Followers

Friday, April 15, 2016

சவுதியில் கடந்த சில தினங்களாக ஐஸ் மழை!









பாலைவனப் பிரதேசமான சவுதி அரேபியால் கடந்த சில தினங்களாக ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. பாலைவனம் சோலைவனமாக மாறியதால் இந்த மாற்றங்கள். இனிமேலாவது நம் நாட்டில் மரங்களை வளர்ப்போம். விளை நிலங்களை மனைகளாக்காது இருப்போம்.

சவுதி அரேபியாவின் மக்கள் தொகைக்கு இந்த மழையானது மிக அதிகம். ஆனால் நம் நாட்டு மக்கள் தொகைக்கு பாதி அளவு கூட பெய்வதில்லை. பெய்கின்ற அந்த மழை நீரையும் சேமித்து வைக்காது வீணாக கடலில் கலக்க வைக்கிறோம்.

சவுதி அரேபியாவில் கழிவறை நீரை வடி கட்டி உரமாகவும், அதிலிருந்து கிடைக்கும் நீரை விவசாய நிலங்களுக்கும் பாய்ச்சுகிறார்கள். கழிவறை தண்ணீரையும் வீணாக்குவதில்லை. அதில் கிடைக்கும் மனித மலங்களையும் உரமாக்கி விடுகிறார்கள். செல்வந்த நாட்டுக்கு இருக்கக் கூடிய இந்த சிக்கன நடவடிக்கை வறிய நாடான நம் நாட்டுக்கு இருப்பதில்லை.

இது போன்று நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தக் கூடிய ஆட்சியாளர்களை நம் நாடு பெறுவது எப்போது? இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மரங்களை நடுவோம்: நீராதாரத்தை கணக்கின்றி பெறுவோம்.






Thursday, April 14, 2016

கேரளாவில் மத்திய மருத்துவ தேர்வுக் குழு அராஜகம்!









மத்திய பிஜேபி அரசு மருத்துவ மற்றும் CBSE நுழைவுத் தேர்வுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எந்த வகையிலாவது தொல்லை கொடுத்து இஸ்லாமியர் மேல் படிப்புக்கு சென்று விடக் கூடாது என்பதுதான் மோடி அரசின் மறைமுக திட்டம். ஆனால் உயிரே போனாலும் ஹிஜாபை கழட்ட மாட்டோம் என்று போராடினர் கேரள மாணவிகள். காவல் துறை கைது செய்தது விசாரணைக்கு உட்படுத்தியது. அந்த மாணவிகள் என்ன ஒரு உத்வேகத்தோடு ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்கின்றனர் என்று பாருங்கள்.
சபாஷ் கேரள மாணவிகளே! உங்களைப் போன்ற படித்த பெண்களும் ஹிஜாபின் அவசியத்தை உணர்ந்துள்ளீர்கள். இது போன்ற எதிர்ப்பு இருக்கும் காலமெல்லாம் அமீத்ஷா மற்றும் மோடி வகையறாக்களின் திட்டம் நமது நாட்டில் நிறைவேறப் போவதில்லை!

திருப்பூரில் சிறுவர்களை வளர்த்தெடுக்கும் இந்துத்வா!



நண்பன் பிரபா திருச்சியிலிருந்து சென்னைக்குக் காலை வந்ததும் வழக்கம்போல் அறைக்குத்தான் வந்திருந்தான் இன்று. வந்தவன் கடந்த ஒரு மாதகாலமாக child protection task force உடன் இனைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் அதில் வளரும் குழந்தைகள் பற்றிய ஆய்விற்காக அமைக்கப்பட்ட குழுவோடு வேலைச் செய்த தனது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தான்.

அப்போது திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேலான காப்பகங்கள் “இந்து சேவா” அமைப்புகள் மற்றும் “RSS” யின் நேரடிக் கண்காணிப்பில் இயங்குவதாகச் சொல்லி அவற்றில் மாணவர்களுக்கான விளையாட்டுகள் என்ற பெயரில் எதையெல்லாம் கற்றுத் தருகிறார்கள் பார். நீதான் விளையாட்டுகள் பற்றிப் பேசினால் பேசிக் கொண்டேயிருப்பாயே. அதனால் இந்தக் காணொளியைப் பாரு என்று மூன்று காணொளியைக் காண்பித்தான். அவற்றைப் பார்த்துவிட்டு சற்று ஆட்டம் கண்டுதான் போயிருகிறேன்.

அவர்களுக்குக் கற்பிக்கப்படும் விளையாட்டுகளின் பெயர்கள், சக்கரவீயுகம், விஷ்ணு சக்கரம், துதிக்கை விளையாட்டு என்று மூன்று விளையாட்டுகளுக்கான வீடியோ இருந்தது. அதில் சக்கர வீயுகம் விளையாட்டு மாணவர்களை வட்ட வடிவில் நிறுத்தி உள்ளே சில மாணவர்களை நிறுத்தி வைத்திருகின்றனர். வெளியே ஒரு சிறுவன் நிற்கிறான். இப்படியொரு அமைப்பு உருவான பின்பு அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து “பார்த் மாத்தாகி ஜே” என்று கோசம் போட்டு விளையாட்டைத் துவக்குகின்றனர். வெளியே நிற்கும் மாணவன் வட்ட வடிவ சக்கர வியுகத்தினுள் பிளவு ஏற்படுத்தி உள்புகுந்து உள்ளே நிற்பவர்களைத் தொட்டு விட்டு மீண்டும் வெளியேற வேண்டும் இதுதான் விளையாட்டு. உள்ளே புகும் போது “ஜெய் காளி” என்று கத்திக் கொண்டு உள்ளே சென்று வரவேண்டும்.

அதே போல் விஷ்ணு சக்கர விளையாட்டு ஒருவன் தனித்து நிக்கிறான் அவனை ஓரிடத்திற்குக் கார்னர் செய்து வட்டமாக நிற்பவர்கள் இணைந்து சுற்றிக்கொண்டே சென்று அவனை வீழ்த்த வேண்டுமாம். இந்த விளையாட்டுத் துவங்கும் போதும் “பாரத் மாத்தாகி ஜே” என்று சொல்ல வேண்டுமாம்.

இறுதியாகத் துதிக்கை விளையாட்டு அதில் இரு குழுக்களாகப் பிரிந்து விளையாட வைக்கின்றனர். ஒருகுழுவின் பெயர் இந்தியா மற்றொரு குழுவின் பெயர் பாகிஸ்தான். இந்தியக் குழுவில் இருக்கும் அனைவரும் “பாரத் மாத்தாகி ஜே” என்று சொல்லிக் கொண்டு கைகளைத் துதிக்கைகள் போல் சற்று மடக்கிக் கொண்டு தாக்க ஆரம்பிகின்றனர். இதில் எப்பாடு பட்டேனும் இந்தியக் குழு வெற்றி பெற வேண்டும். இந்த ஒன்றுதான் நிபந்தனை.

மேலும் இதுபோன்ற விளையாட்டுகளை மாணவிகள் விளையாட அனுமதியில்லையாம். அவர்களுக்கு விளையாட்டுகள் என்ற ஒன்றே இல்லையென்றும் வேறு சொல்கிறான் நண்பன். மாணவிகள் காப்பக வேலைகளில் மட்டும் ஈடுபடுத்தப்படுவதாகவும், அங்கு இருக்கும் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்றோர்களால் கைவிடப் பட்டவர்களாகவும், ஒற்றைப் பெற்றோர் உள்ள வறுமை நிலையிலிருப்பவர்களின் குழந்தைகளாக இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்று சொல்கிறான்.

இவற்றையெல்லாம் பார்த்தப் பிறகும் கேட்ட பிறகும் சிறி்து கோபம் வந்தாலும், அடிப்படைவாதிகள் எங்கிருந்து தனது பயிற்சியைத் துவங்குகின்றனர், இதுபோன்ற குழந்தைகளையும் மாணவர்களையும் தங்களது கர சேவகர்களாக மாற்றிக் கொண்டிருப்பதும் தெளிவாகவும் எளிதிலும் புரிந்து கொள்ளமுடிகிறது. இதில் இன்னொரு பெருந்துயரம் என்னவென்றால் விளையாட்டுகள் மட்டுமில்லை ஒவ்வொரு நிகழ்வின் போது அவர்களை “பாரத் மாத கீ ஜே” அப்படியென்று முழங்க வேண்டுமாம். இன்று பாபா ராம்தேவ் போன்றவர்கள் இதையேதான் முன்வைத்து ” பாரத் மாத கீ ஜே” சொல்லாதவர்கள் தலையை வெட்டியெறிய வேண்டுமெனப் பேசிவருகின்றனர். இதுபோன்ற காப்பகங்களினால் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்காலத்தில் என்னாவார்கள் என்று நினைத்தால் தலைதான் சுற்றுகிறது.

பொதுவாக விளையாட்டுகள் சமத்துவத்திற்கும், உடல்வலுவிற்கும், மனோ திடத்திற்கும் தான் விளையாடப் பட வேண்டும். ஆனால் இதுபோன்ற அமைப்புகள் விளையாட்டுகளிலே மதத்தையும் வெறுப்புணர்வையும் தூண்டி விட்டுக் கொண்டிருகின்றனர் என்பதும். அதைவிட நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டிய காலக் கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

முகப்புப் படம்: ஆர் எஸ் எஸ் பயிற்சியில் வாளேந்தும் சிறுவர்கள்

சகோதரர் இனியன் தட்ஸ் தமிழில் பதிந்த பதிவு இது

http://thetimestamil.com/2016/04/05/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

Wednesday, April 13, 2016

துருக்கி ராணுவம் இரவு நேர தொழுகையில் லயித்திருக்கும் போது!



ராணுவ வீரர்களுக்கு கட்டாயமாக இறை நம்பிக்கை, இறைவனின் பயம் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மிக முக்கியமான பொருப்பில் இருப்பவர்கள். வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள். அரபு நாடுகளில் ராணுவத்தினர் சீருடையோடு ஒவ்வொரு பள்ளியிலும் தொழுவதை நாம் காணலாம். ராணுவ அணி வகுப்பு நடக்கும் போதும் தொழுகை நேரத்தில் அனைவரும் தொழுகைக்கு வந்து விடுவர்.

ஆனால் நம் நாட்டில் இது நடைமுறைபடுத்தப் படுவதில்லை. இறை பக்தி கொஞ்சமும் இல்லாததால் நமது ராணுவத்தினர் வரம்பு மீறுகின்றனர். இரவு பன்னிரண்டு மனி, ஒரு மணி என்று காஷ்மீரில் நமது ராணுவம் இளம் பெண்களை அழைத்துச் செல்வதும் இரண்டு நாட்கள் அனுபவித்து விட்டு பிறகு வீட்டில் எறிந்து விட்டு செல்வதும் தொடர்கதையாகிறது. எதிர்த்து கேள்வி கேட்டால் 'நீ பாகிஸ்தானின் கைக் கூலி' என்று சொல்லி என்கவுண்டரில் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். இரண்டு நாட்கள் முன்பு கூட நடந்துள்ளது.

நமது ராணுவத்தில் பெரும்பாலும் இந்து மக்களே உள்ளனர். அந்த மக்களுக்கு இறை பக்தியை ஊட்ட வேண்டும். இறை பக்தி என்று நான் சொல்வது அமீத்ஷாவும், நரேந்திர மோடியும், பாபா ராம்தேவும் சொல்லும் இறை பக்தி அல்ல. அது பக்தி என்ற பெயரில் நடத்தப்படும் பகல் வேஷம். நான் சொல்ல வரும் பக்தி கிருபானந்த வாரியாரும், குன்றக்குடி அடிகளாரும் போதித்த இந்து மத பக்தி. நமது ராணுவத்தினருக்கு முறையாக கவுன்சிலிங் கொடுத்து முறையான இறை பக்தியையும் ஊட்டினால் ராணுவத்தின் மேல் உள்ள களங்கம் துடைக்கப்படும். இந்து, முஸ்லிம், கிருத்தவ போதனைகள் முறையாக நமது ராணுவத்துக்கு போதிக்கப் பட்டால் உலகிலேயே சிறந்த ராணுவமாக நமது ராணுவம் மிளிரும். மோடி தலைமையிலான இந்த ஆட்சியில் அது சாத்தியமில்லை. அடுத்து அமரக் கூடிய ஆட்சியாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழரின் வருடப் பிறப்பு சித்திரை மாதமா அல்லது தை மாதமா?



தமிழரின் வருடப் பிறப்பு சித்திரை மாதமா அல்லது தை மாதமா?

