Followers

Sunday, April 14, 2013

யாதும் ஊரே யாவரும் கேளீர்!

யாதும் ஊரே யாவரும் கேளீர்!

//Anonymous said...

"இந்தியனாகவும் இருப்பதற்கு மிகவும் மகிழ்ந்து போனேன். என்னை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கும் இறைவனுக்கு நன்றி சொன்னேன்." பரவாயில்லையே//

இந்த அனானி சகோதரருக்கு ஒரு முஸ்லிம் தமிழகத்தை நேசிப்பதும், தமிழ் மொழியை நேசிப்பதும், பாரத நாட்டை நேசிப்பதும் ஆச்சரியமாக தெரிகிறது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அந்த அளவு ஊடகங்கள் நமது மக்களை மூளை சலவை செய்து வைத்துள்ளன.


என்னைப் பொருத்த வரை இனம் மொழி கடந்து அனைத்து மக்களையும் நேசிக்கக் கூடியவன். அவன் ஆரியனோ, திராவிடனோ, அராபியனோ, ஐரோப்பியனோ, ஆப்ரிக்கனோ யாராக இருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவன் ஆதமுடைய மகன். என்னுடைய சகோதரன். அதே போல் இந்த உலகம் அதிலும் இந்த பூமிப் பந்தை உண்டாக்கியது இறைவன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளவன். இதனால் உலக நாடுகள் அனைத்தையுமே நான் நேசிக்கிறேன். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா என்று எந்த கண்டத்து நாடுகளையும் நான் விரோதமாக பார்க்கவில்லை. ஏனெனில் அத்தனை கண்டங்களையும் படைத்து பரிபாலிப்பது என்னைப் படைத்த இறைவனே!

அதே போல் உலக மொழிகள் அனைத்தையுமே நான் ஒரே தரத்திலேயே வைத்து பார்க்கிறேன். ஏனெனில் இந்த உலக மொழிகள் அனைத்தையும் மனிதர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்காக இறைவனே மனிதனுக்கு அருளினான் என்று குர்ஆன் கூறுவதால் உலக மொழிகள் அனைத்துமே எனது சகோதர மொழிகளே! தேவ மொழிகள் என்று தனித்து பிரிக்கச் சொல்லி இஸ்லாமும் எங்கும் சொல்லவில்லை. எனவே எனக்கு மொழி வெறியும் கிடையாது.

அதே நேரம் நான் பிறந்த மண்ணான இந்திய தேசத்தையும், எனது தாய் மொழியான தமிழையும் மற்ற நாட்டையும் மொழிகளையும் விட சற்றே அதிகமாக நேசிக்கிறேன். காரணம் பிறந்த மண்ணை நேசிப்பதும், தாய் மொழியை நேசிப்பதும் நமது ரத்தத்திலேயே காலகாலமாக ஊறி விட்டதனால் இந்த நேசிப்பு வருகிறது. நான பிறந்து வளர்ந்து ஆளாகி எனக்கென்று ஒரு அடையாளத்தை தருவதனால் நான் பிறந்த மண்ணை நேசிப்பது இயல்பாகவே வந்து விடக் கூடிய ஒன்று.

அதே நேரம் இந்த நேசம், பாசம் மற்ற நாடுகளையும், மொழிகளையும், இனங்களையும் வெறுக்கும் அளவுக்கு சென்று விடக் கூடாது என்பதில் நான் மிகக் கவனமாக இருக்கிறேன். இந்த இடத்தில்தான் பலரும் தவறு செய்து விடுகின்றோம். ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டுமானால் முஸ்லிம் அல்லாதவர்களை ஒதுக்கி வாழ வேண்டும்: அல்லது ஒரு இந்துவாக வாழ வேண்டுமானால் இந்து மதத்தின் மேல் உள்ள நம்பிக்கை இல்லாதவர்களோடு அந்நியனாக பழக வேண்டும் என்று ஒரு மாயை தவறாக உருவாக்கப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளுக்கு எப்படியோ.....பல மத இனங்கள் இணைந்து வாழும் நமது பாரத தேசத்துக்கு இந்த கொள்கையானது மிக ஆபத்தானது.

இஸ்லாம் இந்தியாவுக்கு சொந்தமான மதமல்ல...இந்து மதமே இந்தியாவுக்கு சொந்தமானது என்ற கருத்து பரவலாக விதைக்கப்படுகிறது. சொல்லப் போனால் நமது இந்திய நாட்டுக்கென்று குறிப்பிட்டு சொல்லக் கூடிய எந்த மதமோ மார்க்கமோ இருந்திருக்க வில்லை. வரலாறு பதியப்பட்ட காலம் தொட்டு கடந்த 2000, 3000 வருடங்களாக நமது நாட்டின் வரலாறுகளை தோண்டிப் பார்த்தோமானால் எங்குமே அமைதி நிலவியதாக சரித்திரங்களை பார்க்க முடியவில்லை. யாருக்கெல்லாம் படை பலமும், ஆள் பலமும் இருந்ததோ அவர்கள் அனைவரும் அந்தந்த காலங்களில் நமது நாட்டை ஆண்டிருக்கின்றனர். எனவே ஒரு குழுவோ, ஒரு இனமோ, ஒரு மதமோ அல்லது ஒரு மார்க்கமோ நமது பாரத நாட்டுக்கு உரிமை கொண்டாட முடியாது.

நமது நாட்டில் பல மார்க்கங்களாக இருந்த பல சாதிகளை ஒன்றாக்கி இன்று இந்து மதம் என்ற பொது மதத்தை காட்டுகின்றனர் சில இந்துத்வாவாதிகள். 'நாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இதை இந்து ராஷ்டிரமாக அறிவிப்போம்' என்று அறிக்கைகளும் விடுகின்றனர். இந்த இந்து மதத்துக்கு பூரண உரிமை கொண்டாடுபவர்கள்..நம் தேசத்திலே இரண்டு அல்லது மூன்று சதவீதமே இருக்கும் பார்ப்பணர்கள். இவர்களில் தீவிர எண்ணம் கொண்ட அத்வானி, மோடி, மோகன் பகவத், போன்ற பலர் இஸ்லாம் இந்த மண்ணுக்கு அந்நியமானது. எனவே இந்த மண்ணின் சொந்த தயாரிப்பான இந்து மதத்தையே நாம் பின்பற்ற வேண்டும் என்று தினமும் எங்காவது ஒரு இடத்தில் சொல்லி வருகின்றனர். இந்து மதம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பது எந்த அளவு ஒரு இட்டுக்கட்டப்பட்ட வாதம் என்பதும், அத்வானி போன்ற ஆரியர்களின் பூர்வீகம் எந்த நாடு அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதன் வரலாற்று ஆய்வுகளை கீழே தருகிறேன். படித்து தெளிவு பெறுவோம்.

-----------------------------------------------------------------


மாஸ்கோ: ரஷ்யாவில் பனி படர்ந்த தெற்கு சைபீரிய பகுதியில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஜாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் இந்த நகரம் ஆரிய இனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவில் மேற்கத்திய நாகரீகப் பரவலின் ஆரம்ப காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என்று தொல்லியல் அராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய காலகட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம். இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பெத்தனி ஹூக்ஸ் மற்றும் அவரது குழுவினர் தான் இந்த நகரை கண்டுபிடித்துள்ளனர்.



பிபிசி தொலைக்காட்சியில் 'Tracking The Aryans' என்ற தொடரை வழங்கி வரும் பெத்தனி இது குறித்துக் கூறுகையில், இந்த நாகரீகம் கிரேக்க நாகரீகத்துக்கு போட்டியானதாக இருந்திருக்கலாம், இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் என்றார். இந்தப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் குடியேற்றம் இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரியவந்தது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு இந்தப் பகுதியில் தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பெத்தனியும் அவரது குழுவினரும் இங்கு ஆராய்ச்சிகளில் இறங்கினர். அப்போது கிடைத்த சில தடயங்களின்படி இங்கு ஆரிய நகரம் இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இந்த பனிப் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியை அவரது குழு மேற்கொண்டு வருகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நகரில் கிடைத்த பொருட்களில் மேல் நோக்கு வளைவான அமைப்பு கூடிய 20 வீடுகள், மேக்-அப் சாதனங்கள், பாண்டங்கள், ஸ்வஸ்திக் புதைக்கப்பட்ட குதிரைகள், ரதத்தின் பாகங்கள், சின்னங்கள் (Swastika symbol) ஆகியவை அடங்கும்.

ஆரிய நாகரீகத்தின் அடையாளமான சுவஸ்திக்கை தான் 1930களில் ஹிட்லர் தனது நாஜி அமைப்பின் சின்னமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே சிறந்த இனம் இது தான் என்று கூறிக் கொண்டு பிற இனத்தினரை அழிக்கும் வேலையை, யூதர்களை அழிப்பதில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பல ஐரோப்பிய மொழிகளின் மூலமாக ஆரிய மொழி் இருந்திருக்கலாம் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நகர கண்டுபிடிப்பு குறித்து பெத்தனி கூறுகையில், பண்டைய பல இந்திய வேதங்களிலும் குதிரைகளைப் பலி கொடுப்பது குறித்தும், இறந்த தலைவனின் உடலுடன் அவனது குதிரையும் கொன்று புதைக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. இங்கு கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்றார். இவர் லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை 'விசிட்டிங்' பேராசிரியையாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://timesofindia.indiatimes.com/world/europe/4000-year-old-Aryan-city-discovered-in-Russia/articleshow/6683681.cms?intenttarget=no

http://www.thehindu.com/news/international/4000yearold-aryan-city-discovered-in-russia/article812961.ece

http://www.dailymail.co.uk/sciencetech/article-1317362/Europe-begins-Cities-built-swastika-painting-Aryans-remote-Russian-plains.html

http://tamil.oneindia.in/art-culture/essays/2010/4-000-year-old-aryan-city-discovere-russia.html

Saturday, April 13, 2013

ஸ்வீடனில் பாங்கு சொல்ல அனுமதி கிடைத்துள்ளது!

