Followers

Sunday, August 12, 2018

மாதந்தோறும் உணவு ஏற்பாடு.....

ஏக இறைவனின் திருப்பெயரால்...
அன்புள்ள சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
அல்லாஹ்வின்அருள்பெரும்கிருபையால்.
எங்கள் கிளைக்கு உள்பட்ட பகுதியில் அதிக அளவில் ஏழைகள் உள்ளன
இதை கருத்தில் கொண்டு எங்கள் கிளை சார்பாக
மாதந்தோறும் உணவு ஏற்பாடு செய்து விநியோகிக்க முடிவு செய்யப்பட்டாது
அதன் தொடர்ச்சியாக 11/08/2018)இன்று 170க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு உணவு விநியோகம் செய்தோம்.அல்ஹம்துல்லாஹ்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் “இஸ்லாத்தில் சிறந்தது எது“ எனக் கேட்டதற்கு, “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பது என்று கூறினார்கள்
புகாரி 12
இதற்கு பொருளாதாரம் தந்து உதவிய அனைவருக்கும் அல்லாஹ் மறுமையில் நற்கூலி வழங்குவனாக
இன்ஷா அல்லாஹ் எங்கள் இந்த பணி தொடரும்...
இப்படிக்குபனந்தோப்பு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வேலூர் கிழக்கு




கொங்கராயக்குறிச்சி கிளை சார்பாக ரத்த தான முகாம்


அல்லாஹ்வின் திருப்பெயரால் ..

ரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 

தூத்துக்குடி மாவட்டம் 

கொங்கராயக்குறிச்சி கிளை சார்பாக 12.08.18 அன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது.

ரத்த தானம் செய்தோர் எண்ணிக்கை : 40

அல்ஹம்துலில்லாஹ் ...


பார்த்தேன்.. படித்தேன்.. மனம் நெகிழ்ந்தேன்....

பார்த்தேன் படித்தேன் மனம் நெகிழ்ந்தேன்
மனம் நெகிழ்வூட்டும் நிகழ்வாக அமைந்த மருத்துவமனை தஃவா...
கண்ணீருடன் சந்தோசத்தை வெளிபடுத்திய முதியவர்.!!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக வியாழக்கிழமை தோறும் மஃஹ்ரிப் தொழுகைக்கு பின் கீழக்கரை அரசு மருத்துவமனையில் அழைப்புப் பணி நடைபெற்றுவருகிறது
இந்த நிகழ்வில் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கி, அவர்களின் நோய் குணமடைய அல்லாஹ்விடம் துஆ செய்துவிட்டு வருவது கடந்த 4வருடங்களாக வழக்கமாக நடைபெற்றுவருகிறது.
இந்த சந்திப்புகளில் பல அனுபவங்களை நம்முடைய தஃவா குழுவினர் பெற்று இருக்கிறார்கள்.

இருப்பினும் நேன்று (9-08-2018) அன்று நடைபெற்ற சந்திப்பில் நடந்த நிகழ்வுகள் நமது மனதை நெகிழசெய்யதது.
அப்படி என்ன நடந்தது..?
மருத்துவமனை தஃவா என்றால் மஃஹ்ரிப் தொழுதுவிட்டு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறி தஃவா செய்து விட்டு இஷா தொழுகைக்கு பள்ளிக்கு வந்துவிடுவோம். இது தான் வழக்கமாக இருந்து கொண்டுஇருந்தது.
ஆனால் நேற்றய நிலையே வேறு

மருத்துவமனையினுல் நுழைந்து ஆண்கள் பகுதிக்கு செல்கிறோம். அங்கு முதன்முதலில் ஒரு வயதி மூத்த சகோதரர் அமர்ந்திருந்தார், அவரிடம் நாம் இப்படி தவ்ஹீத் ஐமாஅத் என்ற முஸ்லிம் அமைப்பில் இருந்து வந்திருக்கிறோம் நாங்கள் வாரம் வாரம் வந்து இப்படி மக்களை சந்தித்து நோய் நலம் விசாரித்து அவர்களுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்து விட்டு செல்வோம், இந்த வாரம் கடவுள் உங்களை கண்ணில் காட்டி இருக்கிறார் என்று கூறி அந்த சகோதரிடத்தில் பரிவன்போடு நம்முடைய சகோதரர்கள் நோய் நலம் விசாரித்து ஆறுதல் சொல்லவுமே அவர் கண்கள் களங்கி அழ ஆரம்பித்து விட்டார், என்னய்யா என்ன ஆச்சி ஏன் அழுகுரீங்க நாங்க எதுவும் உங்கள் மனதை காயப்படுத்தி விட்டோமா என கேட்ட, இல்லையா இல்லையா அப்படிலாம் ஒன்னும் இல்லையா, என் நிலையை நினைத்து அழுதேன் என்றார்.
என்னங்கையா என்ன ஆச்சி சொல்லுங்கையா எங்களால் ஆன உதவியே செய்கிறோம் என்று சொல்லவுமே நம்மிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்தார்,
எனக்கு இரண்டு மகன்கள், அவங்கள நல்ல படிக்கவச்சி வளர்தேன் நான் கஸ்டப்பட்டாலும் அவங்கள கஸ்டபடாம பார்த்து கொண்டேன், ஆனால் இன்றைக்கு அவங்க என்டவுள்ள எல்லாதையும் எடுத்து கொண்டு சென்று விட்டு என்னை ஏறெடுத்தும் பார்காமல் என்னை ஆனாதையாக விட்டுவிட்டார்கள்.
பெத்த பிள்ளைகளே நம்மை பார்க்காமல் இருக்கும் போது எங்கிருந்தோ வந்து இவ்வளவு அக்கரையோடு, அன்போடு விசாரிக்கிறீங்களையா, எனக்குனு யாரு இருக்கானு நினைத்து கொண்டு இருக்கும் போது, நீங்கள் இப்படி அன்போடு கூறும் வார்தைகள் என்னை அழ செய்துவிட்டது வேறு ஒன்னும் இல்லப்பா. என்று அந்த சகோதரர் சொல்ல நம் உள்ளங்கள் நெகிழ்ந்து தான் போனது.
கவலைபடாதீங்கையா கடவுள் உங்களோடு இருப்பார் என ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்தடுத்த நபர்களை பாரக்க தயாறாகும் போது.
போங்கையா போங்க போயி எல்லா மக்களையும் பாருங்க, நீங்க செய்யிற இந்த பணிக்காக நீங்க எப்போதும் நல்லா இருக்கனும் என்று நம்மை அன்போடு அனுப்பிவைத்தார்.
இப்படி எத்தனையோ நபர்கள் மனபாரத்தோடு இருக்கத்தான் செய்கிறார்கள், இது போன்ற சந்திப்புக்கள் நிச்சயம் அவர்கள் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்பதை உணர்ந்து கொண்டோம்.
இன்னும் சில நெகிழ்ச்சியான சம்வங்களும் நடந்தது இறைவன் நாடினால் முழுமையான பதிவை பதிவு செய்கின்றோம்..
எனவே ஜமாஅத்தின் கொள்கை சொந்தங்கள் மற்ற மற்ற தஃவா பணிக்கு மத்தியில் இந்த மருத்துவமனை சந்திப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாரத்தில் ஒருமுறையேனும் மக்களை சந்தித்து வர மிக பெரிய மாற்றம் அவர்களின் உள்ளங்களில் ஏற்படும். எனவே மருத்துவமனை தஃவா வில் நம்முடைய ஜமாஅத் சகோதரர்கள் கவணம் எடுக்க வேண்டுமென கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் கேட்டு கொள்கின்றோம்.
சந்தித்த நபர்களின் விபரம்:
முஸ்லிம் சகோதர, சகோதரிகள்: 3
பிறமத சகோதர, சகோதரிகள்: 30
அல்ஹம்துலில்லாஹ்!!!


எவ்வளவு பொய்கள் இந்த அம்மணியின் வாயிலிருந்து

எவ்வளவு பொய்கள் இந்த அம்மணியின் வாயிலிருந்து....
இது போன்ற வரலாற்றுத் திரிபுகளை கூறி வட இந்திய இந்து, முஸ்லீம்களை பிரித்து பாதி நாட்டை நாசம் செய்து விட்டாா்கள்.
இப்பொழுது தென்னிந்தியா அதுவும் குறிப்பாக தமிழ்நாடு.
குழப்பம் விளைவிப்பது கொலையை விட தவறானது.
இந்திய படையெடுப்புகள்
1176 ல் முகமது கோரி. குஜராத் மீதான படையெடுப்பில், அரசி நாயகி தேவியிடம் தோல்வி அடைந்தார்.
1191 முதல் தராயின் போரில் ராணி சம்யுக்தையின் கணவரும், கன்னோசி மன்னர் செயசந்திரனின் மருமகனுமான பிரிதிவிராஜ் சௌகானுக்கு எதிரான போரில் கோரி முகமது தோல்வி அடைந்தார்.
1193இல் இரண்டாம் தராயின் போரில் கன்னோசி மன்னன் செயச்சந்திரன் உதவியுடன் பிரதிவிராஜ் சௌகானுடன் நடந்த போரில் கோரி முகமது வென்றார்.
1193-1194இல் சந்தவார் எனும் இடத்தில் நடந்த போரில் முகமது கோரி பிரிதிவிராஜ் சௌகானை கொன்றார்.
இங்கு பிரதிவிராஜ் சௌகானை வெல்ல அவரது உறவினர் ஜெயச்சந்திரன் உதவியுள்ளார். இந்த உதவியினாலேயே வெற்றி சாத்தியமானது. அதை எல்லாம் மறைத்து எத்தனை வரலாற்று திரிபுகளை கூச்சமின்றி சபையில் வைக்கிறார் இந்த அம்மணி!
அதற்கு சபையில் உள்ள பார்பனர்கள் ஆனந்தமாக கை தட்டுகிறார்கள்.
இந்த அம்மணி இதே தமிழ்நாட்டில் எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய உண்மை வரலாற்றை சொல்ல வருவாரா? இதே தமிழ்நாட்டில் பவுத்த கோவில்களை எல்லாம் இடித்து அதனை சைவ கோவில்களாக மாற்றிய வரலாறுகளை மேடை போட்டு சொல்வாரா? தமிழர்களின் ரத்தத்தை ருசி பார்த்த ஆரிய வந்தேறிகளின் வரலாறுகளை மேடை போட்டு சொல்ல முன் வருவாரா? தமிழர்களின் அழகிய நாகரிகத்தை அழித்து பல தெய்வ வணக்கத்தை புகுத்திய வரலாறுகளை சொல்ல முன் வருவாரா?


ஒரு சாய்வாலா மனம் திறக்கின்றார்..!

ஒரு சாய்வாலா மனம் திறக்கின்றார்..!
*********************************************************
லட்சுமன் ராவ்.
தில்லியில் நடைபாதையில் தேநீர்க்கடை நடத்துகின்ற சாய்வாலா. ஆனால் இவர் டூப்ளிகேட் சாய்வாலா அல்லர்.

மற்றவர்கள் எழுதித் தருவதை ஏற்ற இறக்கத்துடன் வாசிப்பவரும் அல்லர். மிக இயல்பாக, சரளமாக ஷேக்ஸ்பியரையும் சாகரடீஸையும் மேற்கோள் காட்டுகின்றவர்.

போலி சாய்வாலாவைப் போன்று அல்லாமல் உண்மையிலேயே பிஏ படித்து முடித்து எம்ஏவும் படித்து தேறியிருக்கின்றார் இந்த சாய்வாலா. இது வரை 18 நூல்களை எழுதியிருக்கின்றார். நாள்தோறும் 1000 சொற்களை எழுதுகின்ற ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்.

நரேந்திர மோடி கடைசி முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றவிருக்கின்ற இந்த நாள்களில் இந்த உண்மையான சாய்வாலா தி டெலிகிராஃப் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் சொன்ன முத்துக்கள் வருமாறு:
........................
# ஒரு டீக்கடைக் காரர்தான் பிரதமராக இருக்கின்றார். என்றாலும் மக்கள் ஒரு தேநீர் வாங்கி குடிப்பதற்கும் யோசிக்கின்றார்கள். என்னுடைய கடையைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள்கூட இப்போதெல்லாம் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.

# 2014-இல் ஒரு குவளை தேநீரை ஏழு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தேன். இப்போது அதன் விலை பத்து ரூபாய். எனக்குக் கிடைக்கின்ற இலாபம் கூடிவிட்டதா என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்.

# ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் நாட்டின் பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றியெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. என்றாலும் ஒன்றைச் சொல்வேன். இப்போதெல்லாம் 100 ரூபாய்த்தாளுக்கு மதிப்பே இல்லை. பொருளாதாரம் நல்ல முறையில் இருக்கின்றது. மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கின்றது எனில் வேலை முடிந்ததும் தேநீர் அருந்த வருகின்ற மக்கள் எங்கே போனார்கள்?

# நான்காண்டுகளுக்கு முன்னால் செலவெல்லாம் போக எனக்கு மாதம்தோறும் 14000 ரூபாய் இலாபம் கிடைத்து வந்தது. இப்போது அதே அளவோ அல்லது அதனை விடச் சற்று குறைவாகவோ தங்குகின்றது. என்றாலும் வாழ்க்கைத் தரம் சரிந்துவிட்டது. என்னுடைய கடைக்கு தேநீர் அருந்த வருகின்றவர்களின் எண்ணிக்கை சரிந்து விட்டது.

# இந்த நான்கு ஆண்டுகளில் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்த்தவர்கள் இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் பெரும் தொழிலதிபர்கள்தாம். இது இயல்பானதுதானே. தேர்தல் பரப்புரைக்குப் பணம் கொடுத்தவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் திருப்பித் தந்துதானே ஆக வேண்டும்.

# பணமதிப்பழிப்புக்குப் பிறகு 2000 ரூபாய்த்தாள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தேநீர் விற்பனை மட்டுமின்றி புத்தக விற்பனையும் படுத்து விட்டது. 2016 நவம்பருக்குப் பிறகு மூன்று மாதங்கள் வரையில் ஒரே ஒரு புத்தகம் கூட விற்பனையாகவில்லை. இன்னும்சொல்லப்போனால் புத்தக விற்பனை முந்தைய நிலையை அடையவேயில்லை.

# 2014-இல் இருந்ததை விட இப்போது மோடியின் செல்வாக்கு 80சதவீதம் சரிந்து விட்டது என்றே நான் சொல்வேன். பாஜகவுக்கு முரட்டுத்தனமாக முட்டு கொடுப்பவர்கள் கூட பணமதிப்பழிப்பாலும் ஜிஎஸ்டியாலும் சிறு, குறு தொழில்கள் அழிந்துவிட்டன எனப் பெரிதும் வருந்துகின்றார்கள்.

# முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு என்ன ஊறு விளைவித்தார்கள், இந்த மக்கள் ஏன் அவர்கள் மீது இத்துணை அக்கிரமங்களை இழைக்கின்றார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. முஸ்லிம்களின் வீடுகளை எரிப்பதாலோ, அவர்களை அடித்து கொல்வதாலோ ஒருவர் நல்ல இந்துவாக ஆகவே முடியாது. நல்ல மனிதராக இருந்தால் மட்டுமே நல்ல இந்துவாக மலர முடியும்.


தமிழாக்கம்