அயோத்தியில் நடந்தது சாதாரண திருட்டு
அல்ல;
காவிக் கும்பலின் திட்டமிட்ட மெகா
கொள்ளை
- கே.வசந்தன்
நாட்டில் உள்ள முன்னணி செய்தி ஊடகங்க
ளுக்கு “இதை வெளியிடக் கூடாது அல்லது அடக்கி வாசியுங்கள்” என்ற ரகசிய உத்தரவுகள்
பறந்ததால், அயோத்தி
ராமர் கோவில் விவகாரம் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மத்தியில் “இந்தக் கொள்ளைக்
கூட்டத்திடமிருந்து கடவுள் ராமராவது தப்பிப்பாரா?” என்ற நியாயமான கேள்வி இன்று வலுவாக
எழுந்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கொள்ளையும்
சங்பரிவாரின் சூழ்ச்சியும்
அயோத்தி ராமர் கோவிலில் சமீபத்தில்
நடந்துள்ள பெரும் கொள்ளை, ராமரைத்
தனது இஷ்ட தெய்வ மாகப் போற்றி வழிபடும் உண்மையான பக்தர்களைப்
பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது ஏதோ இப்போது திடீரென நடந்த சாதாரண திருட்டு
அல்ல, ஆரம்பத்திலிருந்தே
திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வரும் பெரும் கொள்ளை என்று செய்திகள் தெரி
விக்கின்றன. மதவெறியை ஊட்டி மக்களைத் திரட்டிய சங்பரிவார் கும்பல், எளிய மக்களின் கண்களை மறைத்து இவையெல்லாம் பொதுமக்களின்
கவனத்திற்கு வராமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. எல்லாவற்றையும் விட அதிர்ச்சி
என்னவென்றால், பிரதமர்
நரேந்திர மோடி யாரையெல்லாம் தனது ‘நம்பிக்கைக்குரியவர்கள்’ என்று கூறி கோவில்
பொறுப்புகளில் அமர்த்தினாரோ, அதே
கூட்டம்தான் இந்தத் ‘திருப்பணியைச்’ செய்துள்ளது.
ஞானேஷ்குமார் குப்தாவை நாடறியும்; அவர் பெயரைச் சொன்னாலே ‘ஓட்டுத்திருட்டு’தான் நினை வுக்கு
வரும். மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விரும்பியபடி தேர்தல் ஆணையம்
செயல்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே அவர் தலைமைத் தேர்தல் ஆணையராக நிய
மிக்கப்பட்டார். ராமர் கோவிலில் இந்தக் கொள்ளை நடந்த காலம் முழுவதிலும், அதாவது கடந்த 4 ஆண்டு களாகக் கோவில் கமிட்டியின் உறுப்பினராக மோடி யால்
நியமிக்கப்பட்டிருந்தவரும் இதே ஞானேஷ் குமார் குப்தாதான். இது குறித்துக் கோவில்
கட்டுமா னக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா வெளிப் படுத்திய கருத்து
முக்கியமானது. “குப்தா உறுப்பி னராக இருந்த காலத்தில்தான் இத்தனை கொள்ளை யும்
நடந்துள்ளது; இந்தத்
தகுதியை வைத்துத்தான் நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு அவரை பிரதமர் நியமித்தார்
போலும்” என அவர் வெளிப் படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
அஷ்டதாது முதல் தங்கப் புத்தகம் வரை:
அடித்த கொள்ளைக்கு அளவில்லை
ஆரம்பத்தில் இந்தக் கொள்ளை
வெளியுலகிற்குத் தெரிந்தபோது ரூ. 200 கோடி மதிப்புடையது என்று சொல்லப்பட்டாலும், இதன் உண்மையான மதிப்பு பல மடங்கு அதிகமாகும். ஏனெனில், திருடப்பட்டது உண்டியலில் பக்தர்கள் அளித்த காணிக்கைப் பணம்
மட்டுமல்ல; மிகப்பெரிய
அளவில் காணிக்கையாக அளிக்கப்பட்ட தங்கம், வைரம், வெள்ளி
என அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உச்ச பட்சமாக ராமர் பாதத்தில் இருந்த
தங்கப் புத்தகமும் திருடப்பட்டுள்ளது.
அதுமட்டுமா? தங்கம், வெள்ளி, துத்தநாகம், செம்பு, ஈயம், தகரம், இரும்பு, பாதரசம் ஆகிய 8 உலோ கங்களின் கலவையான ‘அஷ்டதாது’ என்ற புனிதப் பொருளும்
கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த அஷ்டதாதுவைக் கொண்டுதான் கோவில்களில் சிலைகளும்
புனிதச் சின்னங்களும் வடிவமைக்கப்படு வது வழக்கம். இவர்களின் “ராமபக்தி” எத்தகையது
பாருங்கள்! இவை அனைத்தும் ராமர் கோவில் கட்டுவதற்காகப் பலராலும் நன்கொடையாக
அளிக்கப்பட்டவை ஆகும். இறைநம்பிக்கையோடு கொடுத்த மக்களின் உணர்வுகளுக்கு, இந்த “இந்து மதக் காவலர்கள்” இழைத்த துரோகம் அப்பட்ட மாக
வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உ.பி. அரசால் கைது செய்யப்பட்டுள்ள ஒரு சிலரைத் தவிர, இந்தக் கொள்ளையில் பெரும் ஆதாயம் அடைந்த முக்கியப்
புள்ளிகள் இன்னும் வெளியில் சுதந்திரமாகவே உலவுகின்றனர்.
பாதுகாப்பு விதிமீறல்களும்
மறைக்கப்பட்ட உண்மைகளும்
காணிக்கைப் பொருட்களைப் பாதுகாக்கும்
பணியில் முக்கியப் பொறுப்பு வகித்த அதிகாரி செய்தி யாளர்களிடம் கூறும்போது, “தங்கம், வெள்ளி, வைரம்
போன்ற விலை உயர்ந்த காணிக்கைகள் அனைத்தும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத்
ராயிடம் பொறுப்பாகக் கொடுக்கப்பட்டது; இதர பொருட்கள் மட்டுமே எனது வசம் கரசேவக்புரத்தில் இருந்தன”
என்று தெரிவித்துள்ளார்.
கட்டுமானக் குழுத் தலைவர்
நிருபேந்திர மிஸ்ரா, “பரிந்துரைக்கப்பட்ட
பாதுகாப்பு விதிகள் மற்றும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நடை முறைகளில் வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவா கவே
செயல்படுத்தப்பட்டது; 90 சதவீதம்
கண்டு கொள்ளப்படவில்லை” என்று அம்பலப்படுத்தி யுள்ளார். கொள்ளையடிப்பதற்கு கதவைத்
திறந்து விட்ட கதைதான் இது.
குறிப்பாக, காணிக்கை எண்ணும் இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள்
பொருத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்தி யும், “எண்ணுபவர்கள் நம் ஆட்கள்தான், சந்தே கப்படத் தேவையில்லை” எனக் கூறி அறக்கட்டளை யின்
செல்வாக்கு மிகுந்த நிர்வாகி அதைத் தடுத்துள் ளார். எனினும், பாதுகாப்பு ஏஜென்சிகள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் பொருத்தப்பட்ட
கேம ராக்கள் மூலம் விசாரணை நடத்தியதில், கோவில் ஊழியர் ஒருவரின் வீட்டு மாட்டுச் சாணக் குவிய லுக்கு
அடியில் 10 லட்சம்
ரூபாய் மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய திரு
டர்களுக்குக் கோவில் நிர்வாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மறைமுகப் பாதுகாப்பு
அளிக்கப் பட்டுள்ளது. சாதாரண தனியார் நிறுவனம் கூட ஊழியர்களைப் பரிசோதித்தே
அனுப்பும் நிலை யில், இங்கு
ஒரு சிலருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது ஏன்? உயர் காவல்துறை அதிகாரி கள் கூடக் காணிக்கை எண்ணும்
அறைக்குள் செல்ல முடியாதபடி தடுத்தது, அறக்கட்டளையின் செல்வாக்கு மிக்க அறங்காவலரின்
உத்தரவுப்படியே நடந்துள்ளது.
