Followers

Tuesday, October 27, 2020

இன்றைய ரியாத் இரவு மிகுந்த வலியைக் கொண்டு வந்திருக்கிறது.

 மிதமான குளிர் ஆரம்பிக்கும் இன்றைய ரியாத் இரவு மிகுந்த வலியைக் கொண்டு வந்திருக்கிறது.


திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சார்ந்த ரப்பானி என்பவர் , எனது ஊரைச் சார்ந்த எனது தெருவைச் சார்ந்தவர் இங்கு வீட்டு ட்ரைவராக வேலை பார்த்து வந்தவர். இன்று காலை நெஞ்சுவலியில் இறந்துவிட்டார்.

இவருடன் , எனது உறவினர் ஒருவரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். நேற்று மாலை வரையிலும் ஊர் விசயங்கள் ஞாபகங்கள் ஊருக்கு செல்வதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்திருக்கின்றார்கள்.

எனது உறவினர் அவரது முகம் பார்க்க பயந்து கொண்டிருக்கிறார். நேற்று வரையிலும் அவர் முகம் பார்த்து பேசிக் கொண்டிருந்தவர் அவரது குரல்கள் காதுக்குள்ளே கேட்டுக் கொண்டிருக்கிறது.

எனக்கு அவரது பாடியை பார்க்கவே பயமாய் இருக்கிறது என்கிறார். இன்றைய இரவை அவர் நிம்மதியாக எப்படி கழிக்க முடியும்? ம் நேற்று நண்பர் இன்று பாடி. அவ்வளவுதான் வாழ்க்கை.. 🙁

அவர் இறப்பதற்கு முன்பு அவரை மருத்துவமனைக்கு தனது காரில் வைத்து அழைத்துச் சென்ற நண்பர் சொல்லிக்கொண்டிருந்தார்.

இறந்தவர் தனது வீட்டுக்கு போன் செய்து சொல்லியிருக்கிறார், 'தான் இறந்து விட்டால் அங்கேயே புதைக்கச் சொல்லுங்கள் - பாடியை அனுப்புவதற்கு செலவாகும் பணத்தை பணமாக குடும்பத்திற்கு கிடைக்கச் செய்யலாம்' என்றும் சொல்லியிருக்கிறாராம்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அப்படியே காரில் உடல் சாய்ந்து இறந்திருக்கின்றார்.அவரது முகத்தை பாருங்களேன் கொஞ்சம். நம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் ஊருக்கும பணத்தை அனுப்பி விடுவார்கள் என்கிற நிம்மதியிலேயே இறந்ததைப் போன்ற ஒரு நிலையில் இறந்திருக்கிறார்.

தான் இருக்கும் போது மட்டுமல்ல தான் இறந்த பின்னர் கூட தனது குடும்பத்திற்கு பணம் சென்று சேர வேண்டுமென்கிற இந்த பொறுப்பு கடமை தியாகம் , நிச்சயமாய் இவரது ஆன்மா மதிப்புமிக்கது.

பணத் தேவைக்காகத்தான் ஒவ்வொருவரும் இங்கு வந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.அதுவும் வீட்டு ட்ரைவர் வேலை என்பது சிலருக்கு நரகம். எந்த நேரத்திலும் ஓய்வெடுக்கவே முடியாது. என்னுடைய நண்பர்கள் பலர் இங்கு பல வலிகளைச் சொன்னதுண்டு.

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இப்படியான சோகங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கஷ்டப்பட்டாலும் , வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் இருந்தாலும் , குடும்பத்துடன் சொந்த ஊரில் ஏதோ தொழில் வேலை என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறதா ? மகிழ்ச்சியாக இருங்கள். உங்களின் நிலை பலருக்கு கனவு.

தான் சாகப் போகும் நேரத்தில் இன்னொரு வாழ்க்கை ஒன்று நமக்கு இருக்கப் போகிறதா? மண்ணறை வாழ்க்கைப் பற்றிய பயம்? அங்கு என்ன இருக்கும்? கடல் தாண்டிய ஓர் தேசத்தில் நாம் இறக்கப்போகிறோமே , தனது குடும்பத்தை பார்க்க முடியாமல் இப்படி ஒரு மரணம் நிகழப்போகிறதோ என்கிற பயம் சிந்தனைதான் ஓடிக்கொண்டிருக்கும்.

ஆனால் இவர் அந்த நேரத்திலும் தனது குடும்பத்திற்கு போன் செய்து தனது கடேசி பயணத்தின் அறிகுறியைப் பற்றி சொல்லியிருக்கிறார். இந்த பாலையில் யாருக்கும் தெரியாமல் குழந்தைகளின் முகம் பார்க்க முடியாமல் தான் இறக்கப்போகும் அந்த கடேசி நொடியில் அவர் என்ன நினைத்திருப்பார்?

பாலைவனத்தில் அவர் ஆன்மா உறங்கிவிட்டது. ஊரில் அவரது குடும்பத்திற்கு இது எவ்வளவு பெரிய வலி? 🙁

எங்கோ ஓர் தேசத்தில் யாருக்கும் தெரியாமல் முகம் பார்க்க முடியாமல் இறந்து போவது ஒரு சாபம். அவரது குடும்பத்தினரும் அவரது குழந்தைகளும் அவரது அப்பா எங்கே ஓர் தேசத்தில் திரும்பி வரமுடியாமல் இருக்கிறார் என்றுதான் இந்த மரணத்தை சமாதானம் செய்து கொள்ள முடியும்.

எந்த தேசத்தில் இருந்தாலும் மரணம் சொந்த தேசத்தில் நிகழ வேண்டும்.

அவரது இழப்பின் சக்தியை தாங்கும் வலிமையை அவரது குடும்பத்திற்கு இறைவன் தரட்டுமாக.


rasikow.gnaniyar 


2 comments:

vara vijay said...

Why wahabi sunni muslims are treating fellow muslims like slave . Why cant they give permenet residency with own family atleast for their muslim labourers. If he have resided with family he may not died so early.

Dr.Anburaj said...

தான் இருக்கும் போது மட்டுமல்ல தான் இறந்த பின்னர் கூட தனது குடும்பத்திற்கு பணம் சென்று சேர வேண்டுமென்கிற இந்த பொறுப்பு கடமை தியாகம் , நிச்சயமாய் இவரது ஆன்மா மதிப்புமிக்கது.

ஆம்.குடும்பத்தை நேசிக்கும் உத்தம குணம் கொண்டவா்.வாழ்க. அவருக்கு அஞ்சலி.
---------------------------------------------------------------------------------

பணத் தேவைக்காகத்தான் ஒவ்வொருவரும் இங்கு வந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.அதுவும் வீட்டு ட்ரைவர் வேலை என்பது சிலருக்கு நரகம்.

எந்த நேரத்திலும் ஓய்வெடுக்கவே முடியாது.
என்னுடைய நண்பர்கள் பலர் இங்கு பல வலிகளைச் சொன்னதுண்டு.

அரேபியா்கள் அனைவரும் உத்தம நபி தோழா்கள்தானே!! அவர்கள் உங்களை சகோதரர்களாகத்தானே பாவிப்பார்கள். அரேபியா்களிடம் அடிமைப் பெண்கள் இருந்தால் தேவைக்கு அந்த பெண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்தானே.
அப்படிஇருக்கும் போது இப்படி பொய்யான செய்திகளை அரபிகள் குறித்து பதிவிடலாமா ?