Followers

Monday, April 18, 2016

மலேசியாவின் மலாக்கா மாகாணத்தில் டாக்டர் ஜாகிர் நாயக்



மலேசியாவின் மலாக்கா மாகாணத்தில் டாக்டர் ஜாகிர் நாயக்கின் கருத்தரங்கம் நடைபெற்றது. ஹிண்ட்ராஃப் என்ற இந்துத்வா அமைப்பு இந்த கூட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மலேசிய அமைச்சர் ஒருவரும் ஜாகிர் நாயக்கை கடுமையாக விமரிசித்து பின்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக கூட்டம் நிறைவேறியது.

முடிவில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது. பல கேள்விகள் மாற்று மதத்தவர்களால் கேட்கப்பட்டன. சென்கிராம் தர்மா என்ற 24 வயது இந்து இளைஞர் ஒரு கேள்வியைக் கேட்டார். இவர் ஒரு பல்கலைக் கழக மாணவர். இவரது கேள்விக்கு ஜாகிர் நாயக் மிகச் சிறப்பான பதிலை தந்தார். பதிலை பெற்றுக் கொண்ட அந்த மாணவர் உடன் அரங்கிலேயே இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Saturday, April 16, 2016

கொடிக்கால் செல்லப்பாவைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோஹன்!



இருபதாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சாகித்ய அக்காதமி சார்பில் ஒர் இலக்கியக்கூட்டம் நாகர்கோயிலில் நடந்தது. அதில் நான் பார்வையாளனாக கலந்துகொண்டேன். பேச்சாளர்கள் பேசி முடித்ததும் கேள்விநேரம். ஒரு முஸ்லீம்பெரியவர் எழுந்து மிக நீளமான கேள்வியைக் கேட்டார். நான் அன்றைய மனநிலையில் எவரையும் புண்படுத்துபவன் [இன்று சிலரை மட்டும்.] எழுந்து துடுக்காக ‘ஐயா நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்க வரவில்லை. உங்கள் பெயரைப்போட்டிருந்தால் வந்திருக்கவும் மாட்டோம். அறிவிக்கப்பட்டவர்கள் பேசட்டும்’ என்றேன்.

அவர் ‘மன்னிக்கவேண்டும் மன்னிக்கவேண்டும்’ என்று அமர்ந்துகொண்டார். அப்படி அவர் அமர்ந்தது எனக்கு சற்று அதிர்ச்சி அளித்தது. அவ்வாறு மிகையாகப் பேசுபவர்கள் வாதிடத்தான் செய்வார்கள் என்பது என் எண்ணம். அவரது பெயர் கொடிக்கால் அப்துல்லா என்று அறிந்துகொண்டேன். அன்றுமாலை சுந்தர ராமசாமியைச் சந்திக்கச்சென்றேன். அவர் என்னிடம் முகம் கொடுத்தே பேசவில்லை. நான் நெடுநேரம் கழித்து அவரது மனநிலைக்குக் காரணம் கேட்டேன். ‘கொடிக்காலை என்னவென்று நினைத்தீர்கள்? அவர் இந்த நகரத்தின் ஆத்மா. அவரை அவமதிப்பது என்னை அவமதிப்பது போல’ என்றார். நான் குன்றிப்போனேன். பின்னர் கொடிக்கால் அவர்களிடம் அதற்காக மன்னிப்பு கோரினேன். அவர் சிரித்தபடி என்னைத்தழுவிக்கொண்டு ‘என்ன இப்படி மன்னிப்பெல்லாம் கேட்கிறீர்கள்? சின்ன வயதில் ராமசாமியும் இதேமாதிரித்தானே இருந்தார்?” என்றார்

