Followers

Wednesday, January 13, 2021

சாப்பிட்ட பொருளுக்கு பணம் கேட்டால் மதக் கலவரம் பண்ணுவானாம்!

 சாப்பிட்ட பொருளுக்கு பணம் கேட்டால் மதக் கலவரம் பண்ணுவானாம்!


'நான் பாஜக நிர்வாகி. என்னிடமே பணம் கேட்கிறாயா? அமித்ஷா உதவியாளருக்கு போன் போட்டால் ஆயிரம் பேர் இங்கு கூடி விடுவார்கள். மதக் கலவரம் உண்டு பண்ணுவேன்' என்று மிரட்டுகிறான். மோடியும், அமித்ஷாவும் அவர்களது கட்சிக் காரர்களை எப்படி உருவாக்கியிருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒன்று போதும். இது போல் லட்சக்கணக்கில் குடிகாரர்களைம், கொள்ளைக் காரர்களையும் உருவாக்கியுள்ளது பாஜக. இவர்களை முளையிலேயே கிள்ளி எறியா விட்டால் இந்த நாடு மதக் கலவரத்தால் அழிந்து போகும்.




Tuesday, January 12, 2021

கடல் கடந்தும் மார்க்கப் பணியில் டிஎன்டிஜே!

 கடல் கடந்தும் மார்க்கப் பணியில் டிஎன்டிஜே!


ஆஸ்திரேலியா மெல்போர்னில் வெள்ளி குத்பா பிரசங்கம் செய்யும் சகோதரர்.

ஒரு காலத்தில் தொழுகை வைக்கவும், பிரசாரம் செய்யவும் நீண்ட தாடியுடன், தலைப் பாகையுடன், நீண்ட ஜிப்பாவுடன் தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருந்தது. மதரஸா சென்று ஏழு வருடம் ஓதி பட்டம் வாங்கிவர்கள்தான் இமாமாக இருக்க முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் ஏகத்துவ புரட்சி ஏற்பட்டவுடன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், தொழில் துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் சகோதரர்கள் என்று மார்க்கம் அறிந்த அனைவரும் அழைப்பாளர்களாகவும், இமாமம்களாகவும் மாறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே!




Monday, January 11, 2021

ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலீ கான் (Huzoor Nizam Mir Osman Ali Khan).

 கடந்த 1965-ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்றபிறகு, சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்க போதுமான நிதி, இந்திய ராணுவத்திடம் இல்லாததால், நிதி திரட்ட ஆரம்பித்தார், அன்றைய பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி.


இதற்காக, தேசிய பாதுகாப்பு நிதி (National Defense Fund) என்ற பெயரில் நிதி வழங்கிடும்படி அன்றைய குறுநில மன்னர்களுக்கு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

ஆனால், தேவையைப் பூர்த்தி செய்யும் படியான உதவிகள் எங்கிருந்தும் வரவில்லை.

நிதி நெருக்கடியால் பதைபதைத்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, உடனடியாக ஹைதராபாத்திற்கு விரைந்தார்.

இந்தியாவின் வேண்டுகோளை மறுக்காமல் நிறைவேற்றக் கூடிய ஒரு நல்ல மனிதர் அங்கிருக்கிறார் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார், லால் பகதூர் சாஸ்திரி.

பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி நேரில் சென்று சந்தித்தவர், ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலீ கான் (Huzoor Nizam Mir Osman Ali Khan).

ஹைதராபாத் நிஜாமை சந்தித்த பிரதமர், நாட்டின் மோசமான நிதி நிலைமையை விளக்கினார்.

கூர்ந்து கேட்டுக் கொண்ட ஹைதராபாத் நிஜாம், மறுபேச்சு ஏதும் பேசாமல் எழுந்தார்.

தனது கருவூலத்திலிருந்து 'ஐந்து டன்' தங்கத்தை உடனடியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக அளிக்க உத்தரவிட்டார்.

