Followers

Saturday, October 03, 2020

குவைத் மன்னர் இறப்புக்காக வருந்தும் இந்து மத சகோதரர்!

 குவைத் மன்னர் இறப்புக்காக வருந்தும் இந்து மத சகோதரர்!


இனத்தால், மொழியால், மதத்தால், நிறத்தால், நாட்டால் வேறுபட்டுள்ளார் குவைத் மன்னர். ஆனாலும் இந்த இந்து நண்பர் தனது வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்ததாக நினைத்து வருத்தப்படுகிறார். கொரோனா வால் மக்கள் பரிதவித்த நிலையில் அரபுகளுக்கு எப்படி இலவச வைத்தியம் செய்யப்படுகிறதோ அதே போன்று வெளி நாட்டவர்களும் இலவச மருத்துவ சேவை வலியுறுத்தி பல வெளிநாட்டு தொழிலாளர் உயிரை காப்பாற்றியுள்ளார். அவரவர் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல விமான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மனன்ர் இறந்த செய்தியால் இது போல் பல லட்சம் தொழிலாளர்கள் தங்கள் வீட்டு இறப்பாக நினைத்து மனம் உருகியுள்ளார்கள்.

ஆட்சியாளர் என்றால் இப்படி இருக்க வேண்டும். சாமான்ய மக்களின் அன்பை பெற வேண்டும். நம் நாட்டில் ஒரு ஆட்சியாளர் இருக்கிறார. அதானி, அம்பானிக்கு சாதகம் எதுவோ அதனை செய்து கொடுக்கவே முனைப்பு காட்டுகிறார். திடீரென்று லாக்டவுன் அறிவிப்பு செய்து பல ஆயிரம் தொழிலாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வாகன வசதி இல்லாமல் இறந்த செய்தியை அறிந்தோம். அவரைப் பொருத்த வரை சாமான்ய மக்களின் உயிர் ஒரு பொருட்டல்ல.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் சாமான்ய மக்கள் க்யூவில் நின்று இறந்த செய்தி அறிந்திருப்போம். ஆனால் சேகர் ரெட்டியிடம் 2000 ரூபாய் நோட்டுக்கள் இத்தனை கோடி எப்படி வந்தது என்பதற்கு ஆதாரம் சிபிஐயிடம் இல்லையாம். இதனை சொல்வதற்கு வெட்கப்படவில்லை மத்திய அரசு. உண்மை வெளி வந்தால் பல அரசியல் தலைகள் உருளும் என்பதை மோடி அறியாதவல்ல. இப்படியும் கேவலப்பட்டு ஒரு ஆட்சியாளர் இருப்பாரா என்று சிந்திக்கின்றோம் நாம்.



2 comments:

Dr.Anburaj said...

சுவனப்பிரியன் ஒரு அரேபிய தாசானுதாச........அடிமையிலும் அடிமை.
குவைத் மன்னா் எப்படி தோ்வு செய்யப்படுகிறாா். ஜனநாயகம் அந்த நாட்டில் உள்ளதா ? எத்தனை வாரிசுகளுக்கு மாதச்சம்பளம் வழங்கப்படுகிறது என்று அங்கே அந்ததரங்கள் ஆயிரம் உள்ளது.
சவுதியை விட குவைத் செல்வ செழிப்பு மிக்கது.உபரி வருவாய் பல ஆயிரம்......கோடி. இந்த நாட்டு மன்னரின் முடிவோடு இந்தியாவை ஒப்பிடுவது நியாயமா ?

வெளிநாட்டு தொழிலாளா்கள் இல்லையேல் குவைத் நாறிப்போகும். திணறிப்போகும். குவைத் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வெளிநாட்டு தொழிலாளா்கள் தவிா்க்க முடியாதவர்கள்.
குரானா பிரச்சனையில் குவைத் அரசு தொழிலாளா்களின் நலன் காத்தது என்பது பெரிதும் பாராட்டத்தக்கது.தொழிலாளா்களுக்காக சில கோடிகள் செலவிடுவது குவைத் அரசிற்கு மிகச் சாதாரணமாக விசயம். பாலிமா் தொலைக்காட்சியில் இந்த செய்தி விரிவாக ஒளிபரப்ப்பட்டது.
இந்து நன்றியுள்ளவன். எனவே அவா் செய்த பேரூதவிக்கு நன்றியாக ஆவன செய்திருக்கின்றாா்.செய்த உதவியை நாம் அங்கிகரித்துதான் ஆக வேண்டும்.

குவைத்தில் இந்திய முஸ்லீம் பெண்கள் கண்ணியமாக முறையில்
வேலை செய்ய முடியுமா ?
சவுதியில் பெண்கள் கற்பறிக்கப்படுவதும் ஊதியம் முறையாகக் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்படுவதும் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது போன்ற கொடுமைகள் குவைத் யில் இல்லை என்று சு..னால் பதிவு செய்ய முடியுமா ?
கொடுமைகள் நடந்தால் குவைத் அரசு பெணகளை கண்ணியமாக நடத்த ஆவன செய்யும் என்றும்
வெளிநாட்டு பெண்களின் பாதுகாப்புக்கு போதிய சட்ட அங்கிகாரம் உள்ளது என்று சுவனப்பிரயனால் பதிவு செய்ய முடியுமா ?

அப்படி இருந்தால் குவைத் மன்னா் பண்பாளா். அந்தணா் என்று ஒப்புக் கொள்ளலாம்.

Dr.Anburaj said...

ஒரு நாட்டை குடும்ப சொத்தாக வைத்திருப்பது நியாயமானதல்ல. புதிய மன்னா் எப்படி தோ்வு செய்யப்பட்டாா் ,

அடிமைகளின் தேசமா ?