சமீபத்தில் கொடிக்கால் அவர்களின் கன்யாகுமரி இல்லத்தில் நானும் கிருஷ்ணனும் ஒருநாள் முழுக்கத் தங்கி அவரது வாழ்க்கையனுபவங்களைக் கேட்டுக்கொண்டிருந்தோம். கொடிக்கால் செல்லப்பா என்று அறியப்பட்ட இடதுசாரிச் செயல்பாட்டாளர் எப்படி கொடிக்கால் அப்துல்லா ஆனார் என்பதற்குப்பின் ஒரு பெரிய வரலாறு இருந்தது. குமரிமாவட்டத்தில் கொடிக்கால் என்ற ஊரில் எளிய தலித் குடியில் பிறந்து மிக இளமையிலேயே அனாதையாக ஆகி படிப்போ செல்வமோ இல்லாதிருந்த கொடிக்கால் செல்லப்பா தனக்கென பணமும் அதிகாரமும் சேர்க்க நினைக்கவில்லை. தன்னைச்சூழ்ந்திருந்த மக்களின் நலனுக்காக வாழ்க்கையை அளித்தார். இடதுசாரி இயக்கங்களின் தீவிரப்பணியாளராக ஆனார். சுதந்திரப்போரிலும் அதன்பின் குமரிமாவட்டத்தை தமிழகத்துடன் சேர்ப்பதற்கான தமிழகமீட்புப் போராட்டத்திலும் ஈடுபட்டார். மீண்டும் மீண்டும் சிறைசென்றார். அவரது கல்வி முழுக்க அவர் சிறையில் இருந்து கற்றுக்கொண்டது. ஐந்தாம் வகுப்பு படித்த கொடிக்கால் பல பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார். பல மாநாடுகளில் கருத்துரை ஆற்றியிருக்கிறார். இரண்டு கல்லூரிகளை நிறுவி நடத்திவருகிறார்
வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தான் சார்ந்த சமூகத்திற்கு இந்திய ஜனநாயகமும் இடதுசாரி இயக்கங்களும் எதையும் செய்யவில்லை என்ற உணர்வை அடைந்தார். இஸ்லாம் மீது ஈடுபாடு ஏற்பட்டது. இளமையிலேயே அவருக்கு ஆன்மீக தேட்டம் இருந்தது. போத்தங்கோடு ஆசிரமத்தில் சின்னாட்கள் இருந்திருக்கிறார். இஸ்லாம் அவருடைய உள்ளத்திற்கு உகந்த மதமாக இருந்தது. அல்லாவின் குரலை எங்கோ தன்னுள் கேட்டார். அவரது மதமாற்றம் குமரிமாவட்டத்தில் அன்று ஓர் அலையை கிளப்பியது. ஆனால் கொடிக்கால் அன்றும் இன்றும் குமரிமாவட்டத்தின் பண்பாட்டில், அதன் ஆன்மீகத்தில் தவிர்க்கமுடியாத ஒரு சக்தி

எனக்கு கொடிக்கால் சுந்தர ராமசாமியின் வடிவமாகவே எப்போதும் தெரிகிறார். சில மனிதர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு மேலெழுந்து ஒரு சமூகத்திற்கே தந்தையாகிறார்கள். அத்தகைய மூதாதையரால் வழிநடத்தபடும் சமூகமே வாழும். குமரிமாவட்டத்தின் மூதாதையர் வரிசையில் இன்றிருக்கும் மாமனிதர் கொடிக்கால். இன்று அவரது பிறந்தநாள். நாகர்கோயிலில் நிகழும் விழாவுக்கு என் வாழ்த்துக்கள். இத்தருணத்தில் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கிக்கொள்கிறேன்.

கொடிக்கால்- ஹிந்து கட்டுரை

-ஜெயமோஹன் (எழுத்தாளர்)

http://www.jeyamohan.in/75408#.VxMhLNR961u

சமஸ்கிரதம் படிப்பதால் தலித்களுக்கு என்ன நன்மை?

சமஸ்கிரதம் படிப்பதால் தலித்களுக்கு என்ன நன்மை?