ஸ்வீடனில் பாங்கு சொல்ல அனுமதி கிடைத்துள்ளது!



நாத்திகர்களால் ஆத்திகர்களின் பல வழிபாட்டு தலங்கள் முன்பு ஆக்கிரமிக்கப்பட்டன. அவை நூலகங்களாகவும் அரசு அலுவலகங்களாகவும் மாற்றப்பட்டன. நாத்திகத்தில் மன அமைதி கிடைக்காத பலர் இன்று ஆத்திகத்தின் கதவை தட்ட ஆரம்பித்துள்ளனர். ஸ்வீடனில் உள்ள ஃபித்ஜா மசூதியில் இனி வரும் காலங்களில் வெள்ளிக் கிழமைகளில் ஒலி பெருக்கி மூலம் அதான்(தொழுகைக்கான அழைப்பு) கொடுத்துக் கொள்ளலாம் என்ற அனுமதி கிடைத்துள்ளது. இனி பள்ளியின் மினாராக்களில் பாங்கின் அழைப்பொலி அந்த அழகிய நகரை அலங்கரிக்கும்.

'நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். பாங்கு சொல்ல அனுமதி கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்' என்கிறார் போத்கிர்கா முனிசிபாலிடியின் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் இஸ்மாயில். மதியம் 12 லிருந்து ஒரு மணிக்குள் ஒலி பெருக்கி மூலம் தொழுகைக்கான அழைப்பைக் கொடுத்துக் கொள்ளலாம் என்று காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. மெல்ல இந்த அனுமதியானது முன்பு நாத்திகர்களால் பூட்டப்பட்ட பல மசூதிகளுக்கும் பரவும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் அந்த அளவு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் ஸ்பெயின் மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி: சவுதி கெஜட்.

-----------------------------------------------------

பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் வளர்ந்து வரும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாத்தை இரு கரம் நீட்டி வரவேற்கின்றன. ஆனால் நமது நாட்டில் வழிபாடு நடத்தி வந்த பள்ளியில் இரவோடு இரவாக ராமர் சிலைகளை வைத்து அதற்கு ஆயிரம் பொய்களை சொல்லி நாட்டில் ரத்தக் களரியை உண்டு பண்ணி ஒரு பள்ளி வாசலையே தரை மட்டமாக்கியுள்ளது ஒரு கும்பல். சட்டமும் குற்றவாளிகளை தண்டிக்காமல் வேடிக்கை பார்ததுக் கொண்டுள்ளது.




இதுதான் நம் பாரத தேசத்தின் மத சார்பற்ற கொள்கை!

--------------------------------------------------------



கூட்டுக் குடும்ப வாழ்க்கை

சென்னையிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விமானம் ரோம் நகர விமான தளத்தில் தரை இறங்கியது, அதில் எனக்கு மட்டும் அங்கு ஒரு நாள் தங்குவதற்கும் ரோம் நகரத்திற்குள் செல்லவும் தற்கால அனுமதித் தாள் (Temporary visa)கொடுத்ததோடு, ரோம் நகர விமான தளத்தில் வேலை செய்யும் ஒரு அதிகாரி நான் தங்குவதற்கு வசதி செய்துக் கொடுக்க தனது காரில் அழைத்துக் கொண்டு போனார்.

நான் அவருடன் பேசிக் கொண்டிருப்பதனை அவர் விரும்பியதால் 'விடுதிக்குப் பிறகு போகலாம் அதற்குள் ரோம் நகரத்தினை உங்களுக்கு காட்ட விரும்புகின்றேன்' எனக் கூறி தொடர்ந்தார் .அப்பொழுது அவர் சொன்ன வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது . நான் இந்தியா (பம்பாய் ,சென்னை) ,மலேசியா,சிலோன் மற்றும் பல நாடுகளில் எனது பணியை செய்துள்ளேன் ஆனால் சென்னை,மலேசியா மற்றும் சிலோன் நாடுகளில் பணி செய்த காலங்கள் எனக்கு மிகவும் மன நிறைவைத் தந்தது அதற்கு முக்கிய காரணம் அங்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக உள்ளது அதிலும் முஸ்லிம்கள் மார்க்கத்தை பேணுவதில் மிகவும் அக்கறையுடன் இருப்பதுடன் குடும்ப உறவையும் சிறப்பாக அமைத்துக் கொள்கின்றார்கள்' என பெருமிதத்துடன் சொல்லி விட்டு மேலும் தொடர்ந்தார்.

