Followers

Tuesday, August 14, 2018

சூடு தாங்காமல் தவிக்கும் ஹாஜிக்கு தனது காலணியை அளிக்கும் காவலர்!

சூடு தாங்காமல் தவிக்கும் ஹாஜிக்கு தனது காலணியை அளிக்கும் காவலர்!

போலீஸ்காரர்கள் என்றாலே முரட்டு சுபாவமும் முரட்டு மீசையும்தான் அதிகார தோரணையும்தான் நமக்கு ஞாபகம் வரும். ஆனால் மெக்காவில் உள்ள காவலர்கள் மிகுந்த பொறுமையோடும் அன்புள்ளத்தோடும் பழகுவதை பார்க்க முடியும். மொழி தெரியாமல் தவிக்கும் அனைத்து உலக மக்களையும் பொறுமையோடு கையாளும் இவர்களின் அன்புள்ளத்தை நேரிலேயே கண்டு வியந்துள்ளேன்.

இங்கு ஒரு பெண்மணி காலணி அறுந்ததால் வெயிலின் சூடு தாங்காமல் தவிக்கிறார். இதைப் பார்த்த காவலர் தனது காலணியை கழட்டிக் கொடுக்கிறார். இது போன்ற நெகிழ்ச்சியான பல சம்பவங்களை ஹஜ்ஜில் நாம் காண முடியும்.


2018 ஹஜ் பயணத்துக்காக நைஜீரியாவில் மேற் கொள்ளப்பட்ட நிகழ்வுகள்!

2018 ஹஜ் பயணத்துக்காக நைஜீரியாவில் மேற் கொள்ளப்பட்ட நிகழ்வுகள்!

நம்மை படைத்த இறைவன் என்பவன் ஒரு நாட்டுக்கோ ஒரு இனத்துக்கோ ஒரு மொழிக்கோ சொந்தக்காரனாக இருக்க முடியாது. வெள்ளையன் கருப்பன் அமெரிக்கன் ஐரோப்பியன் ஆசியன் என்ற அனைத்து மக்களுக்கும் பொதுவானவனாக இருக்க வேண்டும். அந்த வகையில் கருப்பின மக்களான நைஜீரியர்கள் இந்த வருட ஹஜ்ஜூக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ சில வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. தற்போது ஹாஜிகள் மெக்காவில் குழுமத் தொடங்கி விட்டனர். இறைவனின் பொருத்தத்தை அன்பை பெற வேண்டி வந்திருக்கும் ஹாஜிகளின் எண்ணங்களை இறைவன் பூர்த்தியாக்கி வைப்பானாக!


Monday, August 13, 2018

இஸ்லாமிய மார்க்கத்தையும் விட்டுக் கொடுக்காமல்.....

பேச்சு போட்டியில் மிக அற்புதமாக பேசி முதல் பரிசான ரூபாய் 10,000.த்தை வென்ற கோவை. இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி. யு. ஃபஷீஹா.......
எவ்வளவு படித்தாலும் உலகின் எந்த உயரிய பதவியை பிடித்தாலும் இஸ்லாமிய மாணவிகள் இஸ்லாம் வகுத்திருக்கும் கட்டுப்பாடுகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இஸ்லாமிய பெண்களை வீட்டுக்குள் அடைந்து கிடக்க இஸ்லாம் சொல்லவில்லை. அன்றைய அரேபியாவில் போர்க் களத்துக்கும் சென்று வீரர்களுக்கு தண்ணீர் புகட்டுவது, உணவு சமைப்பது, காயம் பட்ட வீரர்களுக்கு மருத்துவம் பார்ப்பது, இஸ்லாமிய மார்க்க போதனை நடத்துவது என்று அவர்களின் உலகம் பரந்து விரிந்தது. இன்றோ சீரியல்களில் மூழ்கி தங்களின் பொன்னான நேரத்தை வீணாக்குகின்றனர்.
இந்த மாணவியைப் போல் இஸ்லாமிய மார்க்கத்தையும் விட்டுக் கொடுக்காமல் உலக அறிவையும் பெற்றுக் கொள்ளும் சமூகமாக மாறுவோமாக!
இந்த மாணவிக்கு வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்...


Sunday, August 12, 2018

சாராயத்தால் வீழ்ந்த மு க முத்து!

