Followers

Showing posts with label தீண்டாமை. Show all posts
Showing posts with label தீண்டாமை. Show all posts

Thursday, March 16, 2017

இறந்த முத்துக் கிருஷ்ணனின் முகநூல் பதிவுகள்!





தலைநகர் டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் திடீரென மர்மமான முறையில் இறந்துபோனார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என போலீஸ் கூறுகிறது.

அசைக்க முடியாத அளவுக்கு ஆழமாக இந்த சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் சாதியத்தையும் அதனால் ஒரு தலித் அடைய வேண்டிய அவமானங்கள் எத்தகையது என்பதையும் விவரிக்கின்றன முத்துக்கிருஷ்ணனின் பதிவுகள்.

முத்துக்கிருஷ்ணனின் தந்தை பெயர் ஜீவானந்தம். இந்த பதிவில் 'ஜீவாவின் மகன்' என்று தன்னைப் பற்றி பேசியிருக்கிறார் அவர்.

ஃபேஸ்புக் பதிவு:

"அந்த ஆடிட்டோரியத்தின் பின்னணியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைத் திரை ஸ்கிரீன் ஜீவாவின் மகனைச் சற்றுப் பின்னோக்கி நினைவலைகளை அசைபோடச் செய்தது. 70எம்.எம். பெருந்திரையில் பிதாமகன் தமிழ் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. படம் முடிந்தவுடன் மீண்டும் திரையில் வெண்ணிறம். அது அப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி. படத்தைப் பார்த்து முடித்த ஜீவாவின் மகன் கிட்சிப்பாளையத்துக்குச் சென்றார்.. மானா (மாட்டிறைச்சி வாங்க). மானா சந்தையில் வாங்கிய மாட்டிறைச்சியைக் கறுப்பு கேரி பேகில் கட்டிக் கொடுத்திருந்தார்கள். அதை எடுத்துக்கொண்டு பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்றார் ஜீவாவின் மகன். அங்கிருந்து வலப்புறம் திரும்பினால் ஓரியன்டல் சக்தி திரையரங்கு. அதற்கு பக்கத்திலேயே லட்சுமி ஐஸ்க்ரீம் கடை. அங்கிருந்த எல்லோரது கண்களும் அந்த கறுப்பு கேரிபேக் மீதுதான். அந்த காலகட்டத்தில் கறுப்பு கேரி பேகில் மானா மட்டுமே பொட்டலம் கட்டப்படுவது வழக்கம். கறுப்பு கேரி பேகை பார்த்தவுடன் அனைவரது கண்களும் சட்டென திரும்பிக்கொள்ளும்.

அசராத ஜீவாவின் மகன், 5 கிலோ மானா அடங்கிய பையுடன் சேலம் பழைய பேருந்து கிளாக் ஹவுஸூக்கு வந்து சேர, சத்திரம், லீ பஜார் வழியில் செல்லும் பஸ்ஸுக்கான காத்திருப்பு ஆரம்பித்தது. அப்போது ஜீவாவின் மகன் பள்ளி நண்பன் ரமணா அவ்வழியாக வர. ஜீவாவின் மகன் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். ரமணாவுடன் பேசிக்கொண்டு 4 ரோடு நிறுத்தம் செல்லும் பொழுதை போக்கலாம் என்று. ஆனால், ரமணாவோ ஜீவாவின் மகன் கையிலிருந்த மானா பையைப் பார்த்தவுடன் பக்கத்திலேயே வரவில்லை.

6-ஏ பஸ் வர ஜீவாவின் மகன் அதில் ஏறிக்கொள்கிறார். பேருந்தின் நடுப்பகுதியில் ஜன்னலோர இருக்கை கிடைத்தது. சேலம் ஆட்சியர் அலுவலக நிறுத்தம் வந்தது. அங்கு வேலைபார்க்கும் அதிகாரி ஒருவர் பேருந்தில் ஏறினார். ஜீவா கையிலிருந்த மானா பை அவரது கண்ணில் தென்பட்டது. அதை பார்த்தபின் அவர் ஜீவா அருகே உட்காரவில்லை. இத்தனைக்கும் பஸ்ஸில் வேறு எங்கும் இடமில்லை. அடுத்ததாக கல்பனா தியேட்டர் நிறுத்தம். அங்கு ஒரு தம்பதி 3 வயது குழந்தையுடன் ஏறினர். உட்கார அவர்கள் இடம் தேடினர். ஜீவாவின் மகன் இருக்கையிலிருந்து எழுந்த நிற்க முடிவு செய்திருந்தார். காரணம், பஸ்ஸில் பயணித்த யாரும் ஜீவாவிடம் பேசத் தயாராக இல்லை என்பதே. அதனாலேயே அந்த தம்பதி உட்கார இடம் தேடியபோது இருக்கையிலிருந்து எழுந்து சென்று ஜீவா இடம் கொடுத்தார். ஆனால், மானா பையை பார்த்த அவர்கள் யாரும் உட்காரத் தயாராக இல்லை. அதற்குள் மானா வாசனை பஸ் முழுதும் பரவியிருந்தது. 4 ரோடு வரும்வரை அந்த இருக்கையில் யாருமே அமரவில்லை.

4 ரோடு நிறுத்ததுக்குப் பின் ஜீவாவின் மகன் படிக்கட்டில் நின்றுகொண்டார். தம்மன்னன் செட்டி ரோடுவரை படிக்கட்டில் பயணம் நீடித்தது. ஆனால், உடன் நின்றிருந்த பயணிகளுக்கு அவ்வளவு கோபம். மானா பையிலிருந்து வந்த வாசனையால் வந்த கோபம் அது. சிலர் ஜீவாவின் காலை (வேண்டுமென்றே) மிதித்தனர். சத்திரம் நிறுத்தத்தில் இறங்கிய ஜீவா லீ பஜாரை நோக்கி நடையைக் கட்டினார். சிலர் மானா பையைப் பார்த்து முகம் சுளித்தனர். சிலர் விலகி நடந்தனர். சிலர் சாலையைக் கடந்து எதிர்ப்புறத்துக்குச் சென்றுவிட்டனர்.

அந்தக் காலத்தில் மானாவுக்கு சமத்துவம் இல்லை. இப்போது மானாவே இல்லை. சமத்துவம் என்பதே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்.

இப்போதும், எம்.ஃபில்., பி.எச்.டி., மாணவர் சேர்க்கையில் சமத்துவம் பேணப்படவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படும் வாய்மொழித் தேர்விலும் சமத்துவம் இல்லை. அங்கே நடைபெறுவதெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுவது மட்டுமே. பேராசிரியர் சுகதேவ் தோரத் பரிந்துரைகள் இங்கு சிறிதும் பின்பற்றப்படுவதில்லை. மாணவர்கள் போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகத்தின் விளிம்புநிலையில் இருந்து வருபவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்துமே மறுக்கப்படுகிறது"

இப்படி அந்த ஃபேஸ்புக் பதிவு ஒரு கறுப்பு கேரி பேக் சாதிய அடையாளமாக இருப்பதை விவரித்திருக்கிறது.

'நான் இளவரசனாக விரும்பவில்லை'

இது முத்துக்கிருஷ்ணனின் முகநூலில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பகிரப்பட்ட நிலைத்தகவல். "தாஜ்மகால் முன்னால் காதலி இல்லாமல். கல்லூரியில் நான் கொண்ட ஒருதலை காதல் நினைவுக்கு வருகிறது. அந்தப் பெண்ணுக்கு இப்போது திருமணமாகிவிட்டது. நானும் எல்லாவற்றையும் கடந்துவந்துவிட்டேன். ஏனெனில், நான் இளவரசன், கோகுல்ராஜ், சங்கருக்கு நேர்ந்த அவலத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. நான் காதல் கொண்ட பெண்ணைவிட சிறந்த பெண் இந்த உலகத்தில் எனக்குக் கிடைப்பாள்.

இப்போது என் எண்ணமெல்லாம் எனது ஆயா செல்லம்மாள் பற்றியே இருக்கிறது. செல்லம்மாள்தான் என் ஆயா" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

'கணிதமே வரலாறு'

எம்.ஃபில்., பி.எச்.டி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு நேர்முகத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என யுஜிசி திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்தன. அப்போது முத்துக்கிருஷ்ணன் ஒரு நிலைத்தகவலை தனது ஃபேஸ்புக்கில் பதிந்தார்.

"எனது கணக்கு ஆசிரியருக்கு என் மேல் அவ்வளவு வெறுப்பு. எப்போதுமே நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பார். நான் முடிதிருத்திக்கொண்டிருந்த விதத்தைக் கிண்டல் செய்வார். அதனாலேயே எனக்கு கணிதம் மீது வெறுப்பு வந்தது. எனது நாட்டம் மாறியது. கணிதம் வரலாறானது. அந்த ஆசிரியரின் கேலியும் கிண்டலும்தான் என்னை முதல் தலைமுறை பட்டதாரியாக்கியது. ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தயைகூர்ந்து வாய்ப்பு கொடுங்கள். இல்லையென்றால் அவர்கள் கணிதம் என்றால் விரோதி என்ற புரிதலுக்குத் தள்ளப்படுவார்கள். கல்வி என்றால் அழுத்தம் என எண்ணுவார்கள். பல்கலைக்கழகம் என்றால் பாகுபாடு என அறிவார்கள்"

இவ்வாறாக அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

முத்துக்கிருஷ்ணனின் ஃபேஸ்புக் பதிவுகளிலிருந்து.. தமிழில்: பாரதி ஆனந்த்.

-----------------------------------------------------

மாட்டுக் கறி தின்பது ஏதோ மிகப் பெரிய குற்றம் என்பதை வர்ணாசிரம தர்மம் மிக ஆழமாக மக்கள் மனதில் பதிய வைத்துள்ளது. அதனை மாற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமை என்றால் அது மிகையில்லை.

Sunday, November 29, 2015

தீண்டாமை ஆழ்வார் காலத்திலேயே இருந்துள்ளது.



“தீண்டத்தகாதவர்கள்” என்ற ஒரு சொல் உருவானதே, மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இந்தியா வந்து, வீட்டில் கொல்லைப்புறத்தில் கழிப்பறையை உண்டாக்கிய பின்னர்தான். கழிவை எடுக்கும் தொழிலைச் செய்தவர்கள் “தீண்டத்தகாதவர்கள்” என்று தவறாக ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்." - இப்படி ஒரு கதையை பார்பனர்கள் பலகாலமாக பரப்பி வருகின்றனர். தமிழ் இந்து தளத்தில் திரு அரிசோனனும் இந்த கருத்தை வைத்திருந்தார். இவர் வார்த்தையில் உண்மையிருக்கிறதா என்பதை இந்த பதிவில் சற்று பார்போம்.

தீண்டாமை ஆழ்வார் காலத்திலேயே 10 நூற்றாண்டு முன்பே இருந்ததாக "ஆழ்வார்கள் சரிதம்" சொல்கிறது. நாயன்மார்கள் காலத்திலும் தீண்டாமை இருந்தததாக "பெரிய புராணம்" சொல்லும்.

நம்பாடுவான் – இவர் காலம் முதலாழ்வார்கள் காலத்திற்கும் முன்பு நடந்தது – ஒரு தலித்து (இன்று தலித் என்கிறோம் ஆனால் கதையில் அன்றைய சொல்லாடலாண பறையர் என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது) திருக்குறுங்குடி நம்பி மீது தாளாத பக்தி கொண்டவர். ஆனால் கோயிலுக்குள் மட்டுமின்றி, ஊருக்குள்ளே நுழைய முடியாதபடி அவர் சாதிக்குக் கட்டுப்பாடு. எனவே ஊரடங்கிய பின் எவருக்கும் தெரியாமல் ஊருக்குள் நுழைந்து, கோயில் கொடிமரத்துக்கு முன் நின்று பாசுர மழை பொழிந்துவிட்டு, ஊர் எழுவதற்கு முன் ஓடிவிடுவார். மேலும் கதையை பேராசிரியர் இராமனுஜத்தால் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் பார்த்துக் கொள்ளவும். ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி இரவன்று அந்நாடகம் திருக்குடியிலும் திருவரங்கத்திலும் அரங்கேற்றப்படுகிறது. அந்நாடகத்தில் வரும் திருக்குறுங்குடி நம்பி கருடனின் மேலமர்ந்து வரும் காட்சியே மறைந்த வெங்கட் சாமிநாதனின் இறுதிக்கட்டுரையில் போடப்பட்டிருக்கிறது.

திருப்பாணாழ்வார் கதை தெரியும். திருவரங்கனாரின் மேல் காதல். ஆனால் திருவரங்கத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தனர் பாணர் ஜாதியினர். எனவே காவிரி ஆற்றங்கரையிலிருந்தே பாடினார்....

நந்தனார், தில்லைக்குள்ளே நுழைய முடியாத நிலை. தில்லையில் முதன்முறையாக நுழையும்போது நடுங்கினார் என்றே எழுதுகிறார் சேக்கிழார். ஆக, தீண்டாமை அக்காலத்தில் இருந்தது என ஆழ்வார், நாயன்மார் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு ஆரிய படையெடுப்புக்குப் பின்னர்தான் நமது தமிழகத்தில் தீண்டாமை நுழைகிறது. உண்மை இவ்வாறு இருக்க பழியை மொகலாயர்களின் மீதும் ஆங்கிலேயர்களின் மீதும் போடலாமோ! வட மாநிலங்களில் கழிவறை இல்லாத வீடுகளுக்கு பெண்கள் மண மகளாக செல்வதில்லையாம். தற்போதுதான் மாற்றங்கள் சிறிது சிறிதாக வர ஆரம்பித்துள்ளது. அரசு கழிவறை கட்டி கொடுத்தாலும் சிலருக்கு புதருக்கு பின்னால் காற்றோட்டமாக அமருவதுதில் அலாதி பிரியம். இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல.... :-)

Sunday, September 20, 2015

தலித் எம் எல் ஏ க்கு ஏற்பட்ட வன்கொடுமை!




புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநிலத்தின் பிஜேபி எம் எல் ஏ வாக உள்ளவர் காசினாத் மல்லிக்....

ஜீலை 20 ஆம் தேதி மாவட்ட வளர்ச்சி சம்பந்தமான ஒரு கூட்டத்துக்கு எம்எல்ஏ என்ற முறையில் அழைக்கப்பட்டிருந்தார். அவரோடு சேர்த்து மேலும் மூன்று எம்எல்ஏக்களும் ஒரு எம்பியும் மாவட்ட ஆட்சியரும் அழைக்கப்பட்டிருந்தனர். மதியம் அரசு செலவில் உணவு பரிமாறப்படும் நேரமும் வந்தது. அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை பிடிஐ செய்தி ஸ்தாபனத்துக்கு காசிநாத் மல்லிக் கொடுத்த பேட்டியை பார்போம்:

'மற்ற மூன்று எம்எல்ஏக்கள், கண்டமால் எம்பி, மாவட்ட ஆட்சியர் என்று இந்த ஐந்து பேருக்கும் அறையின் உள்ளே கவுரமாக உணவு பரிமாறப்பட்டது. ஆனால் அறைக்கு வெளியே தனியாக எனக்கு மட்டும் இலையில் உணவு பரிமாறப்பட்டது. இது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக சபாநாயகரிடம் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு தொடர்ச்சியாக ஆளும் வர்க்கத்தால் அவமானம் ஏற்படுத்தப்படுகிறது' என்று பரிதாபமாக கேட்டார்.

தகவல் உதவி
NDTV.com
23-07-2015


பாவம் அந்த எம்எல்ஏ! எதனால் இவருக்கு மட்டும் இப்படி அவமானம் ஏற்படுகிறது என்பதை இன்னும் விளங்காமல் இருக்கிறார். அவர் தலித்தாக பிறந்து விட்டார் அல்லவா? அதுதான் காரணம்.

படிப்பு, ஆட்சி, அதிகாரம் கையில் கிடைத்தால் தீண்டாமை காணாமல் போய் விடும் என்று சொல்பவர்கள் இந்த சம்பவத்துக்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள்? ஒட்டு மொத்த மக்களின் மனதில் மாற்றம் முழுவதுமாக ஏற்படாதவரை நமது நாட்டுக்கு தீண்டாமையிலிருந்து விடுபட எந்த முகாந்திரமும் இல்லை. இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் இந்த நிலை மாறப் போவதில்லை.

இங்கு இரண்டே நிலைப்பாடுதான் இருக்கிறது. ஒன்று தீண்டாமை என்ற இழிவை சுமந்து கொண்டு இந்து மதத்திலேயே இருப்பது.

மற்றது ஒட்டு மொத்தமாக இந்து மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாம், கிருத்தவம், பவுத்தம் போன்ற மதங்களில் ஐக்கியமாகி விடுவது. இதைத் தவிர வேறு மூன்றாவது வழி இல்லை.

http://www.ndtv.com/bhubaneshwar-news/dalit-orissa-mla-served-food-separately-alleges-caste-discrimination-462586?site=full

Wednesday, April 08, 2015

மாலையிட்டவுடன் தீட்டு கழித்த வர்ணாசிரம கொடுமை!



பீஹார் மாநிலத்தில் சுதந்திர போராட்ட வீரராக கருதப்படும் ராம் மனோஹர் லோகியாவுக்கு சிலை ஒன்று உள்ளது. சென்ற வாரம் மரியாதை நிமித்தமாக அந்த சிலைக்கு ஜிதன்ராம் மனிஹி மாலையிட்டார். இவர் பீஹாரை 9 மாதங்கள் முதல் மந்திரியாக இருந்து ஆட்சி செய்தவர். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் மாலையிட்டு சென்றவுடன் சிலை தீட்டு பட்டு விட்டதாகக் கூறி உயர் சாதி இளைஞர்கள் நான்கு பேர் அந்த சிலையை தண்ணீர் ஊற்றி முழுவதுமாக கழுவி தீட்டைக் கழித்துள்ளனர். ஜிதன்ராம் போட்ட மாலையையும் கழற்றி புதிதாக வேறொரு மாலையை அந்த சிலைக்கு போட்டுள்ளனர் சாதி வெறியர்கள்.

மாலையிட்ட ஜிதன்ராம் சாதாரணமான ஆள் அல்ல. பீஹாரை முதல் மந்திரியாக இருந்து 9 மாதங்கள் ஆட்சி செய்தவர். இவர் முதல்வராக இருந்தபோதே ஒரு கோவிலுக்குள் நுழைந்து இறைவனை வழிபட்டார் என்பதற்காக அன்றே அந்த கோவிலை தண்ணீர் ஊற்றி கழுவி தீட்டைக் கழித்தனர். அப்போதும் அது பெரும் பிரச்னையாக்கப்பட்டது. அதே இன ஒதுக்கல் சென்ற வாரம் மீண்டும் பல மக்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளது. மற்ற மூவரை காவல்துறை தேடி வருகிறது.

இதற்கு முன்பு ஜெகஜீவன்ராம் ராணுவ மந்திரியாக இருந்த போதும் இதே போல் உயர் சாதி இந்துவுக்கு மாலையிட்டதற்காக சிலையை கழுவி தீட்டு கழித்தனர் உயர் சாதி இந்துக்கள். இத்தனை வருடம் சென்றும் அதே சாதி வெறி மீண்டும் அரங்கேற்றப்பட்டள்ளது. படித்து விட்டால் சாதி மறைந்து விடும் என்ற வாதம் முன்பு வைக்கப்பட்டது. படித்தவர்கள் மத்தியில்தான் இந்த சாதி வெறி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 'நீ முதல் மந்திரியாக இருந்திருக்கலாம், மத்தியில் ராணுவ மந்திரியாகவும் இருந்திருக்கலாம். எவ்வளவு உயர் பதவியைப் பெற்றாலும் எனது பார்வையில் நீ தலித். நீ தீண்டத்தகாதவன்' என்று சொல்கிறது மேற்படி சம்பவம்.

'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பவர்களுக்கு சென்ற வாரம் நிகழ்ந்த இந்த சம்பவம் சிறந்த செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

தகவல் உதவி
ndtv
outlookindia
06-04-2015



http://www.ndtv.com/india-news/lohia-statue-washed-after-being-garlanded-by-ex-chief-minister-jitan-ram-manjhi-752700
http://www.outlookindia.com/news/article/Lohias-Statue-Cleaned-After-Manjhi-Garlands-It-Four-Booked/889903

Sunday, February 22, 2015

தலித்தின் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியம்!



எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக காட்டிக் கொள்ள மட்டும் தலித்களை இந்துவாக காட்டுகிறது இந்துத்வம்.

மசூதிகளை இடிக்கவும் சர்ச்களை கொளுத்தவும் இதே தலித்களை பயன்படுத்திக் கொள்கிறது இந்துத்வம்.

கலவரங்களை உண்டு பண்ணி முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் கொன்று அவர்களின் சொத்துக்களை கொள்ளயைடிக்க தலித்களை பயனபடுத்திக் கொள்கிறது இந்துத்வம்.

அப்போ நானும் இந்துதானே என்று சாமி கும்பிட கோவிலுக்கு வந்தால் 'உள்ளே வராதே! சாமி குத்தமாயிடும்' என்று அவனை ஒதுக்குகிறது அதே இந்துத்வம்.

தலித்களும் இந்து மதம்தான் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பார்பனர் இதே தலித் உடலை இந்த முஸ்லிம் சுமந்து செல்வது போல் சுமந்து செல்வாரா?

அந்த பார்பனர் பின்பற்றும் இந்து மத வர்ணாசிரம சட்டங்கள்தான் அதற்கு உதவிடுமா? இந்துத்வாவிற்கு கொடி பிடிக்கும் சில இந்து நண்பர்களிடம் இதற்கு பதில் இருக்கிறதா?

ஆனால் அந்த தலித் இந்து மதமாக இருந்தாலும் அவனும் ஆதமுடைய வழி தோன்றல்தான் என்று குர்ஆன் கூறுகிறது. எனவே தான் இறந்த அந்த தலித் சகோதரனின் உடலை தனது சகோதரனாக பாவித்து தோளில் சுமந்து செல்கிறார் அந்த இஸ்லாமியர். இந்த சகோதரத்துவத்தைத்தான் இஸ்லாமும் விரும்புகிறது.

'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்'
-குர்ஆன் 4;1

1000 வருடங்களாக பல திட்டங்கள் போட்டும் ஒழிக்காத தீண்டாமையை இந்த ஒரு வசனம் உலக முஸ்லிம்களிடம் தீண்டாமையை ஒழித்துக் கட்டியது. இந்த வசனத்தின் உண்மையை உள் வாங்கிய ஒருவன் மனிதர்களை பேதப்படுத்தி பார்க்க மாட்டான். நான்கு வர்ணங்களாக பிரித்து மனிதர்களிடம் தீண்டாமையை கடைபிடிக்க மாட்டான்.

Thursday, February 12, 2015

இஸ்லாத்தினால் தமிழகம் அடைந்த மாற்றங்களில் இதுவும் ஒன்று!



இஸ்லாத்தினால் தமிழகம் அடைந்த மாற்றங்களில் இதுவும் ஒன்று!

