//கணக்குப் பார்த்து அளவோடு உண்ட இந்து தமிழ் சமூகத்தில் இருந்து மாட்டுக்கறி புரியாணியை நித்தம் உண்ணுவதற்கும்,இந்துக்களை மதமாற்றி கை நிறைய டொலர்களை உழைக்கவும் என்றே தாய் மதத்தை விட்டு மதம் மாறிய அதிர்ஷ்ட சாலி அல்லவா நீங்கள்.//
இஸ்லாம் தமிழகத்துக்கு
வந்தது கிபி 1400 வாக்கில். ஆனால் அதற்கு
முன்பே நமது முன்னோர்கள் மாமிச உணவில் கொடி கட்டி பறந்துள்ளனர். ஆரியர்கள் சைவத்துக்கு
மாறியவுடன் மற்ற தமிழர்களையும் வைசத்துக்கு மாற இன்று வரை நிர்பந்தித்து வருகின்றனர்.
இவ்வளவு ஏன் இந்துக்கள் கடவுளாக மதிக்கும் ராமனே புலால் உண்டுள்ளதாக சம்பூர்ண ராமாயணம்
சொல்கிறது.
பிரியாணி உணவு என்பது முகலாயர்கள் கொண்டு வந்த உணவு முறை. அதிலும்
சத்து இருக்கிறது. எதையுமே அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மருந்து மாத்திரைகளில்
நமது பொருளாதாரம் வீணாகும்.
சங்க காலத்தில் புலால் உணவு (மாமிச
உணவு) மக்களின் அன்றாட உணவு முறையின் முக்கிய அங்கமாக இருந்தது. ஐவகை நிலங்களின் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) சூழலுக்கு ஏற்ப மான், காட்டுப்பன்றி, முயல், மீன் மற்றும் பறவை இனங்கள் போன்ற பலவிதமான புலால் உணவுகள்
உட்கொள்ளப்பட்டன.
· சமையல்: இறைச்சியை நன்கு துண்டுகளாக்கி, புளி மற்றும் பிற இயற்கை சுவையூட்டிகளுடன் சேர்த்து வேகவைத்தல் (புழுக்கல்), வறுத்தல் அல்லது நெருப்பில் சுடுதல் ஆகிய முறைகளைக் கையாண்டனர்.
·
கடற்கரை பகுதியில் வாழ்ந்த மக்கள்
(பரதவர்) மீன் மற்றும் நண்டு வகைகளைத் தங்களது முதன்மை உணவாகக் கொண்டிருந்தனர்.
·
விருந்தோம்பல்: சங்க
காலத்தில் புலால் உணவு மிகச் சிறந்த விருந்தாகக் கருதப்பட்டது. அதியமான் போன்ற
மன்னர்கள் மற்றும் அரசர்கள் புலவர்களைச் சிறப்பிக்கும்போது சுவையான இறைச்சி வகைகளை
வயிறாரப் பரிமாறினர்
·
கோப்பெருநற்கிள்ளி: அரசன்
கோப்பெருநற்கிள்ளி புலவர்களுக்கு சுட்ட மான்கறியைப் பரிமாறியதாக இலக்கியச்
சான்றுகள் உள்ளன.
·
பாலை நிலம்: பாலை
நிலத்தில் வாழ்ந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் மாடுகளைக் கொன்று அதன் இறைச்சியை
உண்டதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன.

No comments:
Post a Comment