(நிஜாம் வழங்கிய நிதி இன்றைய மதிப்பீட்டின்படி 1600 கோடிகளுக்கும்
மேல்)

பாதுகாப்பு நிதி கேட்டால், தனது சொத்தின் பெரும் பகுதியையே கொடுத்து விட்டாரே இந்த மனிதர் என்ற பேச்சு, மற்ற குறுநில மன்னர்களிடம் பரவி பெரும் சர்ச்சையானது.

இன்றைய தேதிவரை, இந்தியாவில் எந்த ஒரு பிரமுகரோ - ஒரு நிறுவனமோ கொடுத்திராத தொகையை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி, மிகப் பெரிய கொடை வள்ளலாய்த்திகழ்ந்த ஹைதராபாதின் கடைசி நிஜாம், 24-02-1967அன்று காலமானார்.

இது போன்ற வரலாறுகளையும் தியாகங்களையும் மறைத்து விட்டு வரும் தலைமுறையிடையே மனக்கசப்பை உண்டாக்கும் தீவிர முயற்சிகள் நடைபெறுவது வேதனை.

இந்தியா எனும் அழகிய வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாட்டை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்!

நன்றி: தீனதயாளன்-ஜெகதீசன்.



இந்தியாவை நாம் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே தொலைத்துவிட்டோம்.

 கிட்டதட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வளர்ச்சியடையாத இந்தியாவில் இருந்தோம். ஏதேனும் ஒர் நெட்வொர்க்கில் தொடர்புகொண்டால் அழகான ரிங்டோனோ, ஏதேனும் கொடூர பாடலோ ஒலிக்கும்.


ஆனால், இன்று அப்படியெல்லாம் இல்லை. நெட்வொர்க் வேலை செய்து உடனே ரிங்டோன் கிடைத்துவிட்டால் நீங்கள் வரம்பெற்றவர் கிடைத்து அவர் பேசுவது தெளிவாக கிடைத்துவிட்டால் நீங்கள் இன்னும் மேன்மையானவர்.

கூடுதலாக வளர்ச்சியடையாத அந்த இந்தியாவில், இந்தியாவுக்கு என ஒரு தொலைதொடர்பு இருந்தது. ஆனால் இன்று அப்படியொன்று இல்லவேஇல்லை. இருந்த தனியார்ர் நிறுவனங்களில் பல இன்று இல்லை....

அப்பொதெல்லாம் சிவகாசி - மதுரைக்கு செல்ல ரூ.500க்கு பெட்ரோல் போட்டாலே போதுமானது. இந்த வளர்ந்த இந்தியாவில் ரூ.900க்கு போடுமளவு மதுரைக்கான தூரம் அதிகரித்துள்ளது.

சென்னை சென்று வர மொத்த சுங்கவரியே ரூ300 தான். இன்று ரூ.900 வரை சுங்கவரியே எடுத்துக்கொள்கிறது.

முன்பெல்லாம் மருத்துவ படிப்பிற்கான கட்டணத்திற்கு யோசித்தால் இன்று நுழைவுத்தேர்வு பயிற்சி கட்டணத்திற்கே யோசிக்க வேண்டியது உள்ளது.

முன்பெல்லாம் நீதிமன்றங்கள் மக்களுக்கு தேவையான ஒன்றை நீதியாக சொல்லின. இந்த வளர்ந்த இந்தியாவில் ஆட்சியாளார்களுக்கு எது தேவையோ அதுவே நீதியாகின்றன.

முன்பெல்லாம் ஊடகங்கள் கொஞ்சம் சுயமாய் யோசித்தன. இன்றெல்லாம் என்ன தலைப்பு செய்து அதுவும் எப்படி வரவேண்டுமென யாரோ சொல்லி தருகிறார்கள்.

முன்பெல்லாம் சாமியார்கள் வலது பக்கம் மூச்சை வாங்கி இடதுபக்கம் வெளியிடுங்கள் என்றார்கள். இன்றெல்லாம் அவர்கள் முழுநேர அரசியல் புரோக்கர்களாக வாழ்கிறார்கள். அவர்களது சிஷ்யர்கள் மூழு மூடர்களாக வாழ்கிறார்கள்.

