Followers

Tuesday, November 10, 2020

இன்றைய பீகார் தேர்தல முடிவுகளையொட்டிய ஒரு பார்வை.

 

இன்றைய பீகார் தேர்தல முடிவுகளையொட்டிய ஒரு பார்வை.

 தமிழக அதிமுக தலைமைக்கு ஒரு எச்சரிக்கை மணி என்பதை அவர்கள் உணர வேண்டும்.

எப்படி மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் முகவரி இல்லாது இருந்தவர்கள்,

கூட்டணி என்கிற பெயரில் ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் ஒட்டி, புற்று நோய் போன்று அந்த கட்சியை செல்லரித்து தன்னை வளர்த்துக் கொள்ளும் Malignant cancer cell போல வளர்ந்து வருகிறார்களோ.. அவ்வாறே தமிழகத்திலும் முன்னெடுக்க துடிக்கிறார்கள்..

பீகாரை எடுத்துக் கொள்ளுங்கள்.. கடந்த சட்டமன்ற தேர்தல் வரை, நிதிஷ்குமாரிடம் அமைதிப் படை அம்மாவாசை போன்று கையை கட்டி நின்றவர்கள்,

தேர்தல் முடிவுக்கு பின், நிதிஷ் குமாரை வளைத்துப் போட்டு, லாலுவின் முதுகில் குத்தி, ஐந்தாண்டு காலம் ஆட்சி புரிந்தார்கள்.

 

 

தற்போதைய தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்டு வாங்கி, நிதிஷ் குமாரை டம்மியாக்கி, தங்களை முன்னிலைப்படுத்திக் கெண்டார்கள்.

தேர்தல் நேரத்தில் திட்டமிட்டே (லோக் ஜனசக்தி) ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானை 143 தொகுதிகளில் தனித்து நிற்க வைத்தார்கள்..

அதிலும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளிலே போட்டியிட்டது லோக்ஜனசக்தி .

தேர்தல் பிரச்சரத்தில் கூட சிராக் பஸ்வான் நிதிஷ் குமாரையும், தேஜஸ்வி யாதவையும் தான் கடுமையான விமர்சித்தாரே தவிர மோடியை பற்றி வாய் திறக்கவில்லை.

கூடவே நிதிஷ் குமாரின் தொகுதிகளில் சுயேட்சைகள் அதிகம் போட்டியிட வைக்கப்பட்டது:

இப்போது தேர்தல் முடிவை பாருங்கள்..

நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி 131 தொகுதிகளில் முன்னிலை என வருகிறது ..

அதில் பாஜக 71 , நிதிஷ்குமாரின் கட்சி 49 என முடிவுகள் வருகிறது ..

இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.. 5 வருடம் கூட்டணியில் இருந்து கொண்டே தங்களுக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்கள் .. எப்படி பிடித்தார்கள்? கூடவே இருந்தவர்களை ஒழித்து வளர்ந்தார்கள். இது தான் பாஜக பார்முலா ..

இவர்களது இந்த பார்முலாவிலிருந்து விழித்துக் கொண்டு தப்பித்தவர்கள் சந்திரபாபாபு நாயுடுவும், சிவசேனா போன்றவர்கள் தான்..

தமிழகத்திலும் இதே பார்முலாவை தான் செயல்படுத்த துடிக்கிறார்கள். அதற்கு அவர்கள் கையாளும் கருவி தான் அதிமுக கூட்டணி ..

வரும் தேர்தலில் கூட அவர்களுக்கு (பாஜக) வெற்றி தேவையில்லை. அடுத்த பத்தாண்டுகளுக்கான அரசியலின் திட்டமிடலை இப்போதே துவகுகிறர்கள்.

அடுத்த பத்தாண்டு தமிழக அரசியல் களம் திமுக Vs பாஜக வாக தான் இருக்க வேண்டும் என நினைக்கிறது ..

அதற்கான முன்னெடுப்புகளை தான் கையாள்கிறது.. கூட்டணி கட்சியான அதிமுகவின் எந்த கோரிக்கையையும் செவிமடுக்காது இருப்பது, மாநில உரிமைகளுக்கான மசோதாக்களில் விடாப்பிடியாக இருந்து கொண்டு அதிமுக அவமானப்படுவதை குரூரமாக ரசிப்பது, அதிமுக விற்குள் ஒரு கோஷ்டியை உருவாக்கி வைத்து சதுரங்கம் ஆடுவது, சாதிய சங்கங்களை முன்னிலைப் படுத்துவது என தனக்கான களத்தை அமைத்து தொடர்ந்து வருகிறது ..

வரும் தேர்தலில், அதிமுக + பாஜக கூட்டணி ஏற்படுமாயின், அதில் மிகப் பெரிய தோல்வியை அதிமுக பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அதைத் தான் பாஜக விரும்புகிறது .. நம்ப முடிகிறதா? அது தான் உண்மை.. அதிமுகவின் அந்த பெரிய தோல்வியிலிருந்து பாஜக தனது வளர்ச்சிக்கான கணக்கை துவங்கும் .

அதாவது தேர்தலுக்கு பிறகு,

அதிமுக வை உடைக்கலாம், கட்சியின் முக்கிய பிரமுகர்களை மிரட்டி தங்கள் கட்சியில் சேர்க்கலாம்,

சாதி ரீதியாக கட்சியை பிளவு படுத்தலாம், கோஷ்டிகளை உருவாக்கி சின்னத்தை, கொடியை முடக்கலாம் .. .

இப்படி என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.. அவர்களது கணக்கு என்பது 2026, 2031 என நீண்ட கால திட்டங்கள் தான்..

இதற்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் அதிமுக, இவர்களை சுத்தமாக கை கழுவ வேண்டும் ..

தேர்தல் களத்தில் பாஜக வை அனாதையாக விட வேண்டும் . எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது, எஞ்சி இருக்கும் சில மாதங்கள் ஆட்சியை கூட பொருட்படுத்தாது துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும்.

அப்போது தான் அந்த கட்சி புரட்சித் தலைவி செல்வி.. ஜெ. ஜெயலலிதா அவர்கள் சொன்னது போல் . இன்னும் நூறாண்டு பயணிக்கும் ".

செய்வீர்களா.. நீங்கள் செய்வீர்களா..?

நன்றி - மருதம்

No comments: