Followers

Wednesday, June 19, 2019

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில்......

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும் என்று சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை நம்பி அறியாமையின் உச்சத்தில் மக்கள் புரளுவதைப் பாருங்கள்.
இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் மலிந்துள்ளதால்தான் சுய மரியாதையுடைய மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள். முதலில் இது பொன்ற மூட நம்பிக்கைகளை களைய பாருங்கள் சங்கிகளே... பிறகு இஸ்லாத்தின் பக்கம் நீங்கள் வரலாம்.
ஆதாரத்துடன் வீடியோ.


Monday, June 17, 2019

உண்மையான காவலர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.

மெக்காவில் வழி தவறி காலில் செருப்பின்றி ஒரு மூதாட்டி வெயிலில் தவித்துக் கொண்டிருந்தார். அங்கு நின்றிருந்த காவலர் தனது ஷூவை அந்த மூதாட்டிக்கு கொடுத்து அவரது இருப்பிடத்தில் சேர்க்கிறார். உண்மையான காவலர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.


Sunday, June 16, 2019

தூய்மை பணியில் உள்ளவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

தூய்மை பணியில் உள்ளவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

வெயில், மழை, குளிர் என்றும் பாராமல் நகரங்களை தூய்மையாக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை கண்ணியப்படுத்தும் முகமாக சவுதி அரேபியால் ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களை அமர வைத்து பெரும் கோடீஸ்வரர்கள் தங்கள் கைகளால் உணவு பரிமாறினர். அன்பளிப்புகளையும் பெருநாள் தினத்தன்று அள்ளி வழங்கினர்.  இஸ்லாத்தின் கட்டளைகள் அந்த அளவு சவுதி மக்களை ஆட்கொண்டுள்ளது.

நமது நாட்டில் இவ்வாறு துப்புறவு தொழில் செய்பவர்களை 'தோட்டிகள்' என்று தனி சாதியாக பிரித்து அவர்களை நம்மோடு நெருங்கக் கூட விடுவதில்லை. அவர்களோடு இந்துக்கள் திருமண உறவுகளையும் வைத்துக் கொள்வதில்லை. இந்த நிலை மாற வேண்டும். சவுதி போன்ற சம நிலை நமது இந்தியாவிலும் ஏற்பட வேண்டும்.


நாத்திகம் மக்களுக்கு மன அமைதியை தருவதில்லை

ரஷ்யாவில் நாளுக்கு நாள் பள்ளி வாசலுக்கு வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அரசு புதிதாக பள்ளிவாசல்கள் கட்ட பல முட்டுக் கட்டைகள் போட்டாலும் பள்ளிவாசல்களின் தேவை அதிகரித்த வண்ணமே உள்ளது.
கம்யூனிஷ ரஷ்யாவில் இஸ்லாம் வளர்வதை கம்யூனிஷ்டுகள் விரும்பவில்லை என்றாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க முடியவில்லை.
நாத்திகம் மக்களுக்கு மன அமைதியை தருவதில்லை. இறை வணக்கமே மனிதனுக்கு மன நிம்மதியை தரும் என்பதை இந்நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.


ஜாதி மதம் பாராமல் அனைத்து மக்களுக்கும் ரத்ததானம்

ஜாதி மதம் பாராமல் அனைத்து மக்களுக்கும் ரத்ததானம் கொடுப்பதில் தொடர்ந்து முதலிடம் ..
தொடரட்டும் ஜமாத்தின் மனிதநேயப்பணி