Followers

Monday, October 05, 2020

23 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த காஸ்மீரத்து இளைஞன்!

 23 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த காஸ்மீரத்து இளைஞன்!


''எனது தந்தை 1990 களில் இறந்து விடவே குடும்பத்தை கவனிக்க எனது பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு டெல்லியில் எனது சகோதரனோடு கம்பளி, சால்வை தொழிலை கவனித்து வந்தேன். நேபாள் காட்மண்டுவில் புதிதாக ஒரு கடையை திறந்தோம். வியாபாரம் நல்ல முறையில் நடந்து வந்தது. 1996 ஆம் ஆண்டு நேபாள் காட்மண்டுவில் ஒரு சிறு வியாபாரியிடம் பணம் வசூல் செய்வதற்காக சென்று கொண்டிருந்தேன். நான் சென்ற மார்க்கெட் பகுதிக்கு நேபாள போலீஸ் திடீரென்று வந்து சோதனையில் ஈடுபட்டது. என்னையும் நான்கைந்து காஸ்மீர் இளைஞர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது. ''நாங்கள் வியாபாரிகள'' என்று எவ்வளவோ மன்றாடினோம். எங்களின் வார்த்தைகளுக்கு அங்கு எந்த மதிப்பும் இல்லை. ‘’

''நான் வியாபாரத்துக்காக வந்ததையும் அந்த நபரின் புகைப்படத்தையும் காட்டினேன். எதையும் கண்டு கொள்ளாமல் எங்களின் கண்களை கட்டி இந்திய நேபாள் எல்லைக்கு அழைத்து சென்றனர். போகும் வழியில் எங்களை அடித்தனர். அங்கு டெல்லி போலீஸ் எங்களுக்காக காத்திருந்தது. அவர்களிடம் எங்களை ஒப்படைத்தனர் நேபாள போலீஸ். அங்கிருந்து டெல்லி கொண்டு வரப்பட்டு இருட்டு அறைகளில் அடைத்து வைக்கப்பட்டோம். பல டெல்லி காஸ்மீர் இளைஞர்களும் எங்களோடு சேர்த்து வைக்கப்பட்டனர். 9 நாட்கள் அடித்து துன்புறுத்தப்பட்டோம். டெல்லி லஜ்பத் நகர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக எங்களை விசாரித்தனர்.''

''நாங்கள் வியாபாரிகள். எங்களுக்கு எதுவும் தெரியாது'' என்று மன்றாடினோம். எங்களின் வார்த்தைகளை காவல் துறை ஏற்காது மேலும் அடித்தனர். விடுதலையாக வேண்டுமானால், உணவு வேண்டுமானால் நாங்கள் சொல்வது போல் கேட்க வேண்டும் என்று தொந்தரவு செய்தனர். விடுதலையானால் போதும் என்ற விரக்தியில் ஒத்துக் கொண்டோம். பல பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். கோர்ட்டிலும் இதே போல் சொல்லச் சொன்னார்கள். அதன் பிறகு எங்களை பல அதிகாரிகள் பார்வையிட்டனர். முடிவில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டோம். அங்கு எனது சகோதரனும் அடைபட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதோம். எங்கள் தரப்பு நியாயத்தைக் கேட்க அங்கு யாரும் இல்லை. ‘’

''பல ஆண்டுகள் பல கோர்ட்டுகள் பல வழக்குகள் என்று அங்கும் இங்கும் இழுத்தடிக்கப்பட்டோம். காஸ்மீரில் எங்காவது குண்டு வெடிப்பு நடந்து ராணுவத்தினர் இறந்தால் சிறை நிர்வாகத்தினர் எங்களை அடிப்பர். எங்களுக்கு உணவு தர மறுப்பர். இவ்வாறு செய்யாத குற்றங்களுக்கெல்லாம் நாங்கள் தண்டனை அனுபவித்தோம். புல்வாமா தாக்குதல் நடந்தபோது நாங்கள் அதிகம் அடிக்கப்பட்டோம்.''

''ராஜஸ்தான் டெல்லி சிறைகள் என்று 23 வருடங்கள் அலைக்கழிக்கப்பட்டு ''நான் குற்றமற்றவன்'' என்று இப்போது விடுதலை செய்கிறார்கள். 17 வயதில் சிறைக்கு வந்த எனக்கு தற்போது நாற்பது வயதாகிறது. எனது பள்ளி நண்பர்கள் பலர் மருத்துவர்களாகவும், இன்ஜினியர்களாகவும் தங்கள் பணியை தொடர எனது வாழ்வோ திசை மாறி விட்டது. எனது கிராமத்தின் தற்போதய நிலை மிகவும் மாறி விட்டது. எங்கும் ராணுவம். மற்றொரு திறந்தவெளி சிறைச் சாலைக்கு வந்து விட்டதாகவே உணர்கிறேன். வாழ்க்கையே ஒரு வெறுமையாக தெரிகிறது''

என்கிறார் மிர்ஸா நிசார் ஹூசைன்.

அந்த இளைஞன் இழந்த அந்த 23 வருடங்களை யார் திருப்பி தருவது? காங்கிரஸ் அரசும் பிஜேபி அரசும் ஒரு சேர இது போன்ற இளைஞர்களின் வாழ்வில் அரசியல் செய்து எதை சாதிக்கப் போகின்றன?

இழந்த அவனது வசந்த காலங்களை நாளை மறுமையில் சொர்க்கத்தில் பெற்றுக் கொள்வான். அவனது குடும்ப வாழ்வுக்காக நாமும் பிரார்த்திப்போமாக!

முதல் படம் 16 வயதில் எடுத்தது. இரண்டாவது படம் சிறையிலிருந்து வெளியான பின்பு. தற்போது வயது 40.

-காஸ்மீர் பத்திரிக்கையாளர் மாஜித் மக்பூல் ன் பதிவிலிருந்து...

மொழி பெயர்த்தது: சுவனப்பிரியன்




1 comment:

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் பயங்கரவாதச் செயல்களை செய்து இந்தக்களை கொனறு குவித்து வருகின்றார்கள்.
காவல்துறை சில தகவல்கள் தடயங்களை வைத்து துப்பு துலங்க வேண்டும்.
அவர்களும் மனிதர்கள்தாம்.
அல்லா காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றவாளிகள் யாா் என்று வஹி அனுப்பினால் எந்த பிரச்சனையும் வராது.
தாங்கள் நாளை காலை சஹா் தொழும்போது இதை வேண்டுகோளாக வையுங்கள்.

அல்லா ஒப்புதல் அளித்தால் பிரச்சனை முடிந்து விடுமே!
----------------------------------------------------------------------------
முஸ்லீமகள் தாக்குதல் நடத்தி இந்துக்கள் செத்த எந்த நிகழ்வு குறித்து என்றாவது ஒரு தடவை கூட கண்டனப் தாங்கள் பதிவை செய்யவில்லை.

துலுக்கன் சக துலுக்கனுக்காக மட்டுமே பதிவிடுவேன் என்று வாழ்பவன் ஜனநாயக வாழ்விற்கு தகுதியற்றவன்.

தேசத் துரோகி. விஷம்.