'ஆனால் அந்த குடும்ப வாழ்க்கையை அதிலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை வளர்ந்த மேலை நாடுகளில் பார்க்க முடியாது.அந்த நாடுகளில் ஒரு சில ஆண்டுகள் நாங்கள் வாழ்ந்தபோது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே ஒரு பிடித்தம் உண்டாகியது' என்று மகிழ்வோடு சொன்னார். 'இதனை எனது மனைவி பலரிடம் சொல்லி பெருமையடைகின்றாள். அத்துடன் தனது வாரிசுகளுக்கு அந்த நாட்டிலிருந்துதான் திருமண தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புகின்றாள்' என அவர் சொன்னபோது நான் ஒரு இஸ்லாமியனாகவும்,தமிழனாகவும் மற்றும் இந்தியனாகவும் இருப்பதற்கு மிகவும் மகிழ்ந்து போனேன். என்னை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கும் இறைவனுக்கு நன்றி சொன்னேன். இந்த குடும்ப உறவின் நேசம் தொடர நாம் முயல்வோம்.

http://www.facebook.com/nidurali

Thursday, April 11, 2013

போலியோ ஒழிப்புக்கு 30 மில்லியன் டாலர்!

போலியோ ஒழிப்புக்கு 30 மில்லியன் டாலர்!



'வலீத் பின் தலால் அறக்கட்டளையின்' தலைவர் இளவரசர் வலீத் பின் தலால் உலக மக்களிடமிருந்து போலியோவை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட தனது பங்காக 30 மில்லியன் டாலரை நன்கொடையாக தர முன் வந்துள்ளார். இந்த நல்ல முயற்சியை மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸோடு இணைந்து செயல்படுத்த இளவரசர் முன் வந்துள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் இளவரசர் வலீத் பின் தலாலும், பில்கேட்ஸூம் கையெழுத்திட்டனர்.

'முன்னேற்றத்தைக் கொண்டாடுவோம்: உயிர்களைக் காப்போம்' என்ற உறுதி மொழியோடு இந்த அமைப்பானது வரும் ஏப்ரல் 24 ந்தேதி அபுதாபியில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. ஐநா செயலாளர் பான்கிமூனும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்கிறார். இந்த கருத்தரங்கில் உலக தலைவர்கள், நன்கொடையாளர்கள் என்று பலரும் கலந்து கொள்கின்றனர். 2013 லிருந்து 2018 க்குள் உலகில் போலியோவை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது இம்மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று.

நம் நாட்டு அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான டாலர்கள் சுவிஸ் வங்கியில் எவருக்கும் பயனளிக்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறது. கொள்ளையடித்த அந்த பணங்களை எல்லாம் இது போன்ற நல்ல காரியத்துக்கு பயன்படுத்தினால் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாவது கிடைக்கும். பெரிதாக ஒன்றும் செய்து விட வேண்டாம. இந்திய மக்கள் அனைவருக்கும் கழிவறை இல்லாத வீடுகளுக்கு இலவசமாக கழிவறை கட்டிக் கொடுத்தாலே போதுமானது. என்னங்க....நான் சொல்றது சரிதானே!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் கடுமையாகப் பரவும் ஒரு நோயாகவே போலியோ இருக்கிறது. நம் நாட்டிலும் சுகாதார குறைபாடுகளினால் இந்நோய் பரவும் அபாயம் அதிகமாகவே உள்ளது. அத்துடன் போலியோ ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட சில நாடுகளிலும் அது மீண்டும் பரவியுள்ளது.போர் காரணமாகவும், தொற்று நோய் தடுப்பு மருந்துகள் மீது போதுமான நம்பிக்கை இல்லாமை காரணமாகவும் சில நாடுகளில் மிகச் சிறிய அளவிலான குழந்தைகளுக்கு மாத்திரமே போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.போலியோவை ஒழிப்பதற்கான உலக முயற்சி தோல்வியடையுமானால், அந்த நோய் மீண்டும் உலக அளவில் பரவும் நிலை உருவாகும்.எனவே போலியோ பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் அனைத்து நாடுகளும், தமது நாட்டு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



போலியோ பாதிப்புக்குள்ளான சிறுவர்கள்: சிறுமியர்:கழிவறை கட்டுவதை விட செல் போன்களை வாங்குவதில்தான் நமது மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்று நமது மத்திய மந்திரியே வருத்தப்படும் அளவுக்குத்தான் நமது நாட்டின் நிலைமை இருக்கிறது. செல் போன்களை பிறகு வாங்கிக் கொள்வோம்: முதலில் ஒவ்வொரு வீட்டுக்கும் சுகாதாரமான கழிவறை வசதிகளை ஏற்படுத்தி விட்டு பிறகு வித விதமான செல்போன்களால் நமது பேச்சுக்களை தொடர்வோம். :-)
-------------------------------------------

போலியோ (இளம்பிள்ளை வாதம்)

போலியோ நோய்தொற்று முழு உடலையும் பாதிக்கக்கூடியது. ஆனாலும் இந்நோய் எப்போதும் நரம்புகள் மற்றும் தசைகளை பாதிக்கிறது.

