Followers

Sunday, July 19, 2026

“என் பொருட்டாகச் செய்யப்பட்ட பாபமானது புண்யமாகவே என்னால் கொள்ளப்படுகிறது”

 




என் பொருட்டாகச் செய்யப்பட்ட பாபமானது புண்யமாகவே என்னால் கொள்ளப்படுகிறது”

 

இது பகவத் கீதையின் ஸ்லோகங்களில் ஒன்று.

 

"மந்நிமித்தம் க்ருதம் பாபமபி புண்யாய கல்பதே"

என வடமொழியில் குறிப்பிடப்படுகிறது.

 

சில சங்கிகள் இஸ்லாமியருக்கு எதிராக கொலை, கொள்ளை போன்ற செயல்களில் இறைவனின் பயம் இல்லாமல் ஈடுபடுவதற்கு இது போன்ற வாசகங்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.

 

இந்தப் பதிவு பேரா.Dr.இரா.அரங்கராஜன்,M.A.,Ph.D,அவர்கள் எழுதிய “ஆகில்,அந்தப்பாபம் அடிக்கழஞ்சு பெறும்!” எனும் கட்டுரை செய்தியைக் குறிப்பிட்டு எழுதப்படுகிறது.

 

இக்கட்டுரை கூரநாரண ஜீயர் அவர்கள் திருவரங்கம் கோயிலை காவிரி வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பதற்காக காவிரிக் கரை அருகிலிருந்த சிந்தாமணி எனும் கிராமத்திலிருந்த ப்ராம்மணர்களை (சைவ அல்லது ஸ்மார்த்தர்கள்) வலுக்கட்டாயமாக அடியாட்களைக் கொண்டு அவர்களை அப்புறப்படுத்தி, காவிரிக் கரையை சீர்செய்து ஶ்ரீரங்கம் கோயிலை வெள்ள அபாயத்திலிருந்து காப்பாற்றியதாக தெரிவிக்கிறது.

 

ஜீயர் வலுக்கட்டாயமாய் ப்ராம்மணர்கள் இருந்த அஹ்ரகாரத்தைக் காலி செய்ததால் அங்கிருந்தவர்கள் சோழ மன்னனிடம் சென்று முறையிடுகின்றனர், அவர்களது பிரச்சனையை தீர்ப்பதற்கு ராஜ புரோகிதரான ஸுப்ரஹ்மண்ய பட்டர் (சைவ அல்லது ஸ்மார்த்தர்) அழைத்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும்படி ஆணையிடுகிறார். ஸுப்ரஹ்மண்ய பட்டருக்கு வைஷ்ணவ கோஷ்டி மேலிருந்த அபிமானத்தினால் விசாரணையிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறார். எனவே சோழ மன்னன் நேரடியாக ஶ்ரீரங்கம் சென்று விசாரிக்கிறான்.

 

சிந்தாமணியில் இருந்த ப்ராஹ்மணர்களை அடியாட்களைக் கொண்டு விரட்டியது சரியல்ல எனவும் வேதங்களில் அப்படிச் செய்வது பாபம் என்றுதானே குறிப்பிடப்படுகிறது என மன்னன் ஜீயரிடம் கேட்கிறான். எதைப் பிரமாணமாகக் கொண்டு இப்பேர்ப்பட்ட பாப காரியத்தைச் செய்தீர் என ஜீயரிடம் கேட்கிறான் மன்னன். அதற்கு ஜீயர் “மந்நிமித்தம் க்ருதம் பாபமபி புண்யாய கல்பதே” எனும் பகவத் கீதையின் ஸ்லோகம் தனக்கு வழிகாட்டியதாகவும் “என் பொருட்டாகச் செய்யப்பட்ட பாபமானது புண்யமாகவே என்னால் கொள்ளப்படுகிறது” என்றும் பொருளும் கூறி மன்னனைச் சமாதானம் செய்கிறார்.

 

மன்னனுக்கும் அப்போதிருந்த கூரநாராயணஜீயர் என்பவருக்குமிடையே நடந்த சம்பாஷணைகளும்,மன்னனது தீர்ப்பும் ஶ்ரீரங்கம் கோயிலில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று மன்னன் வழங்கிய தீர்ப்பான “ஆகில்,அந்தப்பாபம் அடிக்கழஞ்சு பெறும்!” இன்னொன்று மேலே புறிப்பிடப்பட்டுள்ள பகவத்கீதையின் ஸ்லோகம். இப்போது கிடைக்கும் பகவத்கீதையில் இந்த ஸ்லோகம் நேரடியாக காணப்படவில்லை, ஆனால் ஶ்ரீலஶ்ரீ பிரபுபதா எழுதியுள்ள பகவத்கீதை விளக்க உரையில் இந்த ஸ்லோகம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஶ்ரீரங்கம் கோயிலில் உள்ள இந்த ஸ்லோகம் பற்றிய கல்வெட்டு மற்றும் அது பற்றிய விரிவான தகவல்கள் Epigraphia Indica Vol XXIX Part 1,1951 edition நூலிலும் உண்டு.

 

ஶ்ரீ ரங்கம் கோயில் வரலாற்று நூலான கோயிலொழுகு நூலிலும் உண்டு.

 

பின்குறிப்பு :

இப்போதுள்ள பகவத்கீதையில் இந்த ஸ்லோகம் இல்லை, ஆனால் பத்ம புராணத்தில் உள்ள ஸ்லோகம் என
Sri Hari-Bhakti-Vilasa நூல் (Srila Sanatana Gosvami இயற்றியது) குறிப்பிடுகிறது.


அந்த ஸ்லோகம்,
Verse 1.110
तत्रैव श्रीभगवद्वाक्यम् ।
मन्निमित्तं कृतं पापम् अपि धर्माय कल्पते ।
माम् अनादृत्य धर्मो ऽपि पापं स्यान् मत्प्रभावतः ॥ ११० ॥
tatraiva śrībhagavadvākyam |


mannimitta kta pāpam api dharmāya kalpate |

mām anādtya dharmo 'pi pāpa syān matprabhāvata || 110 ||


The English translation of Hari-bhakti-vilasa Verse 1.110 is contained in the book Sri Hari-Bhakti-Vilasa by Srila Sanatana Gosvami.

Hari-bhakti-vilasa Verse 10.263 ம் இதே போன்ற ஸ்லோகத்தின் அர்த்தத்தைத் தருகிறது,


Verse 10.263
किं च श्रीभगवद्वाक्यं ।
मन्निमित्तं कृतं पापम् अपि धर्माय कल्पते ।
माम् अनादृत्य धर्मो ऽपि पापं स्यान् मत्प्रभावतः ॥ २६३ ॥

ki ca śrībhagavadvākya |

mannimitta kta pāpam api dharmāya kalpate |

mām anādtya dharmo 'pi pāpa syān matprabhāvata || 263 ||


உதவிய நூல்கள்:
1. பேரா.Dr.இரா.அரங்கராஜன்,M.A.,Ph.D,அவர்கள் எழுதிய “ஆகில்,அந்தப்பாபம் அடிக்கழஞ்சு பெறும்!” எனும் கட்டுரை

2.கோயிலொழுகு 1976 பதிப்பு

3. Epigraphia Indica Vol XXIX Part 1,1951 edition
4.TA/Prabhupada 0470-முக்தி என்பது மற்றொரு மோசடியாகும்(Lecture on SB 7.9.9–Mayapur,March 1, 1977(Vanipedia)

5.Sri Hari-Bhakti-Vilasa by Srila Sanatana Gosvami

 

Dhinakaran Chelliah அவர்களின் பதிவிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது.

 

 

No comments: