Followers

Sunday, November 01, 2020

இவ்வாறு அவதூறு சொல்வதற்கு இந்த மனிதன் வெட்கப்பட வேண்டாமா?

 'எங்கள் பெண்களின் கண்ணியத்தின் மீது கை வைத்தால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். 'லவ் ஜிஹாதை' அனுமதிக்க மாட்டோம். ராமனின் பெயரால் பாதயாத்திரை தொடங்கி உங்களுக்கு பதில் தருவோம்'


-யோகி ஆதித்யநாத்.

ஹிந்து பெண்களின் மேல் இவ்வாறு அவதூறு சொல்வதற்கு இந்த மனிதன் வெட்கப்பட வேண்டாமா?

'லவ் ஜிஹாத்' பெயரில் யாரேனும் அழைத்தால் சென்று விடும் பலஹீனர்களாகவா எமது இந்து சகோதரிகள் இருக்கிறார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இருவரும் மனம் ஒப்பி திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதை இப்படித்தான் கொச்சைப்படுத்துவதா?

தினமும் தலித் பெண்கள் உயர் சாதி இந்துக்களால் கற்பழித்து கொல்லப்படுகின்றார்களே அதற்கு என்றாவது இந்த மனிதன் பொங்கியிருக்கிறாரா? அவர்கள் இந்து பெண்கள் இல்லையா?

உன்னைப் போல் ஆர்எஸ்எஸில் சேர்ந்து கொண்டு கஞ்சா அடித்துக் கொண்டு கண்ட பெண்களோடு டான்ஸ் ஆடி கலாசாராத்தை குலைக்கும் வகையில் நடந்து கொண்டால் எந்த பெண்தான் விரும்புவாள்? ஒழுக்கமுடன் வாழும் இஸ்லாமிய இளைஞன் தன்னை கண்ணியமாக காப்பாற்றுவான் என்று நம்பி ஒரு சில பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தேடுகின்றனர். நீயும் ஒழுக்கமாக வாழ்ந்து பார். உன்னையும் பெண்கள் விரும்புவார்கள். அதை விடுத்து இவ்வாறு கூப்பாடு போடுவதால் ஒரு பலனும் விளையப் போவதில்லை.



1 comment:

Dr.Anburaj said...


ஆப்கானிஸ்தான் காடையர்கள் விளையும் அரேபிய மத சார்பு அரசு இருக்கும் மண்.

ஆப்கானிஸ்தான்: பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் -
20 பேர் பலி
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் உள்ள காபுல் பல்கலைக்கழகத்தில் இன்று புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் ஆப்கானிஸ்தானுக்கான ஈரான் தூதர் பங்கேற்பதாக இருந்தது. இதனால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி நடைபெற்று பல்கலைக்கழகத்திற்கு இன்று மாலை துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் மாணவர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், பல்கலைக்கழக தாக்குதலில் 25 உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என ஆப்கான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நீடித்து வருவதால் பலி எண்ணிக்கை தொடர்பான தெளிவான தகவல்கள் தற்போதுவரை வெளியாகவில்லை.

இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளபோதும் தாக்குதலை தலிபான்கள் அல்லது ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தி இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது.