Followers

Monday, February 17, 2020

தலித் மாப்பிள்ளை குதிரையில் வந்ததால் தாக்குதல்!

தலித் மாப்பிள்ளை குதிரையில் வந்ததால் தாக்குதல்!
சென்ற ஞாயிற்றுக் கிழமை குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம், ஷரீஃதா கிராமத்தில் ஒரு திருமணம் நடந்தது. ராணுவ வீரரான ஆகாஷ் குமார் (வயது 22) தான் மாப்பிள்ளை. இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். திருமணத்தன்று மாப்பிள்ளை குதிரையில் ஊர்வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தாக்கூர் சாதியினர் இதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் காவல் துறை அனுமதி கேட்கப்பட்டது. சம்பவ தினத்தன்று ஊர்வலத்தில் மாப்பிள்ளை வர தாக்கூர் சாதியினர் கற்களை கொண்டு ஊர்வலத்தை தாக்கியுள்ளனர். மாப்பிள்ளை பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டார். உறவினர்களில் ஐந்து பேர் தாக்குதலுக்கு உள்ளாயினர். இத்தகவலை மாப்பிள்ளையின் சகோதரர் விஜய் கோட்டியா பத்திரிக்கைகளுக்கு தந்துள்ளார்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
17-02-2020
தனது சொந்த செலவில் ஊர்வலம் போனால் மேல் சாதியினருக்கு ஏன் எரிச்சல் வருகிறது? உலகில் எந்த நாட்டிலாவது இந்த கொடுமை உண்டா? இது பற்றி மோடியோ அமித்ஷாவோ நம் ஊர் எச்.ராஜாவோ வாய் திறந்தது உண்டா?
இந்த அழகில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்து இந்துவாக இருந்தால் குடியுரிமை தருகிறேன். முஸ்லிமாக இருந்தால் தர மாட்டேன் என்று சட்டம் இயற்ற வெட்கமாகயில்லையா அமித்ஷா? உனது மதத்தில் குறைகள் இருப்பதால்தானே தலித்கள் மதம் மாறுகின்றனர். விடிவு தேடி ஓடுபவர்களையும் சட்டம் கொண்டு தடுப்பது எந்த வகை அரசியல்?
ட்ரம்ப் வருகைக்காக ஏழைகளின் குடிசையை மறைக்க சுவர் எழுப்பும் மோடியே... இந்த கல்லெறிதலை எதைக் கொண்டு மறைக்கப் போகிறீர்?


அந்த வாளுக்கா? இந்த வாலுக்கா? :-)


Sunday, February 16, 2020

மோடியும், அமித்ஷாவும் இந்நிகழ்வைக் கண்டு வெட்கித் தலைகுனியட்டும்.

சென்னை ஷாஹின்பாக் வண்ணாரப் பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய பெண்களுக்கு உணவு, தேநீர் கொடுத்து தங்கள் ஆதரவை தெரிவித்த தொப்புள் கொடி உறவுகளான இந்து மக்கள்...
இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கத் துடிக்கும் மோடியும், அமித்ஷாவும் இந்நிகழ்வைக் கண்டு வெட்கித் தலைகுனியட்டும்.


இந்த தேச விரோதிகளிடமிருந்தும் எனது நாட்டை இறைவன் காப்பானாக!

இன்று (பிப். 16, 2020) சென்னை வண்ணாரப்பேட்டைப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுடன் பேசுவதற்காக மேடையிலிருந்து இறங்கியதும், அங்கே அமர்ந்திருந்த ஓர் இசுலாமியப் பெரியவர் கலங்கியக் கண்களுடன் என் கைகளைப் பற்றினார். “ஐயா, நீங்கள் கலங்காதீர்கள்; இந்த அடக்குமுறைச் சட்டத்தை அமுல்படுத்த விடமாட்டோம்” என்று நான் தேறுதல் சொன்னேன். சுமார் 85 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவர் என்னைக் கட்டியணைத்தவாறே, தேம்பித் தேம்பி அழுதார். நானும் நிலைகுலைந்து போனேன்.
தள்ளாத வயதில் வாடும் பெரியோரை, ஏழை எளியோரை, சக்தியற்றோரை மனஉளைச்சலுக்கு, சங்கடத்துக்கு ஆளாக்குபவர்கள் நன்றாக வாழ மாட்டார்கள். அவர்கள் அருகி, கருகி, அழிந்து, ‘அய்யோ’வென்று போவார்கள்! போக வேண்டும்!
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!!
உதயகுமார்
--------------------------------------------
இந்துத்வாவாதிகளுக்கு இந்து மதத்தின் மீது பற்றோ இந்து மதத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமோ கொஞ்சமும் கிடையாது. இது போன்ற சட்டங்களின் மூலம் தங்களின் அதிகாரத்தை நிலையிருத்திக் கொள்ளவேண்டும்: வர்ணாசிரம கொள்கையை வீரியப்படுத்த வேண்டும்: முஸ்லிம்களை பயமுறுத்தி வைக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே காய்களை நகர்த்தி வருகின்றனர். இவர்கள் நினைக்கும் எந்த செயலும் நிறைவேறப் போவதில்லை.
இந்த குடியுரிமை திருத்த சட்ட குழப்படிகளால் நாடு மேலும் பொருளாதாரத்தில் சரிவை சந்திக்கும். நாடு முழுக்க கலவரங்கள் உண்டாகும். அழகிய இந்த நாடு சிதறுண்டு போகும்.
அது போன்ற நிலைகளிலிருந்தும் இந்த தேச விரோதிகளிடமிருந்தும் எனது நாட்டை இறைவன் காப்பானாக!


#ஏஆர்_ரஹ்மானின்_மகள்கதிஜா.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ திரைப்படத்தின் 10-ம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா கலந்து கொண்டு தனது தந்தையுடன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார். அப்போது மேடையில் கதிஜா கண்கள் மட்டும் தெரியும் வகையில் பர்தா அணிந்திருந்தார். இந்த உடை மிகுந்த விவாதப் பொருளாக மாறியது.
சமூக வலைதளங்களில், ‘ரஹ்மான் மிகவும் பிற்போக்குவாதியாக நடந்து கொண்டுள்ளார். வெளியில் ஒரு தோற்றமும் உள்ளே வேறு மாதிரியானத் தோற்றமும் கொண்டவராக உள்ளார்’ என்ற கருத்துகள் எழுந்து வந்தன.
இதற்கு அப்போது பதிலளித்த #கதிஜாரஹ்மான், தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘#நான்எந்த_உடையை அணிய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். எனது தேர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் #என்பெற்றோர்கள்_பொறுப்பல்ல. விவரம் புரியாமல் தேவையில்லாத முடிவுகளுக்கு வரவேண்டாம்’ எனக் குறிப்பிட்டார்.
இதே சர்ச்சையை தற்போது தனது ட்விட்டர் பதிவின் மூலம் மீண்டும் எழுப்பியுள்ளார் பிரபல எழுத்தாளர் #தஸ்லிமாநஸ்ரின். இதுகுறித்த பதிவில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா பர்தா அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், “எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது மகளைப் பார்க்குப் போது எனக்கு #மூச்சுத்திணறல் ஏற்படுவது போல் உள்ளது. பாரம்பரியமிக்க குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள் கூட எளிதாக #மூளைச்சலவை செய்யப்படுவது வேதனையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
#இந்தப்பதிவுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்திருக்கும் #கதிஜா, ஒரு வருடமாக இந்த விவகாரம் சுற்றி வருகிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மக்கள் ஒரு பெண் என்ன ஆடையை அணிய வேண்டும் என்பதில் கவனத்தைச் செலுத்துகின்றனர்.
ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்கும் போது #என்னுள்எரியும்_தீ பல்வேறு விஷயங்களைச் சொல்வதற்கு என்னைத் தூண்டுகிறது. பல ஆண்டுகளாகப் பல்வேறு குணாதிசயங்களைக் கடந்த ஒரு வருடமாக நான் கண்டுவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் #நான்_எடுத்த_முடிவுகளை எண்ணி பலவீனமடையவோ வருத்தப்படவோ மாட்டேன்.
நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நன்றி. என்னுடைய பணிகள் மட்டுமே பேசும். மேற்படி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இதற்கு நான் ஏன் விளக்கமளிக்கிறேன் என்று நினைத்தால், தனக்காக ஒருவர் பேசியாக வேண்டியிருக்கிறது. அதனால் தான் இதைச் செய்கிறேன்.
#அன்புள்ள_தஸ்லிமா_நஸ்ரின், என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கு #நான்_மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். எனது உடையால் #எனக்கு_மூச்சுத்_திணறல் ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக எனக்குப் #பெருமையாகவும் நான் ஏற்றுக் கொண்ட விஷயத்தில் #உறுதியாகவும் உணர்கிறேன்.
#உண்மையான_பெண்ணியம் #என்றால்_என்னவென்று_கூகுள்செய்து_பார்க்கவும். அது மற்ற பெண்களைத் தரக்குறைவாக பேசுவதும், #அவரது_தந்தைபெயரை_இணைத்துப் பேசுவதும் அல்ல. உங்களுடைய ஆய்வுக்காக நான் எனது புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பியதாக நினைவில் இல்லை” இவ்வாறு தனது பதிவில் கூறியுள்ளார் #ஏஆர்_ரஹ்மானின்_மகள்கதிஜா.