தைபிறந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்துவிடும்.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப்பொங்கல் என்று கொண்டாடப்படும் தைப்பிறப்பா அல்லது சித்திரை வருடப்பிறப்பு என்று சொல்கிறோமே அதுவா என்கின்ற மயக்கம் இன்னும் தமிழ்மக்களிடையே இருக்கிறது. சரிவரத் தெரியாத மக்களிடம் இருப்பது மயக்கம். சரியெதுவெனத் தெரிந்த தமிழர்கள்கூட சரியானதைப் பின்பற்றாமல் விடுவதற்குக் காரணம் வழக்கம். அதனை மாற்றுவதா என்கின்ற தயக்கம்.

இத்தனைக்கும் சித்திரையைப் புத்தாண்டாகக் கொள்ளுகின்ற வழக்கம் தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்துவந்த தொன்றல்ல. பண்டைத் தமிழகத்திலே இருந்த பண்பாடுமல்ல. தொன்மைமிகு சைவசமயத்தோடு தோன்றியதும் அல்ல. ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இடைக்காலத்தில் நம்மை இறுகப் பற்றிக்கொண்ட எண்ணற்ற மூடநம்பிக்கைகளைப் போலவே ஏற்பட்டுவிட்ட ஒரு பழக்கம் இது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டிருந்த செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களாயிருந்தார்கள். அவர்கள் அறிவியல் முதிர்ச்சியால் அகிலத்திற்கே வழிகாட்டியவர்கள் விண்ணையும் மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை ஆக்கியவர்கள் வானிலைக்கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். நட்சத்திரங்களையும் அவற்றின் நடமாட்டங்களையும் அவற்றின் பலாபலன்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து கணித்தவர்கள். உலகுக்குப் பயன்தரும் முடிவுகளை அளித்தவர்கள். அவர்கள்தான் கதிரவனின் ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்றும் காய்க்கின்றன என்றும் கண்டுபிடித்தவர்கள்.

அதனால்தான் களனி விளைந்து கதிரைப் பறித்ததும் தமது புத்தாண்டுப் பிறப்பன்றே முதன் முதலில் அந்தக் கதிரவனுக்கு நன்றி செலுத்தினார்கள். புதுப்பானையில் பொங்கலிட்டுப் படைத்து வணங்கினார்கள். சிந்துவெளி நாகரிகக் காலத்திற்கு முந்தியிருந்தே இந்தப் புத்தாண்டும்ää பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டு வந்தமையை அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறில் பொங்கல் பற்றிய குறிப்பொன்று காணப்படுகின்றது.

சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்

என்று புறநானூற்றில் 168 ஆவதாக இடம்பெறுகின்ற பாடலிலே கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் புதிர் உண்ணுகின்ற செய்தியைப் பதிவுசெய்துள்ளார். புதிதாகக் கறந்து நுரையெழும்பும் தீம் பாலிலே புத்தரிசியையிட்டு சந்தனக்கட்டைகளை விறகாகக் கொண்டு அடுப்பெரித்து ஆக்கிய பொங்கலைப் பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை அழகாகச் சொல்கின்றார் புலவர்.

அத்தகைய தொன்மைச் சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகை உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல. உழுவார் உலகத்தார்க்கு அச்சாணியானவன் என்கின்றார் வள்ளுவர். எனவேää கதிரவனுக்கு நன்றிசெலுத்தும் பொங்கல் உலகத்திற்கே பொதுவானது. அதை உணர்ந்து தான் பண்டைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கத்திலேயே அதனை ஒரு பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சித்திரைப் புத்தாண்டு தமிழர்களின் புத்தாண்டு அல்ல. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புதுவருடப்பிறப்பு அல்ல. அது இந்துக்களின் புதுவருடப்பிறப்பு என்று சொல்லப்படுகின்றது. சிங்களவர்களுக்கும் சித்திரையில்தான் புதுவருடம் பிறக்கிறதாம். இலங்கை நாட்காட்டிகளில் ஏப்பிரல் 14 ஆம் திகதி இந்துää சிங்கள புதுவருடப்பிறப்பு என்றுதான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர்களின் புதுவருடப்பிறப்பு என்று குறிப்பிடப்படுவதில்லை. அவ்வாறு எங்காவது குறிப்பிடப்பட்டிருந்தால் அது தவறாகும்.

சித்திரைப் புத்தாண்டுதான் வருடப்பிறப்பு என்பதற்கு இந்து மதத்தவர்களிடையே நிலவுகின்ற புராணக்கதையையும் நாம் இங்கு நினைவுகூருதல் பொருத்தமாகும்.