கருப்பு, வெள்ளை, மாநிறம், தூய வெள்ளை, தூய கருப்பு என்று மனிதரில் இத்தனை நிறங்களா? என்று உங்களை வியக்க வைக்கும் பல தமிழக முஸ்லிம் கிராமங்கள். மாநிறமும் தூய வெள்ளையும் எவ்வளவு அன்யோன்யமாக கள்ளம் கபடமற்று தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை பாருங்கள்.

கருப்பு நிறத்துக்கு சொந்தக்காரர்களான வன்னியர்களும் தலித்களும் எந்த அளவு பகை கொண்டு ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு உயிரை விடுகின்றனர் என்பதை தினமும் பத்திரிக்கையில் பார்கிறோம். காதலித்த ஒரே குற்றத்தக்காக இளவரசன் என்ற இளைஞனின் உயிரை பறித்தது சாதி வெறி. ஆனால் இங்கோ நேரெதிர் நிறங்களான கருப்புக்கும் வெள்ளைக்கும் இந்த அளவு பிணைப்பு எப்படி வந்தது? இதனை கொடுத்தது எந்த சித்தாந்தம்? வன்னியர்களும் தலித்களும் நாடார்களும் செட்டியார்களும் தேவர்களும் பார்பனர்களும் வாழும் அதே சாதி வெறி பிடித்த தமிழகத்தில்தானே இஸ்லாமியர்களும் வாழ்கின்றனர்? பேசும் மொழியும் ஒன்றுதான். இவர்களுக்கு மட்டும் இந்த அன்பு எப்படி சாத்தியமாகிறது?

இன வெறி, மொழி வெறி, இவற்றை தனது காலடியில் போட்டு மிதிப்பதாக நபிகள் நாயகம் தனது அறிவுரையாக முஸ்லிம்களுக்கு கூறியுள்ளதாலேயே இது சாத்தியமாகிறது. எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்று குர்ஆன் கட்டளையிடுவதாலேயே இது சாத்தியமாகிறது.

இதனை ஒரு வரலாற்று சம்பவத்தின் மூலம் நினைவு கூர்வோம்.

அபூதர்தா என்ற நபித் தோழர் மதீனாவைச் சேர்ந்தவர். சல்மான் ஃபார்ஸி என்பவர் ஈரானைச் சேர்ந்தவர். நபிகள் நாயகத்தின் பிரசார பணியைக் கேள்விப்பட்டு இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்காக மதினாவுக்கு வந்தவர் சல்மான் ஃபார்ஸி. இது போன்று அபிசீனியா, ஏமன், சிரியா, சூடான் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் பலர் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ள அணி அணியாக வந்தனர். இவர்களை சமாளிப்பது நபியவர்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்தது. ஏனெனில் இன்று போல் அன்று தங்கும் விடுதிகளோ, உணவு விடுதிகளோ இல்லை. நெடுந்தூரம் பிரயாணத்திலிருந்து வருபவர்கள் யார் வீட்டிலாவது விருந்தாளிகளாக தங்கிக் கொள்வர். இதுதான் அன்றைய வழிமுறை.

ஆனால் மதினாவுக்கோ ஆயிரக் கணக்கில் மக்கள் தினமும் வருகின்றனர். மக்காவில் தங்கள் பொருட்களை எல்லாம் விட்டு விட்டு அகதிகளாக மதினாவில் தஞ்சம் புகுந்தவர்களே நபிகளும் அவரது தோழர்களும். பொருளாதார வசதியும் இல்லை. இஸ்லாத்தில் இணைபவர்களை கொலை செய்வதற்கென்றே மக்காவிலிருந்தும் சுற்று கிராமங்களிலிருந்தும் பல சிலை வணங்கிகள் முஸ்லிம்களை நோட்டமிட்டு வந்தனர். எனவே இவர்களின் உயிரையும் பாதுகாக்க வேண்டும். தங்குமிடமும் உணவும் தொடர்ந்து கொடுக்க வேண்டும். என்ன செய்வது? அருமையான ஒரு திட்டத்தை நபிகள் நாயகம் செயல்படுத்தினார்கள். அது என்ன திட்டம்?

மதினாவைச் சேர்ந்த அபூதர்தாவையும் ஈரானைச் சேர்ந்த சல்மான் ஃபார்ஸியையும் கூப்பிட்டு 'இதோ பார் அபூ தர்தா! இன்று முதல் சல்மான் ஃபார்ஸி உனது சகோதரன். இவருக்கு உணவு இருப்பிடம் அனைத்தும் கொடுக்க வேண்டியது உனது கடமை' என்ற ஒரு கட்டளையை போட்டார் நபிகள் நாயகம். இறைத் தூதர் போட்ட கட்டளைக்கு உடன் அடி பணிந்தார் அபூதர்தா. இதே போன்று அனைத்து மதினாவாசிகளுக்கும் கட்டளையிட்டார் நபிகள் நாயகம்.

சல்மான் ஃபார்ஸி ஈரானைச் சேர்ந்த ஃபார்ஸி மொழி பேசக் கூடியவர். இனத்தாலும் மொழியாலும் வேறுபட்டவர். அபூதர்தா அரபு இனத்தைச் சார்ந்தவர். தாய் மொழியாக அரபியைக் கொண்டவர். உடை, மொழி, கலாசாரம் என்று அனைத்திலும் வேறுபட்ட இந்த இருவரையும் சகோதரர்கள் என்று இணைத்து வைத்தது அந்த காலத்தில் மிகப் பெரிய புரட்சி. ஏனெனில் நமது தமிழகத்தை விட சாதி வெறியில் கொடி கட்டி பறந்த சமுதாயம் அன்றைய அரபு சமுதாயம். அரபு மொழி பேசாத மற்ற மொழிக் காரர்கள் ஊமைகள் என்று அன்றைய அரபு சொல்லி வந்தான். 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்று நீங்கள் தமிழை தூக்கி வைத்துக் கொண்டாலும் அன்றைய அரபியின் பார்வையில் நீங்கள் 'பே...பே தான்' அதாவது ஊமைகள். :-) இதுதான் அன்றைய அரபு நாட்டு நிலை.

ஒரு சில மதீனா வாசிகள் ஒரு படி மேலே சென்று அவ்வாறு சகோதரர்களாக ஆக்கிக் கொண்டவர்களுக்கு தனது மகளை, தனது தங்கையை திருமணம் முடித்துக் கொடுத்து இரத்த சொந்தமாகவும் ஆக்கிக் கொண்டார்கள். அந்த காலத்தில் இது மிகப் பெரிய புரட்சியாகும். தனது சீடர்களை தோழர்கள் என்று அழைத்து கம்யூனிஸ சித்தாந்தம் உருவாகவே காரணமானது இந்த சகோதரத்துவ கொள்கை. கம்யூனிஸமே இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் உருவானதுதான். இதனை கம்யூனிஸ்டுகளும் நன்கு அறிவர்.

இந்த இஸ்லாமிய வரலாறுகளை தங்களின் வாழ்வில் உள் வாங்கிக் கொண்டதாலேயே தமிழக முஸ்லிம்களால் இவ்வளவு சகோதரத்துவமாக மாற்றாரோடும் பழக வைக்கிறது. பல இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் தளங்களில் 'எங்களுக்கு சாதி இந்துக்களை விட முஸ்லிம்களே நெருக்கமானவர்கள்' என்று எழுதும் அளவுக்கு நிலைமை இருக்கிறதென்றால் அது நபிகள் நாயகம் எங்களுக்கு இறைத் தூதின் மூலம் அளித்த பயிற்சி என்றால் மிகையாகாது.

நமது தமிழகம் இஸ்லாத்தால் பெற்ற நன்மைகளில் தலையாயது இந்த சகோதரத்துவம்.

Saturday, December 20, 2014

தலித் அதிகாரி முன் சீட்டில் உட்கார்ந்ததால் கொலை!

பிஹாரில் காரின் முன் இருக்கையில் அமர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் தலித் என்பதால் அவரை, சக துணை ஆய்வாளர் ஒருவரே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். ஓராண்டாக தலைமறைவாக உள்ள அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள அஜய் குமார் சிங் யாதவின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு சரண் சரக காவல் துறை டிஐஜி மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 2015 ஜனவரி 31-ம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்குமாறும் காவல் துறைக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கொல்லப்பட்ட கிருஷ்ண பைதாவின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா என்பது குறித்து பதில் அளிக்குமாறு சரண் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில உள் துறையை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சட்டத் (கொடுமை தடுப்பு) திருத்தத்தின்படி பைதாவின் வாரிசுக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரண் மாவட்டத்தில் உள்ள பனியாபூர் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் அஜய் குமார் சிங் யாதவ், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்தக் காரில் முன் இருக்கையில் அமர்ந்த அதே காவல் நிலைய துணை ஆய்வாளர் கிருஷ்ண பைதாவை தலித் என்ற காரணத்தால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

இதுகுறித்து பைதாவின் மகன் சுரேந்திர குமார் ரஜக் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். கால தாமதமாக வழக்கு பதிவு செய்தபோதும், யாதவ் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனினும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் தலைமறைவாக உள்ளார்.

இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் ரஜக் புகார் செய்துள்ளார். இதையடுத்து, யாதவ் மீதான புகார் குறித்து விசாரித்து வருவதாக சரண் சரக டிஐஜி மனித உரிமை ஆணையத்தில் கூறியுள்ளார். முக்கியமான இந்த வழக்கில் உடனடியாக விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்து நாளிதழ்
20-12-2014

'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்குறாங்க?' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் இந்துத்வாவாதிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

சக அதிகாரி ஒருவருக்கு ஒரு தலித் அதிகாரி முன் சீட்டில் அமருவதையே பொறுக்க முடியவில்லையே... இவர்கள் கோவிலில் இதே தலித்களை இனி மேலும் அனுமதிப்பார்கள் என்று நம்ப முடியுமா? அதற்கு ஏற்ற சூழல்தான் உள்ளதா? இன்று தமிழகம் வரும் அமீத்ஷாவிடம் இந்துத்வாவாதிகள் இதற்கு பதிலை பெற முயற்சிப்பார்களா? :-)

இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைப்பவர்கள் தலித்களுக்கு உரிய பாதுகாப்பை அவர்களால் தர முடியுமா? இதற்கும் அமீத்ஷாவிடம் பதில் பெற முயற்சியுங்கள் இந்துத்வாவாதிகளே!

http://www.business-standard.com/article/pti-stories/bhrc-seeks-report-from-govt-in-sub-inspector-murder-case-114121801186_1.html

http://www.ibtimes.co.in/absconding-bihar-cop-who-killed-dalit-colleague-sitting-front-seat-jeep-faces-more-trouble-617756

http://timesofindia.indiatimes.com/articleshow/45567511.cms




Tuesday, December 16, 2014

தமிழனை காப்பாற்றிடலாம்! கவலைப்படாதீங்க.....



'கவலைப் படாதீங்கோ! தமிழனை காப்பாற்றி விடலாம்! மதுவுக்கு அடிமையானதால் உடல் இவ்வாறு பலஹீனமாயிருக்கு! கொஞ்ச நாள்ல குடிப் பழக்கத்தையும் நிறுத்த வெச்சுடறேன்'

'நாசமாப் போச்சு! அவன் உயிரை மட்டும் காப்பாத்துங்க டாக்டர்! குடியிலிருந்து மீண்டு சிந்திக்க ஆரம்பிச்சுட்டான்னா எங்க பாடு திண்டாட்டமால்ல போயிடும்! புரியறதா?'

----------------------------------------------------------

1956 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் NCAER என்ற தேசிய பொருளாதார பயன்பாட்டு ஆராய்ச்சிக் கழகம் நடத்திய கருத்துக் கணிப்பு, இந்திய சமுதாயத்தின் பலவீனத்தைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது எனலாம்.

கடந்த 2011- 12 ஆம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த சர்வே, பொது மக்களிடையே நேரடியாக எடுக்கப் பட்டுள்ளது.பொருளாதார அளவில் வேறுபாடுகள் கொண்ட பல்வேறு தரப்பினரைக் கருத்தில் கொண்ட இந்த ஆய்வானது, இரண்டு கேள்விகளை முன் வைத்துள்ளது.

அந்தக் கேள்விகள் உங்களது வீடுகளில் தீண்டாமை நடைமுறையில் உள்ளதா? உங்கள் வீட்டு சமையல் அறைக்குள் பட்டியல் இனத்தவர் நுழையவும், பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அனுமதிப்பீர்களா? என்பதே.

பிராமணர்கள் 52 சதவீதம் பேரும் , முன்னேறிய சாதியினர் 24 சதவீதத்தினரும், இதர பிற்படுத்தப் பட்டோரில் 33 சதவீதத்தினரும் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்து மதத்தினர் 35 சதவீதத்தினரும்,ஜைன மதத்தினர் 30 சதவீதத்தினரும் சீக்கியர்களில் 23 சதவீதத்தினரும்,முஸ்லீம்களில் 18 சதவீதத்தினரும் தீண்டாமை, தங்களின் இல்லங்களில் இருப்பதை மறுக்காமல் கூறி உள்ளனர்.

மாநிலவாரியாகப் பார்த்தால் ஹிந்தி பேசும் வடமாநிலங்களில், மத்தியப் பிரதேசம் 53 சதவீதம்,உத்தரப் பிரதேசத்தில் 43 சதவீதம்,இமாச்சலில் 50 சதவீதம், சத்தீஸ்கரில் 48 சதவீதம்,ராஜஸ்தான் பீகாரில் 47 சதவீதம்,உத்தரகாண்டில் 40 சதவீத மும் `தீண்டாமை` என்பது தங்களின் நிழல் போல ஒட்டிக் கொண்டுள்ளதை ஆய்வில் பதிலாக அளித்துள்ளனர்.

தென் மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசத்தில் 10 சதவீதம் மட்டுமே தீண்டாமை உள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்கு வங்காளம 1 சதவீதம்,கேரளாவில் 2 சதவீதம் என்று சர்வே கூறுகிறது. இதில் முக்கியமாக தமிழ்நாடு, கர்நாடகம் மாநிலங்களின் நிலைமை பின்னர் வரவிருக்கும் விரிவான அறிக்கையில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் அமித் தோரட், "சமூக அடிப்படையில் சாதிய உணர்வு, மக்களோடு ஒன்றி கலந்து உள்ளது. சமுதாயத்தில் இருந்து தீண்டாமையினை அகற்றுவது கடினமே" என்கிறார்.

தகவல் உதவி:
விகடன்.காம்
29-11-2014


Friday, December 12, 2014

தமிழ் மொழி பற்றி நண்பர் ஜடாயுவுக்கு நான் அளித்த பதில்!

திரு ஜடாயு!

// தமிழருக்கு சமஸ்கிருதமும், அராபியும் ஒன்றே என்பது உளறல். அது எப்படி ஒன்றாகும்? சம்ஸ்கிருதம் சங்ககாலத்தில் இருந்து தமிழர் பயின்ற மொழி.//

தமிழனைப் பொருத்த வரை அரபியும், சமஸ்கிரதமும் அவனுக்கு அந்நிய மொழிகளே! தமிழர்கள் ஆதி காலத்தில் பயின்றதால் அது தமிழனின் மொழியாக முடியாது. ஒரு இனத்துக்கு ஒரு தாய் மொழிதான் இருக்க முடியும்.

//தமிழ்ப் பண்பாட்டுடன், கலை, இலக்கியங்களுடன் இரண்டறக் கலந்த மொழி. தமிழுடன் உறவாடி, தமிழுக்கு சொற்களை அளித்து, தமிழிலிருந்து சொற்களைப் பெற்றுக் கொண்ட மொழி.//

தமிழை அதன் போக்குக்கு உங்களின் முன்னோர்கள் விட்டிருந்தால் அது இன்றளவும் தலை நிமிர்ந்து நின்றிருக்கும். ஆனால் உங்களின் முன்னோர்களை கதைகளையும் புராணங்களையும் சமஸ்கிரதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்ததால் இன்று தமிழ் அதன் தனித் தன்மையை இழந்து வர்ணாசிரமக் கொட்பாடுகளையும் உள் வாங்கிக் கொண்டது. இதை எல்லாம் பார்த்துதான் பெரியார் காட்டுமிராண்டிகள் மொழி என்ற ரீதியில் விமரிசிக்க ஆரம்பித்தார்.

//நம் தமிழ் மூதாதையர் "வடமொழியும் தென்தமிழும் ஆனான் கண்டாய்" என்று போற்றிய மொழி. அதுவும் அரபியும் எப்படி ஒன்றாகும்?//

அவ்வாறு பார்பனர்கள் பாடி வைத்திருப்பார்கள். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

‘இதோ பாரும் தாத்தாச்சாரி... அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை. பாத்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குதான் தெரியுமே.

தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணணும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ... அதனால் நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ...” என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.

http://thathachariyar.blogspot.com/2010/11/26.html

இதை சொன்னவர் ஜடாயு தெய்வமென மதிக்கும் முன்னால் சங்கராச்சாரியார் பெரியவர் சொன்னதாக தாத்தாச்சாரி சொல்கிறார். இதை மறுக்க முடியுமா? பூஜை நேரத்தில் தமிழில் பேசினால் அது உங்களுக்கு தீட்டா? அதற்காக திரும்பவும் குளிக்க வேண்டுமா? எனது தாய் மொழி தமிழை இந்த அளவு ஒருவர் அவமானப்படுத்தி நான் பார்த்ததில்லை. தமிழ் மொழியில் அவரை நாடி வந்த ஒரு பக்தனிடம் பேசுவது அவ்வளவு அசிங்கமா அவருக்கு? பிறகு தமிழின் மேல் பொய்யான பாசம் காட்டி நீங்கள் ஏன் பூசி மெழுகுகிறீர்கள்? இது போல் பல சம்பவங்களை என்னால் காட்ட முடியும்.

//அரபி, தமிழ்ப் பண்பாட்டிற்கு முற்றிலும் தொடர்பற்ற அன்னிய இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் மொழி. இஸ்லாமியப் படையெடுப்புகளின் மூலமாக தமிழகத்தில் நுழைந்த மொழி.//

சமஸ்கிரதமும் ஆரிய படையெடுப்பால் தமிழகத்தில் நுழைந்த மொழி. உருது இஸ்லாமிய படையெடுப்பால் தமிழகத்தில் நுழைந்த மொழி. அரபி மொழியோ அரபுகள் கேரள கரையோரம் வியாபாரத்துக்கு வந்து அந்த மக்களை இஸ்லாத்தில் இணைத்து அதன் மூலம் தமிழகமும் பரவிய மொழி. வரலாறை நன்றாக இன்னொரு முறை படிக்கவும்.

Thursday, December 11, 2014

இன்னா... அய்யிரே! மதம் மாறணுமா?



'இன்னா..... அய்யிரே..... மதம்தானே... மாறிட்டாப் போச்சு....... நீ சொல்றது போல இந்துவா மாறிட்டா கோயில்ல குருக்களா மணியாட்ட என்ன வெப்பியா.... உன் சாதியில என்னை சேத்துப்பியா... இல்லேன்னா... என்னை எந்த சாதியிலே வெச்சுப்பே........ அத்த மொதல்ல சொல்லு...'



Monday, December 01, 2014

'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?'



National Council of Applied Economic Research (NCAER) - என்ற தொண்டு நிறுவனம் 1956 ல் தொடங்கப்பட்டது. இந்தியர்களின் பொருளாதாரம் மற்றும் தீண்டாமை குறித்து அறிக்கைகளை தயாரிக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும் இது. சமீபத்தில் இந்த நிறுவனம் மற்ற சில தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து 42000 வீடுகளில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. 'நீங்கள் உங்கள் வாழ்வில் தீண்டாமையை கடைபிடிக்கிறீர்களா?' என்று கேட்டால் உடன் 'இல்லை' மறுத்து விடுகின்றனர். அடுத்த கேள்வியாக 'உங்கள் சமையல் அறையில் தலித்களை அனுமதிப்பீர்களா? உங்களின் சமையல் பாத்திரங்களை தொட அனுமதிப்பீர்களா?' என்ற கேள்விக்கு விடை தான் நாம் பார்க்கும் இந்த அட்டவணை. வழக்கமாக பார்பனர்கள் தீண்டாமையை கடை பிடிப்பதில் முண்ணனியில் இருக்கிறார்கள். மற்ற உயர் சாதி இந்துக்களும் பார்பனர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் அவர்களும் தீண்டாமையை கடைபிடிப்பதில் போட்டியிடுகின்றனர்.

இதில் ஒரு பார்பனர் தனது பின்னூட்டத்தில் 'ஆம் .... நாங்கள் சாதி பார்க்கிறோம். தலித்களை சமையல் அறை பக்கம் வர விட மாட்டோம். அது எங்களின் வழக்கம்' என்று திமிராக பதிலும் அளிக்கிறார்.

இவர்களை விடுங்கள். ஏனெனில் இந்த மக்களின் வேத நூல்கள் தீண்டாமையை வலியுறுத்துகின்றன. கால காலமாக பழக்கப்படுத்தி வந்துள்ளதால் இவர்களிடம் தீண்டாமை இருப்பதை ஆச்சரியமாக பார்க்க முடியாது. ஆனால் முஸ்லிம்களிடமும் தீண்டாமை இருப்பதை இந்த ஆய்வு உறுதிபடுத்துகிறது. 18 சதமான முஸ்லிம்கள் தீண்டாமையை கடைபிடிப்பதாக சொல்வது முஸ்லிம்களாகிய நமக்கு அவமானம் இல்லையா? குர்ஆனும், நபி மொழிகளும் தீண்டாமையை முற்றாக ஒழிக்க சொல்லி நமக்கு கட்டளையிட இந்துக்களை பார்த்து முஸ்லிம்களாகிய நாமும் தீண்டாமையை கடைபிடிக்கலாமா?

'குலப் பெருமையை எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன். மொழியாலும் நிறத்தாலும் உயர்ந்தவன் எவனும் இல்லை' என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திய ஒருவரை தலைவராக கொண்ட முஸ்லிம்கள் தீண்டாமை அனுசரிக்கலாமா? எங்கள் வீட்டில் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இந்து பெண் சமையல் பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, வீடு பெருக்குவது போன்ற பணிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். எங்கள் கிராமத்தில் அநேக வீடுகளில் வீட்டு வேலை செய்வது தலித் மற்றும் பிறபடுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்கள் தான். நாங்கள் யாரும் தீண்டாமையை கடைபிடிப்பதில்லை. ஆனால் இஸ்லாத்தை சரியாக விளங்காத வட மாநிலங்களில் இன்னும் தீண்டாமை தலைவிரித்தாடுவதை எண்ணி இஸ்லாமியர்கள் வெட்கப்பட வேண்டும். அந்த மக்களுக்கு உண்மை இஸ்லாத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
29-11-2014

http://indianexpress.com/article/india/india-others/one-in-four-indians-admit-to-practising-untouchability-biggest-caste-survey/

Wednesday, November 26, 2014

ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈரும் பேனும்!



உசிலம்பட்டி தொடங்கி பெங்களூரு, அகமதாபாத், மஹாராஷ்டிரா என்று நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக கடந்த மூன்று மாதங்களுக்குள் அடுத்தடுத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிராக ஆதிக்க சாதியினர் நிகழ்த்தியிருக்கும் வன்கொடுமைகளும் – கொலைகளும் வக்கிரம் நிறைந்தவை!

உசிலம்பட்டி – போலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கள்ளர் சாதியைச் சேர்ந்த விமலாதேவி, தமது தந்தையிடம் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்த பள்ளர் சாதியைச் சேர்ந்த திலீப்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வாழ்ந்து வந்தார். வயதுக்கு வந்த இருவர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்த நிலையில், அவர்களை போலீசின் துணையோடு சட்டவிரோதமாகப் பிரித்தனர், கள்ளர் சாதிவெறியர்கள். உசிலம்பட்டி துணைக் கண்காணிப்பாளர் சரவணக்குமார் முன்னிலையில்தான் இந்த சாதிப் பஞ்சாயத்தே நடைபெற்றிருக்கிறது. அங்கே, பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி; உசிலை சட்டமன்ற உறுப்பினரும் பார்வர்டு பிளாக் தலைவருமான கதிரவன்; மார்க்சிஸ்டு கட்சியின் செல்லக்கண்ணு மற்றும் கள்ளர் சாதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் தாலியைக் கழட்டி எறியுமாறு விமலாதேவியை மிரட்டியும் அந்தப் பெண் பணியவில்லை. நீதிமன்றத்தில் விமலாதேவி ஆஜர் படுத்தபட்டபோதும், “என்னை யாரும் கடத்தவில்லை. நான் விரும்பித்தான் திலீப்குமாருடன் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தேன்” என்று உறுதியாக அறிவித்தார். இருப்பினும் அவரைச் சட்டவிரோதமாக சாதிவெறிபிடித்த பெற்றோர்களிடமே ஒப்படைத்தது நீதிமன்றம்.

உடனே, விமலாதேவிக்கு கள்ளர் சாதியைச் சேர்ந்த சதிஷ்குமார் என்பவரோடுகட்டாயத் திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர், அவரது பெற்றோர். அதனை உறுதியாக எதிர்த்து நின்ற விமலாதேவி, அக்-1 அன்று இரவு கள்ளர் சாதி சுடுகாட்டில் எரிந்து சாம்பலாகிக் கிடந்தார். விமலாதேவி தற்கொலை செய்துகொண்டதாகவும், பிணத்தை எரித்துவிட்டதாகவும் திமிராக அறிவித்தனர் கள்ளர் சாதிவெறியர்கள்.

“என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கேசு போட்டுக்கோங்க. ஆனால், என் மகளைக் கொன்னதாகத்தான் கேசு இருக்கனும். அவன் (திலீப்குமார்) பொண்டாட்டினு இருக்கக்கூடாது” என்று கூறியிருக்கிறார், விமலாதேவியின் தந்தை. இக்கூற்று ஒன்றே போதும், சாதிவெறியர்களின் திமிரை நிரூபிப்பதற்கு!

-----------------------------------------------------



மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்திலுள்ள காசர்வாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் ஜாதவ், அவரது மனைவி ஜெயசிறீ மற்றும் அவர்களது மகன் சுனில் ஆகியோர் ஆதிக்க சாதி வெறியர்களால் அக்-21 அன்று நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார்கள். கண்டதுண்டமாக வெட்டப்பட்டு நாலாபுறமும் வீசியெறியப்பட்ட அவர்களது சிதைந்த உடல் பாகங்கள் விவசாயக் கிணற்றிலும், விவசாய நிலத்திலும் அழுகிய நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டது.

கொல்லப்பட்ட சஞ்சய் ஜாதவிற்கு மேல்சாதியை சேர்ந்த திருமணமான பெண்ணொருவருடன் கள்ள உறவு இருந்ததாக குற்றம் சாட்டி இப்படுகொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள். இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நிகழ்ந்துள்ள மூன்றாவது தாழ்த்தப்பட்டோர் படுகொலை இது.

-----------------------------------------------------

பஞ்சாபின் லூதியானா மாவட்டம் ஜமால்பூர் கிராமம். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்களான ஹரிந்தர் சிங்கும் ஜதிந்தர் சிங்கும் தங்களுக்குச் சொந்தமான விளைநிலத்தை ஆக்கிரமித்து அனுபவித்து வரும் உள்ளூர் நிலப்பிரபுவுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தனர். நிலப்பிரபுவின் ஆக்கிரமிப்பை மீறி துணிவுடன் தங்களது நிலத்தில் இறங்கி விவசாயம் செய்ய முற்பட்டதற்காக அச்சகோதரர்கள் இருவரும் செப்.27 அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்களுடனான மோதலில் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவித்தது போலீசு. ஆனால் அந்த நிலப்பிரபு, தனது கைக்கூலியான அகாலி தளக் கட்சியின் பிரமுகரை வைத்து இந்தக் கொலையைச் செய்திருப்பதும், கொலைகாரர்களைக் காப்பாற்றும் பொருட்டு இதனை மோதல் கொலை என்று போலீசு சித்தரித்திருப்பதும் இப்போது அம்பலமாகியுள்ளது.

----------------------------------------------------

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவன் பி.ரமேஷ். சற்றே விலை கூடிய கைக்கடிகாரத்தை அவர் அணிந்திருந்ததை ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவரிடமிருந்து அதனைப் பிடுங்கி எறிய முயன்றுள்ளனர். ரமேஷ் அதனை எதிர்த்திருக்கிறார். கடந்த அக்-3 அன்று திருத்தங்கல் இரயில் நிலையம் அருகே ரமேஷை வழிமறித்த அந்த சாதிவெறி பிடித்த மாணவர்கள் கடிகாரம் கட்டிய மணிக்கட்டை வெட்டிச் சிதைத்தனர்.

-----------------------------------------------------

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள கிராமம் செவ்வூர். இக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் சிங்கப்பூர் சென்று வேலை செய்வதால், எல்லோரிடமும் நிலம் இருக்கிறது. குடியிருப்புகளும் பெரும்பாலும் கான்கிரீட் வீடுகளாகியிருக்கின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஓரளவு முன்னேறியிருக்கின்ற காரணத்தால், தப்படிப்பது, சாவுச்சேதி சொல்வது உள்ளிட்ட சாதி அடிப்படையிலான அடிமைத்தொழில்ளைச் செய்யமாட்டோம் என மறுத்திருக்கின்றனர். இதன் காரணமாக கடந்த மே மாதம் முதல் தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் அனைத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து சமூகப்புறக்கணிப்பை அறிவித்திருக்கிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள்.

-------------------------------------------------------

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டம், பாய்லா கிராமத்தைச் சேர்ந்த மெகுல் காபிரா, வால்மீகி என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர். தன்னைப் போலவே தனது பிள்ளையும் துப்புரவுப் பணியாளராக அடிமைத் தொழில் செய்யக்கூடாது என்றெண்ணிய அவரது தந்தை, கடன்பட்டு மகனுக்கு ஆட்டோ ஒன்றை வாங்கித் தருகிறார். “குப்பை அள்ளும் சாதிக்காரன், ஆட்டோ ஓட்டுவதா?” என்று கருவிக் கொண்டிருந்த ஆதிக்க சாதிக் கும்பல் ஒன்று அவரது ஆட்டோவை அடித்து நொறுக்கியதோடு, அவரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியது. கடந்த 2012-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்திற்காக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

------------------------------------------------------

பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் உள்ள ஜெயநகரை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான ராஜ்குமாரின் எட்டு வயது மகன் சந்தோஷ், கடந்த அக்-19 அன்று தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு, அருகிலுள்ள ருத்ரேஸ்வரா கோயிலுக்குள் தண்ணீர்க் குடிப்பதற்காகச் சென்றிருக்கிறான். அப்போது கோயிலில் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்த கோயில் பூசாரி விஜயகுமாரிடம் தங்களுக்கும் பிரசாதம் வழங்குமாறு அச்சிறுவர்கள் கேட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்துவிட்டதைக் கண்டு ஆத்திரமுற்ற பூசாரி விஜயகுமார், சிறுவர்கள் சந்தோஷ் மற்றும் அவனது நண்பர்களான சேத்தன், கௌதம் ஆகியோரை தடியால் தாக்கியிருக்கிறான். நண்பர்கள் ஓடிவிட, சந்தோஷை மட்டும் பிடித்துக்கொண்ட பூசாரி விஜயகுமார், அவனை வெயிலில் முட்டி போடவைத்து சித்திரவதை செய்திருப்பதோடு, அச்சிறுவனது மண்டை உடைந்து இரத்தம் கொட்டுமளவிற்கு தாக்கியிருக்கிறான்.

-------------------------------------------------------

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சாமானியனுக்கு மட்டுமல்ல; மாநில முதல்வர் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் கூட, ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைகளிலிருந்து தப்பித்து விடமுடியாது என்பதற்கு பொருத்தமான உதாரணம், பீகார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜிக்கு நேர்ந்த அவலம்.

பீகார் முன்னாள் முதல்வரான தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த போலோ பஸ்வான் சாஸ்திரி நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி, “கடந்த ஆக-15-ம் தேதியன்று அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கினங்க மதுபானி மாவட்டத்திலுள்ள பகவதி பரமேசுவரி கோயிலுக்குச் சென்றிருந்தேன். நான் அக்கோயிலுக்கு சென்று திரும்பிய பிறகு, தீட்டுக்கழிப்பு சடங்குகள் நடத்தி, கோயில் கழுவப்பட்டிருக்கிறது” என தனக்கு நேர்ந்த வன்கொடுமையைச் சுட்டிக்காட்டி, சாதிவெறியர்களின் வக்கிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் நாளேடுகளில் வெளிவந்துள்ள வன்கொடுமை பற்றிய செய்திகள் இவை. உசிலம்பட்டி சாதிவெறிக் கொலையாகட்டும், லூதியானாவில் நடத்தப்பட்டிருக்கும் கொலையாகட்டும் இரண்டிலுமே சாதிவெறியர்களும் போலீசும் ஓட்டுக் கட்சிகளும் கூட்டணியாகச் செயல்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். உசிலைக் கொலையில் நீதிமன்றமும் ஆதிக்க சாதிவெறிக்குத் துணை நின்றிருக்கிறது.

விருதுநகர் சம்பவம், மாணவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதிவெறிக்கு அச்சுறுத்தும் சான்றாக இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தைக் காட்டிலும் சமூகத்தின் பண்பாடு பின்னோக்கிச் செல்வதையும், தாழ்த்தப்பட்ட மக்கள் தம் வாழ்க்கையில் எட்டிப் பிடிக்கின்ற எளிய முன்னேற்றத்தைக்கூட சகித்துக் கொள்ள இயலாத அளவிற்கு ஆதிக்க சாதியினர் மத்தியில் சாதிவெறி கொழுந்து விட்டு எரிகிறது என்பதற்கு சிவகங்கை, அகமதாபாத் சம்பங்கள் எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

பெங்களூருவிலும் மகாராஷ்டிராவிலும் பீகாரிலும் நடைபெற்றுள்ள சம்பவங்கள் பிற்போக்கான காட்டுமிராண்டி நிலையிலேயே இந்தியச் சமூகத்தின் பல பகுதிகள் நீடிப்பதைக் காட்டுகின்றன. குறிப்பாக, தனக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமை பற்றி ஒரு மாநில முதலமைச்சரே வெளிப்படையாகத் தன் குமுறலை வெளியிட்ட பின்னரும், ஓட்டுக்கட்சிகளோ, ஊடகங்களோ அது பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அந்தக் குறிப்பிட்ட தொகுதியின் எம்.எல்.ஏ. வெளியிட்ட மறுப்புச் செய்தியோடு அப்பிரச்சினை அமுக்கப்பட்டுவிட்டது.

