Followers

Wednesday, October 28, 2020

தாகத்தோடு இருந்த நாயொன்றுக்கு நீர் புகட்டியதற்காக

 தாகத்தோடு இருந்த நாயொன்றுக்கு நீர் புகட்டியதற்காக முன் சென்ற சமூகத்தில் ஒருவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று நபி(ச) அவர்கள் கூறிய போது “கால்நடைகளுக்கு உதவியதற்கும் நற் கூலி உண்டா? எனத் தோழர்கள் வினவினர். அதற்கு உயிருள்ள இதயமுள்ள எதற்கு உதவி செய்தாலும் நன்மை உண்டு எனக் கூறினார்கள்” (புஹாரி: 2303)

“ஒரு பெண் பூனையொன்றைக் கட்டிப் போட்டு தான் அதற்கு உணவு கொடுக்காமலும் பூனை தானாகத் தன் உணவைத் தேடிக் கொள்ள அவிழ்த்து விடாமலும் இருந்தாள். அந்தப் பூனை செத்துவிட்டது. இதைச் செய்த பெண் நரகம் நுழைவாள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 2365)

“அன்று அரேபியர் அம்பெறிந்து பழகுவதற்கு உயிரினங்களையே இலக்காகக் கொண்டனர். இச் செயலை நபி(ஸல்) அவர்கள் தடுத்ததுடன் இவ்வாறு செய்பவர்களை சபிக்கவும் செய்தார்கள்” (முஸ்லிம், புஹாரி :5515)

நபித்தோழர்களுள் ஒருவர், ஒரு குருவிக்கூட்டி-ருந்து ஒரு குருவிக்குஞ்சைப் பிடித்துக்கொண்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்துகொண்டிருந்தபோது, அக்குஞ்சின் தாய்ப்பறவை அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதைச் சிறிதும் பொருட்படுத்தாத அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று அமர்ந்துவிட்டார். இதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உங்கள் கையிலுள்ள குஞ்சைப் பெற்றிடத் தாய்ப்பறவையின் ஏக்கத்தைப் பாருங்கள். நீங்கள் விளையாட அந்தக் குருவிக்குஞ்சுதான் கிடைத்ததா? அதை விட்டுவிடுங்கள். எவ்வுயிர்க்கும் நோவினை கொடுக்காதீர்கள்" என்று கூறினார்கள்.

ஒரு குருவியின் ஏக்கத்தைப் புரிந்துகொண்டு அதன்மீது இரக்கம் காட்டிய அண்ணல் நபியின் ஜீவகாருண்யத்தை இங்கு நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.



3 comments:

Dr.Anburaj said...

நல்ல செய்தியை பதிவிட்டமைக்கு நன்றி.
வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்று பாடிய வள்ளலாா் வாழ்ந்த நாட்டில் இந்த இந்தியாவில் ஜீவகாருண்ய சிந்தனை மிக அதிகம்.

ஜீவகாருண்ய சிந்தனையில் அரேபியா 1 மதிப்பெண் என்றால் இந்தியாவிற்கு சதம்தான்.
மனித நேயத்திற்கு இந்த பாடல் ஒரு சாட்சி.....

1.வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன்
ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”
2. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே

3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

மு.வரதராசன் விளக்கம்:

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்:

பகிர்ந்து உண்ணுவதும் பல உயிர்களை காப்பதும் படித்தவர் சிறப்பித்து தந்த எல்லாவற்றிலும் முதன்மையானது.

English Couplet 322:

Let those that need partake your meal; guard every-thing that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives.



Dr.Anburaj said...

வீடியோவில் நடக்கும் நிகழ்ச்சி ஆபத்தானது.
இது எங்கே நடக்கிறது.
மிருகக் சாட்சி சாலையில் என்று நினைக்கிறேன்.
முதலைகள் மனிதர்களிடம் பழகாது. ஆபத்தானது.

விபரங்கள் போடாமல் வீடியோ போடுவது ஏன் ?

முதலைக் கறி ஹராமா ? ஹலாலா ?

இந்த ஆள் முஸ்லீம் அரேபியன் என்றால் இதை ஏன்அறுத்து

பிரியாணி போடாமல் வளா்த்து வருகின்றான்.

நிச்சயம் மிருககாட்சி சாலையாகத்தான் இருக்க வேண்டும்.

Dr.Anburaj said...


மனிதனாய் பிறந்தவனுக்கு முதல் பிரியம்
மனிதர்களிடமிருந்தே தொடங்கும். -சுவனப்பிரியன்.

முஹம்மதுவிற்கு நாய் மீது பிரியம் ?
முஹம்மதுவிற்கு புனை மீது பிரியம் ?