Followers

Monday, July 20, 2026

துலுக்கனுக்குப் பின் துலுக்கனுக்கு முன் சரியான பார்வை....





 



Gopalakrishnan Sundararaja

 ·

//அதே மாதிரி 'துலுக்கனுக்கு முன்', 'துலுக்கனுக்குப்பின்' என்ற ஆராய்ச்சி நடத்தினால் இன்னும் அதிகமான உண்மைகள் வெளிவரும்!//

 

 

துலுக்கனுக்குப் பின் துலுக்கனுக்கு முன் சரியான பார்வை..... இது பற்றி சற்று விளக்கமாக பார்போம்.

 

முஸ்லிம்கள் எந்த நிலையிலும் மண்ணின் மைந்தர்களை சூத்திரர்கள், அசுரர்கள் என்று இழிவுபடுத்தியதில்லை.

 

முஸ்லிம்கள் எந்த நிலையிலும் மண்ணின் மைந்தர்கள் கட்டிய கோவிலுக்குள் புகுந்து கொண்டு அவர்களை கோவிலுக்குள் விடாமல் தீண்டாமைக் கொடுமை செய்ததில்லை.

 

முஸ்லிம்கள் எந்த நிலையிலும் தேவாரம் திருவாசகம் தமிழில் ஒலித்த கோவில்களிலெல்லாம் தமிழை விரட்டி விட்டு சமஸ்கிரதத்தை மந்திரங்களாக புகுத்தவில்லை

 

முஸ்லிம்கள் எந்த நிலையிலும் இரட்டை குவளை முறை, பொது குளத்தில் தண்'ணீர் எடுப்பு, அக்ரஹாரத்தில் நுழைந்தால் காலில் உள்ள செருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். தோளில் உள்ள துண்டை இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும் என்று சட்டம் போடவில்லை....

 

முஸ்லிம்கள் எந்த நிலையிலும் மண்ணின் மைந்தர்களின் மார்புக்கு வரி போட்டு வசூலிக்கவில்லை...

 

·  தமிழகத்தின் தெற்குப் பகுதியில் (முற்கால திருவிதாங்கூர் சமஸ்தானம்) தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் மேலாடை அணிய தடை இருந்தது.

 

·  பெண்கள் தங்கள் மானத்தைக் காக்க மேலாடை அணியக் கோரி நீண்டகாலம் போராடினர். இதுவே தோள்சீலைப் போராட்டம் என்று அழைக்கப்படுகிறது.

 

·  இந்த உரிமைப் போராட்டத்திற்குப் பிறகுதான், அனைத்துப் பெண்களுக்கும் மேலாடை அணியும் உரிமை கிடைத்தது.

 

 

முஸ்லிம்கள் எந்த நிலையிலும் மண்ணின் மைந்தர்களான ஆசீவர்களை கழுவில் ஏற்றிக் கொல்லவில்லை.

 

முஸ்லிம்கள் எந்த நிலையிலும் மண்ணின் மைந்தர்களை தேவரடியார்களாக்கி கோவில் குருக்களுக்கு மிராசுதார்களுக்கு விருந்தாக்கவில்லை.

 

முஸ்லிம்கள் எந்த நிலையிலும் இரண்டு சாதிகள் ஒருவரையொருவர் பார்க்கக் கூடாது என்று தீண்டாமைச் சுவர் இன்று வரை கட்டி வைத்துள்ளோமே அந்த கொடுமையை செய்யவில்லை.

 

மாறாக முஸ்லிம் அரபு வணிகர்கள் கடற்கரையோரம் இறங்கி மேலாடை இன்றி சுற்றித் திரிந்த ஆண், பெண் தமிழர்களுக்கு மேலாடை அணிவித்து 'ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஆதி தமிழனின் தாரக மந்திரத்தை நினைவூட்டி அவர்களை இஸ்லாத்தில் இணைத்து திருமணமும் செய்து கொண்டனர்.

 

அடிமையாக விலங்கினும் கீழாக நடத்தப்பட்ட தங்களுக்கு இஸ்லாத்தின் மூலம் கண்ணியமும், சுய மரியாதையும் கிடைப்பதை எண்ணி கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர்...

 

அதன் நீட்சிதான் நமது கண் முன்னே ஏ.ஆர் ரகுமான்களாகவும் யுவன் சங்கர் ராஜாக்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

கத்தியின்றி ரத்தமின்றி ஒரு மவுனப் புரட்சியாக 1400 ஆண்டுகளாக உலகமெங்கும் இது நடந்து கொண்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: