Followers

Monday, May 02, 2016

இந்து மதத்திலிருந்து தாய் மதம் திரும்பிய முஸ்லிம்கள்!



இந்து மதத்திலிருந்து தாய் மதம் திரும்பிய முஸ்லிம்கள்!

ஆக்ராவில் கடந்த டிசம்பர் மாதம் இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம்கள் மீண்டும் தங்களது மதத்துக்கு மறு மதமாற்றம் செய்து கொண்டனர்.

ஆக்ராவில் கடந்த கிறிஸ்தமஸ் தினத்தன்று மாபெரும் மத மாற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் மத மாற்றம் செய்துகொண்டனர். இதில் மஹூர் லத்தியா கிராமத்தைச் சேர்ந்த 'நத்' வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்களும் அடங்குவர். இந்து மதத்துக்கு மாறினால் நிலம் வழங்கப்படும் என்று இந்துதுவ அமைப்பின் தலைவர் வாக்குறுதி அளித்ததன் பேரில் இவர்கள் அந்த நிகழ்ச்சி நடந்தபோது இந்து மத்துக்கு மாறினர்.

இந்த நிலையில் தற்போது சுமார் 17 முஸ்லிம்கள் இந்து மதத்திலிருந்து மீண்டும் மறு மதமாற்றம் செய்து கொண்டுள்ளனர். மறு மதமாற்றம் செய்துகொண்ட முதியவர் ராமாத் கூறும்போது, "அலி முகமது என்றவர் எங்களது குடும்பத்தினரை மதமாற்றம் செய்துகொள்ளும் படி கூறினார்.
நிலம் தருவதாக இந்துதுவா தலைவர்கள் கூறினர். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை. எங்களது சமூகத்தை சேர்ந்தவர்களும் எங்களை ஒதுக்கி தள்ளினர். திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளுக்கு எங்களை உறவினர்கள் அழைப்பதில்லை. அதனால் திரும்பவும் எங்களது மதத்துக்கு மாறி விட்டோம்" என்றார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த கிறிஸ்தமஸ் தினத்தன்று 100 இஸ்லாமியர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மத மாற்றம் செய்துகொண்டால் ஆதார் அட்டை, பணம், நிலம் ஆகியவை வழங்கப்படும் என்று நிகழ்ச்சியை நடத்திய இந்துதுவ அமைப்புகள் அறிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
02-05-2015

எந்த மதத்தவரையும் பணம், பதவி காட்டி மதம் மாற்றினால் என்ன விளைவு ஏற்படும் என்பதை மேற்கண்ட நிகழ்வு நமக்கு சிறப்பாக படம் பிடித்துக் காட்டுகிறது. முன்பு முகலாயர் ஆட்சியில் கத்தியை காட்டி கட்டாய மதமாற்றம் செய்வித்ததாக தொடர்ந்து பொய் பிரசாரம் இந்துத்வாவாதிகளால் பரப்பப்படுகிறது. அது நடைமுறை சாத்தியமில்லாதது என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கிறது. தற்போது மோடி மற்றும் அமீத்ஷா தலைமையில் நடந்து வரும் இந்துத்வ ஆட்சியில் இந்துக்களுக்கே அனைத்திலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிறுபான்மையினர் அச்சுறுத்தலில் உள்ளதாக இந்துத்வா தலைவரான அருண் ஷோரியே பேட்டி கொடுக்கும் நிலையில்தான் இந்தியாவின் நிலை உள்ளது. அப்படி இருந்தும் இந்து மதம் போன இஸ்லாமியர் தாய் மதம் திரும்பியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வாளாலும் அதிகாரத்தாலும் எந்த மக்களையும் அதிக நாட்களுக்கு ஒரு மதத்தில் அடக்கி வைக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

இனியாவது இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற திரிபு வாதத்தை இந்துத்வாவாதிகள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழ் இந்து நாளிதழில் இந்த கட்டுரைக்கு ஒரு இந்து நண்பர் எழுதிய பின்னூட்டத்தையும் கீழே பார்போம்....

"ஹா ஹா ஹா. ஆசை காட்டி மோசம் செய்துவிட்டார்களா RSS மற்றும் VHB சாமியார்கள். இது அவர்களுக்கு வழக்கமான ஒன்று தான். RSS கூமுட்டைகளுக்கு விவரம் பத்தவில்லை என்றே நான் நினைக்கிறேன். மதம் மாறிய மக்களுக்கு பேசியபடி நிலத்தை வழங்கியிருக்கலாம். சிறிது நாட்கள் கழித்து பாஜக அமல்படுத்திய நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை பயன்படுத்தி, "மோகன் பகவத் அன் கோ" என்ற பெயரில் "தாயத்து கம்பெனி" ஒன்றை ஆரம்பிக்கிறோம் ஆதலால் நிலம் வேண்டும் என புருடா விட்டு, கொடுத்த நிலத்தையெல்லாம் திரும்ப பிடுங்கியிருக்கலாம். பழியும் அரசு மேல் சென்றிருக்கும்."