தருமபுரி இளவரசன் கொலைக்குப் பிறகு, தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் ஒரு சேரி உருவாக்கப்பட்டிருக்கிறது. வெறி பிடித்த வன்மத்தோடு தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக ரீதியாகப் பின்னோக்கித் தள்ளப்படுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக வெளிப்படும் வன்முறை, இது ஒரு பொதுப்போக்காக வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

நாடெங்கும் புதுப்புது வடிவத்திலான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதற்கும், கண்ணகி-முருகேசன் கொலை உள்ளிட்ட கொடிய வன்கொடுமைக் குற்றங்களில் கூட யாரும் தண்டிக்கப்படாத நிலையிலும், அச்சட்டதையே நீக்க வேண்டும் என்று ஆதிக்க சாதிவெறியர்கள் கூச்சலிடுவதற்கான அடிப்படை என்ன?

அதிகரித்து வரும் நகரமயமாக்கம், தவிர்க்கவியலாமல் காதல் திருமணங்களுக்கும் சாதிரீதியான ஒன்றுகலத்தலுக்கும் வழிவகுக்கிறது. தருமபுரி முதல் உசிலை வரையிலான பல நிகழ்வுகள் அதற்குச் சான்றாக உள்ளன. இந்த மாற்றத்தை கிராமப்புறத்தில் சாதியக் கலாச்சாரத்தில் ஊறியிருக்கும் பழமைவாதப் பெற்றோர்களால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை என்ற போதிலும், இந்த முரண்பாடு ஒரு கலவரமாக வெடிப்பதற்கு அப்பெற்றோர்கள் காரணமாக இருப்பதில்லை.
எல்லா சாதிகளிலும் தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் விளைவாக உருவாகியிருக்கும் புதிய வகை தரகு வர்க்கங்களும், அரசியல் பிழைப்புவாதிகளும்தான் இந்த முரண்பாட்டைத் தீவிரப்படுத்துகிறார்கள். அது மட்டுமல்ல, சொல்லிக்கொள்ளப்படும் இந்த வளர்ச்சியாக இருக்கட்டும், கைபேசி முதல் இணையம் வரையிலான முன்னேற்றங்களாக இருக்கட்டும், இவை எதுவும் சமூகத்தில் ஒரு ஜனநாயகப் பண்பாட்டை உருவாக்கவில்லை; மாறாக, சீரழித்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் போலவே, பெண்களுக்கும், சிறுமியர்க்கும் எதிரான பாலியல் குற்றங்களின் அதிகரிப்பும், திருட்டு, ஆதாயத்துக்கான கொலைகள், மோசடிகள், முதியோர் கொலைகள் உள்ளிட்ட குற்றங்களின் அதிகரிப்பும் இந்த வளர்ச்சிப்பாதை தோற்றுவித்துள்ள கொடிய விளைவுகள் என்பதைக் கணக்கில் கொண்டு, இவற்றுக்கெதிரான போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கிறது.

- இளங்கதிர்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014

Saturday, September 06, 2014

அஸ்ஸாமில் இரு பெண்கள் கற்பழித்து தூக்கில்!





அஸ்ஸாம் மாநிலத்தில் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர். ஒரு பெண் பத்தாம் வகுப்பும் மற்ற பெண் ஒன்பதாம் வகுப்பும் படித்து வந்தனர். நிலாம் பஜார் என்ற இடத்தில் இந்த பள்ளி அமைந்துள்ளது. சென்ற புதன் கிழமையிலிருந்து இந்த இரு பெண்களும் வீட்டுக்கு வரவில்லை. எனவே காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். நேற்று இந்த பெண்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய வண்ணம் கண்டுபிடிக்கப்பட்டனர். இது கற்பழிப்பு கொலையா அல்லது வேறு பிரச்னைகளா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். கிராமத்து மக்கள் 'இவர்களை கற்பழித்து கொன்று விட்டு அதனை மறைக்க தூக்கில் ஏற்றியுள்ளனர்' என்கின்றனர்.

கரீம் கஞ்ச் காவல் துறை அதிகாரி நபின்சிங் செய்தியாளர்களிடம் பேசும் போது 'இரண்டு உடல்களையும் போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பியுள்ளோம். அறிக்கைக்காக காத்திருக்கிறோம்' என்கிறார். வழக்கம் போல் இது காதல் தோல்வி என்று சொல்லி ஆதிக்க சாதி இளைஞர்கள் சுதந்திரமாக வெளியில் உலா வருவர். இது வழக்கமாக நடப்பது தானே! மனமுடைந்த ஒரு பெண்ணால் இவ்வளவு உயரம் மரத்தின் மேல் ஏறி தூக்கில் தொங்க முடியுமா? இதற்கு சாத்தியமா? என்று நம்மால் புரிந்து கொள்ள முடிந்ததை நமது நாட்டு நீதி மன்றங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு தான் இதே போல் உத்தர பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்க விட்ட கொடுமையை பார்த்தோம். தலித்களின் உயிரானது அவ்வளவு இலகுவாக தெரிகிறது ஆதிக்க சாதி இளைஞர்களுக்கு!

வெட்கப்படுங்கள் ஆட்சியாளர்களே!
வெட்கப்படுங்கள் ஆண் மக்களே!
வெட்கப்படுங்கள் ஆதிக்க சாதியாளர்களே!
வெட்கப்படுங்கள் இந்திய குடிமகன்களே!
வெட்கப்படுங்கள் இந்துத்வவாதிகளே!

தகவல் உதவி:
தி ஹிந்து நாளிதழ், என்டிடிவி
05-09-2014

Thursday, September 04, 2014

தீண்டாமைக் கொடுமை - தலித் மாணவன் கை வெட்டு!



விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைக்கடிகாரம் கட்டி சென்றதற்காக அவரை தலித் அல்லாத பிற சமூக மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கி, மணிக்கட்டையும் வெட்டி விட்டனர். இந்த செயலால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. புதன்கிழமை இரவு (03.09.14) இந்த சம்பவம் நடந்துள்ளது.


சம்பந்தப்பட்ட மாணவர் திங்கள்கிழமை (01.09.14) பாடசாலைக்கு சென்றபோது கைக்கடிகாரம் கட்டி சென்றதற்காக சாதி வெறியில் இந்த வெறிச் செயலில் அந்த மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


திருத்தங்கல், திருவள்ளுவர் காலனி பகுதியைச் சேர்ந்த 16 வயதான பரஞ்சோதி ரமேஸ் திருத்தங்கல் அரசு ஆண்கள் மேல் நிலைப் பாடசாலையில் பிளஸ் 1 படித்து வருகிறார்.


திங்கள்கிழமை (01.09.14) அன்று பாடசாலைக்கு சென்ற ரமேஸ் கையில் கைக்கடிகாரம் கட்டியுள்ளார். இதைப் பார்த்த பிளஸ் 2 மாணவர்கள் சிலர் ஏன் கைக்கடிகாரம் கட்டி வந்தாய் எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் கடிகாரத்தைக் கழற்றி தூக்கி கீழே போட்டு உடைத்துள்ளனர். இதை எதிர்த்து ரமேஸ் அவர்களுடன் சண்டைக்குப் போயுள்ளார். பின்னர் மற்ற மாணவர்கள் விலக்கி விட்டுள்ளனர்.


இந்த நிலையில் நேற்று இரவு (03.09.14) ரமேஸ், திருத்தங்கல் ரயில் நிலையம் அருகே நடந்து போய்க் கொண்டிருந்தபோது 15 மாணவர்கள் சேர்ந்து ரமேஸை தடுத்து நிறுத்தி உள்ளனர். பின்னர் அனைவரும் சேர்ந்து ரமேஸை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ரமேஸ் நிலை குலைந்தார். இந்த நிலையில் திடீரென கத்தியை எடுத்து ரமேஸின் மணிக்கட்டை வெட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஸ் அவர்களிடமிருந்து கடுமையாக போராடி தப்பி ஓடி சென்று தனியார் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவரை குடும்பத்தினர் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று சேர்த்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சம்பந்தப்பட்ட அரசுப் பாடசாலையில் தீண்டாமைக் கொடுமை, மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் உள்ளதாகவும், இதுதொடர்பாக அடிக்கடி அங்கு மோதல்கள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் செருப்பு போடக் கூடாது, கடிகாரம் கட்டக் கூடாது என்று பல வகையிலும் மற்ற சமூக மாணவர்களால் துண்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன.


இதுதொடர்பாக ஏற்படும் மோதல்களை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் தலையிட்டு அமைதிக் கூட்டம் நடத்தி கட்டுப்படுத்தி வருகிறார்களாம். ரமேஸ் தாக்குதல் குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

tamil.oneindia.in/news/tamilnadu/dalit-boy-s-wrists-cut-wearing-watch-school-tamil-nadu-210256.html

ஒரு தலித் மாணவன் அவனது தந்தையின் உழைப்பில் கைக்கடிகாரம் கட்டிக் கொள்வது அவ்வளவு பெரிய பாவங்களா?

ம்.... ம்... இந்துத்வ ஆட்சியில் இன்னும் எதெல்லாம் அரங்கேறப் போகிறதோ!

அமீத்ஷா வோடு கூட்டு சேர்ந்து முஸ்லிம்களை எவ்வாறு ஒழிக்கலாம் என்று யோசிப்பதை விடுத்து இது போன்ற சாதி மோதல்களை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தால் இந்து மதத்தின் அழிவையாவது தடுக்க முடியும்.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

Tuesday, August 19, 2014

மிரட்டுவதால் தீண்டாமையை மறைத்து விட முடியுமா?





திரு ஆனந்த்!

//you are exceeding the limit. Don't think hindus will keep quiet all the time. our tolerance have a limit.//

எனது பதிவுகள் எதுவுமே ஆதாரமில்லாமல் இருக்காது. நான் இந்திய கலாசாரங்கள் என்று வரிசையாக பட்டியலிட்டுள்ளேன். இவை எல்லாம் நடை பெறவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? நீங்கள் அனைத்திற்கும் ஆதாரங்கள் கேட்டால் அனைத்தையும் தரத் தயாராக இருக்கிறேன். மேலும் எந்த இடத்திலும் நான் யாரையும் தரக் குறைவாக எழுதவும் இல்லை. நீங்கள் வணங்கும் கடவுள்கள் பற்றி நான் விமரிசிக்கவும் இல்லை. அது எனக்கு தேவையும் இல்லை.

அடுத்து இந்துக்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருக்க மாட்டார்கள் என்று வேறு மிரட்டுகிறீர்கள். இந்துக்கள் என்ற பெயரே மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் கணக்கெடுப்பு நடத்துவதற்காக சூட்டிய பெயர். முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் என்று உலக மதங்களை தழுவாத அனைவரும் இந்துக்கள் என்று நமது சட்டம் கூறுகிறது.

இந்து மதம் என்றால் அதன் உண்மையான பொருள் பார்பன மதம் என்பதுதான். இதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள். தலித்கள், பிறபடுத்தப்பட்ட மக்களான வன்னியர்கள், நாடார்கள், செட்டியார்கள் என்று அனைத்து சாதிகளையும் கழித்து விட்டுப் பார்த்தால் ஒட்டு மொத்த இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதமே நீங்கள் தேறுவீர்கள். ஐந்து சதவீதம் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். ஒட்டு மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீதமே இருக்கும் பார்பனர்களின் வசதிக்காக மற்ற 95 சதவீதமான மக்கள் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?

