Followers

Monday, April 03, 2023

வரலாற்று குறிப்பில் ஒரு பகுதி... - ஔரங்சேப் - Aurangzeb

 

வரலாற்று குறிப்பில் ஒரு பகுதி...

 

சிவனின் இருப்பிடமான கைலாஷ் மானசரோவர் சீனாவின் ஆதிக்கத்தில் உள்ளது..

நம் நாட்டு விடுதலைக்குப் பிறகு, சீனா கைலாஷ் பர்வத் (கைலாசமலை) அல்லது கைலாஷ் மானசரோவர் மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆக்ரமித்ததால் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஐநா அவைக்குச் சென்று, "சீனா எங்கள் பகுதியை வலுக் கட்டாயமாக ஆக்ரமித்துள்ளது, எங்கள் பகுதியை மீண்டும் எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள்" என்றார்.

 

இதற்குச் சீனா தரப்பிடமிருந்து வந்த பதில்: "நாங்கள் இந்தியாவின் பகுதியை ஆக்ரமிக்கவில்லை. எங்கள் நாட்டின் பகுதியை 1680ல் இந்தியாவை ஆண்ட பேரரசர் பிடுங்கியதை நாங்கள் திரும்ப எடுத்துக் கொண்டோம்".

 

இந்த பதில் இன்றும் ஐநா அவையின் அதிகாரபூர்வ ஆவணங்களில் உள்ளது.

சீனா எந்த இந்தியப் பேரரசரின் பெயரை குறிப்பிட்டது தெரியுமா?

"ஔரங்சேப் - Aurangzeb".

 

உண்மையில் ஔரங்சேப் காலத்திலும் சீனாதான் இந்தியப் பகுதியை ஆக்ரமித்தது. இதைக் குறித்து பேரரசர் ஔரங்சேப், அப்போதைய சீன நாட்டின் சிங் வம்ச (Ching dynasty) மன்னர் முதலாம் ஷுன்ஜிக்கு (Shunji I) எழுதிய கடிதத்தில், "கைலாஷ் மானசரோவர் இந்தியாவின் ஒரு பகுதி. அது மட்டுமின்றி, அது எங்கள் இந்து சகோதரர்களுக்கு புனிதமான இடம். எனவே, அந்த இடத்தை விட்டுவிலகுங்கள்" என எழுதினார்.

 

கடிதம் எழுதி ஒன்றரை மாதமாகியும் சீன தரப்பிடமிருந்து பதில் இல்லாததால் குமாவோன் பகுதி அரசர் பாஜ் பஹதூர் சந்த் அவர்களின் படையுடன் இணைந்து குமாவோன் வழியாக மலையேறிச் சென்று சீனாவைத் தாக்கி, கைலாஷ் மானசரோவர் பகுதியை இந்தியாவுடன் மீண்டும் இணைத்தார்.

 

எந்த பேரரசர் ஔரங்சேப் அவர்களை தீவிர இஸ்லாமிய அரசர் என்றும், இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் பரப்புரை செய்யப்படுகிறதோ அதே பேரரசர்தான். அவர்தான் இந்தியாவின் முதல் உண்மையான 'சர்ஜிகல் ஸ்டிரைக்' நடத்தியவர்.

 

வரலாற்றின் இந்த பக்கங்கள், இந்தியா விடுதலை அடைந்த காலத்து ஐநா அவையின் ஆவணங்களில் உள்ளன. அது மட்டுமின்றி அந்த ஆவணங்கள் நாடாளுமன்றத்திலும் பாதுகாப்பாக உள்ளன.

 

அந்த வரலாற்றுச் சம்பவங்களை நீங்கள் கீழ்க்கண்ட புத்தகங்களிலும் காணலாம்..

ஹிஸ்டரி ஆஃப் உத்தராஞ்சல் - உத்தராஞ்சல் வரலாறு.

 

ஆசிரியர்: .சி. ஹாண்டா

மற்றும்

டிராஜிடி ஆஃப் திபத் - திபத்தின் துயரம் (அல்லது சோகமுடிவு).

ஆசிரியர்: மன்மோஹன் ஷர்மா.

 

பதிவு: Meenakshi Sundaram

நன்றி: Asalamone Syed




 

Sunday, April 02, 2023

தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை

 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.
இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.
இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.
இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.
அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்
அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்.. நீங்களும் புண்ணியம் சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.
இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.
இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா...!
Thanks to
கிருஷ்



Saturday, April 01, 2023

வட மாநில இளைஞர்களை பார்த்து இந்தியாவே

 பீஹார் - நாலாந்தா மாவட்டம்


31-03-2023


உலகப் புகழ் பெற்ற ஷோ ரூம். ராம நவமி அன்று இங்கு இரவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த ராம பக்தர்கள் அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்களை திருடிச் செல்கின்றனர். இவர்களின் ராம பக்தி எந்த லட்சணத்தில் உள்ளது பார்த்தீர்களா? 


வட மாநில இளைஞர்களை பார்த்து இந்தியாவே பெருமைப்படுவதாக முன்பு மோடி  கூறியிருந்தார். 😅😅😅😅






மோடிக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்

 'நான் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். மோடி எனக்கு பிரச்னை தராமல் இருந்திருந்தால் நான் மலேசியாவுக்கு புலம் பெயர்ந்திருக்க மாட்டேன். நபிகளார் எவ்வாறு ஹிஜ்ரத் செய்தார்களோ அவ்வாறு நபிகளை பின்பற்றி ஹிஜரத் செய்தேன். அறியாமல் தவறான வழியில் இருக்கும் மோடிக்கு நேர்வழி காட்ட நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.'


- டாக்டர் ஜாகிர் நாயக்




முதல் முறையாக இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பு(இப்தார்)நிகழ்ச்சி

 இங்கிலாந்தில் உள்ள விக்டோரியா -ஆல்பர்ட் மியூசியத்தில் முதல் முறையாக இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பு(இப்தார்)நிகழ்ச்சி நடத்தி உள்ளது அந்த நாட்டின் அரசு ...