காரணங்கள்

வைரஸ் நோய் தொற்றினால் போலியோ ஏற்படுகிறது மனிதனின் மலம் மற்றும் கழிவுகளில் போலியோ வைரஸ் காணப்படும். இவ்வைரஸினால் மாசுபட்ட உணவுகளை உட்கொள்ளும் போது போலியோ பரவுகிறது. மனித மலம் கழிவுகள் மூலம் மாசுபட்ட குடிதண்ணீர் அல்லது கிணறு/குளங்கள்/ஏரிகள் போன்றவற்றில் நீரில் நீந்தும் போதோ, குளிக்கும் போதோ அல்லது குடிக்கும் போதோ போலியோ வளர்ந்த பிள்ளைகள் மற்றும் வாலிபர்களைகளிடம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான நேரங்களில், இவ்வகை வைரஸ் மலத்திலிருந்து வாய் வழியாகவே ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது.

இவ்வகை வைரஸ் மூக்கு அல்லது வாய் வழியாக நுழைந்து, பின்னர் குடல் பகுதியை சென்றடைகிறது. குடல் செல்களில் எண்ணிக்கையில் பெருக்கம் அடைகின்றது. பின்னர் இவ்வைரஸ்கள் மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகிறது (சில வாரங்களில்). இவ்வாறு வாழ்க்கை சுழற்சியை புதுப்பித்து, முழு சமுதாயத்திற்கும் ஆபத்தினை விளைவிக்கிறது.

டாக்டர் பெஞ்சமின் சாண்ட்லர் என்பவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். இவர் போலியோ நோய் பற்றி பல ஆய்வுகள் செய்தார். 1951 இல் இவர் தன்னுடைய ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். அதில் போலியோ நோயை தூண்டுவதற்கு கீழ்க்காணும் மூன்று முக்கிய காரணங்களை கூறுகிறார்.

1. தட்ப வெப்பம்: வெயில் காலத்தில்தான் போலியோ நோய் பரவுகிறது. அதிக அளவில் சர்க்கரை உட்கொள்வதாலும் போலியோ தடுப்பு மருந்து கொடுத்த பின்பும் போலியோ நோய் அதிகம் பரவுகிறது. வெயில்காலத்தில் நீச்சல் குளத்தில் நீர் குளிர்ந்திருப்பதும் குழந்தைகளை குளிர்ந்த புல் தரையில் அமர வைப்பதும் கூட போலியோ நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கான காரணங்களாகும்.

2. உடற்பயிற்சி: அளவான அல்லது தீவிரமான உடற்பயிற்சி.

3. தாகம் : குளிர்பானங்கள் பருகுவது, ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்பு பானங்கள் பருகுவது, சர்க்கரை அளவு குறைவதால் உடல் திசுக்களில் ஏற்படும் மாற்றம்.

சர்க்கரையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்ட நாடுகளில் எல்லாம் போலியோ நோய் பரவி வந்தபோது சர்க்கரையை மிகவும் குறைந்த அளவில் சேர்த்துக்கொண்ட நாடுகளில் இந்நோய்த் தொற்று சுத்தமாக இல்லாதிருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு உணவில் சர்க்கரையை அதிகமாகச் சேர்த்துக் கொண்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு நோய்த்தொற்றும் அதிகமாக இருந்தது என்கிறார் டாக்டர் சாண்ட்லர்.