தலித்களும் மற்ற பிற்படுத்தப்பட்ட மக்களும் வணங்கும் தெய்வத்துக்கும் நீங்கள் வணங்கும் தெய்வத்துக்குமே மிகுந்த வேறுபாடு. சுடலை மாடன் போன்ற நாட்டுப்புற கடவுள்களை நீங்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இந்த கடவுள் வழிபாடுகளும் இந்த மக்களும் இந்த மண்ணுக்கு சொந்தமானவர்கள். அங்குள்ள வழக்கங்களும், வணக்க வழிபாடுகளும் நீங்கள் ஸ்ரீரங்கத்திலோ, காஞ்சிபுரத்திலோ, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலோ கடைபிடிப்பதற்கு நேர் மாற்றமாக இருக்கும். தமிழுக்கும் உரிய அந்தஸ்தை கொடுக்க மாட்டீர்கள். ஏனெனில் உங்கள் தாய் மொழி சமஸ்கிரதம். இங்குள்ள பூசாரியை உங்கள் கோவிலில் மந்திரங்கள் சொல்ல அனுமதிக்க மாட்டீர்கள். அதற்கு உங்களின் ஆகம விதிகளும் இடம் கொடுக்காது. தலித் மக்களை உங்கள் கோவில்களுக்குள்ளும் அனுமதிக்க மாட்டீர்கள். அவர்களை தொட்டாலே உங்களுக்கு தீட்டு ஒட்டிக் கொள்ளும். திருமண பந்தமும் ஏற்படுத்திக் கொள்ள மாட்டீர்கள்.

ஆனால் முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் கலவரத்தில் கொல்லவும் அவர்களின் பொருள்களை கொள்ளையடிக்கவும் தலித்கள் உங்களுக்கு தேவைப்படுவார்கள். இந்த இடத்தில் மட்டும் நாமெல்லாம் ஒன்று என்று பாசம் பீறிட்டுக் கொண்டு வரும். கோவை கலவரம் முதல் இந்தியாவில் நடந்த பல கலவரங்களும் இந்த அடிப்படையிலேயே நடந்தன.

பல நாட்களாக உங்களின் இந்த சூழ்ச்சியை பார்த்து வந்ததாலோ என்னவோ இப்போதெல்லாம் அந்த மக்கள் உங்களிடம் ஒண்டுவதை விட இஸ்லாமியர்களான எங்களிடமே அதிக பாசத்தோடு இருக்கிறார்க்ள. எல்லோரும் படிக்க ஆரம்பித்ததால் உண்மைகளை அந்த மக்கள் இன்று சரியாகவே உணருகின்றனர்.

உங்களின் இந்த மிரட்டல்கள் படிப்பறிவில்லாத உபி, பீகார், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் எடுபடலாம். ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் உங்கள் திட்டம் பலிக்காது. இவ்வளவு பெரிய மோடி அலைகளிலேயே தமிழகத்தில் ஒரு இடத்தையும், கேரளாவில் மிகப் பெரிய தோல்வியையும் தழுவினீர்கள். அமீத்ஷா தமிழக பாஜகவின் தலைவரானாலும் தமிழகம் அமைதிப் பூங்காவாகவே இருக்கும். ஏனெனில் இங்குள்ள பெரும்பான்மையான இந்து மக்கள் பெரியாரின் வழியைப் பின்பற்றுபவர்க்ள.

எனவே என் மீது கோபப்படுவதை விட்டு விட்டு உங்கள் மதத்தில் இருக்கும் மூடப்பழக்கங்களை ஒழிக்கப் பாடுபடுங்கள். தீண்டாமையை களைய முயற்சி செய்யுங்கள். இந்நாட்டின் பூர்வ குடிகளான தலித்களுக்கு அவர்களின் உரிமையை கொடுங்கள். இனியும் பிராமணன், சூத்திரன் என்று பேசிக் கொண்டிருந்தால் இருக்கும் மற்றவர்களும் இஸ்லாத்தை நோக்கி ஓடி வருவார்கள். பிறகு பார்பனர்களான உங்களுக்கு இப்போது கிடைக்கும் அந்த மரியாதையும் இல்லாமல் போகும். பிறகு உங்கள் இஷ்டம். எங்களுக்கில்லை கஷ்டம்.

தமிழகத்திலும் நமது இந்தியாவிலும் தலித்கள் எந்த அளவு மோசமாக நடத்தப்படுகின்றனர் என்பதை விளக்கும் ஆவணப்படங்கள்....




Tuesday, August 12, 2014

அமெரிக்காவில் கொள்ளையோ கொள்ளை!





அமெரிக்காவின் மிசூரி நகரத்தில் மிகப் பெரிய கலவரம் நடந்துள்ளது. மெக்கேல் புரொவ்ன் என்ற 18 வயது கருப்பு நிற இளைஞன் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு இன மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது.

இந்த போராட்டத்தில் சமூக விரோதிகளும் இடையில் புகுந்து கடைகளை உடைப்பதும் அங்குள்ள பொருள்களை கொள்ளையடிப்பதுமாக தொழில் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது திருடர்கள் கொள்ளையடிப்பதை நேரலையாக பாருங்கள் :-) ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் கொள்ளையடிப்பதிலும் சரி நிகர் சமானம் என்று நிரூபித்துக் கொண்டுள்ளனர்.

படிப்பிலும் நாகரிகத்திலும் நாங்களே முதல் என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் அன்று முதல் இன்று வரை சரிசமமாக நடத்தப்படுவதில்லை. அந்த வேகம் இன்று ஏதாவது ஒரு சம்பவத்தின் மூலம் உடன் பற்றிக் கொள்கிறது.

உலகத்தை நாங்களே ஆளப் பிறந்தவர்கள் என்று பாலஸ்தீனிலும், ஈராக்கிலும், சிரியாவிலும், ஆப்கானிஸ்தானத்திலும் மூக்கை நுழைத்து அந்த நாடுகளை துவம்சம் செய்யும் ஒபாமாவே! உனது நாட்டு மக்களுக்கு நீதி வழங்கி விட்டு பிறகு வளைகுடா பக்கம் உனது பார்வையை செலுத்து. போராட்டம் மேலும் விரிவடைவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Saturday, December 14, 2013

பாரதியின் ஆரியப் பற்றும் சாதி வெறியும்!



தமிழ் மொழியின் கவிதைகள் என்று வந்தால் அங்கு பாரதிக்கு தனி இடமே உண்டு. எளியவரும் எளிதாக விளங்கிக் கொள்ளும் வண்ணம் பாரதியின் ஆக்கங்கள் இருக்கும். வார்த்தைகள் இவரிடம் துள்ளி விளையாடும். ஆனால் இவ்வளவு அழகிய கவிதை ஆற்றல் உள்ளவரிடம் ஆங்காங்கே ஆரியர் மேலானவர் மற்றவர் கீழானவர் என்ற பார்பன பொது புத்தியும் ஆங்காங்கே தலை காட்டத் தயங்குவதில்லை. இனி ஒரு சில கவிதைகளை பார்ப்போம்.

மன்னும் இமய மலையெங்கள் மலையே
மாநில மீதது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே 1


மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை நாடே 2

இவ்வளவு அழகாக தாய் நாட்டின் பெருமைகளை சொல்லி வரும்போது கூடவே ஆரிய மேலாண்மையும் தலைகாட்டுகிறது. அதையும் பார்ப்போம்.


இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும்இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும்எக் காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஒதுவம் இஃதை எமக்கிலை ஈடே

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்?-எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய ராணியின் வில்

சித்த மயமிவ் வுலகம் உறுதிநம்
சித்தத்தில் ஓங்கிவிட் டால்-துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்

ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே”

“வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்”.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும்.நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்ற வர்ணாஸ்ரம தர்மத்தை தூக்கிப் பிடித்த பாரதி பாடுகிறார்

நாலு குலங்கள் அமைத்தான் – அதை
நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி

இவ்வவளவு நச்சுக் கருத்துக்களையும் சொல்லி விட்டு சாதிகள் இல்லை என்று உடனே பிளேட்டை மாற்றிப் போடுகிறார் பாரதி!

சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன் றாயிருந்தா லும்-ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடு வார்;
ஆத்திரங்கொண்டே இவன் சைவன்-இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்.

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்தியா மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க

'சூத்திரனுக்கோர் நீதி தெண்டச் சோறுண்ணும்

பார்ப்புக்கு ஒரு நீதி என்று

சாத்திரம் சொல்லுமாயின் அது சாத்திரமல்ல'

என்று தனது இனத்தை தட்டிக் கேட்கவும் தயங்கவில்லை.

இவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும் கஞ்சாவை உள்ளே அடிக்கடி தள்ளிக் கொள்வார் என்றும் படித்திருக்கிறேன். போதை தலைக்கேறாத போது ஒரு பாரதியாகவும், போதை தலைக்கேறியவுடன் ஆரியப் பித்து பிடித்து அலைந்த ஒரு கவியாகவும்தான் நான் பாரதியை பார்க்கிறேன்.

இதிலிருந்து கவிஞர்களின் கருத்துக்களையும், கவி புனையும் திறன்களையும் நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தெளிவாகிறது. எனவே தான் வைரமுத்து கூட 'கவிதைக்கு பொய்யழகு' என்று பாடினாரோ!

Friday, November 01, 2013

சாதித் திமிரின் மற்றுமொரு கோர முகம்!



சிறுமியை பொசுக்கிய சாதி'தீ ..

7 வயது கமலேஷின் அழகிய இளம் பிஞ்சு கைகள் தீயில் பொசுக்கப்பட்டு உருகுலைந்துள்ளது. உபி மதுரா மாவட்டத்தை சேர்ந்த இந்த ஏழு வயது சிறுமி கமலேஷ் பிறக்கும் போது மற்ற குழந்தைகளைப் போல ஆரோக்கியமான கைகளுடந்தான் தான் பிறந்தாள் . இவள் செய்த ஒரே தவறு ஒடுக்கப்பட்ட சாமர் [chamar ] சாதியில் பிறந்தது . ' உயர்ந்த 'சாதியினர் வசிக்கும் தெருவின் வழியாக தனது தாயுடன் சென்று தீட்டு ஏற்படுத்தியதால் எரியும் குப்பையில் தள்ளி இந்த 7 வயது சிறுமியை தண்டித்தனர் அந்த 'உயர்ந்த' மனிதர்கள் . இன்று வரை இந்த சாதி வெறியர்களை சட்டம் தண்டிக்கவில்லை .

அடப் பாவிகளா....அந்த உழைக்கும் மக்களை விட நீங்கள் எந்த வகையிலடா உயர்ந்து விட்டீர்கள்? வெள்ளையனுக்கு வெஞ்சாமரம் வீசி அவன் சொல்லுக்கெல்லாம் ஆட்டம் போட்டு அவனிடம் அரசு உத்தியோகங்களை வஞ்சகமாக பெற்றீர்கள். அதன் தொடர்ச்சியாக படித்தவன் பிள்ளை படித்தவனாக தொடர்ந்து இன்று மேனா மினுக்கியாக உலா வருகிறாய். நாட்டு சுதந்திரத்துக்காக வெள்ளையனை எதிர்த்த கூட்டங்களெல்லாம் தேச துரோக கூட்டமாக வெள்ளையனால் சித்தரிக்கப்பட்டது. அந்த பொய்களை இன்று வரை அச்சில் ஏற்று வருகிறீர்கள். சுதந்திரத்துக்கு உழைத்த கூட்டமான முஸ்லிம்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் இன்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின் தள்ளப்பட்டுள்ளார்கள். வெள்ளையனுக்கு ஒத்தூதிய மேல் சாதியினர் இன்று அனைத்து அதிகார வரம்பிலும் நீக்கமற நிறைந்து 'நாங்களே இந்த நாட்டின் உண்மையான தேசபக்தர்கள்' என்று கூவி வருகின்றனர்.