மோடியின் நேரடித் தலையீடும்
ஆர்எஸ்எஸ் ஆட்களின் ஆதிக்கமும்
1989-இல் கோவில் அறக்கட்டளையை உரு வாக்கியதில்
மோடிக்கு முக்கியப் பங்குண்டு. ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர இந்துத்துவக் கோட்பாடு
கொண்ட நம்பகமான உறுப்பினர்களைக் கொண்டே இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டது. சட்ட விதி
முறைக்காகப் பெயரளவில் ஒரு தலித் உறுப்பினர் மட்டும் சேர்க்கப்பட்டார். எனவே, மோடியின் ஆட்கள்தான் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்
என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை.
அறக்கட்டளையின் முக்கியப் பொறுப்பில்
உள்ள சம்பத் ராய், நீண்டகால
ஆர்.எஸ்.எஸ். செயல் பாட்டாளர் ஆவார். இவர்தான் ராமருக்கு நிலம் வாங்கி யதில்
பெரும் ஊழல் செய்த உத்தம ராமபக்தர். அதாவது, ரூ.3 கோடிக்கும்
குறைவான மதிப்புள்ள நிலத்தை வாங்கி, சில நாட்களிலேயே அதனை 24 கோடி ரூபாய்க்கு அறக்கட்டளை வாங்கியதா கக்
கணக்குக் காட்டியவர். இவரது மேற்பார்வை யில்தான் அனைத்து அன்றாட வழிபாடுகளும்
நடக்கின் றன. எனவே, இவரது
கார் ஓட்டுநர் டுன்னு யாதவ் உள்ளிட்டோருக்கு இந்தக் கொள்ளையில் தொடர்பி ருப்பதும், சம்பத் ராயின் சம்மதத்துடன்தான் இவை யெல்லாம் நடந்துள்ளன
என்பதும் சந்தேகத்திற்கு இடமின்றிப் புலனாகிறது.
சங்கராச்சாரியார்களின் கண்டனமும்
பாஜகவின் மூடிமறைக்கும் வேலையும்
இந்த ஊழல் ஒவ்வொன்றாக
வெளிச்சத்திற்கு வந்தவுடன், பா.ஜ.க.வின்
ஐடி விங் இதனைத் திசை திருப்ப எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்தி அரசியல் சாயம்
பூசியது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “இந்தத் திருட்டைப் பற்றிப் பொதுவெளியில்
விவாதிப்பது ராமனையே அவமதிப்பதாகும்” என்று கூறி மூடிமறைக்க முயன்றார்.
இருப்பினும், சங்பரிவாரின் இந்தத் தந்திரங்கள் பலிக்கவில்லை.
சங்கராச்சாரியார்கள் மற்றும் கோவில் கட்டுமானத்தில் ஆரம்பத்தில் இருந்தே தங்களை
இணைத்துக்கொண்ட பல முக்கிய நபர்கள் இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை
களை வெளியிட்டுள்ளனர். அறக்கட்டளையின் அடுத்த தலைவராக வரக்கூடிய தகுதியுடைய மஹந்த்
கமல் நயன்தாஸ், “கடந்த
காலங்களில் சாதாரண சைக்கி ளில் சென்றவர்கள், இன்றைக்குச் சொகுசு கார்களி லும் அரண்மனை போன்ற
பங்களாக்களிலும் வாழ்கி றார்கள்; இவர்களுக்குத்
தெரியாமல் இந்தத் திருட்டு எப்படி நடந்திருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியில்
விரக்தியில், “தவறு
செய்தவர்களை அந்த ராமரே பார்த்துக்கொள்வார்” என்று கூறும் நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளார்.
