Followers

Friday, March 18, 2022

சும்மா தகவலுக்காக..!

 சும்மா தகவலுக்காக..!

பாஜக தலைவர் கிருஷ்ண குமார் தன்னுடைய (ஹிஜாப் அணிந்த) இரண்டு மகள்களுடன்..
இடம்: அபுதாபியில் பெரிய பள்ளிவாசலில்...



Thursday, March 17, 2022

சங்கிகள் இலங்கையிடமிருந்தாவது பாடம் கற்கட்டும்.

 இன வெறி மொழி வெறி மத வெறி ஊட்டி வளர்க்கப்பட்ட இலங்கையின் இன்றைய நிலை... விலைவாசி உயர்வுக்காக அரசுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.


இது நமது நாட்டுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை மணி.... சங்கிகள் இலங்கையிடமிருந்தாவது பாடம் கற்கட்டும்.






Tuesday, March 15, 2022

#விகடன் இணைய தளத்திலிருந்து

 

#விகடன் இணைய தளத்திலிருந்து

 

ஆன்மிக பயணமாய் மெக்கா சென்றுள்ளார் அமீர். ''தான் என்கிற கர்வம் குறைத்து நான் என்கிற பெருமை மறந்து ஒரு வழிப்போக்கனாய்..'' என நெகிழ்ந்து தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். அவர் மெக்கா சென்றதை அறிந்த அவரது நண்பர்கள் பலரும் அவரிடம், 'தங்களுக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்' என கூறியிருக்கின்றனர்.

 

இதுபற்றி தனது வாட்ஸ் அப் நிலைத்தகவலில் மெக்காவில் பிரார்த்தனை செய்யும் படத்தை வெளியிட்டு ''நான் ஆன்மீகப் பயணம் செல்கிறேன் என்று சொன்னவுடன், எங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று என்னிடம் சொன்னவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்து நண்பர்களே! இந்த உறவையும், அன்பையும் சமய நல்லிணக்கத்தையும் எந்த அரசியலாலும் பிரிக்க முடியாது'' என நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.




 

Monday, March 14, 2022

ஆட்சி பொறுப்பேற்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே....

 


ஆட்சி பொறுப்பேற்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே யோகி அதித்தியாநாத்தின் ‘இந்து யுவ வாகினி’ என்ற இளைஞர் அமைப்பு இந்து இளைஞர்களை ஒன்று திரட்டி ஒரு இணை இராணுவத்தை உருவாக்கி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்க்கத் தொடங்கியிருந்தது. எங்கெல்லாம் யோகி கூட்டம் நடத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சைப் பேசி முடிக்கிறாரோ அதன் நீட்சியாக அங்கெல்லாம் அப்பகுதியில் உள்ள முஸ்லிம் கடைகளை யுவ வாகினி அமைப்பு அடித்து நொறுக்கும்.

 

இதை ஆதித்தியநாத் தொடர்ந்து செய்த போதும் யுவ வாகினி அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்த அப்போதிருந்த முலாயம் சிங் யாதவின் காவல்துறை, ஒரே ஒரு முறை மட்டுமே யோகி ஆதித்தியாநாத்தை கைது செய்தது.

2007-ம் ஆண்டு கோரக்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் “வருங்காலத்தில் ஒரு இந்து இரத்தம் சிந்தினான் என்றால் அரசாங்கத்தை FIR பதிவு செய்ய வைக்கமாட்டோம். அதற்குப் பதிலாக அவன் 10 உயிர்களைக் கொல்வதை உறுதி செய்வோம்.” என்ற புகழ் மிக்க அந்த வாசகத்தைப் பேசினார். அதன் பின் முஸ்லிம்களின் கடைகள் தரைமட்டமாக்கப்பட்டு, கோடிக்கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டன. 2 பேர் கொல்லப்பட்டனர். மாநிலம் முழுக்க மதக்கலவரம் வெடிக்கும் அபாயத்தில் இருந்ததைத் தடுக்கவே யோகி கைது செய்யப்பட்டார்.

 

அதற்கே 'இந்து மதத்துக்காக வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்ட, குடும்பத்தைத் துறந்த என்னைக் கைது செய்து சித்ரவதை செய்தார்கள்.' என நாடாளுமன்றத்தில் அழுதார் யோகி.(அப்போது அவர் கோரக்பூரின் எம்பி). உபியின் மேல்சாதி இந்துக்களான தாகூர்களை அக்கண்ணீர் அசைத்துத்தான் பார்த்தது. தாகூர்கள் யோகியின் தீவிர ஆதரவாளர்களாகத் தொடக்கம் முதலே இருந்துவருகிறார்கள்.

இந்த வாக்கு வங்கியை இழந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே யோகியின் வெறுப்பு பிரச்சாரத்துக்கு எதிராக எந்த வித தீவிர நடவடிக்கையும் எடுக்காமலிருந்தார் முலாயம். அதற்கு அடுத்த 10 ஆண்டுகளிலேயே யோகி ஆதித்தியநாத் ஆட்சியைப் பிடித்தார்.

 

யோகி ஆட்சியைப் பிடித்ததிலிருந்து தொடர்ந்து முஸ்லிம்களுக்கு உபியில் நடந்த கொடுமைகளை நாமும் செய்திகளில் பார்த்து வந்துள்ளோம். ஆட்சி முழுவதும் இந்துக்கள் மத்தியில், உங்களுக்கு எதிராக ஒரு மிகப் பெரிய சூழ்ச்சியை இந்த முஸ்லிம் சமுதாயம் செய்து வருகிறது என்பது போன்ற தோற்ற மாயையை வலுவாக உருவாக்கிய வண்ணம் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை வன்முறைகளை அடக்குமுறைகளை நியாயப்படுத்திக்கொண்டே இருந்ததுதான் யோகி ஆட்சியின் முக்கிய ‘வெற்றி’.