அமெரிக்காவில் போலியோ நோய்த்தடுப்பு நடவடிக்கையாக போலியோ தடுப்பு மருந்து பரவலாக கொடுக்கப்பட்டதன் விளைவாக போலியோ நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உயர்ந்தது. 1954இல் 273 ஆக இருந்த எண்ணிக்கை தடுப்பு மருந்து கொடுத்ததன் விளைவாக 1955இல் 2027 ஆக உயர்ந்தது. அதாவது 642 சதவீதம் உயர்ந்தது. தி பெடரல் சென்டர்பார் டிஸ்ஸீஸ் கண்ட்ரோல் என்னும் அமைப்பு அமெரிக்காவில் இன்று போலியோ நோய்த்தொற்று இருப்பதற்கான முக்கிய காரணம் உயிருள்ள போலியோ நோய்க்கிருமிகளை நோய்த் தடுப்பு மருந்தாக பயன்படுத்தியதுதான் என்று கூறுகிறது. 1973ஆம் ஆண்டிற்கும் 1983ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் போலியோவினால் பாதிக்கப்பட்டவர்களில் 87 சதவீதம் பேர்கள் போலியோ தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்கள். மிகவும் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு போலியோவினால் தாக்கப்பட்ட அனைவருமே (இரண்டு பேர்களைத் தவிர) தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்கள்தான். (ஆதாரம் : ஹோமியோபதி லின்க்ஸ் -பிப்ரவரி 2003).

மேற்கண்ட ஆதாரபூர்வமான விஷயங்களை கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும்.

நம் நாட்டில் போலியோ நோய்த்தடுப்பு நடவடிக்கையாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஒரே நாளில் நாடு முழுவதும் கொடுக்கப்பட்டு வருகிறது. போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதால் போலியோ நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை விரைவில் கண்டறியவேண்டும். வாய்ப்புள்ளது என்பது உறுதி செய்யப்பட்டால் போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் “உணவில் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் வைட்டமின் ‘சி’ மிகுந்த உணவை தினமும் தவறாது எடுத்துக் கொள்ளவேண்டும்” என்பதையும் வானொலி மற்றும் தொலைக்காட்சியின் வாயிலாக பிரச்சாரம் செய்யவேண்டும்.

- நன்றி : அப்ரோச் ஹோமியோ நண்பன் - அக்-2003


போலியோ பரவ மேலும் சில காரணங்கள்:

சிறுபிள்ளைகளுக்கு போலியோ ஏற்படும் அதிக ஆபத்து உள்ளது. கழிவறைகளில் மலம் கழிக்கும் பழக்கம் கற்றறியாத பிள்ளைகளை குறிப்பாக பாதிக்கிறது. போலியோ தடுப்பு ஊசி எடுத்துக் கொள்ளாத பெரியவர்கள். இந்நோய் கண்ட நபரின் மலத்தின் மேல் மொய்க்கும் ஈக்கள் உண்ணும் உணவின் மேல் உட்கார்ந்து உணவை மாசுபடச் செய்யும் சூழல் உள்ள பகுதிகள். இந்நோய்க் கிருமியுள்ள குடிதண்ணீர் (கழிவு நீர் தேங்கியுள்ள பகுதிக்கு அருகாமையில்). எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைந்து காணப்படும் போது. சுகாதாரமாக நமது சுற்றுப்புறத்தை வைத்துக் கொண்டாலே ஓரளவு இந்நோயைக் கட்டுப்படுத்தி விடலாம.

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'



Wednesday, April 10, 2013

மோடியின் ராஜ்ஜியத்திலே நந்தலாலா!

மோடியின் ராஜ்ஜியத்திலே நந்தலாலா!

வாடிய தலித்களை பார் நந்தலாலா!

தண்ணீருக்கும் குடம் ஏந்தி நந்தலாலா!

பல மைல்கள் நடக்கின்றனர் நந்தலாலா!

பொய்களை பேசி பொய்களாலாலேயே தன்னை வார்த்தெடுத்து வரும் நரேந்திர மோடி குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக கதை அளக்கிறார். அது பொய் என்று தெரிந்தும் தின மலரும் தினமணியும் போட்டி போட்டி போட்டுக் கொண்டு மோடிக்கு காவடி தூக்குகின்றன. தினமலர் வாசகர் பக்கத்தில் மோடிக்கு பெருத்த ஆதரவு இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்குகின்றனர். ஆனால் உண்மை நிலையோ நேர் மாறாக உள்ளது. மாலை மலரிலும் ஹிந்துவிலும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் வந்த செய்திகளைப் பார்ப்போம்.

ராஜ்கோட், ஏப்ரல் 10:-

குஜராத் மாநிலத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள தலித் இன மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக அன்றாடம் அல்லல்பட்டு வருகின்றனர். மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி உயர் இன மக்களின் பிரதிநிதியாக மட்டுமே செயல்படுகின்றார் என்பது இவர்களின் ஆதங்கமாக இருக்கின்றது.

