Followers

Monday, April 18, 2022

முன்பை விட வீரியமாக வளர்வோம்

 'எங்களின் வரலாறு பழமையானது. முடிந்தால் தாஜ்மஹாலையும் இடித்துக் கொள்ளுங்கள். எங்களின் வரலாற்றை கேட்கிறீர்கள்... ரெட் போர்ட் போன்ற பல இடங்கள் எங்களின் வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கும். இந்த மண்ணை நாங்கள் எப்படி நேசிக்கிறோம் தெரியுமா? ஐந்து முறை எங்கள் நெற்றியை இந்த மண்ணில் வைக்கிறோம். இறந்த பிறகு எங்கள் உடலை இந்த மண்ணிலேயே புதைக்கிறோம். இதை விட உங்களுக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும் எங்களின் தேசப்பற்றுக்கு? எங்களுக்கு எதிராக எத்தனை கொடுமைகளை அரங்கேற்றினீர்கள்? குஜராத், உபி, மும்பை என்று எத்தனை உயிர்களை எடுத்தீர்கள்? நாங்கள் என்ன அழிந்தா விட்டோம்? முன்பை விட வீரியமாக வளர்வோம்.'




Sunday, April 17, 2022

ராம ராஜ்யம் எப்படி இருக்கும்

 ராம ராஜ்யம் எப்படி இருக்கும் என்பதனை அழகாக விளக்குகிறார். நாடார் இனத்தை சார்ந்த தமிழிசை இந்த காணொளியை அவசியம் கேட்க வேண்டும்.


'ஒரு காலத்திலே 'சாமீ...' என்று கை கட்டி பேசுவா... இப்போ பணிவே கிடையாது.. சூத்திரனே இல்லை... ஸ்ரீவில்லிபுதூரில் ஒரு நாடார் பையன் அக்ரஹார தெருவில் நுழைந்ததற்காக தலை கீழாக கட்டி தொங்க விட்டு அடித்துள்ளார எங்க தாத்தா... இதை சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை... பயப்படவில்லை'






Thursday, April 14, 2022

பள்ளிவாசலின் உள்ளே இமாம் பயத்துடன்....


 


சாப்ரா – பீஹார்

 

பள்ளிவாசலின் உள்ளே இமாம் பயத்துடன்.... வெளியே குடித்து விட்டு இசையை போட்டு நடனமாடிக் கொண்டு ராம நவமியைக் கொண்டாடும் இந்துத்வாக்கள். வேல், கத்தியைக் கொண்டு அந்த இமாமை அச்சுறுத்துகிறது இந்த பைத்தியக்கார கூட்டம்.

 

இந்து மதத்தை முற்றாக அழிக்க வேறு ஆட்கள் தேவையில்லை. மோடியும், அமித்ஷாவும் இன்னும் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் நாடு துண்டு துண்டாக சிதறி இந்து மதமும் காணாமல் போகும். அதை நோக்கித்தான் இந்தியா சென்று கொண்டுள்ளது.

 

ஒளரங்கஜேப் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்து சிதறுண்டு கிடந்த குறு நில பகுதிகளை இணைத்து அகண்ட இந்தியாவை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இந்தியாவை மோடி பழையபடி குறு நில மன்னர்களிடம் கொடுக்க பாடுபடுகிறார்.

 

Tuesday, April 12, 2022

ஒரு இந்து சகோதரரின் ஆதங்கம்....

 


ஒரு இந்து சகோதரரின் ஆதங்கம்....

 

காலையில் இருந்து இந்த புகைப்படம் மனச உறுத்திட்டே இருக்கு. ஒருவர் இந்து என்பதால் அவரின் கடையை விட்டுவிட்டு, மற்றொருவர் இஸ்லாமியர் என்பதால் அவரின் கடையை எரிச்சுருக்கானுங்க.

 

3 வருஷமா கொரோனா பாதிப்புல வியாபாரம் பாதிச்சு, இந்த வருஷமாவது வியாபாரம் நல்லாருக்கும்னு, பக்கத்து கடை இந்துவை போல் தானே இவரும் நம்பிக்கையோட இருந்திருப்பார்.

அதுல தீயை வச்சுருக்கிங்களே, உங்கள் வம்சம் நல்லாருக்குமா. அந்த பாவத்தை உங்கள் வாரிசுகள் தான் சுமக்கும். நான் 4 வது படிக்கையில், என்னுடன் படித்த நண்பன் அப்துல் ராசித்தை ஒரு பென்சில் பிரச்சினைக்கு அடித்து விட்டேன், அவன் என் அம்மாவிடம் போய் சொல்லிவிட்டான்.

 

நான் வீட்டிற்கு சென்ற போது என் அம்மா என்னை வாசலிலேயே நிறுத்தி ''அடிக்கிறதே தப்பு, அதுலையும் நோம்பு வச்சுருக்க புள்ளைய அடிச்சுருக்கியே அறிவிருக்கா, அவன் பாவம் இல்லையா, முதலில் ராசித் வீட்டுக்கு போய் மன்னிப்பு கேட்டுட்டு வீட்டுக்கு வா'' என்றார். மன்னிப்பு கேட்ட அன்று முதல் அவனுடன் நான் சண்டை போட்டதே இல்லை.

 

இன்று கடை எரிக்கப்பட்ட அதே இஸ்லாமியரும் நோம்பிருந்திருக்கலாம். ஆனால் என் அம்மாவை போல் அறிவுரை சொல்ல உங்களுக்கு நல்ல தாய், தகப்பன் இல்லை போலும். இந்த பண்டிகை காலத்தை நோக்கி காத்திருக்கும் தன் பிள்ளைகளுக்கு, அந்த மனிதர் என்ன பதில் சொல்லுவார்.

 

''நாம் இந்து இல்லை என்பதால் எரித்து விட்டார்கள் மகனே, மகளே'' என்றா. அந்த பிள்ளைகளின் மனநிலை எப்படி இருக்கும். ஒன்று புரிந்துக்கொள்ளுங்கள். காலம் எப்போதும் கத்தியோடு காத்திருக்கும்.

 

நீங்கள் செய்யும் தவறுக்கு உடனே வெட்டு விழாமல் இருக்கலாம். ஆனால் என்றாவது வெட்டுப்படுவது நிச்சயம். அது உங்கள் கழுத்தில் கூட விழலாம். அதற்குள் திருந்திவிடுங்கள்.

 

Shiva Prabu