Followers

Tuesday, September 06, 2016

சவுதியில் ருசியான கோழிக்கு அலை மோதும் கூட்டம்!



அல்பெய்க் என்ற இந்த உணவகம் சவுதியில் பிரபலம். மெக்கா, மதினா, ஜெத்தா, அல்கஸீம் என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஊர்களில் மாத்திரமே இதன் கிளைகள் உண்டு. இரண்டு முறை அல் கஸீம் பிராஞ்சில் 'அல்பெய்க் கோழி' சாப்பிட்டுள்ளேன். 12 ரியாலுக்கு நான்கு கோழி துண்டுகள் பிரட் என்று அசத்துகிறார்கள். குறைந்த செலவில் வயிறு நிரம்ப சாப்பிட முடிவதால் இங்கு எப்போதும் கூட்டம் அலை மோதுகிறது.

கெண்டகி, மெக்னோடால்ஸ் போன்ற அமெரிக்க கம்பெனிகள் மற்ற ஊர்களுக்கு அல்பெய்க் வருவதற்கு மறைமுகமாக தடை செய்து வருகிறார்கள். ஒரு சிலர் கஸீமிலிருந்து மொத்தமாக வாங்கி ரியாத்தில் விற்று வந்தனர். காவல் துறை அவர்களை கைதும் செய்துள்ளது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இது போன்ற கோழிகளை தவிர்த்துக் கொள்வதே நல்லது. வீட்டில் வளர்க்கும் நாட்டுக் கோழியே சிறந்தது.






குஜராத் ஒளிர்கிறது என்று பீலா விட்ட மோடியின் பித்தலாட்டங்கள்!



குஜராத் ஒளிர்கிறது என்று பீலா விட்ட மோடியின் பித்தலாட்டங்கள்!

ஆட்சிக் கட்டிலில் ஏற குஜராத் ஒளிர்கிறது என்ற பொய்யை நாடு முழுக்க பரப்பியவர் மோடி. அந்த பொய்களினால் ஆட்சியையும் பிடித்துள்ளார். ஆனால் தற்போது குஜராத்தின் உண்மை நிலை உலகுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. நமது நாட்டில் வறுமைக்காக கிட்னியை விற்பவர்களின் எண்ணிக்கை குஜராத்தில்தான் அதிகமாக உள்ளது.

குஜராத மாநிலம் பண்டோனி என்ற கிராமத்தில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 11 நபர்கள் கிட்னி விற்றுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கிட்னி விற்க தயாராக இருப்பவர்களை அறிமுகம் செய்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்க தொகை என்று அறிவித்து கிட்டத்தட்ட ஒரு மல்டி லெவல் மார்க்கெட்டிங் போன்று இக்குற்றம் நடந்து கொண்டிருக்கிறது. மேல்மட்ட கார்ப்பரேட் மருத்துவமனை நிர்வாகத்தில் ஆரம்பித்து கிட்னி விற்பவர் வரை மிகப் பிரம்மாண்டமான ஒரு வலைப்பின்னல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஹர்ஷத் சோலன்கி : வயது 24 தொழில் : விவசாயம்
கிட்னி விற்ற தேதி : ஆகஸ்ட், 2015 பணம் : 2.50 இலட்சம் ரூபாய்

கனுபாய் கொகெல் : வயது 37 தொழில் : விவசாயம்
கிட்னி விற்ற தேதி : நவம்பர், 2015 டெல்லி பணம் : 2.30 இலட்சம் ரூபாய்

அமீன் மாலீக் : வயது 27 தொழில் : விவசாயம்
கிட்னி விற்ற தேதி : பிப்ரவரி, 16 2016 பணம் : 1.5 இலட்சம் ரூபாய்

அதானிக்கும் அம்பானிக்கும் முழு நேர சேவகனாக உலா வரும் மோடி இனிமேலாவது தனது சொந்த மாநிலமான குஜராத்தின் அவல நிலையை போக்க முன் வர வேண்டும்.

இஸ்லாமிய குழந்தைகளுக்கு குர்ஆன் பாடமெடுக்கும் இந்து!



இஸ்லாமிய குழந்தைகளுக்கு குர்ஆன் பாடமெடுக்கும் இந்து!

ஆக்ரா: உ.பி.,யில் மேற்கு பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், 35 முஸ்லிம் குழந்தைகளுக்கு குரான் குறித்து பாடம் கற்பித்து வருகிறார்.

உ.பி.,யின் ஆக்ராவின் சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த பூஜா குஷ்வாகா என்ற மாணவி, கோவில் வளாகத்தில், முஸ்லிம் குழந்தைகளுக்கு இலவசமாக குரான் குறித்து பாடம் கற்பித்து வருகிறார்.

