உலகம் முழுக்க எந்த நேரமும் எல்லா நாட்டிலும் எல்லா மொழி பேசுபவர்களிடத்திலும் வெளிப்படும் தொழுகைக்கான அழைப்பொலி.....
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, March 27, 2023
ஆப்ரிக்கா...
ஆப்ரிக்கா...
இந்த மக்களின் வீடுகளைப் பாருங்கள். தண்ணீருக்கு பல மணி தூரம் நடக்க வேண்டும். அந்த பெண் கூடாரத்தில் வெப்பத்தால் அதிக சூடு என்கிறார்.
ஆனால் இறைவன் நம்மை எந்த அளவு வசதியாக வாழ வைத்துள்ளான்? அதற்காக இறைவனுக்கு என்றாவது நன்றி செலுத்தியுள்ளோமா? சிந்தியுங்கள்.
சகோதரர் சிவ நடராஜர் பதிவு...!!!
சகோதரர் சிவ நடராஜர் பதிவு...!!!
புனித ரமதான் மாதத்தில் ஒரு இஸ்லாமியர் வீட்டில் தங்கி இருக்குறீர்களா?
நான் தங்கி இருக்கிறேன். ஒரு நாள் அல்ல. 30 நாட்கள்.
எனக்கு மட்டும் உணவளித்துவிட்டு ஒரு தவம் போல் அவர்கள் நாள் முழுதும் தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பதை பார்த்து வியந்து, இஸ்லாம் மதத்தின் மேல் ஒரு மேலோங்கிய மரியாதை எனக்கு வந்தது அந்த 30 நாட்களில்.
உங்களுக்கு தெரிந்த ஒரு இஸ்லாமிய நண்பர் வீட்டில் ஒரு நாள் தங்கி பாருங்கள். அவர்கள் அன்புடன் தரும் உணவை உண்டு பாருங்கள். அந்த சுவையையும் அன்பையும் இறக்கும் வரை மறக்க மாட்டீர்கள். ரமதான் கரீம்
Sunday, March 26, 2023
ஹிட்லர் திருமணம் செய்து கொள்ளவில்லை
1. ஹிட்லர் திருமணம் செய்து கொள்ளவில்லை
2. குறிப்பிட்டமதத்தை சேர்ந்தவர்களை நாட்டின் எதிரிகளாக கருதினார்

