Followers

Tuesday, December 16, 2014

பாகிஸ்தானில் அப்பாவி பள்ளி குழந்தைகள் கொலை!



பாகிஸ்தானில் பெஷாவரில் ராணுவ பள்ளியை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 130 பள்ளி குழந்தைகள் இறந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தாலிபான்கள் பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வருகிறது. இந்த கொடும் செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனித குல விரோதிகள்.

'ஒரு உயிரைக் கொல்வது ஒட்டு மொத்த மனித குலத்தையும் கொன்றதற்கு சமமாகும்' என்று குர்ஆன் கூறியிருக்க இவ்வாறு அப்பாவி பள்ளிக் குழந்தைகளை கொன்றவன் இஸ்லாமிய பெயர் வைத்திருந்தாலும் இறைவன் முன்னால் அவன் உண்மை முஸ்லிம் அல்ல. நாளை மறுமை நாளில் இறந்த அந்த குழந்தைகள் கொன்றவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்கிறது குர்ஆன். எனவே மனித குல விரோதிகளே உங்களின் தண்டனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

4 comments:

Anonymous said...

பிற்போக்குத்தனமாக செயல்படும் தலிபான் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை இஸ்லாமிய நாடுகள் கண்டிப்பதில்லை. பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் வெளிப்படையான கண்டனங்களால் தமது இஸ்லாமிய மதத்தை வெறுப்பு அரசியலாக மாற்றி விடுவார்களோ என்கிற அச்சத்தில் தலிபான்களின் நடவடிக்கைகளை கண்டிப்பதில்லை. இப்படி கூறுவதால் முழு பழியையும் இஸ்லாமியர்கள் மீது திணிப்பது தவறு.

தலிபான்களை உருவாக்கிய அமெரிக்க ஐக்கிய அரசுகளின் இஸ்லாமிய வெறுப்பை உலக அரங்கில் இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்று பேச வைக்க 130 குழந்தைகள் என்ன? ஆயிரக்கணக்கான குழந்தைகளையும் கொல்லும்படி தூண்டிவிடுவார்கள்.

இன்று பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பள்ளி குழந்தைகளின் பின்னே இருப்பது இஸ்லாமியர்கள் கல்வி கற்பதை தடை செய்ய தூண்டிவிடும் தலிபான்கள் என்று நினைத்தால் அது மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு.

நோபல் பரிசு பெற்றபோது மலாலா சொன்னாள்:

"தேசங்களை பாதுகாக்கிறோம் என்று பீரங்கிகளை உருவாக்கும் அரசுகளுக்கு ஒரு பள்ளியை கட்டுவது ஏன் சுலபமாக இருப்பதில்லை?"

கல்வியை தடை செய்வது மனிதனின் அறிவு விருத்தியை கட்டுப்படுத்த. உலக அரசுக்கள் அனைத்துமே இதில் தீவிரமாய் செயல்படுகிறது. கிழக்கத்திய நாடுகளில் மக்கள் தொகையில் சரிபாதியினருக்கு இன்னும் கல்வி கிடைக்கவில்லை.

பீரங்கி உருவாக்கம் என்பது ஆயுத விற்பனைக்கு. (பிரான்சிடம் இந்தியா வாங்கிய பீரங்கி கணக்குகளை எதில் சேர்க்க?) உலகம் அமைதியாகவே இருந்தால் எப்படி கலவரம் வரும்? ஆயுதங்களுக்கு எப்படி வேலை இருக்கும். இந்த வேலையைச் தேவைக்கு ஏற்ப செய்வதில் அதிதீவிரம் காட்டும் நாடுகள் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளீட்ட கூட்டணிகள்.

பாகிஸ்தானை இந்நோக்கில்தான் உலக அரசுக்கள் கையாளுகின்றன. அங்கே நடைப்பெற்ற 130 குழந்தைகளின் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் மோடியின் அரசில் அதிகாரத்தில் குஜராத்தில் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் மட்டும் தீவிரவாதம் இல்லை என்று நம்பும் மக்கள் இருக்கும்வரை இஸ்லாமிய வெறுப்பு அரசியலை இதுப்போன்ற உலக அரசுக்களும் அரசியல்வாதிகளும் அழகாக அரங்கேற்றுவார்கள். பலியாவது பொது மக்கள் மட்டுமே!

- தமிழச்சி
16/12/2014

Anonymous said...

விதைத்த வினைகக்கு கைமேல் பலன். விளைச்சலும் அமோகம், அறுவடையும் அமோகம். உலகில் இப்படியும் மதத்தின் பெயரால் மனிதனை மிருகமாக்க முடியுமா.

Dr.Anburaj said...

பாகிஸ்தானை இந்நோக்கில்தான் உலக அரசுக்கள் கையாளுகின்றன. அங்கே நடைப்பெற்ற 130 குழந்தைகளின் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் மோடியின் அரசில் அதிகாரத்தில் குஜராத்தில் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் மட்டும் தீவிரவாதம் இல்லை என்று நம்பும் மக்கள் இருக்கும்வரை இஸ்லாமிய வெறுப்பு அரசியலை இதுப்போன்ற உலக அரசுக்களும் அரசியல்வாதிகளும் அழகாக அரங்கேற்றுவார்கள். பலியாவது பொது மக்கள் மட்டுமே!
ஐயா சுவனப்பிாியன் இதற்கு என்ன அா்த்தம் ?? பாக்கிஸ்தானில் லாகில்லா இல்லல்லா முகம்மது ரசுலல்லா என்று ஓதும் ஒரு கூட்டம் 130 பள்ளி மாணவர்களைக் -பெரும்பான்மையான குழந்தைகள் பாக்கிஸ்தான் ராணுவத்தைச் சொ்ந்தவர்கள்- கொன்ற கொடுமைக்கு குஜராத் ....அது இது என்று பலம்புவது ஏன் ? முகம்முத பின் காசிம் இந்தியாவின் மீது படையெடுத்த வந்தமுதல் கொலை செய்யப்பட்ட இந்துக்களின் நிலை குறித்து சே சுவனப்பிாியன் தயாரா ? பாக்கிஸ்தானுக்கு ஏன் தாங்கள் வக்காலத்து வாங்க வேண்டும் என்று கேடகின்றேன்.

Dr.Anburaj said...

"தேசங்களை பாதுகாக்கிறோம் என்று பீரங்கிகளை உருவாக்கும் அரசுகளுக்கு ஒரு பள்ளியை கட்டுவது ஏன் சுலபமாக இருப்பதில்லை?" மலாலாவின் இந்த விமா்சனம் பாக்கிஸ்தானுக்கு மட்டும் பொருந்தும்.இந்தியாவிற்கு பொருந்தாது. இந்தியா பீரங்கி வாங்குவது தங்கள் கண்ணை உருத்துவது ஏன் ? பாக்கிஸ்தானை இந்தியா தொடா்ந்து தோற்றுபோக வைப்பதால் தங்களுக்கு எாிச்சல்.பாக்கிஸ்தானும் அரேபிய காடையா்களும் இல்லையெனில் ராணுவத்திற்கு இந்தியா இவ்வளவு செலவு செய்ய அவசியம் இல்லை.