புராண காலத்தில் நாரதமுனிவருக்குக் காம இச்சை ஏற்பட்டதாம். அந்த இச்சை தாங்கொணாதபடி அதிகமாகவே அதைத் தீர்த்துக்கொள்வதற்காக அவர் கிருஷ்ணரோடு உறவுவைத்துக்கொண்டாராம். அதன் மூலம் அறுபது ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாராம். பிரபவமுதல் அட்சய ஈறாக பெயர் சூட்டப்பட்ட அந்த அறுபது குழந்தைகளின் பெயர்களால்தான் ஆண்டுகளின் தொடக்கம் கொண்டாடப்படுகிறதாம். அபிதான சிந்தாமணி என்ற நூலில் இந்தக்கதை சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய கேவலமான புராணக்கதையினைப் பின்னணியாக வைத்துத்தான் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றோமாம். இந்தக்கதை அறிவியலுக்குப் பொருந்துமா? தமிழ் மரபுக்கு உகந்ததா? தமிழ்ப் பண்புக்குள் அமைந்ததா? நமது குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியுமா?

உண்மை என்னவென்றால் இந்த 60 ஆண்டுப்பெயர்கள் சாலிவாகனன் என்னும் வடநாட்டு அரசனின் பெயரால் ஏற்படுத்தப்பட்டவை. தமிழ்மக்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இருந்ததில்லை. மேலும் 60 வருடங்கள் முடிந்ததும் அதாவது அட்சய வருடம் முடிந்ததும் மீண்டும் பிரபவ வருடம் வரும். மீண்டும் 60 வருடங்கள் கழிந்ததும் அட்சய வருடம் வரும். இப்படியே சுற்றிக் கொண்டிருப்பதால் சித்திரைப் புத்தாண்டு முறையால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை வரலாற்று ரீதியாகக் கணக்கிட முடியாது. குறித்துரைக்க இயலாது.

உதாரணமாக பிரபவ வருடத்தில் உலகத்தில் வரலாற்றுச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தால் அல்லது ஒரு பெரியார் பிறந்ததாகச் சொன்னால் எந்தப் பிரபவ வருடத்தில் அது நடந்ததென்று எப்படிக் கணக்கிட்டு வைக்கமுடியும்? அறுபது வருடங்களுக்கொருதடவை பிரபவ வருடம் வரும் அல்லவா?

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்போரலையைப்பற்றி இன்னும் நூற்றி ஐம்பது வருடங்களுக்குப் பிறகு சொல்லும்பொழுது ஆழிப்பேரலை தாரண வருடத்தில் மார்கழி மாதத்தி;ல் தாக்கியது என்றுசொன்னால் எந்தத் தாரண வருடத்தில் என்று தெரியவருமா? எத்தனை வருடங்களுக்கு முன்னர் அந்த அனர்த்தம் நடந்தது என்று கணக்கிட முடியுமா? ஏனென்றால் இன்றிலிருந்து நூற்றைம்பது வருடங்களுக்குப்பிறகு இரண்டு மூன்று தாரண வருடங்கள் வந்துவிடும் அல்லவா?

இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சித்திரையில் பிறப்பதுதான் தமிழ்ப்புத்தாண்டு என்றால் அதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள அறுபது வருடங்களின் பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லையே! ஏன் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?

ஆனால் சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாகப் பின்பற்றிவந்துள்ளனரென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சான்று பகர்ந்துள்ளனர். தை முதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதப் பெயர்களும் சுத்தமான தமிழ்ப் பெயர்கள் என்பதுடன்ää தொல்காப்பியர் காலத்திலேயே அவை வழக்கத்திலிருந்தன என்று கூறுகின்றார் மொழியறிஞர் சி. இலக்குவனார் அவர்கள். யேசு கிறீஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கி.மு என்றும் கி.பி. என்றும் உலக வரலாறு வரையறுக்கப்பட்டு வருகின்றது. அதேபோலப் புத்தரின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு புத்த சமயத்தினர் புத்த ஆண்டு என்று கணித்துப் பின்பற்றுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்ப் புத்தாண்டு வழக்கத்தை இடையிலே கைவிட்டுவிட்டு எதையெதையோவெல்லாம் தமிழர்கள் பின்பற்றுவது எவ்வளவு துர்ப்பாக்கியமானது.

தைமுதல்நாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல அதுவே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளுமாகும். அதனால்தான் தமிழ்ப் புத்தாண்டுபற்றிய உண்மைநிலையைத் அறிவுபூர்வமாகவும்ஆராய்ச்சியின் அடிப்படையிலும் தமிழ்மக்களுக்கு உணர்த்துவதற்காக 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ் அறிஞர்கள் செந்தமிழ்ப் புலவர்கள் கூடி ஆராய்ந்திருக்கிறார்கள். தமிழ்க்கடல் நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகள் அவர்களது தலைமையிலே அந்த ஆராய்ச்சி நடைபெற்றிருக்கின்றது.

மாபெரும் தமிழறிஞர்களும் கல்விமான்களுமான தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியம்பிள்ளை சைவப்பெரியார் சச்சிதானந்தம்பிள்ளை நாவலர் சோமசுந்தர பாரதியார் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அந்த அறிஞர் குழவிலே இருந்திருக்கிறார்கள்.

அத்தனை அறிஞர் பெருமக்களும் ஒன்றாகக்கூடி தமிழ்ப் புத்தாண்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். முடிவுகண்டிருக்கிறார்கள். 500 இற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் அந்த முடிவிற்குத் தமது ஏற்பிசைவை வழங்கியிருக்கின்றார்கள். அவர்களது முடிவின்படி இயேசுகிறீஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் திருவள்ளுவர் என்றும் அவரது பெயரில் தொடர்ஆண்டுக் கணக்கீட்டைப் பின்பற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அந்த முடிவுகளின்படி திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாள் ஆகும். கிழமை நாட்கள் ஏழு. அவைஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் வியாழன் வெள்ளி காரி என்பனவாகும். புதனும் சனியும் தமிழ்ப்பெயர்கள் அல்லவென்பதால் அவற்றுக்கான பண்டைய தமிழ்ப்பெயர்களான அறிவன் காரி என்பன முறையே வழங்கப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆங்கில ஆண்டுடன் 31ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. அதுவே தமிழ் ஆண்டுக் கணக்கு.

அறிஞர்களது தீர்மானத்தை அன்றைய தமிழக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. அதன்படி திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு நாட்குறிப்பிலும் பின்னர் 1972 இலிருந்து தமிழக அரசின் அதிகாரபூர்வமான இதழிலும் 1981 இலிருந்து தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. 2009 இல் தமிழக அரசு தைப்பிறப்பையே தமிழ்ப்புத்தாண்டு என்றும் சித்திரைமாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு இல்லை என்றும் சட்டபூர்வமாக ஆணை பிறப்பித்தது. தமிழ் மக்களின் புத்தாண்டு விடயத்திற்குச் சட்டரீதியான அந்தஸ்துக் கொடுக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமே.

ஆனால் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரின் அரசியல் முதிர்ச்சியற்ற நிலைமையும் நாகரிகமற்ற தன்மையும் தமிழ்ப் புத்தாண்டு விடயத்தையும் அரசியல் சாக்கடைக்குள் தள்ளிவிட்டிருப்பது தமிழ் இனத்தின் துர்ப்பாக்கியமாகும். தைப்பிறப்பைத் தமிழ்ப் புத்தாண்டென அரசாணை பிறப்பித்தது கலைஞர் கருணாநிதி அவர்களின் தி.மு.க. அரசு என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கப் பிறகு ஆட்சிக்கு வந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள் அந்த அரசாணையை மாற்றி சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என தீர்மானம் போடும் முடிவுக்கு வந்திருக்கிறார். தைப்பிறப்பே தமிழ்ப்புத்தாண்டு என்பது கலைஞர் கருணாநிதியின் தீர்மானம் அல்ல. கலைஞர் பிறப்பதற்கு முன்னரே 1921 ஆம் ஆண்டு தமிழ் இனத்தின் சார்பாகத் தமிழ்ப் புலவர்களாலும்அறிஞர்களாலும் எடுக்கப்பட்ட முடிவு அது. இதனை நன்கறிந்த தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் செல்வி ஜெயலலிதா அவர்களின் கட்சியிலும் இருக்கிறார்கள். என்ன செய்வது எடுத்துச்சொல்லும் திராணியற்றவர்களாக இருக்கிறார்கள்!
யாரும் அறிவுரை சொல்லப் பயப்படுகின்ற நிலைமையைத் தமிழ் தலைமைகள் பேணிவந்தமையும் மாற்றுக் கருத்துக்களைச் சொன்னவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டமையும்தான் தமிழ் இனத்தின் வீழ்ச்சிக்கு காரணமானவை என்பதுதானே வரலாறு. அந்த நிலை இன்னும்தான் நீடிக்கிறது.