இது தொடர்பாக பூஜாவிடம் குரான் படிக்கும் 5 வயது சிறுமியின் தாயார் ஒருவர் கூறுகையில், இந்த வயதில், மாணவியின் திறமையை பார்த்து ஆச்சர்யமாக உள்ளது. எனது குழந்தைக்கு இந்த மாணவி ஆசிரியையாக இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளதுது. அந்த சிறுமியின் மதம் குறித்த எண்ணம் எனக்கோ மற்ற சிறுமிகளின் பெற்றோர்களுக்கோ வரவில்லை" எனக்கூறினார்.

பூஜா குஷ்வாகா கூறுகையில், "பல வருடங்களுக்கு முன், முஸ்லிம் தந்தைக்கும், இந்து மதத்தை சேர்ந்த தாயாருக்கும் பிறந்த சங்கீதா பேகம் என்ற பெண், குழந்தைகளுக்கு குரான் கற்பித்து வந்தார். இதில் ஆர்வமடைந்த நான் அந்த வகுப்பில் கலந்து கொண்டேன். அதில் குரானை மற்றவர்களை விட நன்கு கற்றுக்கொண்டேன்" எனக்கூறினார்.

சில குறிப்பிட்ட காரணங்களால் சங்கீதா பேகத்தால் குரான் வகுப்பை தொடர முடியவில்லை. இதனையடுத்து அவரது ஆலோசனையின் பேரில் பூஜா குஷ்வாகா, குரான் வகுப்புகளை தொடங்கினார்.

பூஜா தொடர்ந்து கூறுகையில், என்னிடம் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் கொடுக்க பணம் இல்லை. நானும் பணம் வாங்க விரும்பவில்லை. குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வீட்டில் போதிய இடம் இல்லாத காரணத்தினால் பெரியவர்களின் ஆலோசனைப்படி கோவில் இடத்தில் கற்பித்து வருகிறேன் என்றார். பூஜாவின் மூத்த சகோதரியும் அப்பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு இந்தி மற்றும் பகவத் கீதை கற்பித்து வருகிறார்.

70 வயதாகும், இஸ்லாம் மத தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்த நகரில் சமூக நல்லிணக்கத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு ஆசிரியர் என்பவர் ஆசிரியரே. அதில் அவரது மதம் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது. யாராவது அரபிக் மொழி கற்பதையோ, குரான் வாசிப்பதையோ இஸ்லாம் மதம் எதிர்க்கவில்லை" என்றார்.

தகவல் உதவி
தின மலர் நாளிதழ்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1601020#.V85wyxicC2w.facebook

மனித நேயத்துடன் நடந்து கொண்ட முஸ்லிம்கள்!

மனித நேயத்துடன் நடந்து கொண்ட முஸ்லிம்கள்!



முஸ்லீம் இளைஞர்களின் மதம் பாராது ஓர் இந்துவுக்கு ஈமச்சடங்கு செய்த‌ மனித நேயம்.

ஓரு இந்துவின் சடலத்துக்கு அனைத்து ஈமச்சடங்குகளையும் செய்த முஸ்லீம் இளைஞர்கள் . மனைவியை தவிர வேறு யாருமற்ற 65 வயது வமான் கடாம் தானே அருகில் உள்ள கௌசாவில் நள்ளிரவில் மரணித்தவுடன் அவருக்கு ஈமச்சடங்கு செய்ய யாருமற்ற நிலையில் கலீல் பாவ்னே, ஃபஹாத் தாபிர், நவாஸ் தாபிர்,ராஹில் தாபிர்,ஷபான் கான்,மக்சூத் கான்,ஃபாரூக் கான், முஹம்மது கஸம் ஷேக் ஆகியோர் மூங்கில், பாய், துணி, சாம்பிராணி, மண் பானை அனைத்தையும் வாங்கி வந்து பாடை கட்டி பிரேதத்தை சுமந்து சுடுகாடு சென்று நள்ளிரவு 3 மணிக்கெல்லாம் சடங்குகள் செய்து எரியூட்டினார்கள்.

அவர்கள் செயல் அப்பகுதியிலுள்ள அனைத்து இந்து முஸ்லீம் சமூகத்தாரால் பெரிதும் பாராட்டப்பட்டது.

#Mohamed Ali Jinnah

Muslim youths carry out last rites of Hindu man
By JKR Staff -
September 6, 2016
0
A group of Muslim youths from Mumbra have earned plaudits for carrying out the funeral rites of a Hindu man who passed away in the dead of the night in Kausa area near Thane.

With no one around to take care of the last rites of Waman Kadam (65) except his wife, the eight youths took the initiative of preparing for his funeral.

They purchased necessary ritualistic items like bamboo, rope, earthen pots, incense sticks as well as cloth and a thatched mat.
The youths then carried his body to the crematorium at around 3 AM and performed the last rites.

The gesture did not go unnoticed, with Mumbra-Kalwa MLA Jitendra Awhad saluting them in a Facebook post.

They were also lauded by residents of Muslim dominated Mumbra.

The youths have been identified as Khalil Pawne, Fahad Dabir, Nawaz Dabir, Rahil Dabir, Shaban Khan, Maqsood Khan, Farooque Khan, Mohammad Kasam Shaikh.