Followers

Monday, July 06, 2026

அறிஞர் அண்ணா இந்து மதம் எவ்வாறு உருவானது என்று விளக்குகிறார்.


 



அறிஞர் அண்ணா இந்து மதம் எவ்வாறு உருவானது என்று விளக்குகிறார்.

 

 

" இந்து மதமென்றால், அது எங்களுடையது என்றெண்ணி இரும்பூதி இருக்கும் தமிழ் மக்கள் பலர்நம்மைச் சூழ்ந்திருக்கின்றனர் என்பதை நாமறிவோம். இந்து மதமென்றால், அது ஆரியர்கள் தங்கள் வாழ்க்கைக் கப்பலை ஓட்டிச்செல்வதற்காக வெட்டிய ஒரு அகழ் என்பதை நம்மவர் பலர் இன்னுந் தெரிந்துகொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றனர் என்பதையும் நாம் அறிவோம். எனவே, இவ்விந்து மதத்தைப் பற்றிய உண்மைகளைத் தமிழ் மக்கள் அனைவரும் தெரிந்து தெளிதல் பெரிதும் இன்றியமையாததாகும்.

 

 

இவ்விந்து மதம் தமிழ்நாட்டிற் பரவிய காலம், ஆரியர்கள் நம் நாட்டில் வந்து குடியேறித் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிய காலத்தைக் குறிப்பதாகும். ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருமுன் இந்து மதம் என்ற ஒரு மதமோ அன்றி வேறு மதங்களோ இருந்தனவென்று துணிவதற்குத் துளி சான்று கூடக் கிடையாது. ஆகையால், ஆரிய மதமாகிய இவ் இந்துமதத்தைத் தமிழ் மக்களுடைய மதம் என்றுரைக்க ஆராய்ச்சித் துறை கண்ட அறிவுடைய எவரும் முன்வரமாட்டார்கள்.

 

 

ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே சிறந்த நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டு செம்மை நெறியில் ஒழுகி வந்த தமிழ் மக்களுக்கு, இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட இந்துமதம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்லவென்பதை எடுத்துக்காட்டுவதே நம் குறிக்கோளாகும் ! "

 

No comments: