Followers

Monday, April 29, 2019

அம்பட்டயன் என்று என்னை இழிவுபடுத்தினார்கள்.

அம்பட்டயன் என்று என்னை இழிவுபடுத்தினார்கள்.

இஸ்லாத்தை ஏற்றேன்; யாரெல்லாம் என்னை இழிவுபடுத்தி அழைத்தார்களோ அவர்களே என்னை மரியாதையுடன் 'வாங்க பாய்' என அன்புடன் அழைக்க வைத்தது இஸ்லாம்.
முஸ்லிம்கள் என்னோடு நகமும் சதையுமாக இல்லை; இரத்தமும் சதையுமாக பழகுகின்றனர்.
இஸ்லாத்தை தழுவிய சகோதரர் மாரிமுத்து அவர்கள் ஜி.சுலைமானாக மாறி சாதியால் தான்பட்ட துன்பங்களையும், இஸ்லாத்தால் தனக்கு கிடைத்த இன்பங்களையும் நம்மோடு பகிர்கின்றார்.
இஸ்லாத்தை ஏற்ற அந்த சகோதரர் முஸ்லிம்களுக்கு தலைமையேற்று தொழுகை நடத்த, அவர் பின்னால் இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்து வளர்ந்த பரம்பரை முஸ்லிம்கள் நின்று தொழும் காட்சியை காணுங்கள்.


Sunday, April 28, 2019

நோன்பின் நோக்கம் என்ன ?

நோன்பின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இஸ்லாமியர்களை விட இஸ்லாம் அல்லாதவர்கள் மிக தெளிவாக விளங்கி வைத்துள்ளனர்...
எல்லா புகழும் இறைவனுக்கே!


இலங்கை குண்டுவெடிப்பால் சந்தேகங்களை எதிர்கொள்ளும் TNTJ

இலங்கை குண்டுவெடிப்பால் சந்தேகங்களை எதிர்கொள்ளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கையில் ஏப்ரல் 21ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னர், தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் இஸ்லாமிய சமூகத்தை மேலும் பின்னுக்கு தள்ளும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் இ.முகமது தெரிவித்துள்ளார்.

வஹாபிஸ கொள்கைகளை நாங்கள் பின்பற்றுவதில்லை, அதை நாங்கள் முன்மொழிவதும் இல்லை. இறந்தவர்களை தர்கா அமைத்து வழிபடும் முறையை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை வஹாபிஸத்தை பின்பற்றுகிறவர்களும் எதிர்க்கிறார்கள் என்பதால், சிலர் எங்களை வஹாபிஸ்டுகளாக பார்க்கிறார்கள். எங்களுக்கு அந்த பின்புலம் கிடையாது, இஸ்லாம் மதத்தை மட்டும் பின்பற்றுகிறோம் என அவர் கூறுகிறார்.

தமிழகத்தில் சமூகப்பணிகளை செய்து, தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரசாரத்தை மேற்கொள்வதாக கூறும் முகமது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மீது எழுப்பப்பட்ட சந்தேகங்களை எதிர்கொண்டது எப்படி, சந்தேகத்தின் பேரில் கைதாகும் இஸ்லாமிய இளைஞர்களின் நிலை பற்றி பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் பேசினார்.

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு காரணம் என இலங்கை அரசாங்கம் சந்தேகப்படுகிறது. அந்த அமைப்பு இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பிரிந்துவந்த அமைப்பு. அதே சமயம் தவ்ஹீத் ஜாமஅத் என்ற பெயரை கொண்டுள்ள உங்களுடைய அமைப்பு மற்றும் பிற இஸ்லாமிய அமைப்புகள் மீது பரவும் செய்திகளை பற்றி உங்கள் கருத்து என்ன?

இலங்கையில் நடந்த சம்பவம் கண்டனத்திற்கு உரியது. தேசிய தவ்ஹீத் ஜமாஅத், இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பிரிந்து வந்த அமைப்பு இல்லை. ஒருவேளை அந்த அமைப்பில் இருந்தவர்கள் யாராவது தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்திருக்கலாம். எங்களுடைய அமைப்பின் முழுபெயர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தோடு எங்களுக்கு தொடர்புள்ளது.

இந்த இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு எங்களின் பிரதிநிதி. எங்களை பின்பற்றும் அமைப்பு. இந்த இரண்டு அமைப்புகளும் தீவிரவாதத்தை தீவிரமாக எதிர்ப்பவர்கள். இலங்கையில் நடந்த சம்பவத்திற்கு தொடர்பில்லாத எங்களை பற்றி சந்தேகிக்கும் வகையில் செய்தியை ஒரு ஊடகம் வெளியிட்டது. அதற்கான விளக்கத்தையும் நாங்கள் கொடுத்துவிட்டோம். தீவிரவாதத்திற்கு எதிராக போரிடக்கூடியவர்கள் நாங்கள். ரத்ததானம், கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்ட சேவைகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிசம்பவம்

இலங்கை சம்பவம் அதிர்ச்சிகரமான சம்பவம்

இலங்கை சம்பவம் அதிர்ச்சிகரமான சம்பவம் என்பதில் மாற்றுகருத்து இல்லை. இதுநாள்வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே அறியப்பட்ட அமைப்பாக எங்கள் அமைப்பு இருந்துவந்தது. ஆனால், இலங்கை சம்பவத்தை அடுத்து பலரும் எங்களைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். நாங்கள் பல சமூகசேவைகளை செய்துவருகிறோம். ஆனால் எங்கள்மீது சந்தேக பார்வை ஏற்படுகிறது. நாங்கள் மட்டுமல்ல, இத்தகைய சூழலில் எந்த அமைப்பாக இருந்தாலும், ஒரு சோர்வு ஏற்படும். உறுதியோடு இந்த விவகாரத்தை எதிர்கொண்டோம்.

இந்த நேரத்தை எங்களைப் பற்றிய முழுவிவரத்தை தெரிவுப்படுத்தும் நேரமாக நாங்கள் நினைத்துகொள்கிறோம். காவல் துறையோ, இல்லை எங்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களோ யாரவது வந்து எங்களிடம் கேள்விகள் கேட்டு, விசாரணை செய்வதை நாங்கள் விரும்புகிறோம். எங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நாங்கள் என்னவிதமாக இந்த சமூகத்திற்கு பணியாற்றுகிறோம் என தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறுகிறோம். தொடர்ந்து எங்கள் சமூகத்தை குறிவைத்து சந்தேகம் எழுப்பப்படுவது என்பது வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது.

சமீபத்தில் இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு தகவலை அனுப்பியது. அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆட்சியை இலங்கை, தமிழகம் மற்றும் கேரளாவில் பரவலாக்கவேண்டும் என தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் சஹ்ரான் கூறிய காணொளி ஒன்று உள்ளது. கோவையில் உள்ள இளைஞர்களிடம் இந்த காணொளி இருந்ததாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு கூறுகிறது. இதைபற்றி உங்கள் கருத்து.

குண்டுவெடிப்பு சம்பவத்திற்குபின், அமரா மஜீத் என்ற பெண்ணிய செயற்பாட்டாளரின் புகைப்படத்தை சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் இலங்கை அரசாங்கம் வெளியிட்டுவிட்டது. இது உலகம் முழுவதும், சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் அமரா மஜீதின் புகைப்படத்தை பாத்திமா என தவறாக வெளியிட்டுவிட்டதாக இலங்கை அரசாங்கம் மன்னிப்பு கோரியது. உளவு தகவல் என வெளியாகும் தகவல்களில் எவ்வளவு உண்மை, ஆதாரங்கள் என்ற பெயரில் வெளியிடப்படும் படங்கள், பெயர்களில் எவ்வளவு குளறுபடிகள் உள்ளன என்பதற்கு இந்த சமீபத்திய ஆதாரம் ஒரு எடுத்துக்காட்டு.

அரசாங்கம் சந்தேகம் என கருதும் நபரின் பெயர் ஏன் ஒரு இஸ்லாமிய பெயராக இருக்க வேண்டும்? தவறான தகவலை வெளியிட்டு மன்னிப்பு கேட்கிறார்கள், ஆனால் இந்த தகவலால் ஏற்பட்ட பாதிப்பை யார் சரிசெய்வார்கள்?

அடுத்ததாக சஹ்ரான் நச்சு கருத்துக்களை விதைக்கிறார் என இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. அவரின் போக்கை எதிர்த்து அங்கு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என தெரிந்துகொண்டோம். விழிப்புணர்வு அடையாமல் இருந்தது இலங்கை. இந்திய புலனாய்வு அமைப்பு சொல்வதற்கு முன்பே இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் சொல்லிவிட்டது என்ற உண்மையை சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த இலங்கை சம்பவதற்கு பிறகு உங்களின் செயல்பாடுகள் என்னவாக மாறும்?