Sunday, May 01, 2016

கபாலி டீஸர் கொலை வெறி பாடலையும் மிஞ்சி விடுமாம்!



கபாலி டீஸர் யூட்யூபில் வெளியான 5 மணி நேரத்தில் 784842 பேர் பார்வையிட்டுள்ளனர். கொலை வெறி பாடலையும் இது முறியடித்து விடும் என்கிறார்கள். படித்தவர்கள் பாமரர்கள் என்று வித்தியாசம் இல்லாமல் இந்த கூத்தாடியை தூக்கி வைத்து கொண்டாடுவது ஏன் என்று எனக்கு இது வரை விளங்கவில்லை. இன்னும் 10 வருடங்களுக்கு சினிமா துறையை சேர்ந்தவர்களே முதல்வராப் போவது தமிழனுக்கு வரமா? அல்லது சாபமா?

தமிழன்டா.... திமிருடா.... அடிமைடா.... நாசமாப் போவோன்டா...

துணிச்சலாக பேசும் இவர்தான் உண்மையான பாரத்மாதா!



'பாரத் மாதா யார்? ஆர்எஸ்எஸிடம் கேளுங்கள் தெளிவான பதில் இருக்காது. பாரத் மாதா கொடியை பிடிக்காமல் சிகப்புக் கொடியை ஏன் பிடிக்கிறீர்கள் என்று கேளுங்கள் அதற்கும் பதில் இருக்காது.

ஆர்எஸ்ஸின் பாரத் மாதா யார்? மாயா கோட்னானி! எங்களுக்கு இப்படி ஒரு மாதா தேவையில்லை.

உங்களின் மற்றொரு பாரத் மாதா ஸ்மிருதி ராணி! எங்களுக்கு இப்படிப்பட்ட மாதாக்கள் தேவையில்லை.

நீங்கள் ஆர்எஸ்எஸிடம் கேளுங்கள்! ஹனுமந்தப்பா இறப்புக்கு யார் காரணம்?

ரோஹித் வெமுலாவின் இறப்புக்கு யார் காரணம்?'

பாலஸ்தீன மக்களின் கல்வி தேடலில் உள்ள ஆர்வம்!



பாலஸ்தீன மக்களின் கல்வி தேடலில் உள்ள ஆர்வம்!

எத்தனை கொலைகள்: எத்தனை குண்டு வெடிப்புகள் எத்தனை காயங்கள்: எத்தனை வீடு இடிப்புகள்: அனைத்தையும் தங்களின் வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றி இடிந்த பள்ளி அறையிலும் ஆர்வத்துடன் கல்வி கற்கும் பாலஸ்தீன மக்களிடம் நமக்கும் பாடம் இருக்கிறது. இத்தனை தோல்விகள் கண்டும், அமெரிக்காவும், இஸ்ரேலும், ஐரோப்பாவும் வஞ்சகமாக பாலஸ்தீனியர்களை பழி வாங்கினாலும் கிடைக்கும் சந்தர்பங்களை நன்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் பாலஸ்தீனியர்கள்.

தோற்றத்திலும் நிறத்திலும் நம் ஊர் பார்பனர்களை ஒத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் எப்பாடு பட்டாவது ஒரு டிகிரி எடுத்து விடுவார்கள். கல்வி கற்பதை அந்த அளவு நேசிப்பர். அதிகமாக அலுவலக வேலைகளையே விரும்புவர். சவுதியில் பல பாலஸ்தீனியர்களை நண்பனாக பெற்றவன். பழகுவதற்கு மிக இனிமையானவர்கள். மிக தைரியசாலிகள்: பெண்களும் ஆண்களுக்கு நிகராக படிப்பதிலும், வேலை வாய்ப்பை பெறுவதிலும் போட்டி போடுவர். அதே வேகத்தில் தொழுகையிலும் மிக கவனமாக இருப்பர்.

தோல்விகளையும் சிரமங்களையுமே வாழ்க்கையாக கொண்டுள்ள இந்த மக்களின் வாழ்வில் வசந்தம் வீச நம்முடைய பிரார்த்தனையை இறைவனிடத்தில் வைப்போம்.

'என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து' எனக் கூறுவீராக!

குர்ஆன் 20:114

இலங்கையில் தற்போது நடந்து வரும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு!





இலங்கையில் தற்போது நடந்து வரும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு!

தமிழகத்தில்சில மாதங்கள் முன் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இலங்கையிலும் தவ்ஹீத் ஜமாத் சார்பாக இன்று நடந்து வருகிறது.

மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் எனது உறவினர்கள் நிறைய இருக்கின்றனர். நன்கு உலக கல்வியை கற்ற அவர்களிடம் மார்க்க அறிவு என்பது பில்லி சூன்யம், தர்ஹா, தட்டு, தாயத்து என்ற ரீதியில்தான் உள்ளது. எனவே இலங்கையை தொடர்ந்து மலேசியா சிங்கப்பூரிலும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நடத்த ஏகத்துவ வாதிகள் முன் வருவார்களாக!