திருநீறு
பூசாத நெற்றியை சுடு. சிவ ஆலயம் இல்லாத ஊரைக் கொளுத்து
திக்பஸ்ம
ரஹிதம்பாலம் திக்கிராம மசிவாலயம்
திகனீசார்சனம்
ஜன்ம திக்வித்யா மசிவாத்மிகாம்.
(இ-ள்) பஸ்மமில்லாத
நெற்றியைக்சுடு,
சிவாலயமில்லாத
கிராமத்தையுங் கொளுத்து,
சிவபூஜையில்லாத
ஐந்மத்தையுஞ்சுடு,
சிவஸ்வரூபமில்லாத
வித்தையையுஞ்சுடு என்பதாம்.
அதர்வண
வேதத்தைச் சேர்ந்த “பிருஹஜ்ஜாபாலோபநிடதம்” 1902 ஆம் ஆண்டு பதிப்பு
திருநீறு
பூசாத நெற்றியை சுடு என்பதும் சிவ ஆலயம் இல்லாத ஊரைக் கொளுத்து என்பதும் எவ்வளவு பெரிய
ஆபத்தான வார்த்தைகள். சிவனை ஏற்காதவர்கள் எந்த அளவு துன்பப்பட்டிருப்பார்கள் என்பதை
விளங்க முடிகிறது. எனது முன்னோர்களும் எந்த அளவு கொடுமைகளை அனுபவித்திருப்பாரகள்
என்பதையும் உணர முடிகிறது.
“திருநீறில்
மருந்திருக்கு தெரியுமா?
அதை தினம்
அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா? ..”
“கந்தன்
திருநீறணிந்தால்
கண்ட பிணி
ஓடிவிடும்…”
எந்த
மதத்தவர்களாக இருந்தாலும் இப்படிப்பட்ட திருநீறு பற்றிய பாடல்களை மார்கழி மாதம்
ஒலிபெருக்கியில் கேட்காதவர்கள் இருக்க முடியாது.
இவ்வாறு தனது மதப்
பெருமைகளை கூறுவதை குறை காண முடியாது. ஆனால் சைவ மதத்தை ஏற்காதவர்களின் கிராமங்களை
கொளுத்து என்பதை ஏற்க முடியாது. தகவல் தொழில் நுட்ப வசதி இல்லாத அந்த காலங்களை நினைத்துப்
பாருங்கள். சமண பவுத்த மதத்தினர் எந்த அளவு கொடுமைபடுத்தப் பட்டிருப்பார்கள் என்பது விளங்கும்.
இதில் இந்து மதம்
அன்பையே போதிக்கிறது என்று நமக்கு அறிவுரை சொல்ல வருவார்கள்.

No comments:
Post a Comment