சாராயத்தால் வீழ்ந்த மு க முத்து!
ஒரு மனிதன் மதுவால் எந்த அளவு பாதிக்கப்படுவான் என்பதற்கு மு க முத்துவின் வாழ்வு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. மு க ஸ்டாலின் இடத்தில் இருக்க வேண்டியவர் மதுவால் சீரழிந்து இன்று உருக்குலைந்து போயுள்ளார். பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு படங்களில் பார்த்த அந்த அழகு மகன் இன்று உருக்குலைந்து போயுள்ளார்.
கலைஞர் அவர்கள் மதுக் கடைகளை திறக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட போது நேரில் சென்று 'வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. இந்த மக்கள் குடித்து பாழாய் போவார்கள்' என்று ராஜாஜி கோரிக்கை வைத்தார். தனக்கு வருமானம்தான் முக்கியம் என்று கருதிய கலைஞர் மதுக் கடைகளை பலரது எதிர்ப்பையும் மீறி திறந்தார். அதில் அவரது குடும்பத்தின் மூத்த குடிமகனே வீழ்ந்ததுதான் ஒரு கரும் புள்ளி.
குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
போதைப் பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்து போவார்கள்.
---------------------------------------------
மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:219


ஆட்டோ டிரைவர் மகன் ஐஏஎஸ் ஆன வரலாறு!


4-வதோடு படிப்புக்கு மூட்டைக் கட்டும் நிலை ஏற்பட்டும் தொடர் முயற்சியால் ஐஏஎஸ் ஆன ஆட்டோ ஓட்டுனர் மகன்!

ஏழைக் குடும்பத்தில் பிறந்த அன்சார் கடந்துவந்த பாதை முழுவதுமே தங்கு தடைகள் நிறைந்தவை. ஆனால், அனைத்தையும் கடந்து இன்று யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிக் கண்டு இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரிஆகியுள்ளார்.

ஃபேஸ்புக்கை அடிக்கடி லாகின் செய்து டைம்லைனை நோட்டமிடுபவர்கள் போல், டிஎன்பிஎஸ்சி வெப்சைட் அடிக்கடி எட்டி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் எகிறிக் கொண்டிருக்கிறது. ஆம், முன் காலங்களைவிட அரசு தேர்வுகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் அதிகரித்துவிட்டர் என்றாலும், பலரும் பத்தோடு பதினொன்றாகவே படிக்கின்றனர் மற்றும் படிக்க வற்புறுத்தப்படுகின்றனர். அப்படி எக்சாம் போபியாவால் திணறுபவர்களுக்கு அன்சார் ஷாயிக் சொல்லிக் கொள்வது இதை தான்,
போட்டித் தேர்வில் உங்களுடன் லட்சம்பேர் போட்டியிடுவார்கள் என்று பயந்தீர்களாயின் அது தவறு. உங்களுடைய ஒரே போட்டியாளர் நீங்கள் தான். எனவே, உங்கள் நம்பிக்கையற்ற எண்ணங்கள் அனைத்தையும் தூரவீசிவிட்டு பயணியுங்கள், வெற்றி உங்கள் பாதையைத் தேடி வரும்,” என்கிறார். 

அது சரி, ஆனால் யாரிந்த அன்சார் ஷாயிக்...?

நம்பிக்கையின் நாயகன், விடாமுயற்சியின் காதலன். ஆம், அதுவே அவருக்கான சரியான அடையாளமாய் இருக்கும். இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் ஒருவர் அவரது பாதையில் எத்தனை கற்களையும், மேடுகளையும் தாண்டிவிட முடியும்? அன்சார் கடந்துவந்த பாதை முழுவதுமே தங்கு தடைகள் தான். ஆனால், அனைத்தையும் கடந்து இன்று ஐஏஎஸ் அதிகாரி என்ற அடையாளத்துடன்இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரிஎன்ற அடைமொழியுடன் நிமிர்ந்து நிற்கிறார்.

2016ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொண்ட முதல் முயற்சிலேயே வெற்றிக்கண்டு 21 வயதிலே கலெக்டராகி மேற்கு வங்க மாநிலத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார் அன்சார்.