மோடியின் மௌனமும் பாபா லால் தாஸின்
தியாகமும்
“ஆரம்பத்திலிருந்தே கோவில் அறக்கட்டளையை மோடிதான் தன்
கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்” என்று அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி பகிரங்க மாக
விமர்சித்துள்ளார். வினய் கட்டியார் போன்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் தீவிர விசாரணை
கோரி யுள்ளனர். ஆனால், பிரதமர்
மோடியோ இதுவரை வாய் திறக்கவில்லை.
கோவில் கட்டுமானத்திற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நன்கொடை குவிந்தபோதே ஊழல்
புகார்கள் எழுந்தன. ஆனால், மக்கள்
கண்ணில் மண்ணைத் தூவி உண்மைகள் மறைக்கப்பட்டன. காவல் அரணாக நிற்க வேண்டிய ஊடகங்களோ
ஆர்.எஸ்.எஸ்.-இன் செல்லப்பிராணிகளாக மாறிவிட்டன.
இத்தருணத்தில் நாம் பாபா லால் தாஸை
நினைவுகூர வேண்டும். 1980-களில்
பாபர் மசூ திக்குள் வைக்கப்பட்ட சிலைக்குப் பொறுப்பாளராக நீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்டவர் அவர். “அயோத்தி விவகாரம் ஒரு உள்ளூர் நிலப்பிரச்சனை; அதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது” என்று பகிரங்க மாக
முழங்கியவர். சங்பரிவார் தனது சுயநல அரசியலுக்காக ராமர் கோவிலைப் பயன்படுத்து வதை
எதிர்த்தார்.
அயோத்தியின் மத நல்லிணக்கத்தைக்
குலைக்க வேண்டாம் என்றும், அத்வானியின்
ரத யாத்தி ரையை எதிர்த்தும் குரல் கொடுத்தார். ஆனால், கல்யாண் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு அவரைப்
பதவியிலிருந்து நீக்கியது. ொடர்ந்து 1993 நவம்பர் 16 அன்று அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரின் “புரூட்டஸின் வாள் புனிதமானது” என்ற
கூற்றின்படி, துரோகம்
செய்வதும் கொல்வதும் சங் பரிவாரத்தின் புனிதமான செயல்களாகும். தங்கள்
“லட்சியத்திற்காக” அவர்கள் ராமரையே ஏமாற்றத் தயங்க மாட்டார்கள். இவ்வளவு நடந்தும்
பா.ஜ.க.வின் இரட்டையர்களான மோடி யும் அமித்ஷாவும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் மௌனம் காப்பது ஏன்?
இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்
உத்தரப் பிரதேச அரசு இந்தக் கொள்ளைச்
சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை கூடப்
பதிவு செய்யவில்லை. வெறும் கண் துடைப்பிற் ்காக ஒரு சிறப்பு விசாரணைக்குழுவை
மட்டுமே அமைத்துள்ளது. இறுதியில், “இது
தேசத்தையும் இந்து மதத்தையும் இழிவுபடுத்தத் தேச விரோதி களால் புனையப்பட்ட கதை”
என்று கூறி வழக்கை முடிக்கவும் வாய்ப்புள்ளது.
ஊடகங்கள் வாய்மூடி இருப்பதாலும், அனைத்தும் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் எது
நடந்தா லும் வியப்பில்லை. இந்து மதத்தின் பெயராலும், ராமரின் பெயராலும் ஆட்சிக்கு வந்த சங்பரிவாரக் கும்பல்
தங்களின் சுயரூபத்தைக் காட்டியுள்ளது.
நன்றி : தீக்கதிர் 15 /07 /26

No comments:
Post a Comment