Followers

Tuesday, February 18, 2020

ஒரு கண்ணின் பார்வைத் திறனையே இழந்தவர் தான் மின்ஹாஜுத்தீன்..!

தில்லி போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டதால் ஒரு கண்ணின் பார்வைத் திறனையே இழந்தவர் தான் மின்ஹாஜுத்தீன்..!
இன்று ஜே.என்.ஏ மாநாட்டில் மின்ஹாஜுத்தீன் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
பல்கலைக் கழக நூலகத்தில் இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த போது தான் போலீஸ் கொடியவர்கள் இவரைத் தாக்கினார்கள்.
இவர் இந்த பரிசைப் பெற வந்த போது அன்சாரி ஆடிட்டோரியத்தில் இருந்தவர்கள் அனைவருமே எழுந்து நின்று கை தட்டிப் பாராட்டினார்கள்.


Monday, February 17, 2020

பார்பனர்களின் மற்றுமொரு சூழ்ச்சி!

பார்பனர்களின் மற்றுமொரு சூழ்ச்சி!

தற்போது வரலாற்று ஆய்வுகள் மூலமாகவும், டிஎன்ஏ முடிவுகள் மூலமாகவும் இந்தியாவில் உள்ள பார்பனர்கள் வந்தேறிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. அவர்களின் நிறம், முக ஜாடை, என்று அனைத்திலும் இந்தியர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே உள்ளனர்.

தற்போது குடியுரிமை சட்ட திருத்தத்தின்படி குடியுரிமையை நிரூபிக்க முடியாத இந்துக்களும், முஸ்லிம்களும், கிருத்தவர்களும் நாடற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என்கிறது சட்டம். அதன் பிறகு இந்துக்களை மட்டும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்  நாட்டிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் என்ற போர்வையில் குடியுரிமை வழங்கப்படுவார்கள். ஏனெனில் பலருக்கு தங்களின் தந்தையின் பிறப்பு சான்றிதழை தர முடியாது. 30 வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு நடைமுறையே நமது நாட்டில் இல்லை.

இதனால் மண்ணின் மைந்தர்களான இந்துக்கள் அநியாயமாக வெளி நாட்டிலிருந்து வந்த வந்தேறிகள் என்ற பெயருடன் இந்நாட்டில் வாழ வேண்டி வரும். தற்போது பார்பனர்கள் எவ்வாறு மற்றவர்களால் பார்க்கப்படுகின்றரோ அதே பார்வையில் மற்ற இந்துக்களும் பார்க்கப்படுவர். 'நான் வந்தேறி என்றால்: நீயும் வந்தேறிதான்' என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பார்பனர்கள் இனி சொல்ல முடியும்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அமித்ஷா குரங்கு பிடியாக பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று.

அநியாயமாக மண்ணின் மைந்தர்களை வந்தேறிகள் என்ற அடைமொழியோடு இந்நாட்டில் உலவ விடப் போகிறது பாஜக அரசு. எனவேதான் சொல்கிறோம் இச்சட்டமானது முஸ்லிம்களை விட இந்துக்களுக்கே ஆபத்தானது.

ஆக்கம்
சுவனப்பிரியன்





அசாமில் பெரும்பான்மையாக குடியுரிமை இழந்தவர்கள் இந்துக்களே

அசாமில் பெரும்பான்மையாக குடியுரிமை இழந்தவர்கள் இந்துக்களே

அசாமில் நிகழ்த்தப்பட்ட NRCயில் 19.06 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்கள், அதாவது 19.06 லட்சம் பேர் சந்தேகத்திற்கு இடமானவர்கள் இவர்கள் அனைவரும் தங்களின் குடியுரிமையை இனி நிறுவ வேண்டும்.

இந்த 19,06,657 பேர் யார்???

வங்காளி இந்துக்கள் - 6.90 லட்சம்

இஸ்லாமியர்கள்- 4.86 லட்சம்
(பாங்கிளாதேஷ் / இந்தியா)

கூர்காக்கள் - 85,000
அசாமி இந்துக்கள்- 60,000
கோச் ராஜ்பன்சி- 58,000
கொரியா மரியா தேசி- 35,000
போடோ- 20,000
கர்பி- 9,000
ராஃபா-8,000
ஹஜோங்- 8,000
மிஷிங்-7,000
அஹோம்-3,000
காரோ-2500
மதக்- 1,500
திமிஷா- 1,100
சோனாவால் கராசாரி- 1,000
மாரன் - 900
பிஷ்னுபிரியா மணிப்பூர் - 200
நாகா - 125
ஹமார் - 75
குகி- 85
தாடோ - 50
பாயிட்டீ - 85

மேலே உள்ள பட்டியலில் 6,70,000 பேர் இந்துக்களும் அல்ல இஸ்லாமியர்களும் அல்ல மாறாக பல்வேறு பழங்குடி குழுக்களை சேர்ந்தவர்கள்.

மொத்தம் 19,06,657 பேரில் 4,30,000 யார் என்று இன்னும் தெரியவில்லை?? அவர்கள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இந்த 4,30,000 பேரில் பெரும் பகுதியானவர்கள் வட, தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவை சார்ந்தவர்கள், இதில் பெரும் பகுதியானவர்கள் வட இந்தியாவை சேர்ந்த இந்துக்கள்.

1 கோடி பேர் பங்காளாதேஷில் இருந்து அசாமில் நுழைந்துவிட்டார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தொடர்ச்சியாக கடந்த 40 வருடங்களாக திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். பின்னர் அவர்கள் அந்த எண்ணிக்கையை 60 லட்சம் என்றார்கள், அதன் பின்னர் 40 லட்சம் என்றார்கள். சமீபத்தில் அசாம் என்.ஆர்.சி முடிவுகள் வெளியான போது அந்த எண்ணிக்கை 19 லட்சமாக அறிவிகக்ப்பட்டது. ஆனால் இந்த 19.06 லட்சம் பேரில் பெரும் பகுதியாக குடியுரிமை நிராகரிக்கப்பட்டவர்கள் இந்துக்களே.

இந்தியா முழுவதும் NRC,CAA வுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட தொடங்கி விட்டார்கள் ஆனால் பெரும்பான்மையாக நீக்கப்பட்ட இந்துக்கள் (7 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர் ) மற்றும் பழங்குடிகள் இன்னும் முழுமையாக போராட்ட களத்திற்கு வரவில்லை, ஊடகங்களும் தொடர்ச்சியாக  NRC,CAA இஸ்லாமியர்களுக்கு எதிரானது போலவே சித்தரித்து வருகிறது, ஆனால் உண்மையிலேயே அசாமில் NRC,CAA ஒட்டு மொத்தமாக அங்கு வாழும் இந்துக்களுக்கு எதிரானதாகவே இருந்துள்ளது என்பதை நமக்கு முடிவுகளும் புள்ளிவிரங்களும் காட்டுகிறது.

- முத்துகிருஷ்ணன்

வண்ணாரப்பேட்டை போராட்டகளத்தில் திருமணம்!!

வண்ணாரப்பேட்டை போராட்டகளத்தில் திருமணம்!!❤️❤️
இமாம்:
CAAவை
ஒப்புக்கொண்டீர்களா..?
மணமகன்:
ஒப்புக்கொள்ளவில்லை!
இமாம்:
NPRஐ
ஒப்புக்கொண்டீர்களா..?
மணமகன்:
ஒப்புக்கொள்ளவில்லை!
இமாம்:NRCயை
ஒப்புக்கொண்டீர்களா..?
மணமகன்:
ஒப்புக்கொள்ளவில்லை!
இமாம்:
மணப்பெண்ணை ஒப்புக்கொண்டீர்களா..?
மணமகன்:
முழுமனதுடன் ஒப்புக்கொள்கிறேன்!!💞


இந்தியாவில் வரப்போகும் வர்ணாசிரம ஆட்சியில் இந்துக்களின் நிலை!