Followers

Tuesday, May 03, 2016

இவர்கள் மனிதர்கள் அல்ல: கொடிய மிருகங்கள்!





கேரளாவில் தலித் பெண் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலியான பெண்ணின் வீட்டின் அருகே வசித்து வந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

எர்ணாகுளம் சரக ஐ.ஜி. தலைமையிலான போலீஸ் குழுவினர் சந்தேக நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எர்ணாகுளம் மாவட்டம் ராய மங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ளது இராவிச்சிரா. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் எர்ணாகுளத் தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த வியாழன் அன்று இரவு மாணவி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பணி முடிந்து அன்று இரவு வீடு திரும்பிய மாணவியின் தாய், அவரை சடலமாக கண்டதும் அலறி துடித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இளம் பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக் காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத அறிக்கையில் அந்த பெண் மிக கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து அதிகாரிகள் கூறும்போது, "மிகக் கூர்மையான ஆயுதத்தால் அப் பெண்ணின் கருப்பையும், குடலும் சிதைக்கப்பட்டுள்ளது. பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் 13 செ.மீ. ஆழத்துக்கு காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெண்ணின் கல்லீரலும் சிதைக்கப்பட்டுள்ளது. இதுதவிர துணியால் பெண்ணின் வாய், மூக்கு பகுதியை பொத்தி மூச்சுத் திணறல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடல் முழுவதும் 30 இடங்களில் படுகாயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
03-05-2016

இவர்கள் மனிதர்கள் அல்ல: கொடிய மிருகங்கள்!

ஈராக்கின் மசூல் நகர ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்!



ஈராக்கின் மசூல் நகர ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்!

ஈராக்கிலுள்ள மசூல் நகரத்தின் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் என்ன தெரியுமா? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித்தார்தா! அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு? சித்தார்த்தா சில வருடங்கள் முன்பு இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை அபு ருமைஷா என்று மாற்றிக் கொண்டார்.

இஸ்லாத்தை ஏற்ற ஒருவன் என்னசெய்ய வேண்டும்? தொழுகை, நோன்பு, மனித நேயம், ஏழைகளின் பால் அன்பு, ஹராம் ஹலால் பார்த்து சம்பாதிப்பது என்று அவனது வாழ்க்கை அமைய வேண்டும். ஆனால் இவனோ தீவிரவாதத்தை கையிலெடுத்து ஐஎஸ்ஐஎஸில் சேர்ந்து இஸ்லாத்துக்கு விரோதமான செயலில் ஈடுபடுகிறான். இங்கிலாந்தில் பல முறை சிறையிலடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளான்.

ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள படித்த இளைஞர்களை யூதர்கள் வலை விரித்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள். பல பரம்பரைகளாக இஸ்லாத்தில் உள்ள ஒருவன் யூதர்களின் பாவச் செயலுக்கு அடி பணிய மாட்டான். எனவே பாசிச சிந்தனையுடைய சித்தார்த் போன்ற இளைஞர்களை பிடித்து மூளை சலவை செய்கின்றனர். அவர்களை இஸ்லாத்தை ஏற்பதாக நடிக்க வைத்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர்.

பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகளை கொன்றவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள். அவர்கள் உடலில் பச்சை குத்தியிருந்ததை முன்பு ஆதாரங்களோடு பார்த்தோம். ஃப்ரான்ஸில் நடந்த பல குண்டு வெடிப்புகள் இன்று வரை மர்மாகவே உள்ளன. அங்கும் யூதர்கள் சம்பந்தப்பட்டுள்ளது முடிவில் தெரிய வந்தது. இதனை கண்டு பிடித்த விசாரணை அதிகாரியை கொன்று விட்டு அதனை தற்கொலையாக உலகுக்கு சொன்னதை நாம் மறந்து விட முடியாது.

நம் நாட்டில் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்புகளில் முதலில் இஸ்லாமியர்கள்தான் கைது செய்யப்பட்டனர். முடிவில் ஹேமந்த் கர்கரே என்ற நியாயவான் உண்மையை வெளிக் கொண்டு வந்தார். இன்று இந்துத்வாவாதிகள் சிறையில் உள்ளனர். யூதர்களுக்கும் நம் நாட்டு இந்துத்வாவாதிகளுக்கும் எப்போதும் ஒரு நெருக்கம் இருப்பதை நாம் அறிவோம்.