அன்சார் கடந்துவந்த கரடுமுரடான பாதை

மகாராஷ்டிராவின் பர்பானி சிட்டியின் ஷெல்கான் கிராமத்தில் பிறந்தவர் அன்சார் ஷாயிக். அப்பா ஆட்டோ ஓட்டுநர். அவருக்கு மூன்று மனைவி. இரண்டாவது மனைவியான அன்சாரின் அம்மா, விவசாய வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளி. ஏற்கனவே, குடும்ப பொருளாதார நிலை மோசம். இதில், அன்சாரின் அப்பாவுக்கு குடிப்பழக்கமும் தொற்றிக்கொள்ள குடிக்கு அடிமையாகி, தினம்தினம் சண்டை, சச்சரவு என நிம்மதியற்ற வாழ்வு. 

நாட்கள் இப்படியாக கழிந்தாலும், அன்சார் படிப்பில் படுச்சுட்டி. ஆனால், குடும்பத்தின் நிலையின் காரணமாக அக்கம்பக்கத்தாரும், சுற்றதாரும் அன்சாரின் அப்பாவிடம், அன்சாரின் படிப்பை நிறுத்துமாறு கூறியுள்ளனர். அவரும், அதற்கு சம்மதம் தெரிவித்து அன்சாரின் ஆசிரியரிடம் பள்ளியை பாதியில் நிறுத்த கேட்டிருக்கிறார்.

எனக்கு நல்லா நினைவில் இருக்கிறது. அப்போ நான் நாலாவது படிச்சிட்டு இருந்தேன். சொந்தகாரங்க எல்லாம் அப்பாட்ட என்னை ஸ்கூலுக்கு அனுப்ப வேணாம்னு சொல்லிக் கொண்டு இருந்தனர். அப்பாவும் டீச்சருக்கு போன் பண்ணி, நான் இனிமேல் ஸ்கூலுக்கு வரமாட்டன் சொன்னார். ஆனால், டீச்சர் தான் அவன் நல்லா படிக்கிற பையன். அவனை மட்டும் படிக்க வைத்தீங்கனா, உங்க குடும்பத்தின் நிலையே மாறிபோகும்என்று சொல்லியிருக்காங்க...

என்று நினைவுகூறும் அன்சார், அவரது வாழ்க்கையின் திருப்புமுனை சம்பவம் அதுவே என்கிறார். ஆசிரியரால் அன்சாருக்கு மற்றொரு வாய்ப்பை கொடுத்துள்ளனர் அவருடைய பெற்றோர். அந்தவாய்ப்பை சிறப்பாக பயன் படுத்திகொள்ள தீர்மானித்த சிறுவன் வைராக்கியதுடன் படித்து, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91% மதிப்பெண்ணை பெற்றிருக்கிறார்.

அவருடைய வாழ்வின் கஷ்டக்காலமான பள்ளிப் பருவத்தை பற்றி சிரித்து கொண்டே அன்சார் பகிர்ந்து கொண்டாலும், மூன்றுவேளை உணவுக்கு வழியற்ற நிலையில், ஒருநாள் மதியஉணவில் புழு கிடந்தும் பொருட்படுத்தாமல் உண்டு உள்ளார்.

எனக்கு சிக்கன் என்றால் ரொம்ப பிடிக்கும். மூன்று வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் என்ற நிலையின் நான்-வெஜ்ஜுக்கு எங்கு போவது. ஒருநாள், லன்ச்சில் புழுகிடந்தது. அதையும் சாப்பிட்டோம். சோ, வெஜ் மீல்ஸ், நான் வெஜ்ஜாகிவிட்டது,”

என்று சிரிக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு புனேவில் உள்ள கல்லூரியில் இளங்கலை பொலிடிக்கல் சயன்சில் சேர்ந்திருக்கிறார். மராத்தி மீடியம் பள்ளியில் படித்த அவருக்கு, ஆங்கிலவழி கல்வியை எதிர்கொள்வது சிரமமாக இருந்துள்ளது. ஆனால், எதற்கும் சோர்வு அடையாதவரே அன்சார், ஆங்கிலத்தையும் ஒரு கைப்பார்த்தார்.

அன்சாரின் கல்லூரி செலவுக்காக அவருடைய அப்பாவும், தம்பியின் முழு சம்பளமான 7 ஆயிரத்தையும் செலவிட்டிருக்கின்றனர். ஒரு ஜோடி செருப்பு, இரண்டு ஜோடி ஆடையுடன் கல்லூரிக்கு சென்று வந்திருக்கிறார்

தகவல் உதவி : thebetterindia.com மற்றும் kenfolios.com, Rahmathullah Tlpm