, அதுவும் போதாதென ஆசிரமம் வரும் பெண்களை பாலியல் தொல்லை செய்த கேடிகளின் நிறம் அது.

- மானுட வரலாற்றின் மாபெரும் கருணையாளனை, ஒரு மகாத்மாவை சுட்டுக் கொலை செய்யக் காரணமாக இருந்த நிறம் அது.

அந்த நிறத்தைப் போய் அன்பும், அழகும், பரிவும், கருணையும் நிறைந்த எங்கள் தீபிகாவுக்கு அணிவித்ததற்காக படத்தின் இயக்குனருக்கு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறேன்.


Sridhar Subramaniam





Saturday, December 17, 2022

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா அந்த மக்களுக்கு கொடுத்த பரிசு

 ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா அந்த மக்களுக்கு கொடுத்த பரிசு.


மற்றொரு நாட்டை ஆக்கிரமித்து அதன் வளங்களை சுரண்டி அந்த மக்களை அழிப்பதை எந்த மண்ணின் மைந்தன் பொறுத்துக் கொள்வான். இது தீவிரவாதமாகாதா? இதனை கண்டித்து அவன் ஆயுதம் எடுத்தால் அது மட்டும்தான் தீவிரவாதமா?




காவி உடை உடுத்தினால் ராஜ உபசாரம்.

 'ஒன்பது வருடமாக காவி உடையில் நான் ரயிலில் பயணித்துள்ளேன். ஒரு முறை கூட டிக்கெட் எடுத்ததில்லை. டிடிஆர் வந்து 'பாபா.. சாப்டீங்களா?' என்று பவ்யமாக கேட்பார். ஒரு முறை கூட என்னிடம் டிக்கெட் கேட்டதில்லை'


இதனை சிரித்துக் கொண்டே சொல்கிறான். சாமான்யன் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் சிறைவாசம். காவி உடை உடுத்தினால் ராஜ உபசாரம். இதுதான் வட மாநிலங்கள்.




முழக்கமிடும் துருக்கிய மாணவர்கள்.

 உகுர் குதாய் என்ற எழுத்தாளர் நபிகள் நாயகத்தைப் பற்றி பொய்யான செய்திகளை பரப்பினார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிடும் துருக்கிய மாணவர்கள்.


நாடு, மொழி, இனம் என்று அனைத்தையும் கடந்து அன்பு செலுத்தப்டுபவர் நபிகள் நாயகம் அவர்கள். அந்த அளவு அவர்களால் நாங்கள் தெளிவான மார்க்கத்தைப் பெற்றுள்ளோம். எனவேதான் அவர்களது கண்ணியத்துக்கு ஒரு சிறு இழுக்கை யாராவது ஏற்படுத்தினாலும் உலக முஸ்லி;கள் கொதித்தெழுகின்றனர்.