நாங்கள் முன்பை போல சமூக சேவையை தொடருவோம், ஆறு மாதங்களுக்கு முன்பு, தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை செய்தோம். அதை மீண்டும் தொடரவேண்டும். மனிதநேயத்தை குர்-ஆன் எவ்வாறு போதிக்கிறது என்பதை மேலும் எல்லோருக்கும் எடுத்துச்செல்லும் பணியில் ஈடுபடுவோம்.



Saturday, April 27, 2019

யார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ?

யார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ?
குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோர் (2014) பிரதியைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, ஓர் ஆய்வுக் கட்டுரை படிக்க நேர்ந்தது. கட்டுரையை ஃபிரான்ஸ் கலாசாரத் துறை பேராசிரியர் டாக்டர், ஸைனப் அப்துல் அஸீஸ் எழுதியிருக்கிறார். ‘இராக் கிறித்தவர்களும் இனப் படுகொலை பற்றிய ஊகங்களும்’ என்பது கட்டுரையின் தலைப்பு. கட்டுரையின் இறுதியில் டாக்டர் ஸைனப் எழுதியிருப்பதன் தமிழாக்கத்தை அப்படியே கீழே தருகிறோம். (இதில் நமது சொந்தக் கருத்து எதுவும் இல்லை.) நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்:
ஐ.எஸ். இயக்கத்தை அரபி இதழ்கள் சுருக்கமாக ‘தாஇஷ்’ எனக் குறிப்பிடுகின்றன. இதன் பொருள் ‘அத்தவ்லத்துல் இஸ்லாமிய்யா’ (இஸ்லாமிய அரசு) என்பதாகும். ‘கிலாஃபத்’ ஆட்சி என விளக்கம் கூறலாம். இந்த இயக்கத்தின் தலைவர் ‘அபூபக்ர் அல்பஃக்தாதி’யை ‘பஃக்தாது கலீஃபா’ என அவருடைய ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். இவரது பின்புலம் குறித்து முன்னணி இணைய தளங்கள், குறிப்பாக ‘Veteran Today’ எனும் இணையதளம் தோலுரித்துக்காட்டியிருக்கிறது.
பக்தாத் கலீஃபா, இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாத்’தின் கையாள். இவர் யூதப் பெற்றோருக்குப் பிறந்தவர். அபூபக்ர் அல்பஃக்தாதியின் உண்மையான பெயர்: ஷைமோன் எலியூட். இவரை சியோனிஸ மொசாத், தன் உளவுப் பணிகளுக்காக உருவாக்கிப் பயிற்சியையும் அளித்துள்ளது. உளவுத் துறையிலும் வெளியுறவுத் துறையிலும் அவர் பயிற்சியை முடித்துள்ளார். அத்துடன், பல்வேறு இராணுவப் பயிற்சிகளுக்கும் உட்படுத்தப்பட்டார். பல்வேறு சோதனைகளையும் அவர் கடந்துவந்துள்ளார். இதுவெல்லாம் எதற்காக? அரபு மற்றும் முஸ்லிம்களின் வாழ்வையும் இஸ்லாமியச் சிந்தனைகளையும் அழிக்கும் சதிவேலைகளுக்கு எலியூட் தலைமை ஏற்க வேண்டும்; அழிவு சக்திகளை ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்பதற்காகத்தான்!
இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? ஐ.எஸ். (Islamic State) அமைப்பு, பயங்கரவாத இயக்கங்களின் ஐ.நா. பட்டியலில் இடம்பெற்றுள்ள அதே வேளையில், அதற்குப் பொருளுதவி செய்வது அமெரிக்காவாகும். 2014 வரி ஆண்டுக்கான இரகசிய கூட்டத்தில் முடிவான சட்டத்திற்கேற்ப ஐ.எஸ். அமைப்புக்குப் பொருளுதவி செய்ய அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இது, 2014 செப்டம்பர் 30 வரைக்குமான ஒப்புதலாகும்.
இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், 2004 முதல் 2009 வரை 5 ஆண்டு காலம் குவாண்டநாமோ சிறையில் அபூபக்ர் அல்பஃப்தாதி இருந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் சி.ஐ.ஏ. மற்றும் மொசாத் ஆகிய உளவுத் துறை அமைப்புகள் தம் பணிகளுக்காக ஆள் திரட்டியபோது அபூபக்ரைப் பயன்படுத்த எண்ணின. பல்வேறு நாடுகளில் இருக்கும் முஜாஹித்களை ஒரே இடத்தில் திரட்டுவதற்கு வசதியாக ஒரு குழுவை அமைக்கும் பெரிய பொறுப்பினை அபூபக்ரிடம் அவை கொடுத்தன. இக்குழு, முஜாஹித்கள் யாரும் இஸ்ரேலைத் தாக்கிவிடாமல் தடுக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்பது மொசாத்தின் திட்டமாகும்.
அபூபக்ர் என்ற ஒற்றரை மொசாத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்ற நாடுகளின் இராணுவ மற்றும் சிவில் வட்டாரங்களில் ஊடுருவுவதே ஆகும். அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதற்கு வசதியாகவும் அந்நாடுகளின் ஒவ்வொரு பகுதிமீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு வசதியாகவும் சியோனிஸ ஆட்சியை உருவாக்கும் பணியை எளிதாக்க வேண்டும்.
உலகின் நாலா பாகங்களிலிருந்தும் தீவிரவாதிகளின் ஒரு பெரும் படையை ஓரிடத்தில் ஒன்றுசேர்த்து, ஷைத்தானின் உண்மையான படை இதுதான் என உலகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். அவர்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் கலிமா பொறிக்கப்பட்ட கறுப்புக் கொடியைத் தூக்கிக் காட்டுவார்கள். இதன்மூலம், இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பை உலக மக்களிடம் விதைக்க முடியும் என்பது மொசாத்தின் கனவாகும். இப்படையினர், ஈவிரக்கமின்றி கைதிகளைத் துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை செய்வார்கள். இந்தப் பயங்கரமான காட்சிகளைப் படமாக்கி இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிடுவார்கள்.
இவர்கள் இரத்த வெறிபிடித்த காட்டுமிராண்டிகள் என உலகம் அடையாளம் காண வேண்டும். யாராலும் சகிக்க முடியாத, மனிதாபிமானமே இல்லாத இந்த நிலைக்கு ஒரு மனிதன் வரவேண்டுமென்றால், ஒன்று அவன் போதைக்கு அடிமையாக இருக்க வேண்டும்; அல்லது இரத்தத்தையும் பயங்கரத்தையும் பார்த்துப் பார்த்துப் பழகிப்போனவனாக இருக்க வேண்டும். இதுதான் அமெரிக்க சியோனிஸ போர் உத்தியாகக் காலம் காலமாக இருந்துவருகிறது.
சுருங்கக்கூறின், ஐ.எஸ். எனும் இந்தப் படைக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் அறவே இல்லை. இது, முஸ்லிம்களின் கரத்தாலேயே இஸ்லாத்தின் மீது போர் தொடுப்பதற்காக ‘பிளாக் வோட்டர்’கள் மூலம் அமெரிக்கா நிகழ்த்தும் நாடகமாகும்.
-முஹமது கான் பாகவி



Tuesday, April 23, 2019

“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்!”

“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்!”
- இந்தியக் குழந்தைக்குத் தாயான துபாய் பெண்.
உலகம் முழுக்க அன்பு கொட்டிகிடக்கிறது.
யாரோ ஒருவர்தானே என பிறரை உதாசினப்படுத்தாத நல்ல உள்ளங்களும் நிறைந்து இருக்கின்றன. துபாய் விமான நிலையத்தில் பிரசவ வலியால் துடித்தவர், ஓர் இந்தியப் பெண். அவருக்குப் பிரசவம் பார்த்தவர், மருத்துவர் அல்ல... துபாய் விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்! குழந்தையோ குறைப்பிரசவத்தில் பிறந்தது. பிறகு என்ன நடந்தது?
இரு நாள்களுக்கு முன்பு, துபாய் விமான நிலையத்துக்கு இந்தியப் பெண் ஒருவர் வந்தார். இமிகிரேஷன் பகுதியில் வந்த அவரின் உடையில் ஆங்காங்கே ரத்தக்கறை படிந்திருந்தது. முகத்தில் பெரும் பதற்றம் காணப்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் ஹனான் ஹூசைன் முகமதுவுக்குப் பணி முடிய 10 நிமிடமே இருந்தது. பெண்ணின் உடைகளில் ரத்தக்கறை படிந்துள்ளதைப் பார்த்த, ஹனான், அதிர்ச்சியடைந்தவாறே, “என்னாச்சு, ஏன் ரத்தக்கறை?” என்றார். பயத்திலேயே பெண்ணுக்கு வலி ஏற்படத் தொடங்க, தான் ஆறு மாதக் கர்ப்பிணி என்றவாறே தரையில் படுத்து வலியால் அலற ஆரம்பித்தார்.
சப் இன்ஸ்பெக்டர் ஹனானுக்கு, என்ன செய்வதெனத் தெரியவில்லை. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நிலையில் அந்தப் பெண்ணும் இல்லை. ரத்தப்போக்கு அதிகரித்தது. மற்றவர்களுடன் சேர்ந்து கர்ப்பிணிப் பெண்ணை தனி அறைக்குள் கொண்டு சென்றார். மருத்துவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணோ வலியால் துடிக்க, வேறு வழி தோன்றாமல் ஹனானே பிரசவம் பார்த்தார். ஆண் குழந்தை பிறந்தது.
இந்த இடத்தில் வேறு ஒரு பிரச்னையும் தலை தூக்கியது. குறைப் பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையின் இதயம் துடிக்கவில்லை. மூச்சும் விடவில்லை. போலீஸ் அதிகாரி என்பதால் ஹனானுக்கு சி.பி.ஆர். (cardiopulmonary resuscitation) கொடுக்கும் முறை தெரிந்திருந்தது. குழந்தைக்கு சி.பி.ஆர் கொடுத்தது குறித்து ஹனான், “பொதுவாகக் குழந்தைகள் பிறந்ததும் வீல் எனக் கத்தும்... அழும். இந்தக் குழந்தையோ ஒன்றுமே செய்யவில்லை. எனக்கு ஏதோ பிரச்னை என்பது மட்டும் புரிந்தது. குழந்தையின் பின்புறம் தட்டினேன். அப்போதும், குழந்தை அழவில்லை. தொடர்ந்து 3 நிமிடம் வரை சி.பி.ஆர் கொடுத்தேன். குழந்தை அலறியது. அப்போதுதான் எனக்கு உயிரே வந்தது. குழந்தை அலறவும் டாக்டர் குழு அங்கே வரவும் டைம் சரியாக இருந்தது. தொப்புள்கொடியில் இருந்து குழந்தையைப் பிரித்து அருகில் இருந்த லஃதீபா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்'' என்று அந்த `திக் திக்' நிமிடத்தை விவரித்தார்.
தற்போது, துபாய் மருத்துவமனையில் குழந்தைக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கடந்த 19-ம் தேதி துபாய் விமானநிலையத்துக்கு வந்த பெண், தான் கர்ப்பிணி என்பதை மறைக்க முயன்றுள்ளார். மும்பை செல்வதற்கு டிக்கெட் வைத்திருந்தார். துபாயில் குழந்தை பெற்றுக்கொள்ள அதிக செலவு பிடிக்கும் என்பதால், கணவர் டிக்கெட் எடுத்து அவரைத் தாய்நாட்டுக்கு அனுப்பியுள்ளார். கர்ப்பிணி என்பதால், விமானத்தில் ஏற்றுவார்களோ, இல்லையோ என்ற பயம் அவரைத் தொற்றிக்கொண்டது. விளைவு... குறைப் பிரசவம். நல்லவேளையாக, கடவுள் வடிவில் ஹனான் வந்து குழந்தையைக் காப்பாற்றியுள்ளார்.
ஹனானின் சேவையைப் பாராட்டி, அமீரக அரசு அவருக்கு விருது அளித்துக் கௌரவித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் இருக்கும் குழந்தையையும் பெண்ணையும் தினமும் சென்று ஹனான் பார்த்துக்கொள்கிறார். ஹனான் மட்டுமல்ல, அவருடன் பணிபுரியும் மற்றவர்களும் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையின் தாய்க்கு ஆதரவாக இருந்துவருகின்றனர். குழந்தை இன்குபேட்டரில் உள்ளது. இன்னும் இரு மாதத்துக்கு மருத்துவமனையில் குழந்தை இருக்க வேண்டும். பிரசவச் செலவுகளை ஹனான் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் ஏற்றுக்கொள்ள முடிவுசெய்துள்ளனர்.
“என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. ஒரு குழந்தையின் உயிரை நான் காப்பாற்றியுள்ளேன். இந்தக் குழந்தை, அந்தத் தம்பதியின் முதல் குழந்தை. அதை நான் காப்பாற்றிக் கொடுத்துள்ளேன். தம்பதி இதனால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள். ஏழு ஆண்டுகளாகத் துபாய் போலீஸில் பணிபுரிகிறேன். என் பணியில் நான் நிறைவு கண்ட நாள் இது. எனக்கு மூன்று பெண் குழந்தைகள். இப்போது, ஒரு மகனும் பிறந்திருக்கிறான் அவன் இன்குபெட்டரில் வளர்கிறான்'' என்று நெகிழ்கிறார் ஹனான்.
எம் .குமரேசன் @விகடன் .காம்
V Premkumar Babu