//சம்ஸ்கிருத வல்லுனர்கள் தலித் சமுதாயத்துக்கு அவர்கள் இருப்பிடம் சென்று போதித்தால் மொழி வளரும். அண்ணல் அம்பேத்கரை பின்பற்றும் தலித்துகள் இன்றும் அறியாமையின் காரணத்தாலோ அல்லது இந்த தேசத்தின் எதிரிகள் கட்டமைத்திருக்கிற பொய்ப் பிரச்சாரத்தாலோ மயங்கி சமஸ்கிருதம் என்ற பொக்கிஷத்தை புறக்கணித்து வருகின்றனர். இதில் நஷ்டம் சமஸ்கிருத மொழிக்கல்ல.// - ம. வெங்கடேசன்

தலித் சமுகத்தை சார்ந்தவர்கள் சமஸ்க்ருதம் கற்றுக்கொள்வதால் என்ன பயன் அவர்களுக்கு. ஒரு தலித் சமுகத்தை சேர்ந்தவர் நன்றாக சமற்க்ருதம் பேசுகிறார், வடமொழி மந்திரங்களை நன்கு உச்சரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவருக்கு தாழ்த்தப்பட்டவர் என்கிற கரை நீங்கி ,கருவறை வரை சென்று இறைவனின் திருமேனியை தொட்டு பூஜிக்கும் அர்ச்சகர் ஆகும் பணி கிடைத்து விடுமா? தலித் என்கிற சமுக இழிவு நீங்கி விடுமா கூறுங்கள்!!!!! நன்றாக வடமொழி பேசும் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனை பார்த்து ” ஆஹா!! இந்த ஆதி திராவிட இளைஞன் ஆதி சங்கரரை காட்டிலும் அற்புதமாக சமற்க்ருத மொழியை பேசுகிறானே என்று புளங்காகிதம் அடைந்து எந்த பிராமணனாவது அல்லது மேல் சாதி இந்துவாவது தன் வீட்டு பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துக் கொடுக்க முன்வருவானா? இப்படி எதற்குமே பயனில்லை என்றால் பின்பு எதற்க்காக ம.வெங்கடேசன் அம்பேத்கரின் பெயரால் இங்கு வந்து சமஸ்க்ருதத்தை “Marketing” செய்ய வேண்டும்?. ஆகவே,அம்பேத்கர் கூறிவிட்டார் என்பதற்காக அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இதற்க்கு திரு.ம. வெங்கடேசன் அவர்கள் திறந்த மனதோடு நேர்மையாக பதில் அளித்தால் மிக உத்தமமாக இருக்கும்.

-தாயுமானவன்

தாயுமானவன் நியாயமான கேள்விகளைக் கேட்டுள்ளார். சமஸ்கிரத ஆர்வலர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வெண்டும்.

Friday, April 15, 2016

தேர்வில் பிட் அடிக்கும் இவர்களை அல்லவா தடுக்க வேண்டும்?







தேர்வில் பிட் அடிக்கும் இவர்களை அல்லவா தடுக்க வேண்டும்?

சில நாட்களுக்கு முன் சிபிஎஸ்ஸி தேர்வெழுத மத்திய அரசு ஆடை கட்டுப்பாடு என்ற போர்வையில் ஹிஜாபுக்கு தடை விதித்ததை பார்த்தோம். ஆனால் அந்த மாணவிகள் மத்திய அரசின் காவி சிந்தனைக்கு அடி பணியாமல் கடைசி வரை சிறை சென்று தங்கள் கோரிக்கையில் வெற்றி பெற்றனர். சிறிது சிறிதாக இஸ்லாமிய அடையாளங்களை இந்தியாவிலிருந்து துடைத்து விடலாம் என்று மோடியும் அமீத்ஷாவும் கனவு காண்கின்றனர். ஆயிரம் மோடிக்கள் வந்தாலும் எனது தாய் நாடான இந்தியா அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானதாகவே என்றும் இருக்கும் என்று சொல்லி வைக்கிறோம்.

