'பிரதமரையோ, முதல் மந்திரியையோ நம்பி இந்திய முஸ்லிம்கள் காத்திருக்கவில்லை' - சாமான்ய முஸ்லிமின் அசத்தலான பேச்சு
'கடந்த 75 வருடமாக இந்திய முஸ்லிம்கள் எந்த அரசியல்வாதியையும் நம்பி இருக்கவில்லை. வியாபாரம், தொழில், எலக்ட்ரீஷியன், ப்ளம்பர், கொத்தனார், கார் மெக்கானிக் என்று ஏதாவது ஒரு கைத் தொழில் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை தேடிக் கொள்கின்றனர்.'
'இனி வருங்காலங்களிலும் இறைவன் மேல் நம்பிக்கையோடு இருப்போம். பிரதம மந்திரி அதைச் செய்வார், முதல் மந்திரி இதைச் செய்வார் என்று நாங்கள் காத்திருக்கப் போவதில்லை. இறைவன் எங்களுக்கு வலுவான கைகளை கொடுத்துள்ளான். அதைக் கொண்டு எங்களின் வாழ்வாதாரத்தை தேடிக் கொள்வோம். எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்'
என்று அந்த சாமான்ய முஸ்லிமின் பேச்சைக் கேட்டு அஸ்ஸாம் முதல்வரும் அங்கு கூடியிருந்தவர்களும் வாயடைத்துப் போயினர்.
இந்தியாவிலிருந்து முஸ்லிம்களை ஒழித்து விடுவோம், கல்வி வேலை வாய்ப்பை பறித்துக் கொள்வோம் என்று திட்டமிடும் சங்கிகளுக்கு செருப்படி போன்ற பதிலை அந்த படிப்பறிவில்லாத முஸ்லிம் கொடுத்துள்ளார்.
இந்த சுய மரியாதையைத்தான் இஸ்லாம் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. தான் வரும் போது தனக்காக யாரும் எழுந்திருக்க வேண்டாம் என்று கண்டிப்பான கட்டளையை நபிகள் நாயகம் தந்து விட்டு சென்றுள்ளார்கள். அந்த கட்டளையின் ஒரு பகுதியாகத்தான் அந்த முஸ்லிமின் பேச்சைப் பார்க்கிறேன்.
No comments:
Post a Comment