இங்குள்ள சௌராஷ்டிரா மாவட்டத்தில் உள்ள சித்தாலியா, கட்வாவாடி, கணேசரா, பரிவாலா, ஜீவபூர், நாணி லக்காவதி, கொதி, பரவாலா மற்றும் தேவதாரி ஆகிய பத்து கிராமங்கள் வறட்சியினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களை ஊருக்குப் பொதுவான குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் பிடிக்க மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீறி அருகே சென்றால் தலித் மக்களை சாதியைச் சொல்லி விமர்சிக்கிறார்கள். எனவே கொதிக்கும் வெயிலில் அப்பெண்கள் 3 கிமீட்டருக்கும் மேல் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

இந்தக் கஷ்டத்தையும், அவமதிப்பையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இம்மக்கள் அம்மாவட்ட இணை ஆணையரிடம் சென்று முறையிட்டனர். ஆனால், அதற்காக அவர்கள் மிரட்டப்பட்டனர். கீழ்சாதியில் பிறந்ததற்காக நாங்கள் தாகத்துடன் இருக்கமுடியுமா? என்று தலித் பெண்ணான ஜெயா மக்வானா கோபத்துடன் கூறுகிறார்.

ஆணையரிடம் முறையிட்ட பின்னர், நர்மதை நதி நீர் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை இவர்களின் கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. ஆனால், அளவு குறைவாக உள்ளதால் இதுவும் இவர்களுக்கு போதுமானதாக இல்லை.

http://www.maalaimalar.com/2013/04/10150331/Dalit-peoples-affect-for-drink.html

--------------------------------------------------------------

CHITALIYA (RAJKOT): In the villages of Jasdan taluka in drought-hit Saurashtra, dalit women prefer to remain silent. That's for the fear of the upper castes in a state whose chief minister Narendra Modi is busy trying to conjure up an eclectic image to subserve his perceived prime ministerial ambitions for 2014 polls.

"Those people (upper castes) will abuse us again if we speak," mumbled one of the women, only to be given a warning look by the others.

The water scarcity in Saurashtra is due to deficient rainfall, but the calamity is man-made for the dalits. Members of the community claim they are not allowed access to Narmada water, the only source of drinking water, by upper caste members. Ironically, upper caste farmers have their own borewells and don't need Narmada water as much.

http://timesofindia.indiatimes.com/city/rajkot/In-Modis-Gujarat-no-Narmada-water-for-dalits/articleshow/19470304.cms



“Would you like to compromise?” That’s the first question a judge asks when a caste atrocity case comes up for trial, says Manjula Pradeep, of the Gujarat-based non governmental organisation Navsarjan. A study done by Navsarjan on atrocity data obtained through RTI for Maharashtra, Gujarat and Tamil Nadu found that between December 2004 and November 2009, “there were convictions in only 0.79 per cent of cases (three cases) of violence by non-Dalits across the three states. In Gujarat there were no convictions at all.”

The worst sufferers of a systemic failure to probe caste crimes are Dalit women. They are known to face double discrimination; they become the target for upper caste men outside homes and gender-based violence at home.

http://www.thehindu.com/news/national/dalit-women-at-the-receiving-end/article3934877.ece



மோடி மத்தியிலும் அமர்ந்தால் வர்ணாசிரம கோட்பாடு மீண்டும் உயிர் பெறும் என்பதற்கு இவை எல்லாம் சில எடுத்துக் காட்டுக்கள்.

வாழ்க பாரதம்!

Tuesday, April 09, 2013

கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும்.....



கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும்.....

கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே! என்று நமது பழமொழி நமக்கு அறிவுறுத்துகிறது. இதனை நாம் உணர்ந்து கொண்டோமோ இல்லையோ சவுதி அரேபிய மக்கள் தங்களின் கல்வியறிவை வளர்த்துக் கொள்ள வயது வித்தியாசம் பாராமல் கல்விச் சாலையை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர்.

முன்பு படிப்பில் அதிகம் ஆர்வம் இல்லாமலேயே இருந்தனர். அந்த அளவு கணக்கின்றி செல்வம் குவிந்திருந்ததும் ஒரு காரணம். தற்போது தேவையற்ற பல உதவிகளை அரசு நிறுத்தி விட்டபடியால் வேலை செய்யும் கட்டாயத்துக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எந்த வேலைக்கு சென்றாலும் குறைந்தபட்ச கல்வி அறிவாவது தேவைப்படுகிறது. எழுத்தறிவின்மையைப் போக்க சவுதி அரசும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆண்களை விட பெண்களே பள்ளிக்குச் செல்வதில் முன்னணியில் உள்ளனர். முதியோர் கல்வியின் இயக்குனர் டாக்டர் யூசுஃப் அல் ஆரிஃப் தனது அறிக்கையில் "அரசு மிகவும் எங்களுக்கு உதவி வருவதால் முதியோர் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம். பல புதிய முறைகளை கல்வித் திட்டத்தில் புகுத்தி அனைவருக்கும் கல்வியை எட்ட துணை புரிந்திருக்கிறோம்" என்கிறார்.