இது ஒரு புறம் இருக்க எனது முந்தய பதிவில் ஒரு இந்துத்வாவாதி ஹிஜாப் அணிந்தால் ஈஸியாக மறைத்து பிட் அடிக்கலாம். எனவேதான் மத்திய அரசு ஆடைக்கு தடை விதிக்கிறது என்ற அருமையான காரணத்தை கண்டு பிடித்து பின்னூட்டமாக எழுதியிருந்தார். இங்கு சில படங்களை பதிவிட்டுள்ளேன். ஒரு இந்து பெண் ஹிஜாப் இல்லாமலேயே பிட் அடிப்பதை பாருங்கள். அடுத்து பீஹாரில் தேர்வு அறைக்கு பிட் எப்படியெல்லாம் பப்ளிக்காக பாஸாவதை பாருங்கள். உண்மையில் பிட் அடிப்பதை தடுப்பதுதான் மோடி அரசுக்கு நோக்கம் என்றால் இதனை முதலில் தடுக்கட்டும்.

அடுத்து சம்பளம் வாங்கிக் கொண்டு பரீட்சை ஹாலுக்கு எக்ஸாமினராக வருபவர்களின் வேலையே இது போன்று பிட் அடிப்பவர்களை கண்காணிப்பதுதான். அவர்கள் தங்கள் வேலையை ஒழுங்காக செய்தால் எவரும் பிட் அடிக்க முடியாது.

மேலும் அரை குறை குட்டை பாவாடையோடு வயது வந்த பெண்களும் ஆபாசமாக உடை அணிந்து வருவதை மோடி முதலில் தடுக்கட்டும். கற்பழிப்புகள் அப்போதுதான் குறையும்.

அடுத்து அகோரிகள் என்ற பெயரில் அம்மணமாக பெண்கள் மத்தியில் சுற்றித் திரியும் சாமியார்களுக்கு மோடி அரசு கடிவாளம் போடட்டும். செத்த பிணங்களை தின்றும், கஞ்சா அடித்தும் சுற்றுப் புற சூழலை மாசு படுத்தும் அகோரிகளை முதலில் திருத்தட்டும்.




















அரசு டாக்டரை தாக்கிய வழக்கில் பாஜக எம்.பி.க்கு 3 ஆண்டு சிறை



அரசு டாக்டரை தாக்கிய வழக்கில் குஜராத் மாநில பாஜக எம்.பி. உட்பட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரேலி பகுதி பாஜக மகளிரணி தலைவி மது ஜோஷி. அவரது மகன் ரவி. கடந்த 2013 ஜனவரியில் ஒரு கும்பலால் ரவி தாக்கப்பட்டார். உடனடியாக அவர் அம்ரேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பணியில் இருந்த டாக்டர் தான்ஜி தாபி, ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அந்த நோயாளியை விட்டுவிட்டு ரவிக்கு சிகிச்சை அளிக்கும்படி மது ஜோஷியும் அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தினர். ஆனால் டாக்டர் தாபி சம்மதிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அம்ரேலி தொகுதி பாஜக எம்.பி. நரேன் கச்சாடியா மருத்துவமனைக்கு சென்று டாக்டர் தான்ஜி தாபியை தாக்கினார்.

இதுதொடர்பாக அம்ரேலி போலீஸார் விசாரித்து நரேன் கச்சாடியா எம்.பி, மது ஜோஷி, ரவி ஜோஷி, ரமேஷ், கிரித் வம்ஜா ஆகிய 5 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை அம்ரேலி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீதிபதி பி.ஆர். பட் விசாரித்து நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதன்படி பாஜக எம்.பி. நரேன் கச்சாடியா உட்பட 5 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

எனினும், மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக சிறை தண்டனை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்படும். அந்த வகையில் நரேன் கச்சாடியா எம்.பி.யும் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
15-04-2016

மோடி கட்சியின் எம்பி அல்லவா? ரவுடியிசம் பண்ணுவதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.

'போலோ பாரத் மாதா கீ ஜே' :-)