தைமாதத்தைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடினால் கிரக மாற்றங்களில் குளறுபடி ஏற்படுமாம் பஞ்சாங்கக் கணிப்புத் தவறாகிவிடுமாம் என்றெல்லாம் சிலர் மக்களைக் குழப்புகின்றார்கள். இது என்ன பேதைமை! சித்திரையை அடிப்படையாக வைத்துத்தான் கிரக சஞ்சாரங்கள் நடைபெறுகின்றன என்றால் அவை அப்படியே நடக்கட்டும். அவற்றுக்கு அமைவாக எழுதப்பட்ட பஞ்சாங்கங்கள் அப்படியே இருக்கட்டும். சித்திரை மாதக் கிரக நிலையைத் தைமாதத்திற்கு நகர்த்தும்படி யாரும் கூறவில்லை. பஞ்சாங்கங்களைத் திருத்தும்படி யாரும் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் சித்திரை மாதம் என்பது தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் அல்ல. தைமாதமே தமிழ்ப்பத்தாண்டின்முதல் மாதம் என்றும்ää தைமுதல் திகதியே தமிழ்ப் புத்தாண்டின் முதல்திகதி என்றும் கொண்டாடுவோம். அவ்வாறு நாம் கொண்டாடுவதால் கிரகமாற்றங்களில் கோளாறு ஏற்படும் என்பதும் பஞ்சாங்கம் பொய்த்துவிடும் என்பதும் இந்துத்துவத் திமிர்பிடித்த மூடநம்பிக்கைகள். மடத்தனமான விதண்டா வாதங்கள். மக்களைக் குழப்பும் முயற்சிகள்.

தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
பத்தன்று, நூறன்று பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்

என்று தைத்திங்கள் திருநாளை, தமிழினத்தின் திருநாளாக, தமிழ் வருடத்தின் முதல்நாளாக, தமிழ்ப பண்பாட்டின் பெருநாளாக போற்றிப் பாடுகின்றார் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் அம்மொழியே பொன் மொழியாகட்டும். அனைத்துலகத் தமிழர்களுக்கும் ஒரே வழியாகட்டும்.

எனவே தைமுதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டெனக்கொண்டாடும் நமது பண்டைய வழக்கத்தினை உலகத் தமிழ்மக்கள் அனைவரும் வழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும்.

பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கடந்து விட்ட வருடத்தின் கடைசிநாள்.
வீட்டிலுள்ள வேண்டத்தகாத பொருட்களையெல்லாம் வீசி எறியும் நாள்.
வீட்டிலும், வீட்டைச்சுற்றவரவும், காணிகளிலும் உள்ள அழுக்குக்களை,
குப்பை கூழங்களையெல்லாம் கூட்டிப்பெருக்கித் தீயிட்டுக்கொழுத்தி
துப்பரவுசெய்யும் நாள்.

புலரும் பொழுதில், மலரும் பொங்கல்பண்டிகையை, புத்தாண்டுப் பிறப்பை வரவேற்க வீடுகள்தோறும் விடியவிடிய மகிந்திருக்கும் நாள்.
வீட்டுச்சுவர்களுக்கு வெள்ளையடிப்பதும், வர்ணச்சாயம் தீட்டுவதுமாக
அன்றைய நாள் முழுவதும் ஊரே மகிழ்ச்சியில் அமர்க்களப்படும்.
அந்த நாளைப் போகி நாள் என்று சொல்வார்கள்.
கடந்த வருடத்தைப் போக்குதல், க~;டங்களைப் போக்குதல்,
உறவினர்களுக்கிடையே இருந்த உரசல்களைப் போக்குதல்,
அகத்திலும் புறத்திலும் உள்ள அழுக்குக்களைப் போக்குதல் என்றெல்லாம் பொருளமைந்ததுதான் போகி நாள், போகிப் பண்டிகை!

திருமணமாகித் தனிக்குடும்பம் நடாத்தும் தங்கள் பெண்களுக்கும், சகோதரிகளுக்கும் பெற்றோரும், சகோதரர்களும் சீர்வரிசை செய்வதும் அன்றைய நாளில்தான்.