ஐஎஸ்ஐஎஸ் செய்து வரும் காரியம் எல்லாம் இஸ்லாம் தடுத்தது. பெண்களை செக்ஸ் தொழிலாளிகளாக பயன்படுத்துகின்றனர். பத்திரிக்கையாளர்களை கழுத்தை வெட்டி அதனை வீடியோவாக்கி வெளியிடுகின்றனர். அப்பாவி மக்களை கொல்கின்றனர். சிரியா, ஈராக்குக்கு சொந்தமான எண்ணெய் வயல்களை திருடி விற்று காசு பார்க்கின்றனர்.

இவை அனைத்தும் இஸ்லாம் தடுத்த செயல்கள். இவற்றை செய்வதன் மூலம் யூதர்களுக்கு பணமும் கிடைக்கிறது. அதே நேரம் உலக அளவில் இஸ்லாத்திற்கு கெட்ட பெயரும் ஏற்படுத்தப் படுகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்களாம். ஆனால் இவர்களின் சூழ்ச்சியை உலகம் தற்போது நன்றாக புரிந்து கொண்டு விட்டது. முன்பை விட ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இஸ்லாம் வேகமாக பரவுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் யூதர்களின் ஆட்டத்தை இறைவன் ஒரு முடிவுக்கு கொண்டு வருவான்.


தகவல் உதவி
தி ஹிந்து ஆங்கில நாளிதழ்
03-05-2016

http://www.thehindu.com/news/international/siddhartha-dhar-a-top-commander-of-is-report/article8548219.ece

அண்ணன் தம்பிகள் தான்: மாமன் மச்சான்கள்தான்:



இறைவனை வணங்கும் மார்க்கத்தால் வேறு பட்டாலும் நாம் எல்லோரும் அண்ணன் தம்பிகள் தான்: மாமன் மச்சான்கள்தான்: ஏனெனில் எனது பூர்வீகத்தை இரண்டு தலைமுறைக்கு முன்பு ஆய்வு செய்து பார்த்தால் நான் ஒரு நாயுடுவாகவோ, ஞாயிக்கராகவோ, தேவராகவோ, தலித்தாகவோ, பார்பனராகவோத்தான் இருந்திருப்பேன்.

இந்த தமிழ் மண்ணில் இந்து முஸ்லிம் ஒற்றுமை காலா காலத்துக்கும் தொடர்ந்து வரும். நேற்று முளைத்த மோடி, அமீத்ஷா, ராம கோபாலன் போன்ற நச்சுக் கிருமிகளால் அந்த சகோதரத்துவம் என்றுமே மாசு படாது என்பதை இந்த காணொளி நமக்கு அழகாக விளக்குகிறது.

என்று தணியும் இந்த சாதி வெறி?



தனது மகன் தலித் மாணவனோடு நட்போடு இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக அந்த தலித் சிறுவனை சாதி வெறி பிடித்த மனித மிருகம் தாக்கியதை பாருங்கள். நட்பு பிடிக்கவில்லை என்றால் தனது மகனை கண்டிக்க துப்பில்லாத இது போன்ற மிருகங்கள் வாழவே தகுதியில்லாதவர்கள்.

என்று தணியும் இந்த சாதி வெறி?

நேற்று 02-05-2016 அன்று பாராளுமன்றத்தில் உவைஸி.



நேற்று 02-05-2016 அன்று பாராளுமன்றத்தில் மோடி அரசின் தலித் மற்றும் இஸ்லாமிய விரோத செயல்களை ஆதாரங்களோடு பட்டியலிட்டார் உவைஸி.

'சார்! தலித்களுக்கு ஸ்காலர்ஷிப் குறைத்தது ஏன்? அவர்களின் நிலை மேம்பட்டு விட்டதா? இஸ்லாமியர்களுக்கான கல்வி உதவித் தொகை அரசு அனுமதி அளித்தும் உரியவர்களுக்கு தரப்படாமல் திருப்பி அனுப்பும் கொடூரம் ஏன்? தலித்களும் இஸ்லாமியர்களும் மேல் படிப்பு படித்து விடக் கூடாது என்பதில் இந்த அரசு ஏன் இத்தனை முனைப்பு காட்டுகிறது?'

என்று விளாசி தள்ளியுள்ளார். பிஜேபி உருவாக்கப்பட்டதே மேல் சாதியினரில் நலனுக்காக என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்கள் தங்கள் வேலையை திறம்பட செய்து வருகிறார்கள்.