மெக்கா நகரத்தின் முதியோர் பெண்கள் கல்வியின் இயக்குனர் நூரா அல் ஷேக் கூறும் போது 'எமது நாட்டில் கல்வியறிவின்மையை முழுவதுமாக போக்க மிகக் கடுமையாக உழைக்கிறோம். தற்போதய அரசும் சமூக ஆர்வலர்களும், செல்வந்தர்களும் எங்களின் இந்த இலக்கை அடைய மிகவும் உறுதுணையாக இருக்கின்றனர். நெடுந்தூர குக்கிராமங்களுக்கு சென்று வருடத்தில் மூன்று மாதம் முதியோர்களுக்கு கல்வியை போதிக்கிறோம். முன்பு பெண்களை விட ஆண்களே கல்வி கற்பதில் முன்னணியில் இருந்தனர். இடைவிடாத பிரசாரத்திற்கு பிறகு தற்போது ஆண்களும் பெண்களும் கல்வி கற்பதில் ஓரளவு சம நிலைக்கு வந்துள்ளனர். இந்த மாற்றம் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது' என்கிறார்.

பல தெய்வ வணக்கம் புரிபர்களாகவும், நாடோடிகளாகவும் ஒட்டகம் மேய்த்துக் கொண்டும் பல சாதிகளாக பிரிந்தும் தங்களுக்குள் பகைமை கொண்டிருந்த ஒரு சமூகத்துக்கு இஸ்லாம் என்ற அழகிய வழிமுறை கிடைத்தது. அந்த வழி முறையை சரியாக கொண்டு செல்ல இந்த மக்களுக்கு சிறந்த அரசும், சிறந்த தலைமையும் இன்று வரை கிட்டி வருகிறது. நூறு சதவீதம் படித்த மக்களாக மாற நாமும் இவர்களை வாழ்த்துவோம்.

நம் நாட்டிலும் இஸ்லாமிய சமூகம் படிப்பின் அருமையை அறியாமல் அறியாமையில் உழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் செல்வந்தர்கள் தாங்களாகவே முன் வந்து முதியோர் கல்விக்கு உரிய உதவிகளை வழங்க முன் வர வேண்டும். கல்வி கற்பது ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் முக்கிய கடமையாக இஸ்லாம் வகுத்து தந்துள்ளது. மதரஸா கல்விகளில் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஆங்கிலம், கணிணி, அறிவியல் என்று அனைத்து துறைகளையும் இந்த மதரஸாக்கள் தொட வேண்டும். பழம் பெருமைகள் பேசுவதை நமது மார்க்க அறிஞர்கள் தூரமாக்கி இன்றைய இளைஞர்களின் சிறந்த வருங்காலத்துக்கு உரிய கல்வி முறையை உண்டாக்க முயற்ச்சிக்க வேண்டும்.

தற்போது இஸ்லாமிய பெண்களும் அதிக ஆர்வத்தோடு கல்லூரி வரை செல்வதை தமிழகம் தோறும் பார்க்க முடிகிறது. கல்லூரி படிப்பை முடிந்த வரை ஆண்களையும் பெண்களையும் தனித் தனியாக கல்வி பயில நாம் ஆவண செய்ய வேண்டும். குர்ஆன் கூறும் சட்டதிட்டங்களுக்கு பங்கம் வராமல் உலக கல்வியை இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் அதிகமதிகம் பெற்று சிறந்த சமுதாய பரிணமிக்க அந்த ஏக இறையை பிரார்த்திக்கிறேன்.

கல்வியின் அவசியத்தை உணர்த்தும் முகமது நபி அவர்களின் பொன் மொழிகள்.

‘கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுதர் (ரலி) நூல்கள்: அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.)

கல்வியை தேடும் வழியில் ஒருவன் நடந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்திற்கு செல்லும் வழியாக அதை ஆக்குகின்றான். மலக்குகள்(வானவர்கள்), கல்வியை தேடுபவனை திருப்தியுற்று தங்களின் இறக்கைகளை தாழ்த்துகின்றனர். ஒருவர் கல்வியை எடுத்துக்கொண்டால் அவர் மாபெரும் பாக்கியத்தை எடுத்துக்கொண்டவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்கள்: அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.)

நபி(ஸல்) கூறினார்கள், அறிஞர்களை மட்டம் தட்டவோ, அறிவிலிகளிடம் பெருமையடிக்கவோ, மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கவோ கல்வியை ஒருவன் தேடினால் அவனை அல்லாஹ் நரகில் நுழையச் செய்வான். (அறிவிப்பவர்: கஃப் இப்னு மாலிக்(ரலி) நூல்கள்: திர்மிதீ, ஹாகிம், பைஹகீ)

யா அல்லாஹ்! பயன் இல்லாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதயத்தை விட்டும், போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத பிராத்தனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்துள்ளார்கள். (அறிவிப்பவர்: ஸைது இப்னு அர்ஹம்(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதீ, நஸயீ)