நெல்லு, அரிசி, குரக்கன், சோளம் முதலிய தானியங்கள் முக்கனிகள், இனிப்புப் பலகாரங்கள், புத்தாடைகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றையெல்லாம் இல்லறம் நடத்தும் தம் பிள்ளைகளின் வீடுகளுக்கு எடுத்துச்சென்று கொடுத்து மகிழ்வார்கள். இல்லத்தையும், சுற்றுப்பறத்தையும் எல்லோருமாகச் சேர்ந்து துப்பரவுசெய்து, புதுப்பொலிவு ஊட்டுவார்கள். அது பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள். புத்தாண்டுக்கு முதல்நாள். கடக்கும் வருடத்தின் கடைசிநாள். அதுதான் போகிநாள்!

தைத் திங்கள் முதல்நாளே தமிழர் நமது புதுவருடப் பெருநாள். தங்கத் தமிழினத்தின் தைப்பொங்கல் திருநாள். எனவே, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளே நமது புத்தாண்டு என்பதை, எங்கும் பறைசாற்ற வேண்டும். எப்போதும் அதனைப் பின்பற்ற வேண்டும். தப்பாமல் நம் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டும். வாசலில் கோலமிட்டு, மாவிலையிலும், மஞ்சள் குருத்தோலையிலும் தோரணங்கட்டி, புத்தரிசி கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, தலைவாழையிலையில் பொங்கலும்,பழங்களும், கரும்பும் படைத்து, கதிரவனை நோக்கிக் கைகூப்பித்தொழுது நன்றிதெரிவிக்கும் நந்நாளே பொங்கல் திருநாள்.

காலையில் வழிபாடு. பகலில் உறவினர்களோடு மகிழ்ந்து உறவாடல். உணவு பரிமாறல். உண்டு களைப்பாறல். மாலையில் களியாடல். கலைகள் அரங்கேறல். ஊரே திரண்டு ஒன்றாய் மகிழ்ந்து கொண்டாடல். இதுதான் தமிழரின் தாயகங்களின் தைத்திருநாள். அது வருடத்தில் ஒருநாள். புத்தாண்டின் முதல் நாள். தமிழருக்கு அது பெருநாள். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நமது தாயகங்களிலே நாம் கொண்டாடி மகிழ்ந்த அந்த நாட்களை நினைவுகூரவேண்டும்.

வாழுகின்ற இடத்தால் வேறுபட்டாலும், வணங்குகின்ற மதத்தால் வேறுபட்டாலும், சார்ந்துள்ள அரசியல் கருத்தால் வேறுபட்டாலும், தனிப்பட்ட குணத்தால் வெறுபட்டாலும் தமிழர் என்ற இனத்தால் ஒன்றுபடுவோம். தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். தைமுதல்நாளே புத்தாண்டு என்று உறுதி பூணுவோம். எங்கு வாழ்ந்தாலும் அந்த வழக்கத்தைப் பேணுவோம்.

தைபிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். கல்வியைத் தொடங்கும் பிள்ளைகளுக்கு வழிபிறக்கும். புதுவகுப்பிற்குச் செல்லும் மாணவர்க்கு வழிபிறக்கும். பல்கலைக்கழகம் செல்லும் இளையோர்க்கு வழிபிறக்கும். திருமணத்திற்குக் காத்து நிற்கும் காதலர்க்கு வழிபிறக்கும்ää பிள்ளைப் பாக்கியத்திற்குக் காத்திருக்கும் தம்பதிகளுக்கு வழிபிறக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகின்ற பெற்றோருக்கு வழிபிறக்கும். இவ்வாறு சிறியோர்க்கும், பெரியோர்க்கும் எல்லோர்க்கும் தைபிறந்துவிட்டால் வழிபிறக்கும்.

பிற்குறிப்பு:

2001 ஆம் ஆண்டு தைமாதம் 6 ஆம் திகதி மலேசியாவிலே “தைமுதல்நாளே தமிழ் ஆண்டுத் தொடக்கம்” என்று பரப்புரைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு, அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய தமிழ்க் கலாசாரக் கழகத்தின் பொங்கல் விழாவில் எனது தலைமையில் எழுநூற்றுக்கும் அதிகமான பங்களிப்பாளர்களின் முன்னிலையில், “தைத்திருநாளே தமிழரின் புத்தாண்டு” என்று உறுதிமொழி பிரகடனப்படுத்தப்பட்டது.

-சு.சிறீகந்தராசா