முன்பெல்லாம் பாகிஸ்தான் எதிரி, சீனா எதிரி என்றார்கள். இன்று யாரெல்லாம் இவர்களின் முட்டாள்தனங்களை எதிர்கிறார்களோ அவர்கள் எல்லாம் பாகிஸ்தான், சீனாகாரர்கள் என்கிறார்கள்.

அட எரிவாயு மானியமில்லாமல் 300 ரூ வாங்கி கொண்டு இருந்தோம். இன்றெல்லாம் 42ரூ மானியத்தோடு ரூ.750க்கு வந்துவிட்டது.

ஜிஎஸ்டி வந்த ஓராண்டில் பொருட்கள் விலை எல்லாம் வெகுவாக குறைந்து விடும் என்றார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் குறையுமென்ற நம்பிக்கையே இல்லை இந்த வளர்ச்சி இந்தியாவில்.

அப்பொதெல்லாம் புதிய அரசு மருத்துவமனைகள், புதிய கல்வி கட்டிடங்கள், புதிய நிறுவனங்கள் என யோசித்து உருவாக்கினார்கள். இன்றெல்லாம் உருவாக்கியதை எப்படி தனியாருக்கு விக்கலாம் என யோசிக்கிறார்கள்.

ரயில்வேயில் பிளாட்பாரம் ஒரு தனியாருக்கு, ரயில் ஒரு தனியாருக்கு, அதில் நடத்தும் ஹோட்டல் ஒரு தனியாருக்கு, தண்டவாளங்களில் ஒன்று ஒரு தனியார்க்கு இன்னொன்று இன்னொரு தனியார்க்கு என அமர்ந்து யோசித்து இந்திய நாட்டை மக்களை சுரண்டுகின்றனர்

இந்த நவீன டிஜிட்டல் சுவச்சா இந்தியா நம்மளை கொஞ்சம் கொஞ்சமாய் சிதைத்துக்கொண்டிருக்கிறது.

ஏனெனில் நமக்கான இந்தியாவை நாம் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே தொலைத்துவிட்டோம். இந்த மூடர்கூட்டம் தொலையாமல் அதனை மீட்க முடியாது.

சிவகாசியிலிருந்து....பா. சரவணகாந்த்



20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் இளைஞர்கள்.

 20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் இளைஞர்கள்.

சென்ற ஜூலை 18 2020 ல் இம்தியாஸ் அகமத், அப்ரார் அஹமத். முஹம்மது இப்ரார் என்ற மூன்று இளைஞர்கள் வேலைக்கு சென்று திரும்பும்போது காஷ்மீர் அம்ஸிபுரா என்ற இடத்தில் வைத்து ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று அப்போது காரணம் சொல்லப்பட்டது. ஆனால் அரசு தரும் 20 லட்ச ரூபாயை பெறுவதற்காக திட்டமிட்டு மூன்று இளைஞர்களை சுபேதார் குரு ராம், ரவி குமார், அஸ்வின் குமார், யோகேஷ் போன்றோர் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். நால்வரின் மீதும் காஷ்மீர் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நால்வரும் பணத்துக்கு ஆசைப்பட்டு மூன்று இளைஞர்களையும் போலி என்கவுண்டரில் சுட்டுத் தள்ளியுள்ளனர் மாபாவிகள். அடுக்கடுக்கான ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மோடியின் கைப்பாவையாக செயல்படும் நீதித் துறை எந்த மாதிரியான தீர்ப்பை வழங்கும் என்பது நமக்குத் தெரியும். இந்திய சட்டத்தில் இருந்து தப்பி விட்டாலும் படைத்தவன் தரும் தீர்ப்பு மிகக் கடுமையானதாக இருக்கும் இந்த பாவிகளுக்கு!

தகவல் உதவி
economictimes
11-01-2021

SHOPIAN: An Indian Army Captain, who was involved in the alleged fake encounter in Shopian in July last year in which three youths were killed, had hatched a conspiracy along with two civilians with the motive for "grabbing" reward money of Rs 20 lakh and also fired at the victims even before his men could lay a cordon of the area, according to a police charge sheet.

Captain Bhoopinder Singh is currently in the custody of the Army, with informed sources saying he may face Court Martial ..