காலம் இப்படியே சென்று விடாது. ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் வெகுண்டெழுந்தால் 3 சதவீதமே இருக்கும் இந்த மேல் சாதியினரின் அயோக்கியத்தனங்களும், அதனை நிலை நிறுத்தி வரும் மனு சட்டங்களும் குப்பை கூடங்களை நோக்கி செல்லும். அந்த நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.

Kamlesh was just seven when she was pushed onto a pile of burning rubbish while walking with her mother. This was her punishment for walking along a path reserved for 'high' caste people. Ironically, Kamlesh comes from the same caste as the Chief Minister of her state, Mayawati.

Much caste-based violence goes unrecorded, but in 2008 alone, 33,000 crimes against Dalits appeared in official statistics. In most cases, perpetrators escape justice, or cases simply drag on for many years. Kamlesh's case continues.

Mathura District, Uttar Pradesh.

http://marcusperkins.photoshelter.com/gallery-image/Indian-Dalits-Being-Untouchable-Preview/G0000cM_1nMFYTKc/I0000ZAN3o3x1E0g

தீபாவளி கொண்டாடும் நமது சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த நாளில் மத வேற்றுமைகளை மறந்து நமது தேசத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல சபதமேற்போம்.

நாடு கடந்து சென்றும் தீண்டாமை விடவில்லையே!





நமது நாட்டு தீண்டாமை பழக்கமானது படித்து விட்டால் மறைந்து விடும் என்றோம். எனவே சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களை படிக்க வைத்தோம். ஆனால் படித்தவர்களிடம் தான் தீண்டாமை அதிகம் உள்ளது என்பதை இணையத்தின் வாயிலாகவே தெரிந்து கொள்கிறோம். மத்திய அமைச்சரானாலும் அவரை ஒரு தாழ்த்தப்பட்டவராகவே பார்க்கும் மனோபாவம் தான் இன்றும் நிலவுகிறது. ஜெகஜீவன்ராம் எந்த அளவு வேதனைப் பட்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.

வெளி நாடுகள் சென்று விட்டால் இந்த தீண்டாமை முற்றாக அழிந்து விடும் என்ற வாதமும் வைக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதை விளக்குவதே இந்த பதிவு.

கடந்த அக்டோபர் 19ந்தேதி லண்டன் மாநகரில் 1000க்கும் அதிகமான மக்கள் தீண்டாமைக்கு எதிராக ஊர்வலமாக சென்றுள்ளனர். அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் நமது இந்தியர்கள். அதாவது நாடு விட்டு நாடு சென்றாலும் நமது இந்திய நாட்டின் சாதி திமிரையும், தீண்டாமையையும் எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று வீராப்புடன் நாம் இன்றும் உள்ளதை இந்த ஊர்வலம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

நமது நாட்டிலாவது சேரிகள் சுத்தமில்லாமல் இருக்கும். அங்கு வாழும் மக்கள் சிறந்த உடைகளை உடுத்துவதில்லை. எனவே சமூகத்தவரால் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டனர் என்று சமாதானம் கூறலாம். ஆனால் லண்டன் தெருக்கள் மிக சுத்தமாக இருக்கும். இங்கிருந்து சென்ற தலித் மக்களும் நன்றாக படித்து சிறந்த உத்தியோகங்களை பார்க்கின்றனவர்கள்.

இப்படி சமூகத்தில் சிறந்த நிலையில் உள்ளவர்களையே பிறந்த சாதியைக் காரணம் காட்டி ஒதுக்குகின்றோமே இதற்கு இந்தியனான நாம் வெட்கப்பட வேண்டாமா? உழைத்து சம்பாரிக்கும் இந்த மக்களை விட எந்த விதத்தில் உயர் சாதியினர் உயர்ந்து விட்டனர்?

இந்த மக்கள் போராட்டமானது ஹைட் பூங்கா வழியாக மிக முக்கிய சாலைகளை கடந்து சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பெண்கள், சிறுவர்கள், வயோதிகர்கள் என்று அனைவரும் தங்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளை உரத்துச் சொல்லிச் சென்றனர்.

அவர்கள் கொண்டு சென்ற பதாகைகளில் அதிகம் “Down with Caste System”, “We want freedom- now”, “We want equality” என்ற வாசகங்கள் அதிகம் இருந்தன. பஞ்சாபியர்கள் இதில் அதிகம் கலந்து கொண்டனர். கணிணி யுகத்தில் வாழ்ந்து வரும் நாம் இன்றும் 'எங்களை சமமாக நடத்துங்கள்' என்று அந்த மக்கள் கேட்பதை நினைத்து இந்தியர்களாகிய நாம் வெட்கப்பட வேண்டாமா?

இந்தியாவை புரட்டிப் போட வந்திருப்பதாக இந்துத்வாவாதிகளால் அடையாளம் காட்டப்படும் நரேந்திர மோடி இது போன்ற சமூக அவலங்களை கையில் எடுக்கக் கூடாதா? இஸ்லாமியர்களை கொன்று அதன் மேல் பிரதமர் பதவியில் அமரத்துடிக்கும் மோடி இது போன்ற சமூக அவலங்களை கையில் எடுத்தால் நமது நாட்டு மானமாவது ஓரளவு காப்பாற்றப்படும். ஆனால் இது போன்ற சீர்திருத்தங்களைக் கையில் எடுத்தால் ஆர்எஸ்ஸால் ஓரங்கட்டப்படுவோம் என்பதையும் அறியாதவர் அல்ல மோடி. இந்த கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி இஸ்லாத்தை ஏற்றால் அங்கும் வந்து அவர்களை கொடுமைப்படுத்தும் நம் நாட்டு இந்துத்வாவினரை என்ன செய்வது?

நமது நாட்டையும் மக்களையும் இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

http://breakfastnews.tv/thousands-march-through-london-calling-on-government-to-implement-caste-legislation-now/

Friday, October 04, 2013

குஜராத்தில் 'தலித் பசு' , 'பார்ப்பன பசு' அதிசயம் பாரீர்!



மோடி ஆட்சி செய்யும் குஜராத்தின் மெஹசனா [ Mehsana dist ] மாவட்டத்தில் உள்ள பால் கூட்டுறவு நிறுவனங்கள் தலித் மக்களிடமிருந்து பாலினை வாங்குவதில்லை . காரணம் மேல் சாதியினர் தலித்கள் வளர்க்கும் ''தலித் பசுக்களிடம் '' இருந்து பெறப்படும் பாலினை வாங்க மாட்டார்களாம் . சாதிவெறி மாடுகளை கூட விட்டு வைக்காம தலித் கோமாதா பார்ப்பன கோமாதானு பிரிக்கப்படும் கொடுமை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. இந்து மதத்தை காக்க புது அவதாரம் எடுத்திருக்கும் மோடியின் ராஜ்ஜியத்தில் தான் இந்த கூத்து நடப்பதாக 'ஹிந்து பத்திரிக்கை' செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கணிணி யுகத்திலும் இபபடி ஒரு காட்டுமிராண்டித் தனமான எண்ணம் அந்த மக்களிடத்தில் எப்படி வந்தது? இதற்கு யார் காரணம்? ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஒரு தலித் பெண்ணை 'சூன்யக்காரி' என்று பொய்யாக புனையப்பட்டு கிராமத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டுள்ளார். ஹரியானா, ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் தலித்களை கூட்டாக கற்பழிக்கும் கொடுமை இன்று வரை நடந்து வருகிறது.

ஏன் இந்த கொடுமை? அந்த மக்கள் செய்த பாவம் என்ன? இந்நாட்டு பூர்வ குடிகளை சம்பந்தமே இல்லாமல் எண்ணிக்கைக்காக இந்து மதத்துக்குள் கொண்டு வந்து இன்று வரை அந்த மக்களை ஏன் வாட்டி வதைக்கிறீர்கள்? உழைக்கும் மக்களை இப்படி கொடுமை படுத்தினால் சமத்துவம் கிடைக்கும் வேறு மதத்துக்கு மாறாமல் என்ன செய்வார்கள்? மோடியை பிரதமராக்க துடித்துக் கொண்டிருக்கும் இந்துத்வாவாதிகள் இந்த அவலங்களை மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றால் நல்லது.



In Gujarat’s Mehsana district, Dalits cannot sell milk to cooperatives as it comes from ‘Dalit’ cows; in Rajasthan’s Ajmer, a Dalit woman is branded a witch, beaten and ostracised from the village; in Orissa’s Kandhamal, a Dalit girl was trafficked for sex and in Haryana, minor Dalit girls are gang raped every other day by dominant or upper caste men.

Each time these victims of caste atrocities tried to register a complaint, they were threatened, coerced and counter cases were slapped against not only them but also civil society organisations and lawyers working with them. Medical reports of rape survivors were routinely fudged and the police refused to register appropriate FIRs. The violence committed on Dalit women’s bodies was gruesome, to say the least.

These facts came to light when victims of 45 such cases, mostly Dalit women from nine States across the country, deposed before an eight-member jury of a National tribunal over two days in the Capital.

After listening to the cases, jury member Farah Naqvi, National Advisory Council said these stories were a wake up call. “I would be terrified to fight the battles these women have taken up. Let’s not tiptoe around this or try to be polite; we are a casteist society, deeply embedded in caste, class and community structures. We have to say loudly and without shame that our police, institutions and administration are casteist. If you are casteist, keep your poison to yourself. Do not poison your profession with it. The bottom line has to be accountability and we need to first fix it. Then begins the longer battle of ridding our society of casteism,” she said.

Lawyer Henri Tiphagne of the People’s Watch, another jury member, spoke about the conspiracy of silence that officials, medical personnel, public prosecutors practiced. He said their combined callousness and nexusmarginalised and pushed all these victims to the periphery.

In the context of the discourse around rape in the country, he said it was important to take cognisance of the fact that violence against Dalit women was of a ‘special’ kind.

There is wanton negligence of officials at all levels– right from constabulary to superintendent– and there has been a failure of proper implementation of the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, said Asha Kowtal of All India Dalit Mahila Adhikar Manch.

“The SC/ST Act should undergo a change to take into account new forms of discrimination that are coming up: in NREGA, health facilities, contracts, tenders and land distribution. Dalit Christians in Kandhamal are unable to take recourse to the Act and they must be brought within its ambit. National and State human rights institutions are either insensitive or don’t have resources to take up these cases,” said Henri, adding that the law proceeds as if the victim does not exist. “There needs to be proper rehabilitation and relocation of victims in halfway homes.”

P. Sivakami, writer and activist from Tamil Nadu, pointed out that most victims were vulnerable in deep-rooted poverty and landlessness and said they should be socially and economically empowered to be able to fight against these atrocities.

“The landless are meek victims and the landed also suffer from psychological barriers which make them feel superior to the landless. How are we going to reform them?” she asked.

The tribunal was organised by AIDMAM. Other jury members were advocate Vrinda Grover, co-founder of Human Rights Law Network Gayatri Singh, Prof Vimal Thorat, general secretary NCDHR Srivella Prasad and Vidyanand Vakil, chairperson Bihar State Commission for SCs.

http://www.thehindu.com/news/national/a-conspiracy-of-silence-against-dalit-victims/article5190865.ece