 

முஸ்லிம்களை இவ்வளவு பாடுபடுத்தியவர் இந்துக்களுக்காவது எதாவது செய்திருக்கிறார் என்றால் அதுவும் கிடையாது. இந்த ஐந்தாண்டுக் கால ஆட்சியில் இந்துக்கள் எந்த பலனையும் அடையவில்லை. குறிப்பிட்டுச் சொல்லும்படியான வளர்ச்சியும் அச்சமுதாயம் காணவில்லை. இருந்தும் யோகி எப்படி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால்? உபி மண்ணை முஸ்லிம்களுக்கு நரகமாக்கியதன் மூலம் மட்டுமே.

 

#UPElections2022

 

Saravana Siddharth பதிவு

 

Sunday, March 13, 2022

பிரியாணி சாப்பிட்டு இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டிஷ்காரர்...!

 

பிரியாணி சாப்பிட்டு இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டிஷ்காரர்...!

 

 

பிரியாணி... பிரியாணி.. பிரியாணி என முகநூலே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒரு பிளேட் பிரியாணி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிற உறுதி செய்யப்படாத வதந்தி பற்றியோ,

நம்முடைய நாட்டின் தேசிய உணவாக எழுச்சி பெற்று, ஸ்விக்கி (ஸோமோட்டோ?) நிறுவனத்தில் கடந்த ஓராண்டில் மிக அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட எழுச்சி உணவாக பிரியாணி நிமிர்ந்து நிற்பதைப் பற்றியோ,

ஒரு அண்டா பிரியாணிக்காக ஊரையே சூறையாடி, கடைகளைக் கொள்ளையடித்து, மாநகரத்தையே பீதியிலும் பதற்றத்திலும் உறைய வைத்த கோவை மாநகர காமெடி வில்லன்களைப் பற்றியோ நான் இங்கு சொல்லப் போவதில்லை.

பிரியாணி சாப்பிட்டதால் சத்திய இஸ்லாத்தை ஏற்ற ஒரு பிரிட்டிஷ்காரரைப் பற்றிச் சொல்லத்தான் இந்தப் பதிவு.

அவருடைய பெயர் டேவிட் ஆன்ஸன் (David Ansen). 1920களில் இந்தியத் துணைக் கண்டத்தையே கிலாஃபத் இயக்கம் உலுக்கிக் கொண்டிருந்த நாள்களில் டெய்லி மிரர் என்கிற நாளிதழின் நிருபராக பம்பாயில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்.

 

அந்த வேளையில் பம்பாயில் கிலாஃபத் இயக்கம் தொடர்பாக முஸ்லிம் வணிகர்களின் எழுச்சி மாநாடு நடக்கின்றது. மாநாட்டுக்காக வந்திருந்த முக்கியப் பிரமுகர்களுக்காக ஹுஸைன் சோட்டானி என்பவர் சிறப்பு விருந்து அளிக்கின்றார். இந்த விருந்தில் டேவிட்டும் கலந்துக்கொள்கின்றார்.

அந்த விருந்தில் தான் தனது வாழ் நாளில் முதன்முறையாக பிரியாணியைச் சுவைக்கிறார், டேவிட் ஆன்ஸன்.

 

மணிமணியான பாஸ்மதி அரிசி, மிதமான சூட்டில் பதமாக வெந்த இறைச்சித் துண்டுகள் ஆகியவற்றுடன் கமகமவென்று மணக்க, மணக்க இருந்த பிரியாணி அந்த ஆங்கிலேயரின் இதயத்தை கொள்ளை கொண்டது.

 

உடனே இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறி விட்டார். மாற்றத்துக்கான காரணம் வினவப்பட்ட போது அந்த ஆங்கிலேயர் சொன்னார்: ‘உடலுக்கு சக்தி அளிக்கின்ற உணவே இத்துணை ருசியாக, நேர்த்தியாக, உயர்வானதாக இருக்கிறது எனில் இவர்களின் ஆன்மாவுக்கு ஊட்டம் அளிக்கின்ற மார்க்கம் எந்தளவுக்கு மகத்தானதாக இருக்கும் என எண்ணிப் பார்த்தேன்’.

டேவிட் ஆன்ஸன் தாவூத் ஆன்ஸனாகி விட்டார். டெய்லி மிரர் நாளிதழிலிருந்து விலகி விட்டார். ‘தி முஸ்லிம் அவுட்லுக்’ (The Muslim Outlook) என்கிற நாளிதழின் பொறுப்பை ஏற்றார். 1941-இல் இறக்கின்ற வரை அதன் முதன்மை ஆசிரியராக இருந்தார்.

 

அல்லாமா இக்பால் இந்த நிகழ்வைப் பதிவு செய்திருக்கின்றார். ஹெச். அப்துர் ரகீப் அவர்கள் எழுதி சென்னை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் ஐஎஃப்டி வெளியிட்டிருக்கின்ற ‘அழைப்பியல் சிந்தனைகள்’ என்கிற நூலில் இது பற்றிய விவரங்கள் இருக்கின்றன.

 

டெய்ல் பீஸ் : இன்றும் தமிழகமெங்கும் அண்டா அண்டாவாக பிரியாணி சமைக்கப்படுகின்றது. பிளேட் பிளேட்களாய் பிரியாணி கோடிக்கணக்கான மக்களால் தின்று தீர்க்கப்படுகின்றது. ஆனால் டேவிட் ஆன்ஸனைப் போன்று யோசிப்பவர்கள் யார் இருக்கின்றார்கள்?

#பிரியாணி

 

-Azeez Luthfullah